8/02/2010

கோவை பேரூர் - பழமைபேசியின் பங்களிப்புக்கு வாரீர்

கோவை பேரூர் தமிழ்க் கல்லூரியானது, தமிழுக்கும் தமிழர்களுக்கும் தொடர்ந்து பணியாற்றி வருவது அனைவரும் அறிந்ததே! மேலதிகத் தகவல்களுக்கு இச்சுட்டியைச் சொடுக்கவும்.

பேரூர் தமிழ்க்கல்லூரி நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை 04.08.2010 புதன்கிழமை மதியம் 11 மணி முதல் 2 மணி வரை, தமிழ் மொழி மற்றும் தமிழ் வலைப்பதிவுகள் குறித்த கருத்தரங்கு மற்றும் பயிலரங்கை நடத்த நானும் நண்பர் பதிவர் நண்பர் ஆரூரன் அவர்களும் திட்ட மிட்டுள்ளோம். கருத்தரங்கு மற்றும் பயிலரங்கு மூன்று அமர்வுகளாக திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் அமர்வு:

தமிழ் வலைப்பதிவு உருவாக்குவது குறித்தான பயிலரங்கு. இதில் வலைப்பக்கம் உருவாக்குவது, தமிழில் தட்டச்சுவது குறித்தான விளக்கங்கள். தமிழ்ப் பதிவுகள் குறிப்பிடத் தக்க ஊடக சக்தியாக மாறியுள்ளமை குறித்தும் விரிவாக எடுத்தியம்பப்படும்

இரண்டாம் அமர்வு:

கொங்குத் தமிழின் சிறப்பு. ஒட்டுமொத்தத் தமிழ் மொழியில், கொங்குத் தமிழுக்கென ஒரு சிறப்பு உண்டு. அது குறித்த விளக்கங்கள், தேர்ந்த உதாரணங்களுடன் கூடிய விரிவுரை.

மூன்றாம் அமர்வு:

தமிழ் இலக்கிய விநாடி வினா. வட அமெரிக்கத் தமிழ்ப் பேரவை விழாவில் (ஃபெட்னா) மிகச் சிறப்பாக நடத்தப்பட்ட இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சியின் மீளோட்டம். இது ஒரு பல்லூடக நிகழ்ச்சி. ஒரு மொழியின் தொன்மை குறித்தான பல்லூடக வாயிலான விநாடி வினா நிகழ்ச்சி வேறு மொழியில் இருக்கின்றதா என்பது ஐயத்திற்குரிய ஒன்றுதான். இந்த நிகழ்ச்சி ஒரு அரிய பொக்கிசம் என்றும் கூறலாம்.

நாஞ்சில் பீற்றர் அவர்கள் அழகுற, வெகு நேர்த்தியாகப் படைத்திருக்கிற இப்பல்லூடக நிகழ்ச்சியானது அனைத்துத் தமிழர்களும் கண்டு பயனுற வேண்டிய ஒன்றாகும்.

அன்பார்ந்த உறவுகளே, நாளை இந்த நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வாரீர் என அன்போடு அழைக்கிறோம்.

பணிவுடன்
பழமைபேசி

16 comments:

a said...

நிகழ்ச்சி சிறப்புற வாழ்துக்கள்...

ஈரோடு கதிர் said...
This comment has been removed by the author.
ஈரோடு கதிர் said...

நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடக்க வாழ்த்துகள்

vasu balaji said...

வாழ்த்துகள்.

manjoorraja said...

வாழ்த்துகள்.

வர முயற்சி செய்கிறேன்.

தமிழ் said...

வாழ்த்துகள்

Unknown said...

நிகழ்ச்சி சிறப்பாக நடக்க வாழ்த்துகள்ங்க ..

இராகவன் நைஜிரியா said...

விழா சிறப்புற நடை பெற வாழ்த்துக்கள்.

ரவி said...

வாழ்த்துக்கள் !!!

Anonymous said...

வாழ்த்துக்கள்

Vijiskitchencreations said...

best wishes.

ப.கந்தசாமி said...

வருவதற்கு முயற்சிக்கிறேன்

தாராபுரத்தான் said...

வர முடியாதுங்க..அருமையான முயற்சி..வாழ்த்துக்கள்ங்க..

Naanjil Peter said...

கருத்தரங்கு மற்றும் பயிலரங்கு நிகழ்வுகள் பயனுள்ளதாக அமைய வாழ்த்துக்கள்.

தமிழ் இலக்கிய விநாடி வினா நிழக்ழ்ச்சி நடத்துவதுக் குறித்து மிக்க மகிழ்ச்சி.

பேரூர் அடிகளுக்கு எனது வணக்கத்தைத் தெரிவிக்கவும்.
அவரது தமிழ்ப்பணி வளர்க!

அன்புடன் அண்ணன்
நாஞ்சில் பீற்றர்

Sanjai Gandhi said...

ஆஹா.. போன் பண்ணவே இல்லையே..

கொங்கு நாடோடி said...

பாராதியார் பல்கலைக் கழகதில் படித்தபோது கல்வீரம் பாளையம, வடவள்ளி, , கணபதி, காந்திபுரம், மேம்பாலம், உக்கடம் கிணத்துகடவு, முள்ளிப்பாடி, , ஆச்சிபட்டி கடந்து, மகாலிங்கபுரம், பொள்ளாச்சி, மரக்கடை, மாக்கினாம் பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, திப்பம்பட்டி, கோலார்பட்டி, கெடிமேடு, கோமங்கலம் புதூர் , அந்தியூர், முக்கோணம், வழியாக என்னை உடுமலை அழைத்து சென்றதற்கு நன்றி, பழைய நினைவுகள்.

கல்வீரம் பாளையம, ஐஓபி காலணி சென்று டி குடித்தது, வீட்டிற்கு சதத் ( அப்போது செல் போன் அவளவாக புழக்கத்தில் இல்லை) செய்தது, இரவு நேர சினிமா பார்க்க வடவள்ளி ஸ்ரீராம் தியேட்டர் சென்றது, வடவள்ளி சந்தையில் மிலிடரி சரக்கு சிதேடிஷ் மரவள்ளி சிப்ஸ் சுடக வாங்கியது எல்லாம் நினைவு படுத்துகிறது இந்த பதிவு. மேலும் கொங்கு தமிழ் கேக்க வச்சதுக்கு நன்றிகோவ்!