2/17/2010

புது மானிடன் நீ!

ஒவ்வொரு நாளும்
புது மானிடன் நீ!
நேற்றைய முடத்தை
இன்று நீக்கவல்ல
புது மானிடன் நீ!!

ஒவ்வொரு நாளும்
புது மானிடன் நீ!
வாய்த்த மொழியை
கட்டிய பண்பாட்டை
மெருகேற்றப் பிறந்த
புது மானிடன் நீ!!

ஒவ்வொரு நாளும்
புது மானிடன் நீ!
தவிப்புக்கு நீராய்
இழப்புக்கு மாற்றாய்
மலர வந்த
புது மானிடன் நீ!!

ஒவ்வொரு நாளும்
புது மானிடன் நீ!
அறம் காக்கவும்
மனிதம் போற்றவும்
ஒளியூட்ட வந்த
புது மானிடன் நீ!!

ஒவ்வொரு நாளும்
புது மானிடன் நீ!
முன்னைப் பழம்
காத்துச் செழித்து
புதுமை ஆக்கவந்த
புது மானிடன் நீ!!

ஒவ்வொரு நாளும்
புது மானிடன் நீ!

நேற்றைய முடத்தை
இன்று நீக்கவல்ல
புது மானிடன் நீ!!


என்னங்கடா ஆயத்தக்கூறுக(build-up) எல்லாம் வலுவா இருக்கேன்னுதான மண்டையச் சொறியுறீங்க? காரணம் இருக்குது இராசா, அதுல ஒரு காரணம் இருக்கு! ஒவ்வொரு நாளும், நாம எல்லாருமே, 'புதுசு கண்ணா புதுசு'தாங்க!

நேற்றைய தவறுகள் இன்றைய பாடம்; நேற்றைய வழுக்கள் இன்றைய மேம்பாடுகள்! இன்றைய ஆக்கங்கள், நாளைய சாதனைகள்!! ஆகவே, ஒவ்வொரு நாளும் புது மனிதனாய் மேன்மையத் தேடிப் போய்கிட்டே இருப்போம் வாங்க. சரிதானுங்களே நாஞ்சொல்றது??

ஆமாங்க! ஊர்ல இருந்து வரும்போது நிறைய அனுபவங்கள், சிந்தனைகள், நினைவுகள்னு பலதும் மனசுல ஏத்திட்டு வந்திருக்கேன். அதுகளைப் பத்தி எழுதினா, தினமும், இடுகை ஒன்னு போட்டுட்டே இருக்கலாம். ஆனாலும், புது மனுசனா நெனச்சுச் செய்ய வேண்டிய பணிகள், தினமாக ஆக சேர்ந்துட்டே இருக்குங்க. அதனால, இடுகைகள் போடுறதுல ஒரு வெட்டாப்பு! இஃகிஃகி!!

மணிவாசகம்ன்னு பேர வெச்சிகிட்டு, இன்னமும் திருவாசகம் முழுமையாப் படிக்காம இருக்கியேடா? உனக்கெல்லாம் தினம் ஒரு இடுகையா??” அப்படின்னு கெழுதகை நண்பர் ஆரூரன் விசுவநாதன் நினைச்சாரா, இல்லையான்னு எல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, அவர் ஒலி, ஒளிக் கோப்புகளோட ஒரு புத்தகங் கொடுத்தாரு. அதுல அறுபது பக்கம் மட்டுமே படிச்சி முடிச்சிருக்கேன். மீதம் இருக்கிற முந்நூற்றைம்பது பக்கமும் படிச்சு முடிக்கணுமுங்க!

எதிர்வரும் மார்ச் பதினான்காம் திகதி, அமெரிக்கத் தலைநகர்ல தன்மானத் தமிழ் மறவர், செந்தமிழ்க் காவலர் இலக்குவனார் நூற்றாண்டு விழா நடக்க இருக்கு. அதனால, செந்தமிழ்க் காவலரைப் பற்றி நிறையத் தெரிஞ்சுக்க வேண்டி இருக்குங்க. கூடவே, புறநானூற்று ஆய்வுச் சொற்பொழிவும் நடக்க இருக்கு, அதே விழாவுல! அதுக்காகவும் ஆயத்தப்படுத்திக்க வேண்டி இருக்குங்க மக்கா! நீங்க, முடிஞ்சா மார்ச் பதினாலாந் தேதி அவசியம் விழாவுக்கு வாங்க. மேலதிக விபரங்களை, அடுத்த வாரத்துல இடுகையாப் போடலாம்னு இருக்கேன்.

கடைசியா, இது, உங்களுக்கு எல்லாந் தெரிஞ்ச ஒன்னுதான்! ஆமாங்க, துண்டு போட்டதுல, காரியங் கைகூடி வருதல்ல? மார்ச் ஐந்தாம் நாள், அண்ணன் சீமாச்சு கூட ஃப்ளோரிடா போறம்ல?? இஃகிஃகி!!

”மவனே, அலைபேசில சொல்லாமக் கொள்ளாமப் படம் புடிக்கிற வேலையெல்லாம் வெச்சிக்கப்படாது!” அப்படின்னு நிபந்தனை எல்லாம் போட்டிருக்காரு. அவர் என்னைக்கு சிநேகா படம் போடுறதை நிறுத்துறாரோ, அன்னைக்கு பாத்துகலாம்னு இருக்கேன் நானு. இங்க இருந்து ஃப்ளோரிடா போவமா? ஒவ்வொரு தடவை படம் புடிக்கும் போதும் இவர்கிட்ட சொல்லிட்டு இருக்கணுமாம்? அது முடியுமாங்க??

இது ச்சும்மா, கொசுறு:

”ஏன் பாட்டி, உனக்கு எம்மேல இவ்வளவு பாசம்?”
”நீதான்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளி போடணும்!”
”போ பாட்டி! எனக்கு நாளைக்கு பள்ளிக்கூடம் இருக்கு! இன்னைக்கே கொள்ளி வச்சுடவா?”

33 comments:

நசரேயன் said...

//அண்ணன் சீமாச்சு கூட ஃப்ளோரிடா போறம்ல?? இஃகிஃகி!!//

அண்ணே எங்க ஊரிலேயும் ஒரு நிறுத்தம் போடுங்க

தாராபுரத்தான் said...

2009 ல் 308...2010 ல் 365 தொட்டு விடுவீங்கன்னு பாத்தா...திருவாசகம்.. குருவாசகம்..அப்படின்னிட்டு...சும்மா சொன்னேன்னுங்க..படியீங்க..சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும்.கை கூடி........

ஆரூரன் விசுவநாதன் said...

தினமும் புதிதாய் பிறப்போம்....
பகிர்வுக்கும் அறிமுகத்திற்கும் நன்றி.

சீமாச்சு.. said...

// நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்//

கொங்கு மண் தந்த தமிழ்ப்பேரறிஞர் அமெரிக்க வாழ் அருந்தமிழ்ப் புலவனார் பழமைபேசி ஐயா இடுகையில் தமிழ்ப்பிழையா?

தம்பீ.. நெஞ்செல்லாம் கொதிக்கிறதே... “கொள்ளி” என்று வல்லினம் போடுமிடத்தில் இடையினத்தைச் செருகிவிட்டாரே....

அதுவும் அண்ணியார் அருகில் இல்லாத நேரத்தில் இப்படி “இடையின” நினைவுகளாகவே இருக்கிறாரே என்று கவலையாயிருக்கிறதே...

ஏதோ நம்மால முடிஞ்சது.. “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்.. அதை அங்கொரு காட்டினில் பொந்திடை வைத்தேன்..”

இனி.. குடுகுடுப்பைச் சோழனும், ஈரோட்டுக் காரரும்..சீமாட்டியும்.. கும்மியைத் தொடருங்கள்...

அடிக்கிற கும்மிச் சத்தம் விண்ணை முட்டட்டும்....

பழமைபேசி said...

//கொங்கு மண் தந்த தமிழ்ப்பேரறிஞர் அமெரிக்க வாழ் அருந்தமிழ்ப் புலவனார் பழமைபேசி ஐயா இடுகையில் தமிழ்ப்பிழையா?//

அடச் சே.... இதுக்குத்தான் இரவல் சரக்கெல்லாம் போடப்பிடாதுங்க்றது.... இப்படி ஆயிப்போச்சே?

அண்ணே, நன்றிங்கண்ணே!

சீமாச்சு.. said...

//”மவனே, அலைபேசில சொல்லாமக் கொள்ளாமப் படம் புடிக்கிற வேலையெல்லாம் வெச்சிக்கப்படாது!” அப்படின்னு நிபந்தனை எல்லாம் போட்டிருக்காரு.//

இவரு பாட்டுக்கு சதிலீலாவதி கமல் பையன் பாணியில் படமாச் சுட்டுத்தள்ளி பதிவில் இட்டுட்டாரென்றால்.. பல குடும்பங்களில் குழப்பங்கள் ஏற்பட்க்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதனால் போடப்பட்ட நிபந்தனை அது...

நியாயந்தானே..மக்களே..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ம்ம்.. ப்ளோரிடான்றீங்க, சார்லட்ன்றீங்க.. கொஞ்சம் வரைபடத்த எடுத்துப் பார்த்துக்கொண்டேன்.

'புதிதாய் பிறப்பது' நல்ல செய்தி.

கொசுறையும் மிகவும் இரசித்தேன்.

vasu balaji said...

/ஒவ்வொரு நாளும், நாம எல்லாருமே, 'புதுசு கண்ணா புதுசு'தாங்க!/

அய்ய. புதுமைபேசி நல்லால்ல..இஃகி

/காரியங் கைகூடி வருதல்ல? மார்ச் ஐந்தாம் நாள், அண்ணன் சீமாச்சு கூட ஃப்ளோரிடா போறம்ல?? இஃகிஃகி!!/

எங்க தலைவர் வராரா?:))

/ தாராபுரத்தான் said...

2009 ல் 308...2010 ல் 365 தொட்டு விடுவீங்கன்னு பாத்தா...திருவாசகம்.. குருவாசகம்..அப்படின்னிட்டு...சும்மா சொன்னேன்னுங்க..படியீங்க..சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும்.கை கூடி......../

இந்த யூத்து அடிக்கிற கூத்து தாங்கலடா சாமி:))

ஜோதிஜி said...

பெயர் வைத்த உங்கள் தந்தை தாயை வணங்கத் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை செயலராக இருக்கும் முன்னால் மாவட்ட ஆட்சியாளராகயிருந்த இறையன்பு அவர்களின் மூத்த சகோதரர் பெயரும் உங்கள் பெயரே. குஜராத் பூகம்பத்தின் போது அங்கு மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்த போது அவர் தான் மொத்த தன்னார்வ தொண்டுகளையும் ஒன்றிணைத்து வெற்றிகரமாக அடிப்படை மக்களின் வாழ்வை மீட்டு எடுத்தவர். இப்போது நீங்கள் கற்க முயற்சித்துக்கொண்டுருப்பதைப் போலவே அவர் எப்போதும் அத்தனை பாடல்களையும் இருக்கும் இடத்தில் அப்படியே அர்த்தம் மாறாமல் மற்றவர்களுக்கு புரிய வைக்கும் ஆற்ற ல் மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள் உங்கள் பணிக்கு.

sathishsangkavi.blogspot.com said...

கொசுறு சூப்பர்...

உங்க பதிவ படிக்க ஒரு தமிழ் பேராசிரியரை அமெரிக்க அனுப்பிட்டோம்னு தோனுது....

Jerry Eshananda said...

ரசித்தேன்,விழுந்தும் விழாமலும் சிரித்தேன்,....இலக்குவனார் விழாவில..நல்லா பேசுங்கப்பு...

ஈரோடு கதிர் said...

விறுவிறுன்னு எழுதறது...

அப்புறம் திடீர்னு வெட்டாப்பு விடறது..

என்ன ...இது சின்னப்புள்ளத்தனமா...

தாராபுரத்து தாத்தா சொன்னமாதிரி 365 முடிக்கோனும்...

வெட்டாப்புக்கு கொள்ளி வச்சிட்டு சீக்கிரம் வாங்க... இல்லைனா கொல்லி மலை - பில்லி சூன்யம் வைக்கவாண்டியதாய் இருக்கும்

சசிகுமார் said...

நல்ல பதிவு, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

கபீஷ் said...

//அடச் சே.... இதுக்குத்தான் இரவல் சரக்கெல்லாம் போடப்பிடாதுங்க்றது.... இப்படி ஆயிப்போச்சே? //

சமாளிக்க முயற்சி பண்றீங்க. பயிற்சி தேவை :-)

கபீஷ் said...

//
பல குடும்பங்களில் குழப்பங்கள் ஏற்பட்க்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதனால் போடப்பட்ட நிபந்தனை அது...

//

சொன்ன பேச்சக் காப்பாத்தாம இருக்கறதுக்கு ஸ்னேகாவ வேற துணைக்கு கூப்டுருக்கார். சாப்பாட்டுக்கடை முடிஞ்சப்புறமா அவர்கிட்ட செல்போன்/கேமராவைத் திருப்பிக் கொடுத்துடுங்க(அதுக்கு முன்னாடி அவர்கிட்டயிருந்து பிடுங்கி வச்சுக்க வேண்டியது முக்கியம் :-) )

கபீஷ் said...

//இனி.. குடுகுடுப்பைச் சோழனும், ஈரோட்டுக் காரரும்..சீமாட்டியும்.. கும்மியைத் தொடருங்கள்...
//

குகுசோழன் எங்கேயாவது பிரியாணி சாப்பிடறதுல பிஸியா இருப்பார். ஈரோட்டுக்காரர் முஜே நஹி மாலும், இப்போதைக்கு வெட்டி ஆப்பிஸர் நாந்தான். அண்ணனின் ஆணையை சிரமேற்கொண்டு கும்மியைத் தொடர்கிறேன்

கபீஷ் said...

//அதனால, இடுகைகள் போடுறதுல ஒரு வெட்டாப்பு! இஃகிஃகி!!//

படிக்க சந்தோஷமா இருக்கு. :-)அப்புறமா சப்பான்ல சாக்கிசான் கேட்டாக, அமெரிக்காவுல ஒபாமா கேட்டாகன்னு வெட்டாப்புக்கு வெட்டாப்பு வெச்சிடாதீங்க

பனித்துளி சங்கர் said...

சிறப்பு !
வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

@@நசரேயன்

கண்டிப்பாங்க தளபதி!

@@தாராபுரத்தான்

நாலும் பாக்கோணும் இல்லீங்களா?

@@ஆரூரன் விசுவநாதன்

நன்றிங்க நண்பா!

@@Seemachu

யாரும், ஒன்னும் சொல்லலையே? இஃகிஃகி!

@@ச.செந்தில்வேலன்
இஃகிஃகி

@@வானம்பாடிகள் said...
/ஒவ்வொரு நாளும், நாம எல்லாருமே, 'புதுசு கண்ணா புதுசு'தாங்க!/

அய்ய. புதுமைபேசி நல்லால்ல..இஃகி
//

ச்சும்மாங்க புதுசாவும் பேசுவம் சித்த!

@@ஜோதிஜி

வணக்கம்; உங்க வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க!! தகவல்களுக்கும்!!!


@@Sangkavi

நன்றிங்க!

@@ஜெரி ஈசானந்தா.

முயற்சிக்கிறேனுங்க!

@@ஈரோடு கதிர்

சரிங்க மாப்பு, சரிங்க!


@@சசிகுமார்

மிக்க நன்றிங்க!

பழமைபேசி said...

@@கபீஷ்

சீமாட்டியார், உங்களை நினைச்சா பாவமா இருக்கு.... நான் வருவேன் மறுபடியும்....அடுத்த வாரம்! இஃகிஃகி!

//வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!! said...
சிறப்பு !
வாழ்த்துக்கள்
//

நன்றிங்க!

கயல் said...

:))

வில்லன் said...

//ஒவ்வொரு நாளும்
புது மானிடன் நீ!
முன்னைப் பழம்
காத்துச் செழித்து
புதுமை ஆக்கவந்த
புது மானிடன் நீ!!//

ஒவ்வொரு நாளும் புது பதிவு போடும்
புது மானிடன் நீ!
அடுத்தவன் பதிவை படித்து
அதற்க்கு பின்னுட்டம் போடும்
புது மானிடன் நீ!

வெட்டியாய் பொழுதை போக்கும்
புது மானிடன் நீ!
வீணான நேரத்தில் வேண்டாத பதிவை எழுதும்
புது மானிடன் நீ!

வில்லன் said...

// நசரேயன் said...


//அண்ணன் சீமாச்சு கூட ஃப்ளோரிடா போறம்ல?? இஃகிஃகி!!//

அண்ணே எங்க ஊரிலேயும் ஒரு நிறுத்தம் போடுங்க//

யோவ் ஃப்ளோரிடா எங்க இருக்கு???? உம்மோட "லிட்டில் பாம்பே" "ஜெர்சி சிட்டி" .........

நக்கீரர் அண்ணே!!!!!!! போற வழியா இருந்தா கூட நசரேயன் இருக்குற "ஜெர்சி சிட்டில" நிறுதிறாதிங்க........இல்லைன்னா பின்ன ரொம்ப வருத்தபடுவிங்க......ஏன்னா நசரேயன் வீட்டுக்குள்ள போயிட்டு வரதுக்குள்ள உங்க வண்டிய எவனாவது (நசரேயன் சொந்தகாரங்க அண்ணாச்சிமாறு) ஆட்டைய போட்டுட்டு போய்டுவான்....ஜாக்கிரதை.....சொல்லுறத சொல்லிபுட்டேன் அப்புறம் உங்க இஷ்டம்.........

வில்லன் said...

/”மணிவாசகம்ன்னு பேர வெச்சிகிட்டு, இன்னமும் திருவாசகம் முழுமையாப் படிக்காம இருக்கியேடா? உனக்கெல்லாம் தினம் ஒரு இடுகையா??” அப்படின்னு கெழுதகை நண்பர் ஆரூரன் விசுவநாதன் நினைச்சாரா, இல்லையான்னு எல்லாம் எனக்குத் தெரியாது.//

நண்பர் ஆரூரன் விசுவநாதன் நினைச்சாரா இல்லையா எங்களுக்கு தெரியாது.... ஆனா கண்டிப்பா நாங்க நெனைப்போம்....சந்தேகமே வேண்டாம்.

வில்லன் said...

//Seemachu said...

தம்பீ.. நெஞ்செல்லாம் கொதிக்கிறதே... “கொள்ளி” என்று வல்லினம் போடுமிடத்தில் இடையினத்தைச் செருகிவிட்டாரே....//

என்னது இடைல சொருவிட்டாரா யாரோட "இடைல"?சீமாச்சு?????

குறும்பன் said...

//”மணிவாசகம்ன்னு பேர வெச்சிகிட்டு, இன்னமும் திருவாசகம் முழுமையாப் படிக்காம இருக்கியேடா? உனக்கெல்லாம் தினம் ஒரு இடுகையா??” அப்படின்னு கெழுதகை நண்பர் ஆரூரன் விசுவநாதன் நினைச்சாரா, // நினைச்சிருப்பார், நினைச்சிருப்பார் .

//செந்தமிழ்க் காவலர் இலக்குவனார் நூற்றாண்டு விழா நடக்க இருக்கு. அதனால, செந்தமிழ்க் காவலரைப் பற்றி நிறையத் தெரிஞ்சுக்க வேண்டி இருக்குங்க.//
விழா முடிஞ்சதும் அவர பற்றி இடுகை போடனும், நாங்க எல்லாரும் அவரைப்பத்தி விரிவா தெரிஞ்சுக்குமல்ல.

இடுகை போட்டு துண்டு போட்டு ஃப்ளோரிடா போறீங்க புரியுது, ஃப்ளோரிடாவுல எங்க போறீங்க? சொன்னா தெரிஞ்சுக்குவோம். கவலைப்படாதிங்க அங்க வந்து தொல்லை பண்ணமாட்டோம். இஃகிஃகி

வில்லன் said...

/எதிர்வரும் மார்ச் பதினான்காம் திகதி, அமெரிக்கத் தலைநகர்ல தன்மானத் தமிழ் மறவர், செந்தமிழ்க் காவலர் இலக்குவனார் நூற்றாண்டு விழா நடக்க இருக்கு. அதனால, செந்தமிழ்க் காவலரைப் பற்றி நிறையத் தெரிஞ்சுக்க வேண்டி இருக்குங்க. மக்கா! நீங்க, முடிஞ்சா மார்ச் பதினாலாந் தேதி அவசியம் விழாவுக்கு வாங்க. //

பிளைட் டிக்கெட் போட்டு அனுப்பினா வரமாடோம்னா சொல்லுறோம்...... வெத்தல பாக்கு வச்சு அழைக்க வேண்டாம்...... மின் அஞ்சலில் ஒரு பிளைட் டிக்கெட் பதிவு விவரம் மட்டும் போதும்......... கண்டிப்பாக வந்துருவோம்............எப்படி வசதி..........உங்களுக்கும் கிட்ட ஒரு கூட்டம் வேணும்ளா????? அப்படின்னா அதுக்கு கொஞ்சம் காச காரியாக்கிதான் ஆகனும்........

அரசூரான் said...

ஊர்திசை சென்று
திரும்பியதிலிருந்து
பதிவுகளில் எதிர்திசை!

ஊர்குருவி
பழமைக்கா முரண்!

யார் என்ன சொன்னார்கள்?
உம் பதிவை கேடக்கவில்லை
உம்மைக் கேட்கிறேன

பதிவில் வரும் சமிஞ்சைகள்
சரியில்லையே?

நண்பரே...
அகமும் புறமும்
நலந்தானா?

நேற்றைய பதிவில்
புது மானிடன் நீ

சங்கு சுட்டாலும் வெண்மை
கடுகு சிறுத்தாலும் காரம்

பண்பிற்க்கு... பழமை

Anonymous said...

கவிதை தகவல் காமெடி எல்லாம் நல்லாயிருக்குங்க....

Naanjil Peter said...

Welcome to Washington DC.
We are eagerly waiting for your
participation in the Purananuru kurunkarutharangam and Illakkuvanaar Centenary celebrations.

அன்புடன் நான் said...

கவிதை நல்லத் தகவலோடுத்தான் இருக்கு. அப்புறமென்ன...
அதே மாநாட்டில் நீங்களும் கவிதை வாசிக்க வேண்டுகிறேன்...

priyamudanprabu said...

என்னங்கடா ஆயத்தக்கூறுக(build-up) எல்லாம் வலுவா இருக்கேன்னுதான மண்டையச் சொறியுறீங்க?
////

அட அட

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
தாராபுரத்து தாத்தா சொன்னமாதிரி 365 முடிக்கோனும்...//

அட இது நல்ல கூத்தாயிருக்கே... அவரு உங்களுக்கு தாத்தாவா.??? என்ன கொடுமைங்க இது...


//கடைசியா, இது, உங்களுக்கு எல்லாந் தெரிஞ்ச ஒன்னுதான்! ஆமாங்க, துண்டு போட்டதுல, காரியங் கைகூடி வருதல்ல? மார்ச் ஐந்தாம் நாள், அண்ணன் சீமாச்சு கூட ஃப்ளோரிடா போறம்ல?? //

நல்லபடியா போயிட்டு வாங்க...

ஆமா பாட்டி சோலிய முடிச்சிட்டீங்களா??