2/16/2010

அகமும் புறமும்!

மின்னாடல், மடலாடல்,
வலைப்பூ, மறுமொழிதலென
எட்ட இருந்தமட்டிலும்
அகமும் அகமும் அணுக்கமாய்!
பிறிதொரு நாளில்
புறமும் புறமும் சந்தித்த வேளையில்
நீயா நானா போட்டி மனதளவில்!!

அது அந்த அகத்தின்
புறமெனத் தெரியவந்ததும்
இந்த அகம் வெட்கத்தில்
நாணி, கூனிக் குறுகியது!
அகமும் அகமும் கொள்ளை கொண்டு
மனித நேயம் மட்டும் வெல்கவே!!

================================

அய்யோ பாவம்
எனக் கவலைப்பட்டு
வெகுண்டவன்
மெளனித்துப் போனான்;
துயரத்தில் இருப்பவன்
உள்ளூர்க்காரன் எனத்
தெரியவந்ததும்!

================================

தான் பார்த்த மட்டிலும்,
தன்னவனுக்குத் துயர் எனில்
துடிக்கும் இனம் இரண்டு!
யூதனும் குஜராத்தியும் முந்திக்கொள்ள
தமிழனுக்கு அந்த கட்டமைப்பு இல்லை என்றேன்!!
கரவோசையில் அதிர்ந்தது அரங்கம்!!!

(சிந்தனைக்காக மட்டுமே, ஆராய்ச்சிக்கன்று!!)

38 comments:

Thekkikattan|தெகா said...

நல்ல சிந்தனையூட்டு வரிகள். இது நீங்க ஃபெட்னா விழாவில வாசிச்சீங்களோ, பழம??!!

கயல் said...

//
புறமெனத் தெரியவந்ததும்
இந்த அகம் வெட்கத்தில்
நாணி, கூனிக் குறுகியது!
//

ந‌ல்லாயிருக்கு!
//
தான் பார்த்த மட்டிலும்,
தன்னவனுக்குத் துயர் என்றால்
துடிக்கும் இனம் இரண்டு!
யூதனும் குஜராத்தியும் முந்திக்கொள்ள
தமிழனுக்கு அந்த கட்டமைப்பு இல்லை என்றேன்!!
கரவோசையில் அதிர்ந்தது அரங்கம்!!!
//

த‌மிழ‌னைத் த‌விர‌ எல்லோருக்கும் இனப்ப‌ற்று கொஞ்ச‌ம் அதிக‌மோ!

vasu balaji said...

ம்கும். பொறுப்பி போட்டா சரியா போச்சா. மூணாவது என்னன்னு புரியும்போது மத்த ரெண்டு என்னான்னு மண்டை குடையுது.:))

மணி மு. மணிவண்ணன் said...

நீங்கள் அண்மையில் கலந்து கொண்ட ஈரோடு(?) பதிவர் கூட்டத்தின் எதிரொலியோ என்று தோன்றினாலும், இவைதான் அகங்களின் புறங்கள் என்ற தெளிவு பெற போதி மரம் தேவையில்லை என்று தோன்றுகிறது.

தமிழனுக்கு மொழிப்பற்றும், சாதிப்பற்றும் உண்டு. இனம் என்ற அடையாளம் சேர, சோழ, பாண்டிய அரியணைகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் அகழ்வாராய்ச்சிக்கு மட்டுமே உரியது.

பழமைபேசி said...

//Thekkikattan|தெகா said...
நல்ல சிந்தனையூட்டு வரிகள். இது நீங்க ஃபெட்னா விழாவில வாசிச்சீங்களோ, பழம??!!
//

இல்லங்க தலை... நன்றி!


//கயல் said...
த‌மிழ‌னைத் த‌விர‌ எல்லோருக்கும் இனப்ப‌ற்று கொஞ்ச‌ம் அதிக‌மோ!
//

என்னோட பார்வையில, அப்படி இல்லங்க கயல்.... கட்டமைப்பு இல்ல, அவ்வளவுதான்... அது இருந்தா, நாமளும் அதுமேல ஏறிக்குவம்ல?

//வானம்பாடிகள் said...
ம்கும். பொறுப்பி போட்டா சரியா போச்சா. மூணாவது என்னன்னு புரியும்போது மத்த ரெண்டு என்னான்னு மண்டை குடையுது.:))
//

அண்ணே, பாலாண்ணே, இன்னுந் தூங்கலையா?

ஆமாம்ண்ணே, மூன்றாவது நீங்க நினைக்குறதுதான்... மத்த ரெண்டும் கோவையில என்னுடைய அனுபவம்.

//மணி மு. மணிவண்ணன் said...
நீங்கள் அண்மையில் கலந்து கொண்ட ஈரோடு(?) பதிவர் கூட்டத்தின் எதிரொலியோ என்று தோன்றினாலும்,
//

முதலிரண்டும் அந்தக் கணக்குல வராதுங்க....

மற்றபடி நீங்கள் சொல்வதும் ஏற்புடையதே.... இனப்பற்று உள்ள்வர்களும் இருக்கவே இருக்கிறார்கள்!

பழமைபேசி said...

//வானம்பாடிகள் said...
ம்கும். பொறுப்பி போட்டா சரியா போச்சா. மூணாவது என்னன்னு புரியும்போ//

அண்ணே, அந்த நிகழ்ச்சி என்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்த ஒன்று... மீண்டும் அந்நாள் என்று வருமோ எனக் காத்திருக்கிறேன்.

இருந்தாலும், வருத்தப்பட வேண்டிய இடத்தில், சொல்வது சரியான கருத்து என்ற அடிப்படையில் கரவொலி எழுவது வருத்தமாக இருக்கிறது.

வில்லன் said...

அண்ணாச்சி இந்த கவிதைய நம்ம கோவை உலகதமிழ் மாநாட்டுல வாசிக்க அனுப்பினா நம்ம "தமிழ் தாத்தா" ஓட ஓட வெரட்டி அடிப்பாரு.... பாத்து அண்ணாச்சி..... ஊருல வேற எவன்கிட்டயும் சொல்லலையே இல்ல உங்க பேர போட்டு அனுப்பிட போறான்...அத பாத்து மாநாட்டு அமைப்பாளர் "நோடிசு" அனுப்பிட போறாரு அமெரிக்காவுக்கு.......

வில்லன் said...

///
தான் பார்த்த மட்டிலும்,
தன்னவனுக்குத் துயர் என்றால்
துடிக்கும் இனம் இரண்டு!
யூதனும் குஜராத்தியும் முந்திக்கொள்ள
தமிழனுக்கு அந்த கட்டமைப்பு இல்லை என்றேன்!!
கரவோசையில் அதிர்ந்தது அரங்கம்!!!
//

நிறுத்துங்க உங்க சிந்தனைய...........எல்லோரையும் விட தமிழனுக்கு தான் இனப்ப‌ற்று கொஞ்ச‌ம் அதிக‌மோ!..... சும்மா ஒருவர ஒருவர் தாக்கிப்போம்.... நம்ம குடுகுடுப்பைய போட்டு பதிவுலகத்துல தாக்குறாப்புல......

ஆனாலும் உதவி தேவை என்றால் அவன் தமிழனாக இல்லாவிட்டாலும் உடனடியாக ஓடி உதவி செய்பவன் (எந்த ஆபத்திலும் பொருபடுத்தாமல்) தமிழன்.......அதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்......

அண்ணாச்சி ........
"தன்னவனுக்குத் துயர் என்றால்
துடிக்கும் இனம் இரண்டு!
யூதனும் குஜராத்தியும்"

"அடுத்தவனுக்கு துயர் என்றால் துடிக்கும் இனம் தமிழ் இனம்".... மறக்க வேண்டாம்....

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்...........அதை கடைபிடிப்பவன் தமிழன்......

வில்லன் said...

அண்ணன் குட்குகுடுப்பைய எல்லாருமா போட்டு தாக்குறத வச்சு இப்படி எழுதகூடாது......... அண்ணன் குடுகுடுப்பைக்கு எதாவது "ஒண்ணுன்னா" மொத அருவா எடுக்குறது நாங்களாதான் (பாண்டியர்களாக தான்) இருக்கும்.....

பழமைபேசி said...

அகஃகா... டரியல் ஆக்கிவிட்டுப் போன வில்லன் அண்ணாச்சி வாழ்க!

Unknown said...

புறமும் அகமும்ன்னு வெச்சுருக்கலாம்.
வில்லங்கிட்டில்லாம் மாட்டீட்டு முழிக்கறீங்களே.
அன்புடன்
சந்துரு

ஆரூரன் விசுவநாதன் said...

முதல் இரண்டும் ஏனோ நெருடலாக இருக்கிறது. அது ஈரோட்டு அனுபவமாக இருக்காது என்று நம்புகிறேன். இருக்கக்கூடாது என்றும் ஆசைப்படுகின்றேன்.

அன்புடன்
ஆரூரன்.

பழமைபேசி said...

//தாமோதர் சந்துரு said...
புறமும் அகமும்ன்னு வெச்சுருக்கலாம்.
வில்லங்கிட்டில்லாம் மாட்டீட்டு முழிக்கறீங்களே.
அன்புடன்
சந்துரு
//

இஃகிஃகி!

//ஆரூரன் விசுவநாதன் said...
முதல் இரண்டும் ஏனோ நெருடலாக இருக்கிறது. அது ஈரோட்டு அனுபவமாக இருக்காது என்று நம்புகிறேன். இருக்கக்கூடாது என்றும் ஆசைப்படுகின்றேன்.

அன்புடன்
ஆரூரன்.
//

வாங்க ஆருரன்! ஈரோட்டு உபசரிப்பு என்ன? குதூகலம் என்ன?? நிச்சயமா அது ஈரோட்டு அனுபவம் அல்லவே அல்லங்க!!

Anonymous said...

சிந்திக்க வைக்கிறது கவிதைகள் எளிமையாய் எதார்த்தம் சொன்ன கவிதைகள் நல்லாயிருக்குங்க...

Jerry Eshananda said...

!தான் பார்த்த மட்டிலும்,
தன்னவனுக்குத் துயர் எனில்
துடிக்கும் இனம் இரண்டு!
யூதனும் குஜராத்தியும் முந்திக்கொள்ள
தமிழனுக்கு அந்த கட்டமைப்பு இல்லை என்றேன்!!
கரவோசையில் அதிர்ந்தது அரங்கம்!!!//
சிந்திக்க வேண்டிய ஓன்று,சரியாய் சொன்னீர்கள்.

ஈரோடு கதிர் said...

முதல் கவிதை கோயமுத்தூர்ல புரிஞ்ச மாதிரி இருக்கு / புரியாதமாதிரியும் இருக்கு....

கொஞ்ச நாளேவே உள்குத்து நிறைய வருதுங்க மாப்பு.... ம்ம்ம்ம்

ஜாபர் ஈரோடு said...

மூன்றாவது ஈரோடு.
முதல் இரண்டும் புரியல.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

// //கயல் said...
த‌மிழ‌னைத் த‌விர‌ எல்லோருக்கும் இனப்ப‌ற்று கொஞ்ச‌ம் அதிக‌மோ!
//

என்னோட பார்வையில, அப்படி இல்லங்க கயல்.... கட்டமைப்பு இல்ல, அவ்வளவுதான்... அது இருந்தா, நாமளும் அதுமேல ஏறிக்குவம்ல?//


மிக அற்புதமான வரிகள் ...

கபீஷ் said...

முதல் 2 கவிதையும் யாரை/யாரையெல்லாம் நினைச்சு எழுதினீங்களோ, அவங்களுக்காவது நீங்க அவங்களத்தான் சொன்னீங்கன்னு புரிஞ்சிருக்குமா?

மனசுக்குள்ள எதயவாது நினைச்சு வருத்தப்பட்டு முரளி மாதிரி வெளியே சொல்லாட்டி நாங்க எப்படி தீர்ப்பு சொல்றது.

இனிமே இப்படித் தெளிவா கவுஜ எழுதினா கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கப்படுவீங்க(எங்கயாவது சாப்பாடுன்னு போவீங்கல்ல அப்ப :-) )

கபீஷ் said...

//இருந்தாலும், வருத்தப்பட வேண்டிய இடத்தில், சொல்வது சரியான கருத்து என்ற அடிப்படையில் கரவொலி எழுவது வருத்தமாக இருக்கிறது.//

அப்போ கைத்தட்டினது, நீங்க சீக்கிரம் பேச்ச முடிக்கணுங்கறதுக்காக, தப்பாப் புரிஞ்சுண்டேள் :-)

Unknown said...

// //கயல் said...
த‌மிழ‌னைத் த‌விர‌ எல்லோருக்கும் இனப்ப‌ற்று கொஞ்ச‌ம் அதிக‌மோ!
//

இருக்கலாம்..., ஆனால் நமக்கு தான் ரொம்ப கம்மி

Jawahar said...

நல்ல வளமான மொழித் திறனுடன் கருத்தும் அமைந்த கவிதைகள். வாழ்த்துக்கள்.

http://kgjawarlal.wordpress.com

பழமைபேசி said...

//கபீஷ் said...
//இருந்தாலும், வருத்தப்பட வேண்டிய இடத்தில், சொல்வது சரியான கருத்து என்ற அடிப்படையில் கரவொலி எழுவது வருத்தமாக இருக்கிறது.//

அப்போ கைத்தட்டினது, நீங்க சீக்கிரம் பேச்ச //

அஃகஃகா... சீமாட்டியோட கண்டுபிடிப்பே கண்டுபிடிப்பு....

தமிழர்களுள் துரோகம் அதிகம்னு சொன்னவுடனே, கைதட்டி ஆரவாரம் செய்யுறாய்ங்க? இன்னும் பேசச் சொல்லிக் கேக்குறாய்ங்க?? அது???

கபீஷ் said...

//தமிழர்களுள் துரோகம் அதிகம்னு சொன்னவுடனே, கைதட்டி ஆரவாரம் செய்யுறாய்ங்க? இன்னும் பேசச் சொல்லிக் கேக்குறாய்ங்க?? அது???//


அதுக்குக் காரணமும் தமிழ் இனப் பற்றுதாங்க. ஒரு தமிழன் பேச்ச இன்னொரு தமிழன் ஊக்குவிக்கணும்னு(அது எப்படியிருந்தாலும்:-)). இதயே ஒரு மல்லுவோ,மராத்தியோ சொல்லியிருந்தா எல்லாரும் சேர்ந்து பின்னியிருப்பாங்க. இப்போ சொல்லுங்க தமிழனுக்கா இனப்பற்று இல்ல. :-):-)

பாலைவனத்துலயே விழுந்தாலும் தமிழன் மீசையில மண் ஒட்டாது :-)

Rajan said...

//பாலைவனத்துலயே விழுந்தாலும் தமிழன் மீசையில மண் ஒட்டாது :-)//


பாலைவனமென்ன மண்ணு ஒரு லோடு அடிச்சாலும் ஒட்டாது

க.பாலாசி said...

//(சிந்தனைக்காக மட்டுமே, ஆராய்ச்சிக்கன்று!!)//

அதுதாங்க கொழப்பமா இருக்கு... எங்க குத்துறீங்கன்னே தெரியல....

தாராபுரத்தான் said...

எதாவது உள் குத்து கிள் குத்தா இருக்கும்..நமக்குஎதற்கு வம்பு .போடறா அப்பா ஒட்டை.

ஆர்வா said...

எல்லாத்துக்கும் கைத்தட்டுவோம் நாம.. ஆனா அடுத்த நிமிஷமே அதைப்பத்தி மறந்திடுவோம்.
மக்கள் மாறினால் எல்லாமே மாறும்.. நன்றாக இருந்தது..

அண்ணாமலையான் said...

கலக்குங்க... பழம

பழமைபேசி said...

@@தமிழரசி
@@ஜெரி ஈசானந்தா
@@நண்டு@நொரண்டு

நன்றிங்க!

//ஈரோடு கதிர் said...
முதல் கவிதை கோயமுத்தூர்ல புரிஞ்ச மாதிரி இருக்கு / புரியாதமாதிரியும் இருக்கு....

கொஞ்ச நாளேவே உள்குத்து நிறைய //

இனி வராதுங்க மாப்பு! இஃகி!!

//jaffer erode//

நண்பரே வாங்க, வணக்கம்!
முதலாவது, யதார்த்தத்தை வலியுறுத்த!

இரண்டாவது, அருகில் இருப்பவனும் மனிதனே என்பதைச் சொல்ல!

மூன்றாவது, உணர்வை அலட்சியப்படுத்தி கருத்துக்கு மதிப்பளிக்க என எனக்கு நானே சொல்லிக் கொண்டவை.... அவை உங்கள் பார்வைக்கும்... அவ்வளவுதானுங்க!

//கபீஷ் said...
இனிமே இப்படித் தெளிவா கவுஜ எழுதினா கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கப்படுவீங்க(எங்கயாவது //

ஆகா, சீமாட்டி, சோத்துல கைய வெச்சுடாதீங்க சித்த!

@@பேநா மூடி
மனசைத் தேத்திக்குவோம், என்ன சொல்றீங்க?

பழமைபேசி said...

// Jawahar said...
நல்ல வளமான மொழித் திறனுடன் கருத்தும் அமைந்த கவிதைகள். வாழ்த்துக்கள்.//

வணக்கம்! மிக்க மகிழ்ச்சியாய் உணர்கிறேன்!

பழமைபேசி said...

@@கபீஷ்

முடியலை! :-0)

@@ராஜன்

சீமாட்டி, நண்பர் சொல்றதைக் கவனியுங்க சித்த!

@@க.பாலாசி

அஃகஃகா! முடியல, முடியல.... யெப்பா, நீங்களும் அண்ணன் தாராபுரத்தானும் செய்யுற கலாட்டாவுல பதிவுலக்மே சிரியோ சிரின்னு சிரிச்சு... அல்லுக் கழண்டு போயி இருக்குங்க!

//தாராபுரத்தான் said...
எதாவது உள் குத்து கிள் குத்தா இருக்கும்..நமக்குஎதற்கு வம்பு .போடறா அப்பா ஒட்டை//

இஃகிஃகி!

//கவிதை காதலன் //

ஆமாங்க, அதேதான்!

சுரேகா.. said...

கலக்குறீங்களே!

கரவொலியில் அதிரட்டும் அரங்கம்!

வாழ்த்துக்கள்!

துபாய் ராஜா said...

//அய்யோ பாவம்
எனக் கவலைப்பட்டு
வெகுண்டவன்
மெளனித்துப் போனான்;
துயரத்தில் இருப்பவன்
உள்ளூர்க்காரன் எனத்
தெரியவந்ததும்!//

:((

//தான் பார்த்த மட்டிலும்,
தன்னவனுக்குத் துயர் எனில்
துடிக்கும் இனம் இரண்டு!
யூதனும் குஜராத்தியும் முந்திக்கொள்ள
தமிழனுக்கு அந்த கட்டமைப்பு இல்லை என்றேன்!!
கரவோசையில் அதிர்ந்தது அரங்கம்!!!//

கண்துடைக்க வராவிட்டாலும் கைத்தட்டவாவது இணையுதே கரங்கள்....

வில்லன் said...

// ராஜன் said...

//பாலைவனத்துலயே விழுந்தாலும் தமிழன் மீசையில மண் ஒட்டாது :-)//


பாலைவனமென்ன மண்ணு ஒரு லோடு அடிச்சாலும் ஒட்டாது//

நெறைய தமிழனுக்கு மீசையே இல்லையே. மீசையே இல்லாம அலி மாதிரில்லா திரியறானுங்க!!!!!! (குடுகுடுப்பையும் சேத்துதான் சொல்லுறேன்).....மீசை இருந்தா தான மண்ணு ஒட்ட....... சிந்திக்க வேண்டிய விஷயம்....

பழமைபேசி said...

@@அண்ணாமலையான்

நன்றிங்க!

@@சுரேகா..

வாங்க நட்சத்திரமே, நன்றி!

@@துபாய் ராஜா

ஆமாங்க ராஜா!

@@வில்லன்

வில்லன் அண்ணாச்சி வன்ட்டாக, எல்லாம் ஓடுங்க ஓடுங்க....

நசரேயன் said...

அண்ணே வில்லனை கடை திறக்க வழி செய்யணும்

குறும்பன் said...

//துயரத்தில் இருப்பவன்
உள்ளூர்க்காரன் எனத்
தெரியவந்ததும்!//

உண்மை.