1/31/2010

அமெரிக்காவில் H1B: சமீபத்திய மட்டுறுத்தலும், நுழைவு நிராகரிப்பும்!

விபரம் உண்மைதான்! ஜனவரி முதல் வாரத்தில் இருந்து இன்று வரையிலும், ஊரில் விடுப்பைக் கழித்துவிட்டு உள்நுழைந்தவர்கள் சிலர் திருப்ப அனுப்பப்பட்டனர் என்பது சரிதான். இதற்கான சுட்டிகள், முதல், இரண்டாவது!

ஆனால், நூற்றுக்கணக்கானவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனரா என்பது குறித்து உறுதி செய்ய முடியவில்லை. மேலும், உள்நுழைவுக்கான இடம் மாறி இருப்பதனால் திருப்பி அனுப்பப்பட்டனர் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

ஏனென்றால், பல மாகாணங்களில் பன்னாட்டு விமான நிலையங்களே கிடையாது. ஆகவே, உள்நுழைவுக்கான இடம் மாறுவது என்பது தவிர்க்க முடியாததே!

பிறகு ஏன் இந்தக் கெடுபிடி? சமீபத்திய இந்த சுற்றறிக்கையே காரணம்! இதைப் பற்றிய மேலதிகத் தகவல்கள், குடியுரிமை இணையத்திலேயே காணப் பெறலாம்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் சென்னையில், உள்நுழைவுக்கான முத்திரை பதியச் சென்றிருக்கிறார். அவரிடம், உம்மை மேற்பார்வை செய்வது உமது நிறுவனத்தினரா அல்லது உமது சேவையைப் பெறும் நிறுவனத்தினரா என்று வினவ, இவர் யதார்த்தமாக, உள்ளது உள்ளபடியே, Yeah, I do report to a manager who is from client எனச் சொல்லி இருக்கிறார். அப்படியானால், நீர் உமது நிறுவனத்திற்கு வேலை செய்கிறீர்கள் என்பதற்கான மேலதிக விபரங்களைத் தாருங்கள் எனப் பணிக்கப்பட்டு, அவர் உள்நுழைவது கிடப்பில் உள்ளது.

H1b தகுதி என்பது மாற்றப்படவில்லை என்றாலும் கூட, அதை நிரூபணம் செய்யக் கூடிய விதம் வெகுவாக மாற்றப்பட்டு இருக்கிறது என்பதே சரி. உங்களுக்காக, யார் விண்ணப்பித்தார்களோ அல்லது விண்ணப்பிக்கப் போகிறார்களோ அவர்களுக்கே, அந்தவகை உள்நுழைவு பெறுபவர் பணியாற்ற வேண்டும் என்பதே இதன் உள்நோக்கம்.

ஒரு நிறுவனமானது, குறிப்பிட்ட வேலையை எடுத்துச் செய்வதற்காக ஒருவரையோ அல்லது பலரையோ அனுப்பினால் அது ஏற்றுக் கொள்ளப்படும். அதுவே, ஆள்களை அனுப்புவது/தருவிப்பது மட்டுமே அந்த நிறுவனத்தின் பங்காக இருக்குமானால் அது ஏற்றுக் கொள்ளப்படக் கூடாது என்பதே மேற்சொன்ன சுற்றறிக்கையின் நோக்கமாகப்படுகிறது.

ஏற்கனவே உள்நுழைந்து இருப்பவர்களானாலும் சரி, புதிதாக உள்ளே நுழைபவர்களானாலும் சரி, விபரத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அதற்கேற்ப, உங்கள் நேர்காணல், உள்புகு உரையாடல் மற்றும் விண்ணப்பத்தின் போதான மேலதிக விபரங்களில் கவனம் செலுத்துங்கள்!

23 comments:

Rekha raghavan said...

தகவலுக்கு நன்றி.

ரேகா ராகவன்.

Rekha raghavan said...

தகவலுக்கு நன்றி.

ரேகா ராகவன்.

Paleo God said...

முக்கியமான தகவல் பகிர்வு நண்பரே.

பழமைபேசி said...

@@KALYANARAMAN RAGHAVAN
@@ஷங்கர்..

நன்றிங்க!

Thekkikattan|தெகா said...

:( oh, it is for real, huh! the nightmare is taking its shape it seems. sad!!

பகிர்தலுக்கு நன்றி, பழம.

பழமைபேசி said...

//Thekkikattan|தெகா said...
:( oh, it is for real, huh! the nightmare is taking its shape it seems. sad!!
//

I mean, they are doing what they got to do... and we need to do, what we got to do.... you are right, tough time ahead it seems... thanks buddy!

அமர பாரதி said...

மாப்பு,

வெச்சிட்டானுவ போல இருக்கே ஆப்பு? என்னோட நண்பரை பயர் செஞ்சிட்டாங்க. பெரிய பிரச்சினையா இருக்கும் போல இருக்கேய்யா.

பழமைபேசி said...

//அமர பாரதி said...
மாப்பு,

வெச்சிட்டானுவ போல இருக்கே ஆப்பு? என்னோட நண்பரை பயர் செஞ்சிட்டாங்க. பெரிய பிரச்சினையா இருக்கும் போல இருக்கேய்யா//

ஆமாங்க, ஒன்னு ரெண்டு மாசம் பொறுத்திருந்து பார்க்கணும்... பங்குச் சந்தையில இனியும் ஒரு வீழ்ச்சி இருக்கும்னு வேற சொல்றாங்க.... :-0(

Raj said...

தகவலுக்கு நன்றி பதிவரே...

இந்த வருஷம் ஊருக்கு ஃபில்லிலருந்து பறக்கறதுக்கு பதிலா நீவார்க்லருந்து நேரடி விமான சேவைல சென்றுவரலாம்ன்னு நினைச்சிருந்தேன்...
இப்ப ப்ளானை மாத்தவேண்டியதுதான் போல...

செந்தில் நாதன் Senthil Nathan said...

தகவலுக்கு நன்றி.

நம்மள மாதிரி ஆளுங்க வருத்தப்பட/எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய விஷயம்.

நண்பர்களே,
இதை பற்றி மேலும் விபரம் யாருக்காவது தெரிஞ்சால் இங்கு பின்னுட்டமாக பகிரும்படி கேட்டு கொள்கிறேன்.

அப்பாவி முரு said...

நல்ல தகவல், தேவையானவர்களை சென்று சேர வேண்டும்...

Unknown said...

பதிவுக்கு நன்றி பழமை

யாத்ரீகன் said...

நன்றி ... வதந்திகளாய் கேள்விப்பட்ட சேதிகளை தெளிவுபண்ணமைக்கு..

sathishsangkavi.blogspot.com said...

தகவலுக்கு நன்றி....

ஜோதிஜி said...

சிறப்பான பலருக்கும் உபயோகம் உள்ள இது போன்ற தகவல்களுக்கு உங்கள் அக்கறைக்கு வாழ்த்துகள்.

பழமைபேசி said...

@@Raj
@@செந்தில் நாதன்
@@அப்பாவி முரு
@@செல்வன்
@@யாத்ரீகன்
@@Sangkavi
@@ஜோதிஜி
@@நசரேயன்

நன்றிங்க!

குறும்பன் said...

நியூ யார்க் பகுதி வழியாக உள்நுழையும் போது இவ்வகையான கெடுபிடி அதிகம் என்று கேள்விப்பட்டேன். அதற்காக மற்ற பகுதியில் இல்லை என்று பொருளில்லை. ஒப்பீட்டளவில் நியூ யார்க் பகுதியில் மிகஅதிகம்.

Mani - மணிமொழியன் said...

very useful !

வில்லன் said...

மிகவும் சரியாக சொன்னீர்கள் தல....

BASICALLY THEY ARE TRYING TO STOP 3RD PARTY CONSULTING COMPANIES

sriram said...

மொதல்ல ஒரு தன்னிலை விளக்கம்:

என் வேலையும் H1Bயும் பின்னிப் பிணைந்திருப்பதால் எனக்கு IT மக்களை விட கொஞ்சம் அதிகம் தெரியும், எல்லாம் தெரியாவிட்டாலும் தேவையான அளவுக்குத் தெரியும்.

இப்போ பின்னூட்டம்:

//நியூ யார்க் பகுதி வழியாக உள்நுழையும் போது இவ்வகையான கெடுபிடி அதிகம் என்று கேள்விப்பட்டேன். அதற்காக மற்ற பகுதியில் இல்லை என்று பொருளில்லை. ஒப்பீட்டளவில் நியூ யார்க் பகுதியில் மிகஅதிகம்//

NYC ஏரியா தவிர வேறெங்கும் Deportation நடந்ததாகத் தெரியவில்லை

//BASICALLY THEY ARE TRYING TO STOP 3RD PARTY CONSULTING COMPANIES//

பலரும் நினைப்பது மாதிரி விஷயம் அது கிடையாது. What USCIS saying is "Employers cannot disown the employees" and "Employer should have control over the Employee". Employer should prove the legal relationship between Employer and Emplyee. Payroll, Providing medical insurance, periodical review, approval of leave etc can and will constitute this relationship.

இன்னும் இரண்டு வாரங்களில் இது பத்தி ஒரு பதிவு போட எண்ணி இருந்தேன் (காரணம் - இப்போ 7 petition அனுப்பியிருக்கேன் -with evidences as mentioned in USCIS memorandum, அதன் முடிவைப் பாக்கணும்), இன்னும் விஷயத்தோடவும், தெளிவோடவும் விரைவில் சொல்ல முயல்கிறேன், அதுக்குள்ள ஏதாவது விவரம் வேணும்னா nsriram73@gmail.com / 781 363 9168 ல தொடர்பு கொண்டா சொல்ல முயல்கிறேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

அப்புறம், இது ஒண்ணும் புது விதியல்ல, H1B Guide book ல ரொம்ப நாளா இருக்குற விசயம்தான், இப்போத்தான் கடுமையா implement செய்யப் பாக்குறாங்க..

இனியா said...

There are few cases where H1Bs were deported from JFK/EWR airports. It happens all the time. This is nothing new. H1Bs who work in the client place should maintain the docs to prove "employer-employee" relationship as prescribed by the H1B guidelines.

பழமைபேசி said...

@@குறும்பன்

அப்படிங்களா?

//Mani - மணிமொழியன் said...
very useful !
//
நன்றி!

//வில்லன் //

நல்லா இருக்கீங்களா தல?

//sriram said...
அப்புறம், இது ஒண்ணும் புது விதியல்ல, H1B Guide book ல ரொம்ப நாளா இருக்குற விசயம்தான், இப்போத்தான் கடுமையா implement செய்யப் பாக்குறாங்க..
//

மிக்க நன்றிங்க.... மேலதிகத்தகவல்களும் தாங்க!

//இனியா //

நன்றிங்க இனியா!