ஊதக்காற்றின் சீட்டிச் சத்தம், கூடவே
ஊர்கோடியில் ஒரு நாயின் ஊளைச் சத்தம்!!
சிறிது சிறிதாய் நுண்ணிய ஒலியில்
சில்வண்டுக் கீசுகள்!
வானத்தின் உச்சிக்கு சற்றுக் கீழே
பொன்மயமாய் மதி!
திண்ணையில் இருந்து எழும்பி
கீழே படாமல் பதிந்த கால்கள்!
முற்றம் பார்த்து பின், படிப்படியாய்
வேகமெடுத்த பாதங்கள்!
வீதியின் முனைக்கு வந்ததும்
பின்னோக்கிய விழிகள்!
ஆள்அரவம் இல்லாதன கண்டு
மெதுவாய் மேற்குத் தெருவில்!
நான்கு வீடுகள் தாண்டியதும்
ஒரு பூந்தோட்ட வீடு!
சாளரத்து மூடுபலகையில்
மெலிதாய் தட்டலொன்று!
சிவகாசித் தீக்குச்சி கீறப்பட்டதும்
நீலநிறச் சுடர் பளீர்!
இதயம் ஒன்றுக்கு இன்னொன்றாய்
துடிக்கும் ஒலிப்பைவிடவும்,
உவகையிலும் அச்சத்திலுமாய்
ஆனதொரு மெலிந்த குரல்!
17 comments:
//ஊதக்காற்றின் சீட்டிச் சத்தம், கூடவே
ஊர்கோடியில் ஒரு நாயின் ஊளைச் சத்தம்!! //
இந்த சத்தத்தை கேட்டு ரொம்ப வருசமாச்சு....
/இதயம் ஒன்றுக்கு இன்னொன்றாய் துடிக்கும் ஒலிப்பைவிடவும்,உவகையிலும் அச்சத்திலுமாய் ஆனதொரு மெலிந்த குரல்!/
ஆகா. அழகு...
கள்ள யாமமோ
@@Sangkavi
ஊர்ல இருக்குற நீங்களுமா?
புதிவிதமான எழுத்துநடை....மிகவும் ரசித்தேன்
இதமான வரிகள்.,படித்தேன்,ரசித்தேன்..
நீங்க சொல்றது திருடவேண்டிய யாமம்தானே...
கவிதை அழகு...
அருமையான கவிதை.
@@வானம்பாடிகள்
நன்றிங்க பாலாண்ணே! உடல்நிலை இப்ப பரவாயில்லையா??
@@ஈரோடு கதிர்
சொல்லித் தெரியணுமா?
@@ஆரூரன் விசுவநாதன்
நன்றிங்க... ச்சும்மா ஒரு முயற்சி!
@@ஜெரி ஈசானந்தா.
நன்றிங்க!
@@க.பாலாசி
பழக்கப்பட்டது மாதிரி சொல்றீங்க... இஃகி!
@@வெ.இராதாகிருஷ்ணன்
மிக்க நன்றிங்க!
அழகு :)
எழுத்துநடை....மிகவும் ரசித்தேன்
நல்லாருக்கு தலைவரே.
"தம்" அடிக்க தான் இந்த பாடு படுரீருன்னு பாத்தா ஆளு "வேற" எதுக்கோல்லா அடி போடுற மாதிரி தெரியுது........
@@எம்.எம்.அப்துல்லா
அண்ணே, நன்றிங்க!
@@நிலாமதி
நன்றிங்க!
@@வில்லன்
இஃகி!
ரொம்ப நல்லாயிருக்கு
ஏதோ வில்லங்கமாவுல்ல தெரியுது.
@@கயல்
நன்றிங்க!
//தாராபுரத்தான் said...
ஏதோ வில்லங்கமாவுல்ல தெரியுது//
இது Robert Brown அவர்கள் ஆங்கிலத்துல 1928ல எழுதினதின் தழுவல்ங்க ஐயா...புனைவுதான்!
Post a Comment