1/22/2010

மண் மகிமை

ஐந்தாண்டு காலமும்
காணாத தாய்
மண்ணல்லவா அது?

தாயின் மடி புகுந்து
ஒய்யாரமாய்க் கண் அசந்த
மண்ணல்லவா அது??

முழு முகமும் வெண்ணிலவாய்
கண்ணிரண்டும் ஒளிக் கீற்றாய்
இதழிரண்டும் பிறை நிலவாய்
அகம் முழுதும் நிறை பொங்கலாய்
கிராமத்து வீட்டின் முற்றத்தில்
எனது மண் எனும் பற்றுதலில்
பரவசமாய்க் காலூன்றுகையில்
அண்டை வீட்டு வால்கள்
வாயெல்லாம் முத்துகளாய்!

அவர்களுக்கு வாஞ்சையுடன்
சிறுவாட்டுக் காசு தருவோம்
எனும் நினைப்பில்,
டேய் பெரியவனே
இந்தா இந்த நூறு உருபாய்க்கு
சில்லறை வாங்கியாடா
என்றதுதான் தாமதம்!!
போங்கண்ணா நீங்க,
குடுத்த இந்த நூறு
உருபாயே சில்லறைதான்!!!

18 comments:

cheena (சீனா) said...

அருமை அருமை பழமைபேசி

தாயகமும் முன்னேறுகிறது - வால்கள் பொருளாதாரம் பயிலுகிறவர்கள் - சில்லறை எனில் எதெனத் தெரிந்தவர்கள் - பத்து உரூபாய்க்குக் கீழ் நோட்டுகள் கிடையாது புழக்கத்தில் = 1, 2, 5 உர்ருபாய் நோட்டுகள் எங்கே ? 1, 2, 5, 10 ,20 , 25, பைசா காசுகள் எங்கே - தாயகம் முன்னேறுகிறது பழமைபேசி - பெருமைப்படுங்கள்

நல்வாழ்த்துகள்

sathishsangkavi.blogspot.com said...

//இந்தா இந்த நூறு உருபாய்க்கு
சில்லறை வாங்கியாடா
என்றதுதான் தாமதம்!!
போங்கண்ணா நீங்க,
குடுத்த இந்த நூறு
உருபாயே சில்லறைதான்!!! //

இது தாங்க இன்றைய நம்ம கிரமாம்...

ஈரோடு கதிர் said...

மாப்பு நீங்க நூறு டாலரை கொடுத்திருந்தாவே நம்மூரு புள்ளைக அப்படித்தான் சொல்லும்...

ஆரூரன் விசுவநாதன் said...

மிகவும் ரசித்தேன்.....

எம்.எம்.அப்துல்லா said...

எண்டர் கவிதை அருமை :)

vasu balaji said...

ம்கும். இது டிப்சுக்காச்சு செலவுக்கெங்கேன்னு கேக்கலையே:))

க.பாலாசி said...

அட ஆமாங்க....இப்பல்லாம் நூறு ரூவாயே சில்லறத்தான். நல்ல கவிதை...

Paleo God said...

கலக்கறீங்க..பு(பழ)மை பேசி..:)

பிரபாகர் said...

கிராமங்களில் பணப்புழக்கம் அதிகமாகிவிட்டது... சந்தோஷமான ஒன்றுதான், ஆனாலும் மனிதம் குறைந்துவிட்டதும் உண்மைதான்...

பிரபாகர்.

Mahesh said...

ம்ம்.... நனவோடையும் நாட்டு நடப்பும்.... அருமை அருமை....

அவ்வளவு பக்கத்துல இருந்தும், 2 3 தடவை தொலைபேசினாலும் உங்களை நேர்ல சந்திக்க முடியாதது குறையாகவே இருக்கு.... பலவிதமான பணிகள் இருந்ததால சந்திக்க முடியவே இல்லை.

பழமைபேசி said...

@@cheena (சீனா)
@@Sangkavi
@@ஈரோடு கதிர்
@@ஆரூரன் விசுவநாதன்
@@எம்.எம்.அப்துல்லா
@@வானம்பாடிகள்
@@க.பாலாசி
@@பிரபாகர்

நன்றிங்க மக்களே!

@@Mahesh

அண்ணே வாங்க... கண்டு கன நாளாச்சுது... ஆமாங்ணே!

priyamudanprabu said...

அவர்களுக்கு வாஞ்சையுடன்
சிறுவாட்டுக் காசு தருவோம்
எனும் நினைப்பில்,
டேய் பெரியவனே
இந்தா இந்த நூறு உருபாய்க்கு
சில்லறை வாங்கியாடா
என்றதுதான் தாமதம்!!
போங்கண்ணா நீங்க,
குடுத்த இந்த நூறு
உருபாயே சில்லறைதான்!!!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


வழக்கம் போல கலக்கல்

ஓட்டு போட்டாச்சு

கயல் said...

இயல்பான மொழிநடை!

அழகு!

இந்தியா ஒளிர்கிறது?

நூறு ரூபாய் சில்லறை ஆச்சுது பாத்தீங்களா!

கபீஷ் said...

சிறுவாட்டுக் காசுக்கு வெயிட்டீஸ் (இனிமே ரொம்ப கம்மியா கொடுக்க மாட்டீங்கள்ள? :-)

தாராபுரத்தான் said...

அன்புக்கு ஏதுங்க மீதி.

Naanjil Peter said...

Thampi:

Well written. This has happened to me too at Trivendram airport.
Once in India, (1965) one USD was Rs.8. Now its is Rs45-50. This is economics.
nanRi
peter

சரண் said...

ஊருக்குப் போய்ட்டு வந்த அனுபவத்தை இதவிட அழகா யாரும் எழுத முடியாது.. வழக்கம்போல அருமை..

நூறு ரூபாய் சில்லறையானது வளர்ச்சியா.. இல்லை பணவீக்கத்தின் எதிர்வினையா என்பது புரியலை.. போகப் போகத் தெரியும்..

பழமைபேசி said...

@@பிரியமுடன் பிரபு
@@ கயல்


நன்றிங்க!

@@கபீஷ்

கொடுத்துட்டாப் போச்சுது...சீமாட்டிகிட்ட இல்லாத காசா?

//தாராபுரத்தான் said...
அன்புக்கு ஏதுங்க மீதி.
//

இதுவும் சரிதானுங்க!

// naanjil //

நன்றிங்க அண்ணா!

// சூர்யாவின் அப்பா said...
ஊருக்குப் போய்ட்டு வந்த அனுபவத்தை இதவிட அழகா யாரும் எழுத முடியாது.. வழக்கம்போல அருமை..

//

நன்றிங்க தம்பி! சூர்யா நல்லா இருக்காரா??