கண்ணோட்டம்
பூ. சா. கோ (P.S.G)
கலை அறிவியல்
கல்லூரியின்
எழிலான புது
உள்வாயிலைக்
கண்ட பரவசத்தில்
மக்கள்!
நானோ
அங்கிருந்து
காணாமற்
போயிருந்த
மரத்தின் நிழலைத்
தேடியபடி!
வினவுதல்
செல்வந்தனும்
தொழிலதிபருமான
தனது நண்பன்
நாக்கூசாமல்
கொச்சை மொழியால்
அரற்றினான் பணியாளை!
நண்பா,
எல்லாவற்றையும்
சகித்துக்கொண்டு
பணிவிடை
செய்துவிட்டுத்
திரும்பும் அவன்
உன்னிலும்
மேலாய்
மெளன மொழியில்
உம்மையும் வசை
பாடிச் செல்வானாய்
இருக்கலாம் அல்லவா
என்றான் இவன்!
பள்ளிக்காக!
அரைகுறை
ஆடைகளோடு
துள்ளிசையினூடே
குத்தாட்டமும்
கும்மாளமுமாய்
அழகிகள்!
துடியலூரில் இருக்கும்
பள்ளிக்காக
நிதி திரட்டும்
கலை நிகழ்ச்சி
அது!!
அதுவும் நன்றாகவே
நடந்தது
கல்விக்கான
பங்களிப்பு எனும்
மேலான உணர்வின்
குரல்வளையை
மிதித்தபடி
குதூகலமாய்!!!
பச்சைக்கிளி
தீராத நோய்க்கான
கொசுப் பண்ணை
இயங்குகிற
தேங்கிய சாக்கடை
தன் வீட்டின் முன்னே!
சீர் செய்யக்
காசு கேட்டு எதிரில்
வந்தவனை
மறுதலித்துச் சென்றது
அவனது சொகுசுந்து
தன் மனையாளோடு
அவள் கேட்ட
பத்தாயிரம் ரூபாய்
பச்சைக் கிளிகள்
வாங்க
காந்திபுரம் இருக்கும்
திசை நோக்கி!!
புறம்
அனைவருக்கும்
தெரிகிறது
கைகளில்
இருக்கும் அலைபேசியும்,
உலாவரும் சொகுசுந்தும்,
நுனிநாக்கில் புதிதாய்ப்
புகுந்த ஆங்கிலத்தின்
ஊடான நளினப் பேச்சும்;
சர்க்கார் சாமக்குளத்தில்
இருந்த அவனது
பரம்பரை நிலமும் அகமும்
அவனை விட்டுப்
போனது தெரியாமல்!!
25 comments:
பழம, அகம் தெரிகிறது ஒவ்வொரு கவிஜாவிலும் ...
அன்பின் பழமை பேசி
அருமை அருமை அனைத்துக் கவிதைகளும் அருமை
இயறகை அழிக்கப்படுகிறது - மரங்கள் வெட்டப்படுகின்றன - காலத்தின் கோலம் - தேவை - ம்ம்ம்ம்
மரநிழலைத் தேடியது நன்று
மௌனமொழியில் வசை பாடுவது - ஓஓ - இப்படியும் இருக்குமோ
பள்ளிகள் வளர்ச்சிக்காக இப்படிச் செய்ய வேண்டி இருக்கிறாது - என்ன செய்ய
அகம் கொடுத்துப் புறம் வாங்க வேண்டிய நிலை
மிகவும் எளிமையான கவிதைகள்
மிகவும் ரசித்தேன்
நல்வாழ்த்துகள் பழமை பேசி
இடித்துரைத்தல் என்பது இதுதான்.
அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்..
பகிர்வுக்கு நன்றி
அனைத்தும் சிந்திக்க வைக்கும் வரிகள்
அதிரடி.,
என்ன செய்வது தோழரே...
குத்தாட்டம் போட்டாத்தான் நம்மாளுக நிதி தருகிறார்கள்....
நிதர்சனம், அக்கறை, பாசாங்கு இல்லாத வார்த்தைகளுக்கு வாழ்த்துகள்
//அரைகுறை
ஆடைகளோடு
துள்ளிசையினூடே
குத்தாட்டமும்
கும்மாளமுமாய்
அழகிகள்!
//
ஐயா, கவிதைகள் நல்லாருக்கு.. எந்த ஆடை முழுமை எது அரைகுறை என்ற விவரணம் காலம் தோறும் மாறுபடும்..
உங்களுக்குக் கொஞ்சம் வயசாயிட்ட மாதிரி தோணுது..
எங்களை மாதிரி கொஞ்சம் இளமையா இருங்க... :)
மர நிழல் தேடல்
மௌனத்தால் வைதல்
மடத்தனமாய் நிதிதேடல்
மனிதத்தை இழித்தல்....
யாவிலும் உமது முத்திரை...
பிரபாகர்.
எல்லாமே மனதில் தைக்கிறது
இது எல்லாமே அருமை.
இது பக்கத்துல ‘!’ இது விட்டுப்போச்சு:))
அருமையான கவிதைகள்..
அருமை...மிண்டும் படைக்க
அண்ணே, ஒவ்வொரு கவிதையும் அருமை!!
//தீராத நோய்க்கான
கொசுப் பண்ணை
இயங்குகிற
தேங்கிய சாக்கடை
தன் வீட்டின் முன்னே!
சீர் செய்யக்
காசு கேட்டு எதிரில்
வந்தவனை
மறுதலித்துச் சென்றது
அவனது சொகுசுந்து
தன் மனையாளோடு
அவள் கேட்ட
பத்தாயிரம் ரூபாய்
பச்சைக் கிளிகள்
வாங்க
காந்திபுரம் இருக்கும்
திசை நோக்கி!!//
என்ன கொடும பாத்தீங்களா...
கவிதைகள் அருமை....
எல்லாவற்றையும்
சகித்துக்கொண்டு
அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்..
கண்களை விற்றுசித்திரம் வாங்குபவர்கள்
மக்களே, அனைவருக்கும் நன்றி! நல்லது பலதும் இருக்கு.... அடுத்தடுத்த இடுகைகளில் பார்க்கலாம்! இஃகி!!
வினவுதல் மற்றும் பள்ளிக்காக! அருமை..
ஆமா,பழமையாரே, வெளிநாட்டுல இருக்கிற நம்மள மாதிரி ஆளுங்க இப்படி ரொம்ப ஃபீல் பண்றோம். உள்ளூர்ல இருக்கிறவங்களுக்கு அருமை தெரியலை. :((
அண்ணே எங்க ஊரையும் பத்தி போடுங்க
எல்லா கவிதையும் அருமை!!
//
நானோ
அங்கிருந்து
காணாமற்
போயிருந்த
மரத்தின் நிழலைத்
தேடியபடி!
//
அழகு!!
வினவுதல் அருமை!!
பழமையாரின் கவித்துவம் எல்லா கவிதையிலும் எதிரொலிக்கிறது!!
அழகு!!
வினவுதல் அருமை!!
பழமையாரின் கவித்துவம் எல்லா கவிதையிலும் எதிரொலிக்கிறது!!
இன்னும் வாசிக்க காத்திருக்கோம்!!
இடையிடையே காளமேகத் தாத்தாவையும் வரச் சொல்லுங்க!தமிழ் படிச்சு நாளாச்சு!!
அருமை............
நன்றிங்க, நன்றிங்க...
Post a Comment