11/20/2009

ஊசியைச் சல்லடை சொல்கிறது, உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை!

மக்களே, வணக்கம்! வேலை, வேலை.... இன்னைக்குதான் அப்படியே ஒரு இடுகை ஒன்னை இடலாமுன்னு, இஃகி! நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் உள்வாங்கின கிராமங்கள். நகர வாடையே கிடையாது. மிஞ்சி மிஞ்சிப் போனா தெக்கமின்னா பெதப்பம்பட்டி, மேற்கமின்னா நெகமம், வடக்கமின்னா செஞ்சேரிமலை, அவ்வளவுதான்!

எப்படியும் ஆறுமாசத்துக்கு ஒரு வாட்டி, காதுவலியோ தொண்டை வலியோ வரும். அப்பவெல்லாம் உடுமலைப் பேட்டை பழனிரோடு/தளிரோடு மொக்குல வைத்தியநாதன் மருத்துவர்கிட்டப் போவேன். அம்புட்டுதேன்! இப்பிடியே மொதல் பதினஞ்சி வருசமும் போச்சுது. அப்பறம் பொள்ளாச்சி, கோயமுத்தூர்னு சில வருடங்கள்... அதுக்கப்றம் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, கனடா, அமெரிக்கா, ஜெர்மனி, சைப்ரசு, இசுரேல் மறுபடியும் அமெரிக்கா.

முதலாம் வகுப்பு படிக்கும் போதே திராவிட மேடைகள் பரிச்யமாச்சுது. அதுக்கு என்னோட குடும்பப் பின்னணியானது பொதுவாழ்வு, வழக்குகள்ன்னு இருந்ததும் ஒரு காரணம். வா.வேலூர்ல ஒரே ஒரு குடும்பம். அவங்க வீட்டுப் பெரியவர்கள் இரட்டையர்கள், இராம் ஐயர், இலட்சுமண ஐயர்னு கூப்பிடுவாங்க.


அவங்கள்ல ஒருத்தருக்குதான் கல்யாணம் ஆகி, ஒரு பெண் பிள்ளை. இலட்சுமண ஐயருக்கு கல்யாணம் ஆச்சா, ஆகலையான்னு எல்லாம் எனக்குத் தெரியாது. நான் ஒன்னாம் வகுப்பு ரெண்டாம் வகுப்பு படிக்கும் போதே அவங்களுக்கு 60 வயசு இருக்கும்னு நினைக்கிறேன். கூட்டுக் குடும்பமாத்தான் இருந்தாங்க.

அவங்க பெண் பெயர் ஞானசெளந்தரி. அவங்க கணவர் எனக்கும் என் சகோதரர்களுக்கும் தமிழாசிரியர், இலட்சுமண வாத்தியார்னு அன்பா அழைப்போம். கிராமத்துல வாழ்க்கை எப்படி இருக்கும்? எல்லாரும் ஒன்னும் ஒன்னுமா அணுக்கமா இருந்தோம். எங்களுக்கு ரெண்டு வீடு தள்ளிதான் அவங்க வீடு. பொருட்கள் ஓசி வாங்குறது, கைமாத்து வாங்குறதுன்னு எந்த வித்தியாசமும் இல்லாமத்தான் இருந்தது. அவங்க, சிலர் விமர்சிக்கிற பார்ப்பனர்ங்ற விசயமே எனக்கு என்னோட இருபதுகள்லதான் தெரிய வந்தது.

அடுத்தபடியா, நான் கோயமுத்தூர்ல சில காலம் வேலை செய்திட்டு இருக்கும் போது வாய்த்த நண்பன், இராஜேசு. இப்ப, ஆசுதிரேலியாவுல இருக்கான். கோயமுத்தூர்ல இருக்குற வரைக்கும், நானும் அவனும் வருசா வருசம் சபரிமலைக்கு ஒன்னாப் போவோம். நண்பர்கள் எல்லாரும் அவனோட வீட்டுக்கு எந்தத் தயக்கமும் இல்லாம சராங்கமாப் போவோம். ஏன்னா, அவங்க அப்பா எங்களை எல்லாம் அன்பா உபசரிச்சி அனுப்புவாரு.

இப்பவும் அவங்க திருச்சி சாலையில, சென்ட்ரல் ஸ்டுடியோ சமீபம் கிருஷ்ணா குடியிருப்புல இருக்குற வீட்லதான் இருக்காங்க. நான், சிங்கப்பூர் வந்ததுக்கு அப்புறம் இராஜேசு எங்க அலுவலகத்துல பணி புரிஞ்சிட்டு இருந்த ஒரு கிறித்துவப் பெண்ணைக் கல்யாணம் கட்டிகிட்டான். ரொம்ப நல்லவன், வெளிப்படையானவனும் கூட.

இந்த இரு குடும்பங்கள்தாங்க, எனக்கு தாயகத்தில இருக்கும் போது என் வாழ்க்கையில அமைந்த, எதிர்கொண்ட பார்ப்பனர்கள். இப்படிச் சொல்லவே எனக்கு வெட்கமாவும், அருவறுப்பாவும் இருக்கு. ஏன்னா, அவங்க பழகின விதம் தாய் புள்ளையாவல்ல இருந்துச்சு? இந்த இடுகைக்காக அவங்களை இப்படிக் குறிப்பிடுறேன், அதுக்காக அவங்க இதைப் பொறுத்துக்குவாங்கங்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.

மத்தபடி நிறைய இதழ்கள், மேடைப் பேச்சுகள், இப்ப இடுகைகள்னு நிறைய படிச்சாச்சு. வேதனையா இருக்கு! கலைஞர் அடிக்கடி சொல்ற ஒரு மேற்கோள் ஒன்னுதான் ஞாவகத்துக்கு வருது. தூங்குறவனை எழுப்பிடலாம்; தூங்குற மாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியாதுதான்.

இந்தப் பின்னணியைக் கொண்டவன் மனதில் சில கேள்விகள். என்னோட பின்னணிய, நேர்மையா உள்ளது உள்ளப்டி சொல்லிட்டேன். ஆகவே, ஆரோக்கியமான பின்னூட்டம் போடுறவங்க மட்டும் போடலாம்.


  • சாதியை ஒழிப்போம்னு சொல்லிட்டு, பார்ப்பனன், பார்ப்பனன் அல்லாதோன்னு பிரித்துப் போட்டுப் பலன் அடைவது யார்?

  • ஒரு காலத்துல ஆதிக்கம் இருந்திருக்கலாம். அதை எதிர்த்துத் தலைவர்கள் போராடி இருக்கலாம். ஆனா, இன்றைய சூழலும் அதே போலத்தானா?

  • மொழியைப் பார்ப்பனர்கள் சிதைக்கிறார்கள்னு ஒரு விமர்சனம். அப்படியானால், மொழியைக் கொண்டவர்கள் காப்பாற்றுகிறார்களா?

  • பகுத்தறிவுப் பகலவன், சூத்திர ஆன்மிகவாதிங்றதால அவர் காலில் விழுந்தாராம். அப்படியானால், பகுத்தறிவு என்பதும் சுயமரியாதை என்பதும் வெறும் பேச்சுத்தானா?

  • பார்ப்பனீய எதிர்ப்பைக் கொண்டு, மற்றவரைத் தன்னகத்தே இழுக்க முயலும் இயக்கத்தோர் பார்ப்பனர் அல்லாதோரிடத்து இருக்கும் பேதங்களை விமர்சித்து எழும் காலம் எப்போது?

  • தமிழ் மொழி, பண்பாடு பேணுவோர் அனைவரும் தமிழர்கள். தமிழர்களுக்குள் சாதிகள் இல்லை என்று வெறும் வாய்ப் பேச்சாகவாவது சொல்லக் கூடிய தலைவர்கள் இருக்கிறார்களா நாட்டில்?

  • புதுமை படைக்கிறோம், கட்டுடைக்கிறோம் என்று சொல்லி தம்மை முன்னிறுத்திக் கொள்கிற இவர்கள், பார்ப்பனர், பார்ப்பனீயம் எனும் சொல்லில் வீழ்ந்து அந்தக் கட்டுக்குள்ளாகவே முடங்கிப் போய்விடுகிறார்கள் என்பதுதானே ய்தார்த்தம்?

மனிதனை மனிதனாகப் பார்த்து, தமிழை தமிழாகப் பாவிக்காத இவர்கள் போடும் கூச்சல், நகரங்களிலும் இணையத்திலும் மட்டுமே ஓரளவுக்கு செல்லுபடியாகும். அன்பும் அடக்கமும் மட்டுமே வாழ்கிற தமிழகத்துக் கிராமங்களின் பிரச்சினைகள் இதுவல்ல! இது இவர்கள் போடும் வெற்றுக் கூச்சல் மட்டுமே என்பது இந்தக் கிராமத்தானின் தாழ்மையான எண்ணம்!!

ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை இருக்கிறது!

51 comments:

ஈரோடு கதிர் said...

நல்லாத்தான் சொல்றீங்க

ரைட்டு......

Rekha raghavan said...

அருமையான தேவையான பதிவு.

ரேகா ராகவன்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//மனிதனை மனிதனாகப் பார்த்து, தமிழை தமிழாகப் பாவிக்காத இவர்கள் போடும் கூச்சல், நகரங்களிலும் இணையத்திலும் மட்டுமே ஓரளவுக்கு செல்லுபடியாகும். அன்பும் அடக்கமும் மட்டுமே வாழ்கிற தமிழகத்துக் கிராமங்களின் பிரச்சினைகள் இதுவல்ல! இது இவர்கள் போடும் வெற்றுக் கூச்சல் மட்டுமே என்பது இந்தக் கிராமத்தானின் தாழ்மையான எண்ணம்!//

அருமையான வார்த்தைகள்...

இதோ கீழே என் பதில்கள்...

//சாதியை ஒழிப்போம்னு சொல்லிட்டு, பார்ப்பனன், பார்ப்பனன் அல்லாதோன்னு பிரித்துப் போட்டுப் பலன் அடைவது யார்?//

பயனடைவது அரசியல்வாதிகள் தான் என்பது என் கருத்து.

//ஒரு காலத்துல ஆதிக்கம் இருந்திருக்கலாம். அதை எதிர்த்துத் தலைவர்கள் போராடி இருக்கலாம். ஆனா, இன்றைய சூழலும் அதே போலத்தானா?//

ஆதிக்கம்?? சில வர்த்தக நிறுவனங்களில் நிர்வாகத்தாரின் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு முதலிடம் தருவது நடந்துகொண்டே இருக்கிறது. இதை பார்ப்பனர் மட்டும் தான் கடைப்பிடிக்கிறார்கள் என்றில்லை. அனைத்து சாதியினரும் கடைபிடித்து தீருகிறார்கள்.

//மொழியைப் பார்ப்பனர்கள் சிதைக்கிறார்கள்னு ஒரு விமர்சனம். அப்படியானால், மொழியைக் கொண்டவர்கள் காப்பாற்றுகிறார்களா?//

மொழிக்காக அரும்பாடு பட்டவர்களில் பார்ப்பனர்களில் பங்கு மிகப்பெரியது. அப்படி பார்ப்பதே தவறு.


//பார்ப்பனீய எதிர்ப்பைக் கொண்டு, மற்றவரைத் தன்னகத்தே இழுக்க முயலும் இயக்கத்தோர் பார்ப்பனர் அல்லாதோரிடத்து இருக்கும் பேதங்களை விமர்சித்து எழும் காலம் எப்போது?//

இது போன்ற சாதீய காட்டங்கள் ஒழிந்தால் தான் சமரசம் நிலவும் என்பது என் கருத்து. இது பார்ப்பனர்கள் எதிர்ப்பு மட்டுமல்ல பெரும்பாலான சாதியினரும் செய்வதே.

//தமிழ் மொழி, பண்பாடு பேணுவோர் அனைவரும் தமிழர்கள். தமிழர்களுக்குள் சாதிகள் இல்லை என்று வெறும் வாய்ப் பேச்சாகவாவது சொல்லக் கூடிய தலைவர்கள் இருக்கிறார்களா நாட்டில்?//

சாதிகள் இல்லை என்று கூறும் அரசியல் தலைவர்கள் பொய் பேசுகிறார்கள் என்று கூறுவதைத் தவிர என்ன சொல்ல முடியும்?

//புதுமை படைக்கிறோம், கட்டுடைக்கிறோம் என்று சொல்லி தம்மை முன்னிறுத்திக் கொள்கிற இவர்கள், பார்ப்பனர், பார்ப்பனீயம் எனும் சொல்லில் வீழ்ந்து அந்தக் கட்டுக்குள்ளாகவே முடங்கிப் போய்விடுகிறார்கள் என்பதுதானே ய்தார்த்தம்?//

எனக்கு இதில் இன்னும் புரிதல் வேண்டியிருப்பதால் கருத்திட விரும்பவில்லை.

ஆரூரன் விசுவநாதன் said...

மிக அழகான அவசியமான பதிவு நண்பா......

செந்தழல் பொழில் திரு மேனியும் காட்டி,
திருப்பெருந்துறை கோவிலும் காட்டி

அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்,

ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே....

என்ற மணிவாசகர் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

இங்கே அரைகுறைகள் தான், அதிகம் பேசுகிறது நண்பா.....

பிறப்பால் ஒருவன் பார்ப்பணன் என்பதால் அவன் தவறானவன் என்ற பொருளிலேயே உணரப்படுகிறது.

பிராமணீயம் என்பதை ஒரு தனி மனிதனின் குணமா? அல்லது ஒட்டுமொத்த இனமா?

திராவிடத் தறுதலைக்கள் பெரியாரையும் முழுதாய் படிக்கவில்லை, சமூகத்தையும் முழுதாய் படிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

க.பாலாசி said...

//ஆரோக்கியமான பின்னூட்டம் போடுறவங்க மட்டும் போடலாம். //

சரிங்க தலைவரே....நான் பிறகு வருகிறேன்.

கேள்விகளனைத்தும் யோசிக்க வைக்கின்றன.

Vidhoosh said...

இதே வசனத்தோடு இப்போத்தான் ஒரு இடுகை எழுத ஆரம்பிச்சேன். அட இது என்னன்னு பாக்கலாம்னு வந்தா, நீங்களும் இதே topic. சபாஷ். :)

-வித்யா

குடுகுடுப்பை said...

பார்ப்பனர்களை எதிர்த்து பெரியார் அன்றைக்கு செய்த கலகம் தேவையானது.

இன்றைக்கு பார்ப்பன எதிர்ப்பு சிகரெட் குடிக்கிறது மாதிரி விட முடியாம பேசுறாங்க, வேற எந்தக்காரணமும் இல்லை.

vasu balaji said...

பாதிக்கப்பட்டவன். நான் ஒன்னும் சொல்லமாட்டன்.

மணிப்பயல் said...

ஒழிக்கப்பட வேண்டியது பார்ப்பனர்கள் அல்ல. பார்ப்பனீயம்தான் என்று பெரியார் எப்போதோ சொல்லிவிட்டாரே!

இராகவன் நைஜிரியா said...

அரசியல் என்பது வியாபாரமாகி விட்டது. வியாபாரத் தந்திரங்களில் ஒன்று பார்ப்பன எதிர்ப்பு... இதை போய் சீரியசா எடுத்துகிட்டு...

ஓட்டு போட்ச்சாங்க ஐயா..

பிரபாகர் said...

//
"ஊசியைச் சல்லடை சொல்கிறது, உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை!"
//
இதிலேயே எல்லாம் இருக்கிறது, உங்களின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்.

இதப்பத்தி பேசினா குழப்பம் அப்புறம் கேட்ட பேருதான் வரும்...

அருமையான இடுகை...

பிரபாகர்.

ers said...

நண்பர்கள் கவனத்திற்கு

தமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....

ஆங்கிலம் | தமிழ் | SEO Submit
காணொளி தேடல் | வலைப்பூக்கள் | இங்கே நீங்கள் இருக்கிறீர்களா?

kkk said...

Your frank and honest opinion is highly appreciated.There is a general saying "Brahmins MAKE the rules and they alone BREAK the rules".As more and more people are getting educated the caste discrimination will slowly die.Brahmins were targetted previously because they made a rule that education will not be provided to other community people.
Dhronachariyaar is an example.
But now the situation is different.But even now a non brahmin could not become a priest in HRCE controlled temples, though they were educated in Govt run AHAMA schools.You have moved with a very good people who are brahmins.But i have never heard or seen any single brahmin who supports a non brahmin priest in temples.Similarly i have seen many brahmins as priests in temples but i could not see any brhamins doing the cremation work.so the crusade continues.

Barari said...

UNGAL ANUBAVAM PATRI MATTUM EZUTHI IRUKKIREERKAL.ADUTHTHAVARKALIN NILAI MATRUM PATHIPPAI PATRIYUM NEENGAL KANAKKIL EDUTHTHU KOLLAVENDUM.UNGALIN ANUBAVAM POL THAAN ELLORUKKUM NADANTHU IRUKKUM ENDRU NEENGAL NINAIPPARTHU POONAI KANNAI MOODIKKONDA KATHAI THAAN.

Mahesh said...

வழமைபோல் நேர்மையான இடுகை. வாழ்த்துகள் !!

cheena (சீனா) said...

மனதில் தோன்றிய நல்ல சிந்தனையை இடுகையாக இட்டமை நன்று நண்பா

ஊசி சல்லடை ஓட்டை - அருமை அருமை

நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

மனதில் தோன்றிய நல்ல சிந்தனையை இடுகையாக இட்டமை நன்று நண்பா

ஊசி சல்லடை ஓட்டை - அருமை அருமை

நல்வாழ்த்துகள்

பழமைபேசி said...

@@ஈரோடு கதிர்

மாப்பு, நல்லா இருக்கீங்களா? மாற்றுக் கருத்து இருந்தா சொல்லுங்க... என்னா இது சமாளிப்பு?

@@KALYANARAMAN RAGHAVAN

நன்றிங்க ஐயா!

@@ச.செந்தில்வேலன்(09021262991581433028)

விண்மீனே வருக, நன்றி!

@@ஆரூரன் விசுவநாதன்

ஈரோடே வந்து வாழ்த்தியதில் மகிழ்ச்சி கொள்கிறேன்!

@@க.பாலாசி

சிந்திக்க வைப்பதற்குதானுங்க இந்த இடுகை! நன்றி!!

@@Vidhoosh

வாங்க வித்யா, நன்றி!


@@ குடுகுடுப்பை

ஆமாங்க அண்ணே, அதேதான்!


@@வானம்பாடிகள்

பாதிக்கப்பட்டவர்கள்தான் பின்னூட்டமிடணும், மாற்றுக்கருத்தாக இருந்தாலும்!

தாராபுரத்தான் said...

உண்ைம உண்ைம,

பழமைபேசி said...

@@மணிப்பயல்

அதுவும் அந்த கால கட்டத்துக்கு சரிங்க. இப்ப அடிக்கிற காத்துல, கட்டி இருக்கிற வேட்டியே பறக்குது... அதுல கைக்குட்டை மட்டும் ஏன் பறக்கலைன்னு விசனப்படலாமா? மொதல்ல பறக்குற தமிழ்ப்பண்பாடுங்ற வேட்டியப் பத்திக் கவலைப்படலாமே?

@@ இராகவன் நைஜிரியா

நன்றிங்க ஐயா! தனிமனித வாழ்க்கை பாதிக்கும் போது கவலைப்படத்தானே வேணுமுங்க??

@@பிரபாகர்

நன்றிங்க பிரபாகர்; கெட்ட பேர்னெல்லாம் பார்க்கலாமா? அவ்வ்வ்.....

@@kkk

நன்றிங்க, I got what you are saying. Again, it's upto us how to move on further...Isn't it? I never seen any one in my family washing cloths, hair cut etc, etc till 1990s. But everyone of us in our family started doing everything now....that shows that things are changing. It's just how we take it personally I guess...

பழமைபேசி said...

@@Barari

நீங்க சொல்வதிலும் நியாயம் இருக்கு. மற்றவங்க அனுபவம் பற்றி நான் எப்படிப் பேச முடியும். ஆகவேதான் என்னோட கேள்விகள். உங்களுக்கு இரு விபாடம்(option) இருக்கு... என்னோட கேள்விகளுக்கு விடை அளிக்கலாம்... அல்லது, பாதிப்புகளைச் சொல்லலாம்... Could you please brief your view if you have time?

பழமைபேசி said...

@@Mahesh

மகேஷ் அண்ணே வாங்க, நல்லா இருக்கீங்களா?


@@cheena (சீனா)

வணக்கம்; நன்றிங்க ஐயா!

@@ அப்பன்

நன்றிங்க; நன்றிங்க!

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல கேள்விகள்.. ஆனால் என்ன நேர்மையான பதில்கள் தான் உரியவரிடமிருந்து வராது

நாகா said...

நானும் ரெண்டு விதமான குடும்பங்களயும் பாத்திருகறேண்ணே. ஒருத்தன் வீட்டுலயே எப்பவும் குடியிருப்பேன், இன்னொருத்தன் வீட்டுக்குள்ளயே விட மாட்டாங்க ( வெளியவே இரு அவன வர சொல்றேம்பாங்க). நான் சொல்ல வர்றது என்னன்னா எந்த சாதியா இருந்தாலும் நல்ல மனுசனும் இருக்கான் கெட்ட மனுசனும் இருக்கான். அதே மாதிரித்தான் எவ்வளவோ மனிதாபிமானமுள்ள பார்ப்பனீய எதிர்ப்பாளர்கள்னு சொல்லப்படற மனுசங்ககிட்டயும் பழகியிருக்கேன், இன்னமும் நாங்க எல்லாம் கடவுளோட வம்சம்னு சொல்லிட்டு மத்தவன கீழ்த்தரமா நடத்தறவங்களையும் பாத்துருக்கேன். இந்த ரெண்டுக்கும் எதிர்மறையான ஆளுங்கதான் நீங்க பாத்தவிங்க பழகுனவிங்க..

Sabarinathan Arthanari said...

//இவர்கள் போடும் கூச்சல், நகரங்களிலும் இணையத்திலும் மட்டுமே ஓரளவுக்கு செல்லுபடியாகும். தமிழகத்துக் கிராமங்களின் பிரச்சினைகள் இதுவல்ல!//

100% சதவிகிதம் உண்மை.

நான் என் கண்களால் காணும் உண்மை என்னவெனில்: கிராமங்களில் சாதியம் கொண்டு சமூகத்தினரை பிரித்து ஆளுவது இங்கு குறிப்பிட்டு இருக்கும் பிரிவினர் அல்லர்.

கிராமத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்களது நெஞ்சின் உண்மையை உணர்ந்தால் இது வெளிப்படை.

பழமைபேசி said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
நல்ல கேள்விகள்.. ஆனால் என்ன நேர்மையான பதில்கள் தான் உரியவரிடமிருந்து வராது
//

இஃகி.... சிந்திச்சாலே போதுமானது!

//நாகா said...
நானும் ரெண்டு விதமான குடும்பங்களயும் பாத்திருகறேண்ணே.
//

அப்படீங்களா... மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க தம்பி!

//Sabarinathan Arthanari said... //

நன்றிங்க சபரிநாதன்!

ஆ.ஞானசேகரன் said...

//ஊசியைச் சல்லடை சொல்கிறது, உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை! //

தலைப்பே வாவ்வ்வ்வ்வ்

ஆ.ஞானசேகரன் said...

நல்ல கேள்விகள் சரியான இடுகை

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லாச் சொன்னீங்க.

sundar said...

Your comment is to say the least is very honest and from the heart.Whatever the reasons for their past behaviour,the practical truth is that the Kazhagams are basking in dividing the society on caste lines.If it were to be true even in other states Brahmins could be persecuted there whereas it is not so

குறும்பன் said...

//வா.வேலூர்ல ஒரே ஒரு குடும்பம். அவங்க வீட்டுப் பெரியவர்கள் இரட்டையர்கள், இராம் ஐயர், இலட்சுமண ஐயர்னு கூப்பிடுவாங்க// என்ன வா.வேலூர்ல ஒரே ஒரு குடும்பமா? அங்க வேற யாரும் குடியிருக்கலயா? :-))

நான் ஊருல இருந்த வரைக்கும் ஐயருங்க மேல பரிதாபப்பட்டிருக்கேன். அப்ப நிறைய துக்ளக் படிப்பேன். கல்லூரி போன பின்பு எல்லாம் மாறி விட்டது. அங்க அவங்க அதிகம் மேலும் நிருவாமும் ஐயருங்குடையது. சொல்ல வேணுமா?


\\தமிழ் மொழி, பண்பாடு பேணுவோர் அனைவரும் தமிழர்கள்.\\ உண்மை. ஆனால் நீச பாசை என்று சங்கரமட தலைவர்கள் சொன்னது (தமிழில் பேசினால் தீட்டு போக குளிக்கனும் ஓய்) மேலும் மணிப்பிரவாள மொழி நடையை ஆதரித்ததும் காரணம்.

\\சாதியை ஒழிப்போம்னு சொல்லிட்டு, பார்ப்பனன், பார்ப்பனன் அல்லாதோன்னு பிரித்துப் போட்டுப் பலன் அடைவது யார்? \\ உள்ளங்கை நெல்லிக்கனி.

இன்னொன்று இப்பவெல்லாம் யாரும் இதைப்பற்றி பேசுவதில்லை (வலைப்பதிவுகள் தவிர). பேசினாலும் கண்டுக்க ஆளில்லை கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சை பகுதிகளைப் பற்றி தெரியவில்லை. அவர்களை பற்றி பல எதிர்மறையான கருத்துக்ளை சொல்ல முடியும், ஒவ்வொன்றும் ஒரு இடுகை நீளம். அதனால என் கருத்துகளை இதோட நிறுத்திக்கறேன். ;-). அவங்களில் பல நல்லவர்களையும் சந்தித்திருக்கிறேன். ஆனா ஒப்பீட்டளவில் அவங்க கம்மி.

நீங்கள் சந்தித்த இரு குடும்பத்தாரும் நல்லவர்கள். அவர்களுக்கு என் பாராட்டுகள்.

அரசூரான் said...

பழமை, ஒரு ஊசிய(பதிவ) வச்சி(போட்டு) சல்லடை(சமூக) ஓட்டையை (பிரச்சனையை) தைக்க (தீர்க்க) முயற்ச்சி பண்ணியிருகிறீர்கள்... நல்ல பதிவு.

நல்லதும் கெட்டதும் நாடெங்கிலும் இருக்க நீ நல்லதை நாடு, கெட்டதை (குழியில் போட்டு) மூடு. பிழைக்க ஊர் ஊராய் ஓடு. இது இன்று எல்லா இனத்திருக்கும், மதத்தினருக்கும்... ஏன் நாட்டினருக்கும் பொது. நீங்க பதிவா போட்டுட்டீங்க... நான் பழசை எல்லாம் மறந்து இப்ப பாசமா பழகிகிட்டு இருக்கேன்.

Anonymous said...

//பயனடைவது அரசியல்வாதிகள் தான் என்பது என் கருத்து. //

எங்கள் குடும்பத்தில் கழக கண்மணிகள் உண்டு. மேற்சொன்ன இந்தக்கருத்து சரிதான்னு உணர்ந்திருக்கிறேன்.

Naanjil Peter said...

இது ஒரு தொற்றுநோய். ஜெயமோகனின் பாதிப்புப் போல் தெரிகிறது.
ஆருரான் கூறும் திராவிடத் தறுதலைகளில் நானும் ஒருவன்.
ஏறி வந்த எணியை எட்டி உதைப்பது தானே முன்னேறிய திராவிடர்களின் வாடிக்கை.
நன்றி
அன்புடன் நாஞ்சில் பீற்றர்

பழமைபேசி said...

@@ ஆ.ஞானசேகரன்

ஞானியார், நன்றி!

@@ஸ்ரீ

மதுரைக்காரருக்கு நன்றி!

@@ sundar

நன்றிங்க!

@@ குறும்பன்

நன்றிங்க; நம்ம ஆதங்கம் அது இல்லைங்களே! அந்த சொல்லுலயே காலம் வீண் ஆகிறது என்பதுதான். அதிலிருந்து விடுபட்டு, தன்னைச் சார்ந்தவனை/சமூகத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமா? வேண்டாமா?? அதான்! இணையத்துல இது ஒரு தொடர்கதையாவே இருக்கே? அதான்!

@@அரசூரான்

பாசக்காரப் புள்ளை இராசா!

@@ சின்ன அம்மிணி

ஆகா, உள்ளுக்குள்ள இருந்தே ஒரு வாக்குமூலம்!


@@ naanjil

அண்ணா, தாங்கள் ஏதோ சொல்ல வருகிறீர்கள். சரியாகப் புரியவில்லை; நம்மவர்கள் தன்னையொத்த சமூகத்திற்கு ஆற்றும் கடமையை விட இதில் குளிர்காய்கிறார்கள் எனும் ஆதங்கமே! மற்றபடி எனது புரிதலில் தவறு இருந்தால் திருத்திக் கொள்ள நான் தயங்க மாட்டேன்! நன்றி!!

சிநேகிதன் அக்பர் said...

பெரியார் பார்ப்பனீயத்தை மட்டும் எதிர்க்கவில்லை மற்ற சாதியில் உள்ள ஏற்ற தாழ்வுகளையும் எதிர்த்தார்.

மற்ற மாநிலங்களில் எப்படியோ தமிழ் நாட்டில் பார்ப்பனரின் கை அடங்கியே உள்ளது.

இப்போது நாம் அவர்களை பார்ப்பனர்கள் என்று ஒதுக்குவற்கும் முன்பு அவர்கள் செய்ததற்கும் பெரிய வித்தியாசங்கள் தெரியவில்லை.

முன்பு சமூகத்தில் கல்வியறிவு இல்லாததால் ஏற்றதாழ்வு அதிகமாக இருந்தது (முழுவதும் நீங்க வில்லை )இப்போது குறைந்திருக்கிறது.

இனி வரும் காலங்களில் இந்த ஏற்ற தாழ்வானது அதிகமாக சம்பாதிப்பவன் , குறைவாக சம்பாதிப்பவன் (அவன் எந்த சாதியை சார்ந்தவனாக இருந்தாலும் சரி) என்று உருமாற்றம் பெற்று வரப்போகிறது. (இப்பவே அப்படித்தான் என்பது என் எண்ணம்)

மற்றபடி இந்த பிரச்சனையை கிளப்பி அரசியல் ஆதாயம் அடைபவர்கள் அதிகம்.

பொதுநலம் என்ற பெயரில் சுயநலம்.

இதை மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா.

நசரேயன் said...

தேவையான இடுகை

Sabarinathan Arthanari said...

இன்றைய சாதியம் மத அடிப்படையிலானதா? - 2
http://www.tamilscience.co.cc/2009/11/2.html

செந்திலான் said...

அண்ணே வணக்கம் !!

எல்லோரும் அவங்க அவங்களுக்கு கெடைக்கற அனுபவத்துல இருந்து
உலகத்த பாக்கறோம்.நீங்க சந்திச்ச அவர்கள் நல்லவர்களாக இருந்துள்ளார்கள்
எனவே உங்களுக்கு அது அவ்வளவு பெரிய பாதிப்பில்லை.நான் சந்திச்ச நபர்கள்
தங்களுடைய மேட்டிமைத் தனத்தையும் ,சாதிய தூய்மை வாதத்தையும் கொண்டவர்களாக
இருந்தார்கள்.என்னுடன் பணி புரியும் நண்பர் ஒருவர் தன்னுடைய அப்பா உடல் நலம் பாதிக்கப் பட்டபோது
அவர் குடும்பத்தின் ரத்தத்தை தவிர வேறு ரத்தம் கலக்க கூடாது என்று கூறியதை பெருமையாக கூறி கொண்டார்
இதை என்னவென்று சொல்வது ?.அவர் தன்னுடைய மேலாளர் பார்பனர் என்பதால் அவருக்கு பல சலுகைகளை வழங்கியதை
இன்னொரு நண்பர் வருத்ததுடன் கூறினார் இத்தனைக்கும் மேலாளர் ஒரு ஆந்திரா பார்ப்பனர்.ஒரு நாமமும் பூணூலும் போதும் அவர்களை அடையாளம் காண ? அதற்கும் மேல் குரூப் மேனேஜர் ஆக இருந்தவர் கன்னட பார்பனர் .இவர்கள் அனைவரும் பார்ப்பனர் என்ற ஒரு புள்ளியில் இணைந்துள்ளார்கள் இதை எப்படி அழைப்பது ?.இன்றும் பிராமின்ஸ் ஒன்லி என்று சொல்லும் அடுக்கு மாடி வீடுகளை சென்னையில் கண்டேன் (போர்டு வைக்கப் படவில்லை ).எனது நண்பர் சென்னையில் குடியிருக்கும் போது .சுற்றியுள்ள பார்பன குடும்பங்கள் அவருடைய சாதியை அறிந்துகொள்ள அவரிடம் கேட்கப் பட்ட கேள்வி : நீங்க என்ன ....? சாதி என்று கேட்க வில்லை
என்ன... என்று முடித்து விட்டார்கள் அதற்கு அவரின் பதில் நான் மனுசங்க என்றார்.எனவே எதிர்ப்பின் தேவை இன்னும் இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்

Karthikeyan G said...

செந்திலான் அவர்களின் கருத்து வழிமொழிகிறேன்..

Unknown said...

Dear Senthilaan,

I am sorry that you/your friends were victims of this divisive behavior. While I am not offering any justification for this behavior at all, I believe the divisiveness is ALSO caused to some extent based on vegetarianism. Typically vegetarians (as many Brahmins are) tend to be very intolerant of "non-vegetarian" surroundings and the quasi-segregation exhibited in "vegetarian dwellings".

ரிஷபன்Meena said...

//அவர் குடும்பத்தின் ரத்தத்தை தவிர வேறு ரத்தம் கலக்க கூடாது என்று கூறியதை பெருமையாக கூறி கொண்டார்
இதை என்னவென்று சொல்வது ?.//

இதில் என்ன தப்பு. நோய் தோற்று இருக்கிற காலத்தில் தங்கள் சொந்த ரத்தத்தை தான் சேர்ப்போம் என்றால் என்ன தப்பு.

கோவையில் தெலுங்கு பேசும் ஒரு பிரிவினர் தங்களுக்குள் முன்னுரிமை தந்து கொள்வது யாவரும் அறிந்த ஒன்று. அது போல சில பிராமணர்கள் இருக்கலாம். எல்லோரும் அப்படி தான் என்பது மடமை.

Good Luck in Disguise என்பது போல் , நல்ல விறுவிறுப்புடன் நல்ல பதிவு இடும் எவரும் இந்த மாதிரி எல்லாத்துக்கும் பிராமணன் தான் காரணம் என்று எழுதி அறுப்பதில்லை.

செந்திலான் said...

//இதில் என்ன தப்பு. நோய் தோற்று இருக்கிற காலத்தில் தங்கள் சொந்த ரத்தத்தை தான் சேர்ப்போம் என்றால் என்ன தப்பு.//

இங்கே தான் நிக்கராங்கய்யா "அவுங்க". நான் "அவர்கள்" எவ்வளவு நுட்பமாகவும் அருவெறுக்கத் தக்க வகையிலும் தங்களது சாதியத்தை வெளிக்காட்டி கொள்கிறார்கள் என்றுதான் சொல்லி இருக்கிறேன்.இதை தொற்று நோய் போன்ற மருத்துவ காரணங்களை கூறி பிரச்சினையின் மையக் கருவில் இருந்து விலகி செல்ல முற்படவேண்டாம்.
இது முற்றிலும் அறிவுக்குப் பொருந்தாத வாதம்.
மருத்துவத் துறை இதையெல்லாம் தாண்டி வெகு தூரம் சென்று விட்டது.
அவரது
ரத்தம் அவரது குடும்பத்தில் யாருடனும் ஒத்து போகவில்லை அல்லது குடும்பத்தினர் யாரும் அருகில் இல்லை என்றால் என்ன செய்வார்? ரத்தம் செலுத்தப் படாமலேயே தாங்கள் நம்பும் சாதியத்துக்கு "உயிர் தியாகம் " செய்து விடுவாரா ? தெலுங்கு பேசுபவர்கள் தரும் முன்னுரிமைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ? மேலும் தெலுங்கு பேசுபவர்கள் யாரும் தாங்கள் குடியிருக்கும் குடியிருப்புகளில் "மற்றவர்கள்" இருக்கக் கூடாது என்ற பாசிச,வைதீக மன நோய்களை கொண்டிருப்பதில்லை.

// நல்ல விறுவிறுப்புடன் நல்ல பதிவு இடும் எவரும்//

நான் சொல்ல வந்த கருத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?

முடிந்தால் கருத்தை கருத்தால்
எதிர் கொள்ளுங்கள் தப்பிக்க முயலாதீர்கள் அல்லது "அமைதிச் சதியில் " ஈடுபடாதீர்கள். நாங்கள் இங்கே பதிவு எழுத வரவில்லை பதில் சொல்லவே வந்தோம்

ராஜ நடராஜன் said...

இதுக்குத்தான் விடாம இடுகைகளைப் படிக்கணுமிங்கிறது.இல்லைன்னா தும்பை விட்டு வாலைப் புடின்னு இன்னொருத்தர் சொல்லி இங்கே வரவேண்டிய அவசியமிருக்காது!

பழமைபேசி said...


வணக்கம்! சாமன்யர்களாய் இருக்கும் நாம், சாமன்யர்களின் கேள்விகளுக்கு மட்டுமே செவி சாய்க்கக் கடமைப்பட்டவர்கள். அதிமேதாவிகளுக்கு எல்லாம் பதில் அளித்தாலும், அது செல்லுபடியாகாது அன்றோ?

அப்படி இல்லாதிருந்தால், சுட்டுவதற்கு முன் எனது இடுகைகளில் எழுப்பிய வினாக்களுக்கு பதில் அளித்துவிட்டுச் சுட்டி இருப்பர் அன்றோ?

நித்திரை கொள்பவனை எழுப்பலாம். நித்திரை கொள்பவன் போல் நடிப்பவரி எழுப்ப இயலாது என்பதுதானே யதார்த்தம்?!

மேலும் அந்த இடுகையானது, எவரையோ திருப்திப்படுத்த இட்டது என்றே எண்ணுகிறேன். எனவே, வினவு குழுமத்தாருக்கான பிரச்சினை அது.

அது எப்படியாகினும், இந்த சாமான்யனின் உள்ளார்த்தமான இடுகையை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்துச் சென்ற வினவுக்கு மிக்க நன்றி!

செந்திலான் said...

அண்ணா அந்த கூட்டத்த விட்டுத் தள்ளுங்க அவங்களுக்கு "பழமை பேசறதுக்கும் " பழமையானதுக்கும் வித்தியாசமே தெரியல.
இல்லேனா பஞ்சாங்கம் னெல்லாம் சொல்லி இருப்பாங்களா ?
அவங்களுக்கு எதிர்க்கரதுக்கு எதாவது வேணும் இதுவும் ஒரு மன நோய் மாதிரி தானுங் !

Anonymous said...

ungal padhivugalai thodarndhu padiththu varugiren..
nanraaga irukiradhu pazamai....
uma jayaraman.

Aranga said...

நிஜத்தை எளிமையான மொழியில் சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே,

தாக்க சுலபமான இலக்கு என்பதால் தாக்கப்படுகிறார்கள் , அவ்வளவே .

உங்க பக்கத்தூருக்காரன்

Anonymous said...

//சாதியை ... பலன் அடைவது யார்?//

No one can abolish caste divisions in our country. The divisions are of two kinds: one Brahmins vs Nonbrahmins, two, Dalits vs Non-dalits who may include all except Brahmins. In Southern districts, it is Dalits vs Thevars.

Politicians benefit. Only politicians? What about voters themselves? They search for their own caste people among candidates to vote for. What about Brahmins themselves ? In Mylapore, they voted for S.V.Sekar against Napolean, only on caste basis.

Politicians fish in troubled waters. They don’t creat the waters themselves.


//ஒரு காலத்துல ஆதிக்கம் இருந்திருக்கலாம். ... ஆனா, இன்றைய சூழலும் அதே போலத்தானா?//

Irunthikklaam. Why this laam? Irunthathu. Today.only due to reservations, we see non-brahmins in jobs. If not, it would be Brahmins all the way. No doubt, their dominance has been eroded gradually. But the very notion of dominance is repugnant to our moral sense. No one should dominate others in a society. It begs the question, as already said, What if no reservations? Dominance again?


//மொழியைப் பார்ப்பனர்கள் சிதைக்கிறார்கள்னு ஒரு விமர்சனம். //

No one questions the services rendered to Tamil language and literature by Parppanars. The problem is not with that. Rather, it is their loyalty to Sanskrit. I don’t say they shouldn't have it. Rather that the loyalty is not shared by all Tamils who consider their mother tongue supreme. It is the so-called திராவிடத்தறுதலைகள் who think that Tamil need to be protected from dominance of Sanskrit. An ancient struggle. It is not started by the திராவிடத்தறுதலைகள். Tamil scholars were struggling against Brahmins on this. Even today, the Brahmins are against giving divine status to Tamil in Temples. creating hatred against them. make them suspect in the eyes of Your point that certain individuals among them have rendered great services to Tamil language and literature gets lost thus.

Tamil is preserved by whom?


//பார்ப்பனீய எதிர்ப்பைக் கொண்டு, ...எழும் காலம் எப்போது?//

This is a political and social issue. Grouping all Non-brahmins under one umbrella against Brahmins has reaped rich dividends to all Tamils except Brahmins. It has helped decimate their doiminace.

Your wish that it should die, will be realized, but not now. It is still felt that non-brahmins have not yet taken their due in employment. For e.g private sector. Introduction of reservations there too, is claimed by Ramadass, because they feel the ‘domiance’ is there; and the non-brahmins are not able to enter there. So, the task is incomplete according to திராவிடத்தறுதலைகள்.

Strange enough,it is to திராவிடத்தறுதலைகள் other Tamils look for help in social life. The D.Ts may benefit, but benefit will go to the other side. Who gave the OBCs their reservations?

// தமிழ் மொழி, பண்பாடு பேணுவோர் அனைவரும் தமிழர்கள். தமிழர்களுக்குள் சாதிகள் இல்லை என்று வெறும் வாய்ப் பேச்சாகவாவது சொல்லக் கூடிய தலைவர்கள் இருக்கிறார்களா நாட்டில்?//

Caste divisions cannot be abolished whatever efforts politicians take. If politicians abolish mentioning of castes in school records and caste based reservations, will castes be abolished?

Lets go back to the scenario of TN when there was monarchy and no reservations. Were there castes or not? On removing reservations and reforming school records, castes will return in different forms. People will never change – especially Hindus. Their religion is the pivot of their lives which allow castes. The role of politicians loom large before your eyes only because what you wrote is ‘conventional thinking’.
Conventional thinkers puts all blame on politicians.

அன்பும் அடக்கமும் ...இதுவல்ல!

Really? I am living in my village, off and on. Lived in other villages too. In villages in Maharastra, Haryana and UP, because of the strange nature of my profession. Caste divisions are finely entrenched everywhere. You may not have clashes, except in a few villages. But people accept their respective castes, as a way of life.

Jo Amalan Rayen Fernando

கோவி.கண்ணன் said...

//சாதியை ஒழிப்போம்னு சொல்லிட்டு, பார்ப்பனன், பார்ப்பனன் அல்லாதோன்னு பிரித்துப் போட்டுப் பலன் அடைவது யார்? //

அன்புள்ள பழமைபேசி,
உங்கள் ஆதங்கம் நியாமானது,

Brahmin Non-Bramin என்கிற பதம் பார்பனர் அல்லாதவர்களைவிட பார்பனர்களால் தான் அதிகமாக புழங்குகிறது. நான் சொல்வது உங்களுக்கு ஐயமாக இருந்தால் இங்கே சென்று பாருங்கள். முன்பு சூத்ராள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் தற்போது கொஞ்சம் டீசண்டாக 'பிராமின் நான்பிராமின்' என்று சொல்லுகிறார்கள். பார்பனர்கள் அல்லாதவர் பார்பனர்களை பிராமின் என்று அழைக்க விரும்பதாதால் பார்பனர் என்று சொல்லுகிறார்கள்.

என்னுடைய பார்பன நண்பர்கள் யாரும் என்னுடைய சாதி என்னவென்று ஆராய்ந்தது கிடையாது. பார்பனர்களின் பழக்கவழக்கங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம் என்பதால் என் நண்பர்களில் சிலர் பார்பனர்கள் என்பது எனக்கு தெரியும் அவ்வளவு தான்.

Unknown said...

தொடர் வண்டித் துறையில் சாதிக்கும் வேலைக்குமான உறவை அறிந்தால்
இன்றைக்கும் சாதி இருக்கின்றதா என்ற
கேள்விக்கு விடை கிடைக்கும்

எழில்
பெதப்பம்பட்டி