11/03/2009

நொள்ளை மடையான்!//நோள்ளக் கண்ணா//

நொள்ளை மடையான்ங்ற கொக்குக்குக் கண் பார்வை இல்லையாம். அந்த நொள்ளை மடையான் கண்கள் போன்று உடையவன் நொள்ளைக் கண்ணன்!

நேற்றைக்கு அன்பர் பிரபாகர் இட்டிருந்த இடுகையில நான் இட்ட மறுமொழிதானுங்க மேல இருக்குறது. பொதுவா, நொள்ளைக் கண்ணன், நொள்ளை வாயன்னு எல்லாம் ஏசுறதைப் பார்த்து இருப்போம் நாம! அதென்ன அந்த நொள்ளைக் கண்ணன்?

கிராமப்புறத்துல பாருங்க, பறவைகளுக்கு பல விதமான பேர் வெச்சி சொல்வாங்க, அழுக்கு வண்ணாத்தி, துடுப்பு மூக்கன், அரிவாள் மூக்கன், உள்ளான், துடுப்புநாரை, கோசிவாயன் இப்படி எல்லாம்... அந்த வரிசையில ஒன்னுதாங்க இந்த நொள்ளை மடையான் அப்படீங்கற பறவையும்!


நொள்ளு அப்படின்னா, உள்ளூரச் சொருகுறது அல்லது அமிழ்த்துறது; ஆக நொள்ளை அப்படின்னா, அமிழ்ந்து போன ஒன்னு.

இந்தப் பறவைக்கு உண்டான குணம் என்னான்னு கேட்டீங்கன்னாங்க, மனுசருக தன்னோட பக்கத்துல, அதாவது கைக்கு எட்டியும் எட்டாத தூரத்துல வர்ற வரைக்கும் ஒக்காந்துட்டே இருக்குமாம். சில சமயங்கள்ல கையில அகப்படவும் செய்யுமாம். ஆகவே, இதனோட குணத்தைப் பார்த்த கிராமத்து வெகுளிங்க இதுக்கு கண்ணும் உள்ளார்ந்து போயிக் கிடக்கு, கூடவே மடைத்தனமாவும் இருக்குன்னு நினைச்சுட்டு, நொள்ளைக் கண்ணன் கொக்கு, நொள்ளை மடையான் கொக்குன்னு எல்லாம் சொல்லிக் கூப்பிடவும் செய்தாங்க!

ஆனாப் பாருங்க, இதுக்கு கண் நல்லாவே தெரியுமாம். அதனோட சுபாவம் கொஞ்சம் லேசுபாசா இருக்குறது. கொஞ்சம் அமைதியா, சித்தம் போக்கு சிவம் போக்குன்னு இருந்தா ஒடனே பட்டம் கட்டிடுவாங்களே?! இஃகும், இஃகும்...

இது நம்மூர்ல மட்டும் இல்லைங்க, தெற்காசியாவுல எங்கும் இப்படித்தான் அவங்க அவங்க பாசையில சொல்றாங்களாம். சிங்களத்துல கானகொக்கு, அதாவது குருட்டு கொக்கு! தெலுகுல Gkuddy குவ்வ!!


14 comments:

vasu balaji said...

மொத வணக்கம் நானு. கொக்கு குருடானாலும் விசயம் கண்ண தொறந்துடிச்சி. இஃகி இஃகி. நன்றி பழமை. கடவுளே. எப்பவும் போல கதிர் போட்டிக்கு வராம இருக்கணுமே.

vasu balaji said...

ஆஆஆ. சக்ஸஸ். சக்ஸஸ். கதிரை முந்திட்டேன்.மீ த பஸ்டேய்

பிரபாகர் said...

//இந்தப் பறவைக்கு உண்டான குணம் என்னான்னு கேட்டீங்கன்னாங்க, மனுசருக தன்னோட பக்கத்துல, அதாவது கைக்கு எட்டியும் எட்டாத தூரத்துல வர்ற வரைக்கும் ஒக்காந்துட்டே இருக்குமாம்//

சின்ன வயசில கல்லால அடிச்சி பிடிச்சிருக்கோம். கிட்ட போனா மட்டும் தான் ஓடும். கொஞ்ச தூரம் பறந்து உக்காந்துடும். அதனால துரத்துகிறது சுளுவா இருக்கும்...

நினைவுகளை அசை போட வெச்சிட்டீங்க...

பிரபாகர்.

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...
ஆஆஆ. சக்ஸஸ். சக்ஸஸ். கதிரை முந்திட்டேன்.மீ த பஸ்டேய்//

என்ன்னானானானாது... சின்னப் புள்ளத்தனமா....?

இப்பிடி வேகமா வந்தா, நீங்க யூத்துனு எங்க லொள்ளக்... ச்சீ... நொள்ளக் கண்ணுக்கு தெரிஞ்சிருமா!!!???

ஈரோடு கதிர் said...

மாப்பு... கலக்கிப்புட்டீங்க...
அட கண்ணச் சொல்லலீங்க...
புத்தியத்தேன் சொன்னேன்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பழமையண்ணே,.. அருமையான விளக்கம்... இத்தன நாளா நானும் நொள்ளக் கண்ணுங்கறது என்னன்னு தெரியாமலே இருந்திருக்கேன்.. :)

கபீஷ் said...

//அதனோட சுபாவம் கொஞ்சம் லேசுபாசா இருக்குறது.//

நல்ல தகவல். படம் நல்லாருக்கு.

ஆரூரன் விசுவநாதன் said...

அரிய தகவல்கள், அருமையான விளக்கங்கள்.....

தொடருங்கள்............

பழமைபேசி said...

@@வானம்பாடிகள்

வாங்க பாலாண்ணே!

@@பிரபாகர்

நன்றிங்க பிரபாகர்!

//கதிர் - ஈரோடு said...
மாப்பு... கலக்கிப்புட்டீங்க...
அட கண்ணச் சொல்லலீங்க...
புத்தியத்தேன் சொன்னேன்
//

மாப்பு, எதோ உங்க தயவுல சித்த! இஃகி!!

//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
பழமையண்ணே,.. அருமையான விளக்கம்...
//

நன்றிங்க தம்பி!

@@ கபீஷ் said...

இலண்டன் சீமாட்டி, எங்க நெம்ப நாளா ஆளே காணோம்?

//ஆரூரன் விசுவநாதன் said...
அரிய தகவல்கள், அருமையான விளக்கங்கள்.....
//

நன்றிங்க நண்பா!

தாராபுரத்தான் said...

சித்தம் போக்கு சிவம் போக்குன்னு

சந்தனமுல்லை said...

நல்ல தகவல்! இந்த வார்த்தையை முதன்முதலில் - ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என நினைக்கிறேன் - கேட்டுவிட்டு சிரித்த சிரிப்பு நினைவுக்கு வருகிறது!! :))

ஜோதிஜி said...

மொத வணக்கம் நானு தாமதமான வணக்குமுங்கோ. ஆனா கும்மு கும்ன்னு இலக்கிய, கரிசல்,கரைச்சல், கதைத்த கத அத்தனையும்


சிங்கம் புணர்ந்து வந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துக்கொண்டுருப்பவன் இன்று உங்கள் எழுத்துக்கள் உணர்த்தியது

அங்கு வாழும் கொக்கு கூட

குருட்டு கொக்கு தானா?

பழமைபேசி said...

@@அப்பன்

இஃகி!

@@சந்தனமுல்லை

நன்றிங்க

@@ஜோதிஜி. தேவியர் இல்லம்.

வாங்க, வணக்கம்! மிக்க மகிழ்ச்சிங்க!!

சிவக்குமார் (Sivakumar) said...

நல்ல செய்தி. இப்பறவையை பல முறை குளங்களில் பார்த்திருக்கிறேன். தமிழ்ப் பெயரை இப்போது தான் தெரிந்து கொண்டேன். இதுபோல உங்களுக்குத் தெரிந்த மற்ற பறவைகளின் தமிழ்ப்பெயர்களையும் எழுதுங்களேன்.