9/24/2008

சோதனை மேல் சோதனை...

இந்தியாவில் சித்த மருத்துவத்துக்கும், ஆயுர்வேதத்துக்கும் ஆதார சுருதியாக இருப்பவை மூலிகைகள்தான். அந்த மூலிகைச் செல்வத்துக்கு ஒரு முடிவு கட்ட ஜோராக கிளம்பிவிட்டது ஓர் அந்நிய நாட்டு நிறுவனம். ஏற்கெனவே நம்மூர் பருத்தியையும், நெல்லையும் பாழாக்கிய அதே `மான்சென்டா' நிறுவனம், இப்போது இந்திய மூலிகைகளிலும் மரபணு மாற்ற மாயஜால வேலைகளை ஆரம்பித்து விட்டது. `இதனால் இந்தியா அதன் இயற்கை மூலிகைகளை இழந்து, மரபணு மாற்ற மூலிகையால் மண்வளத்தையும் இழந்து, இனி மருந்துக்கும், உணவுக்கும் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும்' என்று பதைக்கத் தொடங்கியுள்ளனர்' பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் சமூகநல அமைப்பினர்.

அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் பலர், இன்னொரு ஒப்பந்தமான இந்திய_அந்நிய நாட்டு உயிர் தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சிக்கான ஒப்பந்தத்தைக் கண்டுகொள்ளவில்லை. நமது இந்திய மூலிகைத் தாவரங்களை அந்நிய நாட்டு நிறுவனம் மரபணு மாற்றம் செய்ய அனுமதிக்கும் ஒப்பந்தம் இது. எந்தவித பொது விவாதமும் இன்றி, நாடாளுமன்றத்தில் கூட விவாதிக்காமல் அந்த நிறுவனத்துக்கு நம் மூலிகைகளை அப்படியே தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார்கள்.

"ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ?" என்பது நம் சித்தர் பாடல்களில் ஒன்று. ஆவாரையிலும் மரபணு மாற்ற பரிசோதனையைச் செய்து அந்நிய நாட்டு கம்பெனி சாவாரைக் காண வைத்துவிடுமோ என்ற பயம்தான் நம் நெஞ்சை நெருடுகிறது. இது குமுதம் ரிப்போர்ட்டர்ல வந்த செய்தி. ஆகவே, நம் ஜெய் ஆலமரத்தை நிழல் படமாக எடுத்து வைத்திருப்பதுபோல், நீங்களும் உங்களுக்கு பிடித்தவற்றை நிழல் படம் ஆக்க இதுவே தக்க தருணம். எதிர் வரும் காலங்களில் அவையும் மறைந்து விடும் என்பது திண்ணம்.

7 comments:

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இது பற்றிய முழு செய்தியைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

நன்றி.

பழமைபேசி said...

//அறிவன்said...
இது பற்றிய முழு செய்தியைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

நன்றி.
//

அறிவன், வருகைக்கு நன்றி! மின்னஞ்சலில் தகவல் அனுப்பி உள்ளேன்.

குடுகுடுப்பை said...

நல்ல செய்தி.

குடுகுடுப்பை said...

நல்ல செய்தி அல்ல.

பழமைபேசி said...

//@@Chettykulam Nellainayagam Deivanayagam

The blog is certainly a grim remainder of our Governments complicity in the crimes of Monsanto.Indian Americans should organize a campaign of boycotting Monsanto goods in US-for example Roundup.Our people in US can write letters and organize signature campaigns against Genetically Modified Foods.We have a strong group against GMOs and we have joined hands with Indian wing of Green Peace.
Tamils all over have to act in unison to protect our Language,Culture and Siddha system.We greatly appreciate
the efforts of good Citizens like Manivasagam.Anbudan CND.
//

மருத்துவ நிபுணர், தமிழினப் பெரியவர் ஒருவரின் பாராட்டைப் பெறுவதில் பெரும் உவகை கொள்கிறேன்.

துளசி கோபால் said...

அடக்கடவுளே......(-:

tamilraja said...

கொஞ்சம் வலுவாக விவாதித்து அரசை அது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை நிறுத்த சொல்லவேண்டும்.ஏனோ தெரியவில்லை
நிறைய விவாதம் இதன் மீது நடக்கவில்லை!கொடுமை !