9/10/2008

"ஒறம்பு"ன்னா என்ன?

வணக்கம்! பழங்காலத்துல புழங்கின பல விசயங்களைப் பாத்துட்டு வர்றோம். இன்னைக்கு அந்த வரிசைல ஒறம்புன்னா என்ன?

இன்னைக்கும் நல்லா நினைவுல இருக்கு, நாம ரெண்டாவது, மூனாவது வகுப்பு படிக்கும் போதெல்லாம் கொங்கு மண்டலத்துல மாதம் மும்மாரி அல்லங்க, வாரம் மும்மாரி பெய்யும். வானம் லேசாக் கருக்கல் கட்டுனாப் போதும், மழைதான்! ஒரு நாள் அந்தியில, கண் முழிச்சுப் பாத்தா, ஊரே ஒரே பேச்சும் சத்தமுமா இருக்கு. நாம அப்ப, சலவநாய்க்கன்பட்டிப் புதூர் ங்கற ஊர்ல இருந்தோம். என்ன விசயம்ன்னா, ஊருக்குப் பக்கத்துல இருந்த கொசவம் பாளையாத்துக் குளத்தோட கரை ஒடஞ்சி ஊருக்குள்ள தண்ணி வந்துடிச்சு. ஆனா, இன்னைக்கு அந்தக் குளம் சுருங்கிக் குட்டையாகி, இப்ப அது சின்னக் குட்டையாகி நிக்கிது. உள்ளார பெரிய ஊரே ஆயிப்போச்சு. அப்ப, நெறஞ்சதுதான். அதுக்கப்புறம் வருசத்துக்கு வருசம் மழையும் கொறச்சல்.

அப்ப அந்த காலகட்டத்துல, ஊர் வழில சர்வ சாதாரணமா நடக்குற பழமை(உரையாடல்) யோட சாராம்சந்தான் இது:

"என்ன குப்புச்சாமி இந்தப் பக்கம்?"

"ஒன்னுமில்லீங்.. பருத்திக் காட்டுல ஒறம்பு எடுத்துகிச்சுங்... அதான் கொத்தி உட்டு, சால் புடிக்க மாரியப்பனைக் கூட்டிட்டுப் போக வந்தனுங்..."

"அட ஆமா, நம்ம மேவரத்துக் காட்டுலயும் ஒறம்பு எடுத்துகிச்சு"

இப்படி அடிக்கடி பேசக் கேள்விப்பட்டு இருக்கேன். விசயம், என்னுங்ன்னா, மழை அடிக்கடி பெய்யுறதால, மண்ணுல தண்ணி கோர்த்து செடி கொடிகளோட வேர் அழுகிப் போயிரும். அதுக்காக மம்முட்டியா(மண்வெட்டி)ல சின்னதா காட்டுக்குள்ள, அங்கங்க கொத்தியுட்டு வாய்க்காப் புடிச்சு தண்ணி வடிஞ்சு போற மாதற செஞ்சு விடுவாங்க. அதான், கொத்தி உட்டு சால் புடிக்கறது.

அப்படி காட்டுக்குள்ள தண்ணி சுரந்துக்குறதை "ஒறம்பு" ன்னு சொல்லுவாங்க... மறுபடியும் ஒறம்பு எடுத்துக்குற காட்சியும் காலமும் வருமா? காலந்தான் பதில் சொல்லோணும்....

11 comments:

முகவை மைந்தன் said...

//மறுபடியும் ஒறம்பு எடுத்துக்குற காட்சியும் காலமும் வருமா? காலந்தான் பதில் சொல்லோணும்.... //

எனக்கும் பெருமூச்சு தான் மிஞ்சியது.

நல்ல பதிவு. தொடர்ந்து பதியுங்கள்.

Mahesh said...

இப்பொ பூமி காஞ்சு கெடக்கறத பாக்கும்போது, நெதம் மும்மாரி பெஞ்சாலும் 'ஒறம்பு' எடுக்காது. நமக்கும் நீர் மேலாண்மைக்கும் ரொம்ப தூரங்க. இஸ்ரேல் மாதிரி நாட்டுல பாலைவனத்துல பயிர் பண்றாங்க.... நாம நஞ்சைல பயிர் பண்றதுக்கே தண்ணிக்கு கெஞ்சிக்கிட்டுருக்கோம். ரெண்டு கழகங்களோட ஆட்சியில நாம அறுத்தது நெல்லோ, பருத்தியோ, பொகயெலயோ இல்ல. பல வெவசாயக் குடும்பங்களோட வேரத்தான்.

பழமைபேசி said...

//
முகவை மைந்தன் said...
//மறுபடியும் ஒறம்பு எடுத்துக்குற காட்சியும் காலமும் வருமா? காலந்தான் பதில் சொல்லோணும்.... //

எனக்கும் பெருமூச்சு தான் மிஞ்சியது.

நல்ல பதிவு. தொடர்ந்து பதியுங்கள்.
//
நன்றிங்க! எல்லாம் ஒரு ஏக்கந்தான்!!

பழமைபேசி said...

//
Mahesh said...
இப்பொ பூமி காஞ்சு கெடக்கறத பாக்கும்போது, நெதம் மும்மாரி பெஞ்சாலும் 'ஒறம்பு' எடுக்காது. நமக்கும் நீர் மேலாண்மைக்கும் ரொம்ப தூரங்க. இஸ்ரேல் மாதிரி நாட்டுல பாலைவனத்துல பயிர் பண்றாங்க.... நாம நஞ்சைல பயிர் பண்றதுக்கே தண்ணிக்கு கெஞ்சிக்கிட்டுருக்கோம். ரெண்டு கழகங்களோட ஆட்சியில நாம அறுத்தது நெல்லோ, பருத்தியோ, பொகயெலயோ இல்ல. பல வெவசாயக் குடும்பங்களோட வேரத்தான்.
//
சரியாச் சொன்னீங்க மகேசு! இப்பத்தான் ஒரு வேதனைய, பதிவாப் பதிஞ்சு இருக்கேன். பாருங்க!!

துளசி கோபால் said...

ஊழலுக்கு மட்டுமே ஒறம்பு எடுக்கும் காலம்(-:

பழமைபேசி said...

//
துளசி கோபால் said...
ஊழலுக்கு மட்டுமே ஒறம்பு எடுக்கும் காலம்(-:

//
சரியாச் சொன்னீங்க!!!

ராஜ நடராஜன் said...

ஒறம்பர யின்னு ஏதோ சொல்ல வாறீங்களோன்னு நினைச்சேன்.

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
ஒறம்பர யின்னு ஏதோ சொல்ல வாறீங்களோன்னு நினைச்சேன்.
//

இப்ப நீங்கதான் ஒறம்பரை! :-o)

நசரேயன் said...

ஒறம்பு எடுக்கிற காட்சி யை வச்சி ஒரு பாட்டு வேணா எழுதலாம்

சரண் said...

ரொம்ப நல்லப் பதிவுங்க..

வெவசாயத்த மதிக்காம நம்ம நாடு கண்டிப்பா முன்னேறப் போறதில்லிங்க..
இப்ப இருக்கற முன்னேற்றமெல்லாம் கொஞ்ச நாளக்குதான்...

பழமைபேசி said...

//நசரேயன் said...
ஒறம்பு எடுக்கிற காட்சி யை வச்சி ஒரு பாட்டு வேணா எழுதலாம்
//

வாங்க நசரேயன்! எழுதிட்டாப் போகுது....