9/11/2008

"சத்தக்கூலி"ன்னா என்ன?

சின்ன வயசுல, நான் எங்க அம்மாவோட தாத்தா வீட்டு முன்னாடி தெல்லு (கல்லை கல்லால் அடிக்கும் ஒரு விதமான விளையாட்டு) வெளையாடிட்டு இருந்தேன். அப்ப, சுப்பிரமணின்னு ஒருத்தர் வந்து வாசல்ல நின்னுட்டு இருந்தார். அப்ப, கொள்ளுத் தாத்தா வீட்ல நடந்த உரையாடலின் சாராம்சம்,

"என்னடா சுப்பிரமணி? எங்கயும் போகலையா இன்னக்கி??"

"பெரிய தோட்டத்து கொத்துமல்லி ஏத்திட்டு, பொள்ளாச்சி போகணமுங்க..."

"சரி, சித்த இரு..."

"இந்தா, சுப்பிரமணி சத்தக்கூலி கேட்டு வந்து இருக்குறான். அவனுக்கு காப்பியும், நாப்பத்தஞ்சி ரூவாவும் கொண்டா...."

இங்க சத்தக்கூலின்னா என்ன? அது ஒண்ணும் இல்லீங்க; வாடகை வண்டிக் கூலிய, சத்தக் கூலின்னு கூப்புடுற வழக்கம் அந்தக் காலத்துல இருந்து இருக்கு. நண்பர் குடுகுடுப்பை மூலமா வண்டிச்சத்தம் (வண்டிக் கூலி)ன்னு சொல்லுற பழக்கம் இருக்குன்னும் தெரியுது. சத்தக்கூலின்னு, கேள்விப்பட்டது இல்லனனு மற்றொரு நண்பர் சொன்னாரு. ஆனா, சத்தக்கூலி சகிதமான்னு சொல்லக் கேள்விப்பட்டு இருக்குறேன்.

9 comments:

குடுகுடுப்பை said...

இது இன்னமும் இருக்குங்க கொஞ்ச கிராமங்களில்
சத்த்க்கூலி,வண்டிச்சத்தம் அப்படின்னு

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
இது இன்னமும் இருக்குங்க கொஞ்ச கிராமங்களில்
சத்த்க்கூலி,வண்டிச்சத்தம் அப்படின்னு
//
வாங்க, வாங்க! மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க!! அதையும் பதிச்சுட்டேன்.

துளசி கோபால் said...

வண்டிச் சத்தம் என்பதைக் கேள்விப்பட்டிருக்கேன்.

இந்தச் சத்தக்கூலி எனக்குப் புதுசுதான்.

பழமைபேசி said...

//
துளசி கோபால் said...
வண்டிச் சத்தம் என்பதைக் கேள்விப்பட்டிருக்கேன்.

இந்தச் சத்தக்கூலி எனக்குப் புதுசுதான்.
//
வாங்க! வாங்க!! தினமும் வந்து போறீங்க.... நன்றிங்க!!!

பழமைபேசி said...

//
துளசி கோபால் said...
வண்டிச் சத்தம் என்பதைக் கேள்விப்பட்டிருக்கேன்.

இந்தச் சத்தக்கூலி எனக்குப் புதுசுதான்.
//

ஐயா,

இது குறித்து தேடுகையில் அகப்பட்ட கட்டுரை ஒன்று.... படித்துப் பாருங்கள்.... சுவையான பல தகவல்கள் உள்ளன.

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=12056

Mahesh said...

நல்ல செய்தி.... இது "charter"ங்கிற ஆங்கிலச் சொல்லிலிருந்து வந்தது. "chartered"னாலே கூலிக்கு அமர்த்தப்பட்டன்னு அர்த்தம் வரும். நடு சென்டர்ங்கற மாதிரி இதுவும் ஒன்னு போல.

பழமைபேசி said...

//Mahesh said...
நல்ல செய்தி.... இது "charter"ங்கிற ஆங்கிலச் சொல்லிலிருந்து வந்தது. "chartered"னாலே கூலிக்கு அமர்த்தப்பட்டன்னு அர்த்தம் வரும். நடு சென்டர்ங்கற மாதிரி இதுவும் ஒன்னு போல.
//

வாங்க மகேசு... நல்ல படியாப் போய்ட்டு வாங்க.... எசைப் பாட்டு இல்லைன்னா கொஞ்சம் தொனி கொறயத்தானே செய்யும்....

Mahesh said...

இயன்றபோது ஈருருளை இடைவெளியில் "எசப் பாட்டு" பாடப்படும் :)

பழமைபேசி said...

நன்றி! நீங்க கிளம்பி இருப்பீங்களோன்னு நினைச்சேன்....