அன்பர்களே வணக்கம்! கால்மாடு தலைமாடுன்னா என்னன்னு கேட்டு பதிவு எழுதியிருந்தோம். நண்பர் அ.நம்பி அதுக்கு விளக்கம் குடுத்து இருந்தாரு. அவருக்கு நன்றி. மற்றும் திண்ணைக்கு வந்துட்டுப் போனவிங்களுக்கும் நன்றி!
மாட வீதிங்றோம். அப்படியின்னா அது மாடம் இருக்குற வீதியா? மாட சாமிங்றோம், அப்ப அவரு மாடத்துக்கு சாமியா?? மாட்டுப் பொண்ணுங்றோம், அப்ப அவ மாடு மாதிரியானவளா?? அது அப்படி இல்லையாம்ங்க. மாடுன்னா பக்கம்ங்றது அர்த்தமாம். ஆக, மாடவீதின்னா கோவில், அரண்மனைன்னு இருக்குற சிறப்பான இடங்களுக்குப் பக்கத்துல இருக்குற வீதின்னு அர்த்தம். மாடசாமின்னா, பக்கத்தில் அருகில் கூடவே இருந்து காப்பாத்துற சாமி. மாட்டுப் பொண்ணுன்னா கூடவே பக்கத்துல இருக்குற பொண்ணு.
அந்த வகையில கால்மாடுன்னா, கால் இருக்குற பக்கம். தலை மாடுன்னா தலை இருக்குற பக்கம். எதிர் எதிரானதுகளை, அதையும் இதையும்னு ஒப்பிட்டுச் சொல்லும் போது தலையும் புரியலை, காலும் புரியலன்னு சொல்றோம். அதே மாதிரி தான், இந்தத் தலைமாடு கால்மாடு.
அந்தலை சிந்தலையும் அதே மாதிரிதாங்க. முரணான ரெண்டை, அல்லது இங்குட்டும் அங்குட்டும், மேல கீழன்னு ஒப்பிட்டுச் சொல்லுற இடத்துல பொழங்குற ஒன்னு. அந்துன்னா, விலகிப் போய் தற்காலிகமா மறையுற ஒன்னு, அல்லது மேல் நோக்கிப் போறது. சிந்துன்னா, கீழ் நோக்கிப் போற ஒன்னு. அதான், தண்ணி சிந்திடுச்சுங்றோம். பக்கவாட்டுல போறத உந்துதல்ங்றோம். ஆக, ஒன்னை இங்குமங்குமா அலைய விட்டு இம்சை பண்ணுறதை அந்தலை சிந்தலை ஆக்குறாங்கன்னு சொல்லுறோம். அதையே, அவன் கீழுக்கும் மேலுக்கும் பேசுறான்னும் சொல்லுறோம்.
இதுக்கு இனியொரு விளக்கமுஞ் சொல்லுறாங்க. அந்தலை, சந்தலைன்னு. அந்தின்னா சூரியன். சந்தின்னா சந்திரன். அதுகளைக் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பாங்ளோ? தெரியலையே!

கழுதை கோபம் கத்துனாத் தீரும்!
மனுசன் சந்தேகம் பேசினாத் தொலையும்!!
மனுசன் சந்தேகம் பேசினாத் தொலையும்!!
வாக்களியுங்க மக்களே, வாக்களியுங்க!