தூய்மை சேரடா தம்பி -- என்
சொல்லை நீபெரிதும் நம்பித்
தூய்மை சேரடா தம்பி!
வாய்மையாலும் ஒழுக்கத்தினாலும் அகத்
தூய்மை உண்டாகும் மேலும்மேலும்
தூய்மை சேரடா தம்பி!
உடையினில் தூய்மை -- உண்ணும்
உணவினில் தூய்மை -- வாழ்வின்
நடையினில் தூய்மை -- உன்றன்
நல்லுடற் றூய்மை -- சேர்ப்பின்
தடையில்லை வாழ்நாள் ஒவ்வொன்றும் இன்பம்
தரும்நாள் ஆகும் நீஎன்றும்
தூய்மை சேரடா தம்பி!
துகளிலா நெஞ்சில் -- சாதி
துளிப்பதும் இல்லை -- சமயப்
புகைச்சலும் இல்லை -- மற்றும்
புன்செயல் இல்லை -- தம்பி
அகத்திலே அன்பின் வெள்ளம் மூளும்; தீய
அச்சம் போகும்! நீ எந்நாளும்
தூய்மை சேரடா தம்பி!
13 comments:
Excellent speech. Thanks for sharing. This has given us the inspiration to attend FeTNA next year.
Excellent speech. Thanks for sharing. This has given us the inspiration to attend FeTNA next year.
எழிலாய்ப் புதுமை பேசப்பட்டிருக்கிறது. ஆம்!புதுமை(வை)க் கவிஞரின் வரிகளுக்கு எடுத்துக்காட்டாய் புரட்சி மனிதர் குறித்த பகிர்வு.அருமை!!
அன்னார் உண்மையான தமிழ் மண்ணின் மைந்தன்.காண்ஒளிக்கு மிக்க நன்றி.
ஒரு நல்ல மனிதரின் சிறந்த பேச்சைக் கேட்க உதவிய உங்களுக்கு நன்றி! திரு. சகாயம் இவ்வளவு அழகாக எளிமையாக தமிழ் பேசுவார் என்று எதிர் பார்க்கவில்லை!
மறுபடியும், திரு சகாயத்தை இங்கு அழைத்தவர்களுக்கு நன்றி!
பகிர்ந்தமைக்கு நன்றி
அன்பின் பழமை பேசி
அருமையான் உரையினைப் பகிர்ந்தமை நன்று - நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.
migavum arumaiyaana padhivu vaazhga thamizhar nandri
surendran
பாரதி தாசன் அவர்கள் கவிதையும், அதற்கேற்ற அருமையான மனிதரின் பேச்சும் அருமை.
அனைத்து மொழிகளையும் வாசிப்போம்
தமிழை சுவாசிப்போம். இப்படி
எளிமையாய் தமிழர்களின் அடையாளத்தை சொல்லி மனதில் நிற்கிறார்.
பகிர்வுக்கு நன்றி.
அழகாய் நல்ல தமிழ் பேசிய திரு.சகாயம் தனித்துவமான ஆட்சியர்தான்.
பகிர்வுக்கு நன்றி
Excellent posting about a remarkable Tamilian. Thank you very much.
வணக்கம் நண்பரே!.... வாழ்த்துகளும் நன்றியும்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
இன்று கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் பிறந்தநாள். திரு சகாயம் அவர்கள் காமராசரின் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியாளராக இருப்பது காமராசருக்குச் செய்யும் நன்றிக் கடன் போல் உள்ளது.
காமராசரால் படித்துப் பயன் பெற்ற ஒவ்வொருவரும் நமது தன்னலத்தை மறந்து சமுதாயத்திற்கு உண்மையாக எதையும் எதிர் பார்க்காமல் கொஞ்சமாவது பணியாற்றினால் அது நமக்கும் இன்பம் ,மகிழ்ச்சி தரும், நாட்டிற்கும் நல்லது தரும்.
Post a Comment