7/11/2012

FeTNA: பொன்மாலைப் பொழுது

தங்கத்தை உருக்கி வழியவிட்டாற்போல வானோடை, செங்கதிர் மாணிக்கத்துச் சுடர் விழுங்கும் பால்டிமோர் மேரியாட் விடுதி,நீலமுக்காட்டுக்காரி நிலாப் பெண்ணாள் பார்த்து புன்முறுவல் பூக்கும் தமிழர் கூட்டம், அரங்கம் நிரம்பி பெரும்பொதியில் இருந்தும் வழியும் பொரித்திரள் போல தமிழர்கள் வாயிற்கதவுகளுக்கு வெளியே வழிந்து கொண்டிருந்தார்கள்.

வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் ஒவ்வொரு ஆண்டு விழாவுக்கு முந்தைய நாள் விருந்தினர் மாலை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். கொடையாளர்கள் பங்கேற்றிருக்க, விருந்தினர்கள் அறிமுகவுரை ஆற்றுவார்கள்.

வெள்ளி விழா என்பதால், என்றுமில்லாதபடிக்கு அதிக அளவிலான கொடையாளர்களும் விருந்தினர்களும் இடம் பெற்றிருந்தார்கள். அதனாலே எதிர்பார்ப்புக்கும் மிகுந்த கூட்டம். கூட்டத்தினைக் கையாளுவதில் நெருக்கடியும் இருக்கத்தான் செய்தது.

ஆனாலும் அக்கணம் ஒரு பொன்மாலைப் பொழுதாகிப் போனது எங்கனம்? வளர்பிறை போல் வளர்ந்த தமிழரிடையே, அறிஞர்கள் தங்கள் உளத்தையும் ஆர்ந்த வளத்தையும் எழுத்துச் சொல்லால் விளக்கிடும் இயல்பு முதிர்ந்து அளவிலா உவகை கொள்ளச் செய்ததாலேயே அக்கணம் ஒரு பொன் மாலையாகிப் போனது.

தோழர் நல்லகண்ணு, தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், பண்பான எழுத்தாளர் எஸ்.ரா, இலக்கியவாதி தமிழச்சி தங்கபாண்டியன், பினாங்கு துணைமுதல்வர் இராமசாமி பழனிசாமி, நாட்டாரியல் ஆராய்ச்சியாளர் பிரண்டா பெக், திரைப்படக் கலைஞர்கள் பரத், அமலா பால், வீரத்தாய் வேலுநாச்சியார் நாட்டிய நாடகக் குழுவினர் எனப் பலர் சுவைபடப் பேசி, குழுமியிருந்தோரை இன்புறச் செயதனர்.








தேன்கண்டாற் போலே கண்டேன்! 
திகழ் காடு நோக்கிச் சென்றேன்!!
அடடா, எங்கும் தமிழ்! தமிழ்!! தமிழ்!!!

5 comments:

Unknown said...

விழாவை மிகச் சிறப்பாக நடத்தியதற்கு வாழ்த்துகள்..

குறும்பன் said...

எல்லா காணொளிகளும் அற்புதம். நல்லகண்ணு அய்யா அவர்களின் பேச்சை கேட்பதுன்னா சும்மாவா? பலமா பேசமாட்டக்கிறாரே.

கோமதி அரசு said...

பொன்மாலை பொழுது அருமை.

நம் மொழி அடையாளாத்திற்கு திரு. எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள் சொன்ன கதை மிக நன்றாக இருந்தது.
உங்கள் பகிர்வுக்கு நன்றி.

sultangulam@blogspot.com said...

வாழ்த்துகள்..

Arasu said...

I cannot thank you enough for your posting and for uploading the excellent speaches by the invitees.