7/10/2012

FeTNA: ஓங்கிச் சிறந்த வெள்ளி விழா

நீலவெள்ளி வானம், பாலொளியாய் வெயிலோன் கதிர்கள், சந்தனத்துத் தென்றலாய் எங்கும் தமிழ்ப்பேச்சு, மணிக்குளத்தில் செந்தாமரைப் பூக்களெனத் தமிழர் கூட்டம். பால்டிமோர் நகரத்துத் தெருக்களெல்லாம் எம்மக்கள் கூட்டம். அடடா, அவர்களைப் பார்க்கையில் மனம் சிறகடித்துத் துள்ளிப் பறந்தது.

படகுச் சவாரி செய்யலாமென அமெரிக்க நாட்டுப்பண் உயிர்த்த படகுத் துறைக்குச் சென்றிருந்தேன். நாமறியாத் தமிழர் இருந்து கதைக்கிறார் என வாளாதிருந்தேன்.

“நீங்க, எங்கட பழமைபேசி அண்ணைதான?”

பொய்த்துப் போன நான் நாணமுற்றுத் தலைகவிழ்ந்தேன். “அப்பா, உங்களுக்கு அவங்களைத் தெரியாதாப்பா?”, மூத்த மகள் தன்பங்குக்குச் சொற்சாட்டையால் விளாசினாள்.

“அண்ணை, ரிக்கெட் அல்லாம் வித்திட்டாங்களெண்டு சொல்வினம். அது செரியே?”

“ஆமாங்க, இந்தவாட்டி அரங்கம் நிறைஞ்சிடுச்சி போல. நல்ல கூட்டம் வரும். அமெரிக்காவுல 2400 தமிழர்கள் ஒன்று கூடுறது மகிழ்ச்சியா இருக்கு!’

‘உங்ககிட்ட நிண்டு படமொண்டு எடுத்துக்கலாமே?”

“தவறாம. வாங்க”

“ஏ பெட்டை, இவர் நம்மட பழமைபேசி அண்ணை தெரியுந்தான?”

“ஓம், நல்ல வடிவாத் தமிழ்ல எழுதுவாரென்ன?”

அங்கு துவங்கியது எம் தமிழுறவுகளின் சங்கமம். அதற்குப் பின்னர் முத்தான நான்கு நாட்கள். விலேவாரியாக இனி எதிர்வரும் பதிவுகளில் காண்போம். இப்போதைக்கு கீழ்க்கண்ட காணொலிகளைக் கண்டு மகிழ்க!!

http://www.youtube.com/watch?v=BNi24tDElqI

http://www.youtube.com/watch?v=Ixc4wpNM8SI


http://www.youtube.com/watch?v=xnQDXECjfLc

http://www.youtube.com/watch?v=1mMn6U1YVtY

http://www.youtube.com/watch?v=6ryxPpR_XWk

http://www.youtube.com/watch?v=vssynAcaLT0

http://www.youtube.com/watch?v=Z7Em2HoD1tY

இதயம் நல்லெண்ணெய் திரு.முத்து அவர்கள்

நண்பர்கள் பிரபு, கார்த்திகேயன்

முனைவர் மறைமலை இலக்குவனார் அய்யா, நண்பர்  ‘பெரு’ நாட்டு மச்சுபிச்சு கிருஷ்ணா

தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் நண்பர்

எழுத்தாளர் எஸ்.ரா


7 comments:

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

ஏவுகணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள் என்ற வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

எழிலாய்ப் பழமை பேச என வலி மிகுந்து வருதல் நலம்.கருத்திற்கொள்ளவும்

குறும்பன் said...

இந்த வாரம் முழுக்க விதவிதமான படையலை (முழு பெட்னா தொகுப்பு படையலை) படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

Vijiskitchencreations said...

Thanks for sharing videos. Pls can u upload more pictures & videos.Sorry I missed this time. I am unable to attend because my father passed away. Really I missed my music tution classmate K.S.chithra's concert I missed lot.
Thanks. Manivannan.

ஜோதிஜி said...

வாழ்த்துகள் பேசுங்க

ILA (a) இளா said...

காணொளிகளைப் பார்த்துட்டு வந்துடறேன்

பெருசு said...

பட்டம் மற்றும் பட்டயம் அளித்ததற்கு நன்றி
மணி அண்ணன்.

இன்னும் வீடு சேரயில்லை. நான்கு மணி நேர பயணம்
காத்திருக்கு.