7/04/2012

தமிழ் மேகம் சூழ்ந்த பால்டிமோர்


காலை ஏழுக்குத் தேவை
இன்னும் பத்து மணித்துளிகள்
ரெசிடன்சு இன்
பதினானகாம் மாடம்
திரைச்சீலை ஒதுக்கிக் காண்கிறேன்
படகுத்துறை புன்னகைக்கிறது
ஆகாயக் கப்பல் அசைந்தாடுகிறது
கடைக்கோடியில் புள்ளீயாய்ப் படகொன்று
விண்முட்டும் கோபுரமதில் பளபளக்கும் 
மினுமினு நீல விண்மீன் கொடியொன்று
விடுதலைநாளில் மிடுக்காய்ப் பறக்கிறது
பொடிக்குருவிகளிரண்டின் உச்சக்களியாட்டம்
மயில் இருந்தால் அகவும்
குயில் இருந்தால் கூவும்
சுட்டெரிக்கும் வெயில் இல்லை
பரிதி மறைந்திருந்து சிரிக்கிறது
பால்டிமோர் மாநகரில் 
பரிதி மறைந்திருந்து சிரிக்கிறது
இதமாய்த் தண்காற்று சில்லிடுகிறது
அதோ அங்கொரு மேப்பில் மரம்
இலையால் வெண்சாமாரம் வீசுகிறது
வெயில் சுட்டெரிக்கவில்லை
உயரப் பார்க்கிறேன்
அடடா... சூழுகின்றன சூழுகின்றன
முகில்கள் முகில்கள் முகில்கள்
அவையெல்லாம் தமிழ் முகில்களடா!!
சூழத்துவங்கிருப்பது தமிழ் முகில்களடா!!

5 comments:

மணிவானதி said...

தமிழின் பெருமையை உலகறிய செய்யும் இத்திருவிழா நல்விழாவாக அமைய வாழ்த்துக்கள்.

அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.

கோமதி அரசு said...

சூழுகின்றன சூழுகின்றன
முகில்கள் முகில்கள் முகில்கள்
அவையெல்லாம் தமிழ் முகில்களடா!!
சூழத்துவங்கிருப்பது தமிழ் முகில்களடா!!//

தமிழ் முகிலுக்கு வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

நிகழ்காலத்தில்... said...

இப்பத்தான் பார்த்தேன்.. நட்சத்திர வாழ்த்துகளும்., மகிழ்ச்சியும் :)))

மாதேவி said...

நட்சத்திர வாழ்த்துகள்.

சூழுகின்ற தமிழ் முகிலுக்கும் வாழ்த்துகள்.