6/03/2012

திரைப்பட, தொலைக்காட்சி கலைஞர் பிரியதர்ஷினி


தமிழ் திரைப்பட நடிகர், நாடகக் கலைஞர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நாட்டியக் கலைஞர் எனப் பல ஆற்றல் கொண்டவர் பிரியதர்ஷினி ஆவார். தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளராகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ’புலி வருது’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் ‘மானாட மயிலாட’ எனும் தொடர் நிகழ்ச்சியில் முதல் பரிசினை வென்றிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சித் தொடரிலும் ‘சிறந்த நடனக் கலைஞர்’ விருதினைப் பெற்றிருக்கிறார். முதன் முதலாக, 1998ஆம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சியின் ’விழுதுகள்’ நெடுந்தொடரில் தன் கலை வாழ்க்கையைத் துவங்கிய இவர், ‘கோலங்கள்’, ’ரேகா அய்.பி.எசு’ உள்ளிட்ட பல நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார்.

கலையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகரும், தொலைக்காட்சி நடிகரும், நாட்டியக் கலைஞருமான திவ்யதர்ஷினி இவரது உடன் பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரதக்கலையை முறையாகப் பயின்ற இவர், அமெரிக்க தமிழ்த் திருவிழா - 2012இல் இடம் பெறும் “வீரத்தாய் வேலுநாச்சியார்” நாட்டிய நாடகத்தில் முக்கிய வேடத்தில் நாட்டியமாடி அசத்த இருக்கிறார்.

Register today for such a great Tamil Event. www.fetna.org

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

அமெரிக்க தமிழ்த் திருவிழா - 2012இல் இடம் பெறும் “வீரத்தாய் வேலுநாச்சியார்” நாட்டிய நாடகத்தில் இவரும் முக்கிய வேடத்தில் நாட்டியமாடி அசத்த இருக்கிறார்.

வாழ்த்துகள் கலைஞர் பிரியதர்ஷினி"

ராஜ நடராஜன் said...

அமெரிக்க தமிழ்த் திருவிழா விளம்பரமா!

Unknown said...

விழுதுகள் நடித்தவர் இவரா?