skip to main |
skip to sidebar
பத்மினியோடு பண்ணையார்
அழகானதொரு கிராமம். அவ்வூரில் ஒரு பண்ணையார். மிகவும் நல்லவர், ஊருக்காக எண்ணற்ற நல்ல பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர். அத்தகைய நல்லவருக்கு, எப்படியாவது பத்மினியை அடைந்துவிட வேண்டுமென்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அப்படி இப்படி எனப் பலவழிகளிலும் முயன்றவர், தன் ஆசைப்படியே பத்மினியைத் தனதாக்கிக் கொண்டார். நாளுக்கு நாள் நெருக்கம் அதிகரித்து, ஊரே அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதைப் பார்த்த அவர்தம் மகள் சினம் கொண்டு, பத்மினியிடமிருந்து பண்ணையாரைப் பிரிக்க முயல்கிறார். ஆனால், அம்முயற்சி தோல்வியில் முடிவடைகிறது. ஆம், உள்ளூர் வாலிபர் முருகேசன் துணையோடு பத்மினி தன்னைப் பிரிந்து போவதில் இருந்து மீண்ட பண்ணையார், பத்மினியோடு ஊருக்குள் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் நகரத்தில் இருந்த பண்ணையாரது மகன் ஊருக்கு வருகிறார்.அவரும், பண்ணையாரை அவர்களது குடும்பச் சொத்தான செங்கற்சூளைக்கு அழைத்துச் சென்று அவர் மனத்தை மாற்ற முயல்கிறார். அவரும் மனம் மாறிவிட்டார். இறுதியில் பத்மினிக்கு என்ன ஆயிற்று? ஊர் மக்கள் பத்மினிக்கு உதவுகிறார்களா?? பத்மினியோடு குதூகலமாய் இருந்த பண்ணையார் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவர் பத்மினியோடு எப்படிக் குதூகலமாயும் கிளுகிளுப்பாயும் இருந்தாரென்பதை இக்காணொலியில் கண்டு களிப்படையுங்கள்.
2 comments:
2 வாரத்துக்கு முன்பு இந்த காணொளியைப் பார்த்தேன், நல்ல நகைச்சுவை மற்றும் இயல்பான பேச்சுகள். சிறந்த காணொளி
நல்ல நகைச்சுவையான இயல்பான
பேச்சுவழக்குடன் கூடிய அருமையான காணோளி
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
Post a Comment