2/01/2012

விழிநாள் வாழ்த்து!!

அகத்தாள், இல்லாள், மனையாள்
அடுப்பி, அகவாட்டி , அறத்துணைவி
ஆட்டி. சகசரி, சமுசாரம்
சானி, சேர்த்தி, தலைமகள்
எம்மானி, தலைவி, துணைவி
தேவி, நப்பின்னை , நாயகி
பத்தினி , பாரியை, பிரியை
பெண்சாதி, பெண்டாட்டி, பொருளாள்
மகடூஉ , மனைக்கிழத்தி, மனையாள்
வல்லவை, வனிதை, விருந்தனை
மனைவி, வதுவராளி
வீட்டாள், வீட்டுக்காரி
வீரை, வேட்டாள்
கண்வாட்டி, சாயி
எனத் தமிழாலே எனக்கு ஆனாய் நீ
நின் பூவிரு விழிகள் விழித்த நாளதில்
தமிழால் வாழ்த்துகிறேன்
நன்றியுடனே!!

5 comments:

ஓலை said...

எங்களது வாழ்த்துகளும்.

அப்பாதுரை said...

ஆகா!

இராஜராஜேஸ்வரி said...

தமிழால் வாழ்த்துகிறேன்
நன்றியுடனே!!

விழிநாள் வாழ்த்து!!" பாராட்டுக்கள்..

Starjan (ஸ்டார்ஜன்) said...

என்றும் நீடுழி வாழியவே.. மனதார வாழ்த்துகிறேன்.

Vijiskitchencreations said...

பாராட்டுக்கள்.