2/10/2012

டென்னசி மெம்ஃபிசு நகரத் தமிழ்விழா அழைப்பு

ஒருவானில் பன்னிலவாய்
உயர்தமிழரெலாம் எழுக!
திருவான செந்தமிழின்
தேனருந்த எழுக! நீவிர்
பெருமானம் பெறுவதற்கு வாரீரேல்
உங்கள்நுதற் பிறையே நாணும்!
பொற்பரிதி எழுஞ்சுடர் முகமும்
நன்னெஞ்சும் வாட்டம் எய்தும்!

மின்னைவிழி உயர்ந்ததுபோல்
மெய்யுயிரைப் பெற்றதுபோல் தமிழ்ச்சாப்பாடு!
மணக்கவ ரும் தென்றலிலே குளிராஇல்லை?
செந்தமிழ்த் தோப்பில் நிழலா இல்லை?
நந்தமிழின் நலம் காக்க வாரீர் தமிழர்களே!
நட்பெய்தக் கூடுங்கள் அன்பர்களே!!
கோர்டோவா சமூகக் கூடமதில் கூடுங்கள்!
கூடிப் பொங்கலிடுவோம் வாருங்கள்!!

கூடுதல் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்!! : 

2 comments:

வெண்பூ said...

யார் வேணும்னாலும் போக‌லாமா? என‌க்கு கிட்ட‌தான், ஒரு 200 மைல், போக‌ நேர‌ம் இருக்குமான்னு தெரிய‌லை, இருந்தா ஒரு அழுத்து அழுத்த‌லாமான்னு யோசிக்குறேன்.

ஓலை said...

Vaazhthugal pazhamai.