பிறந்த மண்ணை அலசி ஆராய்வதில் கிட்டும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்றே சொல்வேன். அதுவும், கொங்கு மண்ணை அலசுவதில் அடியேனுக்கு என்றும் அளப்பரிய மகிழ்ச்சிதான். கூகுள் வரைபடத்தில், நான் பிறந்து திரிந்த மண்ணைக் கூர்ந்து நோக்கினேன்.
லட்சுமாபுரம்
சிறு கூரையுடன் இருந்த இடம், ஒரு கைச்சாளையாக மாறி இருக்கக் கண்டேன். லெட்சுமாபுரம் எனும் அந்த அழகிய ஊரைச் சுற்றிலும் தோப்புகள் சூழக் கண்டேன். பரம்பிக்குளம் ஆழியாறு பிரதானக் கால்வாய் கரைபுரண்டு செல்வதைக் கண்டேன். அகமகிழ்ந்தேன்.
கூரைக்கல்லு
அமெரிக்கர்கள் நன்றி நவில்தலை சிரமேற்கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்தக் கொங்கனும் தன் மண்ணுக்கும் மக்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்.
கொங்கு நாட்டுக் கிராமங்களில், பள்ளம், படுகை, பாம்பேறி, கட்டுத்தரை, கோம்பை மேடு, குறுக்கு மேடு, இட்டேரி என எங்கும் நினைவுச் சின்னங்கள் வியாபித்திருப்பதை இன்றும் காணலாம்.
குத்தாரிக் கல்லு
குழிக்கல்லு
வட்டக்கல்லு
இத்தாழிகளில், இறந்தவர்கள் உடலோடு, அவர்களுக்குப் பிடித்தமானவற்றையும் இட்டு வைத்த வழக்கம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படி வைக்கப்பட்டு இருந்த பொருட்களில், விலைமதிப்பற்ற நகைகளும் உண்டு. இத்தாழிகளை முதுமக்கட்தாழிகள் எனப் பாடப்புத்தகத்தில் படித்ததும் உங்களுடைய நினைவுக்கு வரலாம்.
நீங்கள் இப்படியான இடங்களைப் பார்க்க நேரிட்டால், அவற்றை படம் எடுத்து அனுப்பும்பட்சத்தில், நான் மிகவும் நன்றி உடையவனாய் இருப்பேன்.
8 comments:
தாய் மண்ணே வணக்கம்.. :)
அண்ணே : கட தொறந்தாச்சா.........
ஓட்டு வீடுகளைப் பாக்கும் போது அப்பிடியே பிறந்து வாழ்ந்த ஊரின் மலரும் நினைவுகள். நன்றி பழமையார்.
ஆஹா. கடை தொறந்தாச்சு. ம்கும்.உங்கூர்ல இடம் சொன்னா வீதி வீதியா பார்க்க முடியுது. கூகிளான் இந்தியாவுக்கு எப்ப கண்ணு தொறப்பானோ.
"உங்கூர்ல இடம் சொன்னா வீதி வீதியா பார்க்க முடியுது. கூகிளான் இந்தியாவுக்கு எப்ப கண்ணு தொறப்பானோ."
Sir, It invades privacy.
/Sir, It invades privacy./
அதெப்படி. வீதியோட ஃபோட்டோ ப்ரைவசியாகும். அப்படிப் பார்த்தா செல்ஃபோன்ல நீ இப்போது இந்த இடத்திலிருக்கிறாய் எனச் சொல்வது எப்படி?
நல்ல பகிர்வு பழமைபேசியாரே
வாங்க!
பசங்க ஓவரா ஆடுறாங்க!
Post a Comment