11/29/2010

வாடிக்கையாளனே முதலாமாவன்!

Customer is first! இதை ஆங்கிலத்துல சொன்னா கேட்கும் உலகம், சில நேரங்களில் தன் எழுத்துகளை வாசிக்கும் வாடிக்கையாளனைச் சிறப்பிக்க மறந்துவிடும். பதிவர்முகம் கொள்வதற்கு முன்பாகவே இதை உணர்ந்த இவன், ஒரு போதும் பதிவுகள் வாயிலாகவோ அல்லது பின்னூட்டங்களிலோ கடிந்து கொண்டது கிடையாது.

அதே அளவுக்கு, எழுத்தை வாசித்தவர்களும் எம்மைச் சிறப்பாக கையாண்டு வருகிறார்கள். மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறது. இந்த இரு ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்களில் நான் கொண்ட மனநிறைவுக்கு அளவே கிடையாது. நன்றிகள் உளமாற!

கிட்டத்தட்ட இரு மாத அளவிலான கட்டாயக் கடும் பயிற்சியை (immersion program) மேற்கொள்ள இருப்பதால், இன்று முதல் தற்காலிகமாக இருமாதங்களுக்குக் கடை மூடப் படுகிறது. வாய்ப்பு இருப்பவர்கள், போசுடன் அல்லது பெட்ஃபோர்டு நகரில் சந்திக்க வாய்ப்புக் கொடுத்தால் அகமகிழ்வேன். அடுத்த இரு மாதங்களும், அங்கேதான் இவனுக்கு வாசம்!!! customer - வாடிக்கைக்காரன், client - கட்சிக்காரன், consumer - நுகர்வோன்!

19 comments:

வருண் said...

**பதிவர் முகம் கொள்வதற்கு முன்பாகவே உணர்ந்த இவன், ஒரு போதும் பதிவுகள் வாயிலாகவோ அல்லது பின்னூட்டங்களிலோ கடிந்து கொண்டது கிடையாது.**

என்ன சொன்னதையே நீங்க சொல்றீங்க! சரி நல்லபடியாப் போயிட்டு வாங்க. உங்க கடைய தளபதி பத்திரமா பார்த்துக்குவாராம் :)

Unknown said...

Massachusetts பயணமா? வாழ்த்துகள்.

வருண் said...

***என்ன சொன்னதையே நீங்க சொல்றீங்க! சரி நல்லபடியாப் போயிட்டு வாங்க. உங்க கடைய தளபதி பத்திரமா பார்த்துக்குவாராம் :)**

It should read as

என்ன நான் சொன்னதையே நீங்க சொல்றீங்க! சரி நல்லபடியாப் போயிட்டு வாங்க. உங்க கடைய தளபதி பத்திரமா பார்த்துக்குவாராம் :)

மதுரை சரவணன் said...

சரி... இரண்டு மாதத்தில் ஓய்வுக் கிடைக்கும் போது எழுதுங்கள்... பார்த்துச் செல்லவும்.. வாடிக்கையாளனுக்கு முதல் உரிமைக் கொடுத்து கடை அடைப்பை வெளிப்படுத்தியதற்கு நன்றி.

பட்டினத்துப்பிள்ளை said...

வாரும் , வாரும்.
இம்முறை உம்மை விமான நிலையத்திற்கு மட்டும் அல்லாது, எங்கும் அழைத்து செல்வேன்.

குடுகுடுப்பை said...

வருணுக்கு ஒரு பின்னூட்டம் குறையும்

வருண் said...

***குடுகுடுப்பை said...

வருணுக்கு ஒரு பின்னூட்டம் குறையும்***

கொஞ்ச நாள் அவர் நிம்மதியா இருக்கட்டுமே? :)))

a said...

அப்படியே ஆகட்டும்..........

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

டாட்டா..

பழமைபேசி said...

@@பட்டினத்துப்பிள்ளை

நான் உங்களைத்தான் நினைச்சனுங்கோ!

vasu balaji said...

அதெல்லாம் கடைக்கு லீவ் குடுக்க முடியாது. ஓவர்டைம் பண்ணிக்கலாம்:))

venkat said...

வாழ்த்துகள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

நிலாமகள் said...

காத்திருக்கிறோம்...காத்திருக்கிறோம்... நல்லபடியா போயிட்டு வாங்க!

ஈரோடு கதிர் said...

ரெண்டு மாசம்ம்ம்ம்மா!?

செல்லாது!

sriram said...

இந்த முறையாவது சந்திக்கலாமா?
நேரம் கிடைக்கும் போது போன் பண்ணுங்க, நம்பர் இல்லன்னா தனிமடல் அனுப்புங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ராஜ நடராஜன் said...

நாங்களும் வாடிக்கையாளர்கள்தான்.

கவி அழகன் said...

சூப்பர் ...எங்க காண காலமா காணேல?

குறும்பன் said...

வாழ்த்துகள். நல்லா முடிச்சிட்டு வாங்க.

'போசுடன்' 'பாசுடன்' 2ல் எது சரி?. கேள்வி கேக்கறத நிறுத்த மாட்டோம்.