6/11/2008

முகப்பு மொழி

இப்ப நாம, நம்ப பக்கத்தில பொறிச்சிருக்கிற முகப்பு மொழி பத்தி அலசுவோம். அடிப்படையில அது ஒரு பழமொழி. அடியேனுக்கு அந்த பழமொழி மேல ரொம்பவே ஈர்ப்பு. நான் சிங்கப்பூர்ல 'டேம்பநிசு'ங்ற இடத்துல ஒரு ஒன்றரை வருசம் ஒரு தமிழ் குடும்பத்தவங்க வீட்ல குடி இருந்தேன். அவர் பேர் கனகவேல். அந்த வீட்டு அம்மா பேரு தனம்.அந்த அம்மா பிறப்புல சீனருடய மகள். ஒரு தமிழ் குடும்பம், அவங்கள பிறந்த உடனே சுவீகாரம் (தத்து) எடுத்துகிட்டாங்களாம். அதனால ஒரு தமிழச்சியாத்தான் அவங்க இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு மகன், பேரு பாக்கியராசு. ஒரு மகள், பேரு காமினி. ரொம்ப மகிழ்ச்சியா இருந்தேன் அவங்க வீட்டுல.

அவங்க மகன் 'பாக்கியராசுக்கு'க்கு, தான் ஒரு சிங்கப்பூர்காரன் அப்படீனு நெனப்பு அதிகம். ஒண்ணு 'மலாய்'ல பேசுவான். இல்ல 'ஆங்கிலத்'துல பேசுவான். தமிழ் சுத்தமா பிடிக்காது. அப்ப ஒரு நாள், அவங்க அம்மா கூப்ட்டு சொன்னாங்க, "இப்படியே இருந்தீன்னா, சீனனும் உன்னோட தோல் நிறத்த பாத்து சேத்திக்க மாட்டான். மலாய்காரனும் சேத்திக்க மாட்டான். ஒண்ணு நீ தெருவுல நிப்பே, இல்ல அழிஞ்சி போயிருவே. தமிழனா இருக்கப் பழகிக்கோ. எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையனும்" அப்படீன்னு சொல்லி புத்திமதி சொன்னாங்க. அப்ப இருந்து இந்த பழமொழி மேல எனக்கு ஒரு ஈர்ப்பு.

உலகத்துலயே ஒடுக்கப்பட்ட,ஒதுக்கப்பட்ட இனம் அப்படீனு சொன்னா அது யூத இனமாத்தான் இருக்கும். அரசியல் காரணங்களுக்காகவும் வேற காரணங்களுக்காகவும் அவங்க மேல நிறய கருத்து வேறுபாடுகள் இருக்கு. அது வேற விசயம். ஆனா, பஞ்சப்பராரிகளா நாடோடிகளா நாடு இல்லாம திரிஞ்ச அவங்க தனக்குன்னு ஒரு நாட்ட(இசுரேல்) உருவாக்கி, உலகத்துல ஒரு பெரிய சக்தியா இருக்காங்க. வரலாறு படைச்சு இருக்காங்க.இதுக்கு மூல காரணம், அவங்க இந்த பழமொழிய சரியா புரிஞ்சிகிட்டதத் தவிர வேற என்னவா இருக்க முடியுங்க?!

அவங்க மொழிதான், உலகம் பூரா இருந்த யூதர்கள ஒண்ணு சேத்தி இருக்கு.அந்த மொழி இனத்த கொண்டு வந்து நிறுத்துச்சு. இனம் அவங்க பெருமைய நிலை நாட்டுச்சு அப்படீங்றதுல எந்த மாற்றுக் கருத்தும் இருக்காதுன்னு நம்பறேனுங்க நானு.

எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா

இனத்துல போயித்தான் அடையனும்!

வாழ்க தமிழினம்!!

5 comments:

ரிஷி (கடைசி பக்கம்) said...

nice and matches with my ppinion.

Let us see all these NRI after 55-60 where they reach?

பழமைபேசி said...

//

கடைசி பக்கம் said...
nice and matches with my ppinion.

Let us see all these NRI after 55-60 where they reach?
//

ஆமாங்க..... இப்பவே எல்லாரும் இதை உணர்ந்துகிட்டா நல்லது. இல்லாட்டா நம் பிள்ளைகளே கூட, நம்மை விட்டுப் போகக் கூடும். நிறைய சமூக விளைவுகள்(social issues) வரலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க!

சரண் said...

நல்ல பழமொழி..அதற்கான காரணமும் அருமை.

ஆனா ஒரு சந்தேகம்.. யூதர்கள் அவர்கள் மொழியின் மீதுல்ல பற்றினால் நாட்டை உருவாக்கினார்களா? இல்லை தங்களது மதத்தின் மீதுள்ள பற்றினாலா?

பழமைபேசி said...

//
யூதர்கள் அவர்கள் மொழியின் மீதுல்ல பற்றினால் நாட்டை உருவாக்கினார்களா? இல்லை தங்களது மதத்தின் மீதுள்ள பற்றினாலா?
//
நல்ல கேள்வி! ஆனா, அவிங்களுக்கு மாதமும் ஒன்னுதான். மொழியும் ஒன்னுதான். வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள். மிக சொற்பம். ஆனா, மொழி அவிங்களுக்கு பிரதானம். பண்டைக்காலத்துத் தமிழர்கள் போல....

குடுகுடுப்பை said...

ஆமாங்க எனக்கும் யூத இனத்தோட வெற்றிக்கு மொழிதான் காரணம்கிறது
அசைக்கமுடியாத நம்பிக்கை