8/02/2008

ஒட்டக்கூத்தரும் கம்பரும்

கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் நிரந்தரமாவே புலமைக் காய்ச்சல் இருக்குதுன்னு கர்ண பரம்பரைக் கதைகள் சொல்லுதுங்க. ரெண்டு பேருமே இராமாயணம் எழுதினதாகவும், அதுல ஒட்டக்கூத்தர் தன்னோடது கம்பரோட படைப்புக்கு இணையா நல்லபடியா வரலைங்கிறதால, தன்னோட படைப்பை எரிச்சிட்டதாகவும் சொல்லுறாங்க.

ஒரு நாள் ஆத்தோட படித்துறையில ஒட்டக்கூத்தரும் கம்பரும் தள்ளி தள்ளி நின்னு கால்மொகங் கழுவிட்டு இருந்தாங்களாம். அப்ப, தண்ணி ஒட்டக்கூத்தர் நின்னுட்டு இருந்த இடத்துல இருந்து, கம்பர் நின்னுட்டு இருந்த இடத்துக்கு போய்ட்டு இருந்துச்சாம். அதப் பாத்த ஒட்டக்கூத்தர் குசும்புத்தனமா, 'கம்பரே நான் கழுவின கழுநீர்தான் உமக்கு வருது பாத்தீரா'னு கிண்டலா கேட்டாராம்.

அதக் கேட்ட கம்பர், "அட ' நீரே' வந்து என் காலில் விழுந்தால், நான் என்ன செய்வது?"னு சொன்னாராம் பதிலுக்கு!

இதைத்தான், "நாய்க் கடிக்க, செருப்பு அடிக்க"னு சொல்லுறாங்களோ?

9 comments:

த.அகிலன் said...

ஏங்க இதை மாதிரிப்பதிவுகள் எல்லாத்தையும் எதுக்க வகைப்படுத்தியிருக்கீங்க..(இலக்கிய நகைச்சுவை,எள்ளல்,துள்ளல் ..இப்படி) ஏதாவது வகைப்படுத்துங்க. அப்பதானே புதுசா வர்ற நம்மள மாதிரி ஆளுங்க சுளுவா படிக்கமுடியும்.. இதுக்கு முன்னாடி எழுதின இதமாதிரிப் பதிவுகளை நான் எப்படி அடையாளம் கண்டுபுடிக்கிறது..

பழமைபேசி said...

//

வாங்க அகிலன்! நீங்க சொல்லுறது சரிதான்!
ஆமா, நீங்க வாக்கு(vote) அளிச்சீங்களா? :-O)

த.அகிலன் said...

அதான் ஒட்டைப் போட்டோமுல்ல

பழமைபேசி said...

//த.அகிலன் said...
அதான் ஒட்டைப் போட்டோமுல்ல
//
நன்றிங்க அகிலன். நான் வகைப்பாடு எல்லாம் சரி செய்து வெக்கிறேன்.... வாங்க, வந்து படிச்சுட்டு, நல்லா இருந்தா வாக்கு அளிச்சுட்டுப் போங்க....

குமரன் (Kumaran) said...

நல்ல நகைச்சுவைத் துணுக்கு. :-)

பழமைபேசி said...

//குமரன் (Kumaran) said...
நல்ல நகைச்சுவைத் துணுக்கு. :-)
//

வாங்க குமரன், நன்றி!

வேளராசி said...

ஓளவையாரை ''ஒரு காலில் நாலிலைப் பந்தலடி'' என கிண்டல் செய்த பாடல் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பழமைபேசி said...

//வேளராசி said...
ஓளவையாரை ''ஒரு காலில் நாலிலைப் பந்தலடி'' என கிண்டல் செய்த பாடல் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
//

வாங்க வேளராசி! இந்த பதிவை பாருங்களேன்...

ஒளவையின் பதிலடி

பழமைபேசி said...

வேளராசி,

அதன் தொடர்ச்சியா இதையும் படிச்சு சுவராசியம் கொள்ளுங்கோ....வருகைக்கு நன்றி!