8/28/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 6

பா      வா      மை      வை,
நீ       மீ          ஊ         ஈ,
வீ      மோ      கோ      போ,
தீ      தா        ஐ       ஓ!

வணக்கம்! மேல நான் எழுதினது பாட்டுங்க!! "கவி காளமேகத்தின் தாக்கம்"ங்ற தலைப்புல பல தரப்பட்ட வகையிலான பாட்டு எழுதிட்டு வர்றோம். நீங்க இதுக்கு முந்தைய பதிவுகளைப் படிக்கலைனா அதுகளை மொதல்ல படிச்சுட்டு வந்தா வசதியா இருக்கும்ங்றது என்னோட தாழ்மையான எண்ணம். மேல சொன்னது ஓரெழுத்துப் பாட்டுங்க. இதுவும் சித்திரக்கவி வகையச் சேந்ததுதாங்க. வழக்கம் போல, செல்ல மகளை மனசுல இருத்தி எழுதினதுதாங்க இதுவும்.

பொழிப்புரை:
பா : அழகே
வா : வா
மை : கண்மை அல்லது பொட்டு
வை : இட்டுக் கொள்
நீ : நீ
மீ : உயர்
: அன்னம் அல்லது உணவு
: கொடு /தானம்
வீ : மலர்
மோ: முகர்தல்
கோ : இறைவன்
போ : செல்
தீ : இனிமை
தா : கொடு
: அச்சம்
: ஒழி அல்லது தவிர்

கருத்துரை: அழகான மகளே, வந்து கண்ணுக்கு மை இட்டுக் கொள்; பின்பு உயர்ந்த நிலை கொள்ள அன்னதானம் இட்டபின் வாசமிகு நறுமலர்களுடன் இறைவனைச் சென்று வழிபடு. அச்சம் தவிர்த்து என்றும் இனிமை கொள்வாயாக!

பொருள் தர வல்ல ஓரெழுத்துகள் நிறைய உள்ளன. பின் வரும் காலங்களில் அவை பற்றி விபரமாக அலசுவோமாக!


9 comments:

Mahesh said...

ஆ ஹா ஆ ஹா
ஆ ஹா ஆ ஹா
ஆ ஹா ஆ ஹா
ஆ ஹா ஆ ஹா

இவ்வளவுதான் நம்மால முடியும் :)

பழமைபேசி said...

//Mahesh said...
ஆ ஹா ஆ ஹா
ஆ ஹா ஆ ஹா
ஆ ஹா ஆ ஹா
ஆ ஹா ஆ ஹா

இவ்வளவுதான் நம்மால முடியும் :)
//
நான் பதிவை முடிக்கக் கூட இல்ல, அதுக்குள்ள போட்டுத் தாக்குறீங்க.... ஆனாலும், உங்களுக்கு நகைச்சுவை உணர்வு நொம்ப அதிகம். உங்க ஊக்கத்துல, எதோ நம்ப வண்டி ஓடுது பாருங்க!

Mahesh said...

பாத்தீங்களா... பதிவு முடிஞ்சுதா இன்னும் பாக்கியிருக்கான்னு கூட தெரில....

'அவசரக் குடுக்கை'ங்கறீங்க.... காளமேகம் 'க்ளோன்' சொன்ன சரியாத்தானிருக்கும்
:))))

இந்த வாரம் ஜாஸ்தி ஆணி இல்ல.... அதுனால வலைல புல்லு புடுங்கிக்கிட்டுருக்கேன்... திங்கக் கெழமையிலிருந்து எப்பிடி இருக்கும்னு தெரியாது....

பழமைபேசி said...

//Mahesh said...
பாத்தீங்களா... பதிவு முடிஞ்சுதா இன்னும் பாக்கியிருக்கான்னு கூட தெரில....

'அவசரக் குடுக்கை'ங்கறீங்க.... காளமேகம் 'க்ளோன்' சொன்ன சரியாத்தானிருக்கும்
:))))

இந்த வாரம் ஜாஸ்தி ஆணி இல்ல.... அதுனால வலைல புல்லு புடுங்கிக்கிட்டுருக்கேன்... திங்கக் கெழமையிலிருந்து எப்பிடி இருக்கும்னு தெரியாது....
//
இங்க ஒபாமா பின்னு பின்னுனு பின்னிகிட்டு இருக்காரு... நல்லாப் பேசுறாரு.

Mahesh said...

இப்பொதான் ல பாத்தேன்... " "ன்னு தொண்ட கிழிய கத்திக்கிட்டுருந்தாரு... என்ன " "-ஓ ? நேத்து இங்க சிஙப்பூருக்கு அப்துல் கலாம் வந்து, பள்ளிக்கூடத்துக்கு போய் வழக்கம் போல "கெனா காணுங்கடா கண்ணுங்களா"ன்னுட்டு போய்ட்டாரு... சும்மாவே தூங்குவானுங்க நம்ம பயலுவ... இவுரு வேற வந்து தாலாட்டு பாடீட்டுப் போறாரு.... என்னத்தைச் சொல்ல?

Mahesh said...

இப்பொதான் pantry ல பாத்தேன்... "its time to change america "ன்னு தொண்ட கிழிய கத்திக்கிட்டுருந்தாரு... என்ன "change"-ஓ ? நேத்து இங்க சிஙப்பூருக்கு அப்துல் கலாம் வந்து, பள்ளிக்கூடத்துக்கு போய் வழக்கம் போல "கெனா காணுங்கடா கண்ணுங்களா"ன்னுட்டு போய்ட்டாரு... சும்மாவே தூங்குவானுங்க நம்ம பயலுவ... இவுரு வேற வந்து தாலாட்டு பாடீட்டுப் போறாரு.... என்னத்தைச் சொல்ல?

பழமைபேசி said...

இந்த சுத்தியப் பாருங்க
======================

3. மடச்சாம்பிராணி - விளக்கம் என்ன?

அந்தக் காலத்துல மடம், கோயில் கூடம், சத்திரம்னு சனங்க கூடுற பொது இடங்கள்ல பெரிய சாம்பிராணிக் கட்டிய வெச்சிருப்பாங்களாம். இது தணல்ல போட்டு தூபம் போடுற சாம்பிராணி இல்லங்க. இருந்த இடத்துல இருந்து நல்ல வாசம் குடுத்து, காத்துல இருக்குற கிருமிகளநீக்குற சாம்பிராணி. இருந்த இடத்துல இருந்து, காத்துல கரைஞ்சு உருமாறி, நாளடைவுல இது அரை குறையா ஆயிடுமாம். அத வெச்சி, அரை குறையா புத்திக்கூறு இல்லாம இருக்கறவங்கள 'மடச்சாம்பிராணி'னு திட்ற பழக்கம் பொழக்கத்துல வந்தது. மடையன் சாம்பிராணினு ஒரு செடி இருக்குதுங்க. ஆனா, அதுக்கும் இந்த சொல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்களாம். அது ஒரு மூலிக மருந்தாம்.

http://maniyinpakkam.blogspot.com/2008/07/2.html

Anonymous said...

Mahesh said...
ஆ ஹா ஆ ஹா
ஆ ஹா ஆ ஹா
ஆ ஹா ஆ ஹா
ஆ ஹா ஆ ஹா

இவ்வளவுதான் நம்மால முடியும் :)


நம்மால அது கூட முடியல.. நீங்க வெ>ற!

பழமைபேசி said...

//இனியவள் said...
Mahesh said...
ஆ ஹா ஆ ஹா
ஆ ஹா ஆ ஹா
ஆ ஹா ஆ ஹா
ஆ ஹா ஆ ஹா

இவ்வளவுதான் நம்மால முடியும் :)


நம்மால அது கூட முடியல.. நீங்க வெ>ற!
//
நன்றி!