பழமைபேசியாரே,
ஔவையாரும் ஒட்டக் கூத்தரும் சம காலத்தவர்களாக இருக்க முடியாது. ஏனெனில், திருவள்ளுவரும், ஔவையும் சம காலத்தவர்கள். ஔவையின் சிபாரிசால் தான், பாண்டிய மன்னன், திருக்குறளை, மதுரை பொற்றாமரைக் குளத்திலுள்ள சங்கப் பலகையில் ஏற்ற முடிந்தது. ஔவையின் சிபாரிசு இல்லாமலிருந்தால், அன்றே திருக்குறளை பரிகசித்து, அறியாமையால், பாண்டிய மன்னன் ஒதுக்கியிருப்பான். இதிலிருந்து மற்றொரு உண்மையும் புலப்படுகிறது. அதாவது, திருவள்ளுவர் நிச்சயம் நாஞ்சில் நாட்டவராகத்தான் இருக்க முடியும் (மைலாப்பூரில் அல்ல).ஒட்டக்கூத்தரும் கம்பரும் சம காலத்தவர்கள். ஆகவே, ஒட்டக் கூத்தருக்கு தக்க பதிலடி கொடுத்தவர் கம்பராகத்தான் இருக்க முடியும்.
--வெற்றிச்செல்வன் (ஜெய் சுப்ரமணியன்)
அய்யா,
வணக்கம்! _/\_ நேற்று தான் உங்கள் இளவல் அன்பர் கண்ணன் அவர்களிடம் உங்களைப் பற்றி அளவலாவிக் கொண்டு இருந்தேன். உமது கடிதம் கண்டு மகிழ்ச்சி. மேலும் பல அலுவல்களுக்கு இடையில் அக்கறையுடன் எமது பதிப்புகளையும், குழுமத்தாரிடமும் கேட்டறிந்தமைக்கு நன்றிகள். கிடைக்கும் கால அவகாசத்தில் பிறந்த மண்ணில் உற்றார் உறவினருடன் பொழுதைக் கழித்து இனிமையுற வாழ்த்துகிறோம்!
புலவர்கள் வாழ்ந்த காலம் பற்றிய உமது குறிப்புகள் கண்டு உவகை உற்றோம். யாமும் இவை பற்றிய சர்ச்சைக்குரிய தகவல்கள் கேள்விப்பட்டது உண்டு. இருந்தாலும், அதனை உரிய தருணம் வாய்க்கும் பொழுது பதிவிடுவோம் என எண்ணி இருந்தோம். தாங்கள் அத்தகைய கிடக்கையை வெளிக் கொணர்ந்தமையால், வாய்க்கப் பெற்ற இத்தருணத்தை பயன்படுத்திக் கொள்வோமாக!!
"எட்டேகால் லட்சணமே எமனேவும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமுட்டக்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது."
யாம் குறிப்பிட்ட இந்தப் பாடல் ஔவையார் எழுதிய ஒன்றே! ஒட்டக்கூத்தரும் ஔவையாரும் சமகாலத்தில் வாழ்ந்திருக்க முடியாது என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆம், இன்றளவும் புலவர்கள் வாழ்ந்த காலம் என்பது தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிராகவே உள்ளது. இருந்தாலும், ஔவையார் இந்தப் பாடலை ஒட்டக்கூத்தருக்கு எதிராகப் பாவித்தாரா அல்லது கவி காளமேகப் புலவருக்கு எதிராகப் பாவித்தாரா என்பது பற்றிய விவாதமே யாம் அறிந்த ஒன்று. நீங்களோ, மூன்றாவதாக, இந்தப் பாடலை ஔவையார் எழுதி இருக்க வாய்ப்பு இல்லை என்று குறிப்பிடுகிறீர்கள்.
ஔவையார் கடைச்சங்க((கி.மு. 300 - கி.பி. 300) காலத்தில் வாழ்ந்த பெண் புலவராவர். இவர் இளமையில் மணம் புரிய மனம் இல்லாமல், தனக்கு முதுமையை அளிக்குமாறு இறைவனிடம் வேண்டவே, இவர் முதியவரானார் என கூறப்படுவதுண்டு. இவருடைய படைப்புகளுள் ஆத்தி சூடி, விநாயகர் அகவல், கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி நாற்பது, ஞானக் குறள், பந்தனந்தாதி ஆகியவை அடங்கும். புறநானூறு முதலிய சங்க நூல்களில் அவரது பாட்டுக்கள் காணப்படுகின்றன. கடையேழு வள்ளல்களில் ஒருவனாகிய அதியமான் அளித்த நெல்லிக்கனியை உண்டு இவர் நெடுங்காலம் உயிர் வாழ்ந்தாரெனச் சங்க நூல்கள் கூறுகின்றன. இந்த ஔவையார் தவிர, பல ஔவையார்கள் வேறு வேறு காலங்களில் வாழ்ந்து தமிழுக்கு பெருமை சேர்த்து இருக்கிறார்கள்.
உண்டிச் சுருக்குவது பெண்டிற்கு அழகு என்று கொன்றை வேந்தன் எழுதிய ஒளவை சங்ககாலத்தவரல்ல.
கி.பி இரண்டாம் நூற்றாண்டிலிருந்து 16ம் நூற்றாண்டுவரை ஒளவை என்ற பெயரில் எழுதியவர்கள் ஆறு பேர்.
கி.பி. 2ம் நூற்றாண்டு: சங்ககால ஒளவை: 59 சங்கப் பாடல்கள் எழுதியவர், அதியமான் நெடுமானஞ்சியின் தோழி
கி.பி 10 முதல் 13ம் நூற்றாண்டுக்குள் இருக்கலாம்: பாரி மகளிர் பற்றி எழுதிய ஒளவை
கி.பி 14 முதல் 17ம் நூற்றாண்டு: ஆத்திச் சூடி கொன்றை வேந்தன் எழுதியவர்
கி.பி 18ம் நூற்றாண்டு : விநாயகர் அகவல் எழுதியவர், அசதிக் கோவை எழுதியவர்
18ம் நூற்றாண்டுக்குப் பின்: கல்வி ஒழுக்கம் போன்ற நூல்களை எழுதியவர். இதே காலத்தில் ஒரு ஒளவை இருக்கிறார். இலங்கையைச் சேர்ந்தவர். இலங்கையின் முக்கியமான கவிஞர்களில் ஒருவரான மகாகவியின் மகள். கவிஞர் சேரனின் தங்கை. அவரை மேற்குறிப்பிட்ட கணக்கில் சேர்க்கவில்லை.
ஆகவே, இந்தப் பாடலை ஏதோ ஒரு ஔவையார் ஒட்டக் கூத்தருக்கு எதிராகப் பாவித்து இருக்கலாம். கவி காளமேகத்துக்கு எதிராகவும் பாவித்து இருக்கலாம். அல்லது கம்பருக்கு எதிராகவும் பாவித்து இருக்கலாம். ஏனென்றால், இம்மூவருமே ஏதோ ஒரு ஔவையை இகழ்ந்தோ அல்லது எள்ளலாகவோ எழுதியதாக பாடல் உண்டு. இவர்களுள் ஒட்டக் கூத்தரும் கம்பரும் வாழ்ந்தது கி.பி. 11 ஆம் நூற்றாண்டு, காளமேகம் வாழ்ந்தது 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டு.
கொசுறு: நீவிர் பாண்டியர் புகழ் பாடுவதையே வழமையாக வைத்திருக்கிறீர்கள் போலும். யாமும் பதிற்றுப்பத்து கற்று எம் நாட்டு மன்னர்கள் பதின்ம சேரர் புகழ் பாட வேண்டி இருக்கும் என்பதை தங்கள் கவனத்திற்கு பணிவன்புடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன். "மாற்றுக் கருத்துகள் இருப்பின் தெரியப் படுத்தவும். சரியான தகவல்கள் சேகரிப்பதுவே எமது விருப்பம்!"
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
wow...very useful information!
நல்ல பல தகவல்கள்! வாழ்த்துக்கள்!!
//Ravi said...
wow...very useful information!//
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.
//வெங்கடேசன் said...
நல்ல பல தகவல்கள்! வாழ்த்துக்கள்!!
//
நன்றி அய்யா!
பின்னி படல் எடுத்துடீங்க, நல்ல தகவல்
2009 ல் வாழும் ஆண் ஒளவையாரே, நல்ல தகவல்.
எப்படின்னே இப்படி எல்லாம்?
எனக்கும் கொஞ்சம் சொல்லி குடுங்கண்ணே..
பதிவு மெய்யாலுமே அருமை.. அருமை.. அருமை..
பல புதிய தகவல்கள் ..( வரலாறுக்களை பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கு நன்றிகள் பல )
//யாமும் பதிற்றுப்பத்து கற்று எம் நாட்டு மன்னர்கள் பதின்ம சேரர் புகழ் பாட வேண்டி இருக்கும் என்பதை தங்கள் கவனத்திற்கு பணிவன்புடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன். //
அப்படிப்போடுங்க
ஆமா இன்னும் விடுமுறைல போகலையா
//கொசுறு: நீவிர் பாண்டியர் புகழ் பாடுவதையே வழமையாக வைத்திருக்கிறீர்கள் போலும். யாமும் பதிற்றுப்பத்து கற்று எம் நாட்டு மன்னர்கள் பதின்ம சேரர் புகழ் பாட வேண்டி இருக்கும் என்பதை தங்கள் கவனத்திற்கு பணிவன்புடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.//
I was helpless...I was cornered
என்னண்ணே... வந்ததும் வராததுமா சர்ச்சையா? இருக்கட்டும் இருக்கட்டும் இதுவும் நல்லா ஆரோக்கியமாத்தான் தெரியுது....
//Mahesh said...
என்னண்ணே... வந்ததும் வராததுமா சர்ச்சையா? இருக்கட்டும் இருக்கட்டும் இதுவும் நல்லா ஆரோக்கியமாத்தான் தெரியுது....
//
ஆமா, சர்ச்சையில தானே, நிறைய விசயம் வெளில வருது? இஃகிஃகி!!
//ஒட்டக்கூத்தரும் கம்பரும் சம காலத்தவர்கள். ஆகவே, ஒட்டக் கூத்தருக்கு தக்க பதிலடி கொடுத்தவர் கம்பராகத்தான் இருக்க முடியும்.//
இதப் படிச்சிட்டு வலது பக்கம் திரும்புனா யாரோ புதுமுகம் அறிமுகம் மாதிரி தெரிஞ்சது.தமிழ் உலகுக்கு இன்னுமொரு கதாநாயகன் தயார்!
எனக்குத் தெரிந்த ஒரே அவ்வை அ,ஆ மற்றும் சுட்ட பழம்,சுடாத பழம் பாட்டிதான்.சரக்குள்ள எதிர்வினைப் பெருந்தகைகள் முன்னுக்கு மேடைக்கு வந்தீங்கன்னா சர்ச்சையை நின்னு வேடிக்கை பார்க்க எனக்கு வசதியா இருக்கும்.
பாண்டிய நாட்டவரே!பதின்ம சேரர் குல இளவலுக்கு பதில் சொல்ல தயாரா?
//ராஜ நடராஜன் said...
இதப் படிச்சிட்டு வலது பக்கம் திரும்புனா யாரோ புதுமுகம் அறிமுகம் மாதிரி தெரிஞ்சது.தமிழ் உலகுக்கு இன்னுமொரு கதாநாயகன் தயார்!
//
அஃகஃகா!
//ராஜ நடராஜன் said...
எனக்குத் தெரிந்த ஒரே அவ்வை அ,ஆ மற்றும் சுட்ட பழம்,சுடாத பழம் பாட்டிதான்.சரக்குள்ள எதிர்வினைப் பெருந்தகைகள் முன்னுக்கு மேடைக்கு வந்தீங்கன்னா சர்ச்சையை நின்னு வேடிக்கை பார்க்க எனக்கு வசதியா இருக்கும்.
பாண்டிய நாட்டவரே!பதின்ம சேரர் குல இளவலுக்கு பதில் சொல்ல தயாரா?
//
நீங்க சொல்லுறதுதான் சரி... நண்பர் PMP தேர்வுல ரொம்ப மும்முரமா இருக்காரு. வந்தவிட்டு எதனாக் கட்டையப் போடுவாரு. வரட்டும் பாத்துகிடலாம்.
தெரியாத புதிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி.
குடுகுடுப்பை said...
2008 ல் வாழும் ஆண் ஒளவையாரே, நல்ல தகவல்
சிறு மாற்றத்துடன் மறுமொழிகிறேன்.
//அமிர்தவர்ஷினி அம்மா said...
குடுகுடுப்பை said...
2008 ல் வாழும் ஆண் ஒளவையாரே, நல்ல தகவல்
சிறு மாற்றத்துடன் மறுமொழிகிறேன்.
//
:-o)
Post a Comment