8/02/2008

அன்றைய நினைவுகள்

நாம உயர்நிலைப் பள்ளியில படிச்சுட்டு இருந்த காலம். எங்க ஊர்ப் பக்கம், பொள்ளாச்சி கோயம்பத்தூர் பக்கம், எல்லா மலையாளப் படங்களும் மலையாள தேசத்துல வெளியீடு செய்யுறப்பவே இங்கயும் வெளியிடுவாங்க. படங்களும் வெகு தரமா இருக்கும். His Highness Abdullah, வைஷாலி, ந்யூ டெல்லி, வரவேழ்ப்பு, வந்தனம், August-1, சித்ரம், தாழ்வாரம், அய்யர் தி கிரேட், ஒரு CBI டைரி குறிப்பு அப்படின்னு சொல்லிட்டே போகலாம். பிடிச்ச நடிகை லிசி(ஒரு ஈர்ப்பு தான்!), பிடிச்ச நடிகர் நெடுமுடி வேணு. ஆக, தமிழ் படங்களுக்கு கூட்டம் கொறைய ஆரம்பிச்சது. அப்புறம், மலையாளப் படங்களை, எங்க பக்கம் வெளியீடு செய்யுறதை சுத்தமா நிறுத்தி போட்டாங்க. நான் நிறைய மலையாள படங்கள் பாத்து இருக்குறேன். இதோ, அதில் சில பாடல்கள். நேரம் இருக்கும் போது கேட்டு பாருங்க, என் ரசனை எப்படி இருந்ததுனு.


வைஷாலி


வைஷாலி


His Highness Abdullah


பரதம்


நாமெல்லாம் விரும்புற செம்மீன்


சமீபத்திய 'முல்லா'

3 comments:

கோவை விஜய் said...

நல்ல பாடல்களின் தொகுப்பு.பாராட்டுக்கள்


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

கபீஷ் said...

நானும் மலையாளப் படங்கள் தான் அதிகம் பாத்திருக்கேன். கண்மதம் படத்தில் மஞ்சக் கிளியுடே... பாட்டு முடிஞ்சா கேளுங்க, ஏன்னா அது என்னோட fav. பாட்டு.

பழமைபேசி said...

//கபீஷ் said...
நானும் மலையாளப் படங்கள் தான் அதிகம் பாத்திருக்கேன். கண்மதம் படத்தில் மஞ்சக் கிளியுடே... பாட்டு முடிஞ்சா கேளுங்க, ஏன்னா அது என்னோட fav. பாட்டு.
//
கண்டிப்பா... நன்றிங்க!