உண்டல்: பசியாற, ருசித்துப் புசிப்பது. காலை உணவு உண்டேன்.
தின்றல்: தின்னுவது, கொஞ்சமா ஆற அமர அவகாசத்தில் உட்கொள்வது. மொட்டுக் கடலை தின்றேன்.
நக்குதல்: நாக்கால் நக்கி உட்கொள்வது. தேன் நக்கியது நினைவுக்கு வந்தது.
பருகல்: திரவ உணவை சிறுக உட்கொள்வது. தேநீர் பருகினேன்.
அருந்துதல்: மிகச்சிறிய அளவு உட்கொள்வது. மது அருந்தினேன்.
உறிஞ்சுதல்: வாயைக் குவித்து திரவ உணவை ஈர்த்துக் குடிப்பது. சோறு உண்ட பிறகு தட்டில் மீதம் இருந்த மோரை உறிஞ்சினேன்.
குடித்தல்: திரவ உணவை பசி நீங்க சிறிது சிறிதாக உட்கொள்வது. கூழ் குடித்தேன். கம்பங்கஞ்சி குடித்தேன்.
துய்த்தல்: சுவைத்து மகிழ்ந்து உட்கொள்வது. அவள் அன்பில் கலந்து கொடுத்த அவலைத் துய்த்தேன்.
நுங்கல்: இருந்த திரவத்தை ஒரே எடுப்பில் உறிஞ்சுவது. அச்சோபாத்திர இளநீரை நுங்கியதில் இன்பம் கொண்டேன்.
மாந்தல்: தீராத வேட்கையுடன் "மட மட"வென உட்கொள்வது. தாகவேட்கையில் குடத்து மோர் முழுதும் எனது மாந்தலில் தீர்ந்து போனது.
மெல்லல்: திண்ணமாக(கடுமை) இருக்கும் பொருளைப் பல்லால் கடித்து துவைத்து உட்கொள்வது. கொப்புத்தேங்காயை மெல்லுவதில் பல்லின் வலிமை கூடியது.
விழுங்கல்: பல் மற்றும் நாக்கிற்குப் படாமல் தொண்டை வழியாக உட்கொள்வது. தாத்தா கொடுக்கும் இலைச்சாறை விழுங்க ஏனிந்தத் தயக்கம்?
இதாங்க சொன்னாரு. எனக்கு இப்பத்தாங்க புரியுது, ஏன் தமிழ் செம்மொழின்னு. ஒவ்வொரு காரியத்தையும் நுணுக்கமா குறிப்பிட்டுச் சொல்ல முடியுது பாத்தீங்களா? எதுக்கும் கவி காளமேகம் நாளைக்கும் வந்தா நல்லா இருக்கும். கனவுல அவரு வருவார்னு நம்புவோம். நம்பிக்கைதான வாழ்க்கையே?!
(......கனவுல இன்னும் வருவார்......)
19 comments:
பள்ளியில் படித்த இலக்கணம் நியாபகத்திற்கு வருகிறது..
நன்றி
//உருப்புடாதது_அணிமா said...
பள்ளியில் படித்த இலக்கணம் நியாபகத்திற்கு வருகிறது..
நன்றி
//
அதை எல்லாம் நினைவு படுத்தறதுக்குத்தான் கவி காளமேகம் கனவுல வந்து போறாரு போல..... நன்றி!
///அதை எல்லாம் நினைவு படுத்தறதுக்குத்தான் கவி காளமேகம் கனவுல வந்து போறாரு போல..... நன்றி!///
ஒ... அது தான் விஷயமா ???
//உருப்புடாதது_அணிமா said...
///அதை எல்லாம் நினைவு படுத்தறதுக்குத்தான் கவி காளமேகம் கனவுல வந்து போறாரு போல..... நன்றி!///
ஒ... அது தான் விஷயமா ???
//
நைஜீரியா அப்பு, நல்லாத் தான் காலாய்க்குறீங்க...
///நைஜீரியா அப்பு, நல்லாத் தான் காலாய்க்குறீங்க...///
இது என்ன கொடுமைங்கன்னா??
வந்து ஒரு கமெண்ட போட்ட இப்படியா உடனே ரிப்ளை பண்ணுவாங்க??
நீங்க ரொம்ப பாஸ்டுங்கன்னா
//உருப்புடாதது_அணிமா said...
///நைஜீரியா அப்பு, நல்லாத் தான் காலாய்க்குறீங்க...///
இது என்ன கொடுமைங்கன்னா??
வந்து ஒரு கமெண்ட போட்ட இப்படியா உடனே ரிப்ளை பண்ணுவாங்க??
நீங்க ரொம்ப பாஸ்டுங்கன்னா
//அது சரி, என்னோட மத்த பதிவுகளையும் பாருங்க....
ஏனுங்கன்னா..
இப்படி போஸ்ட் மேல போஸ்ட் போட்டுகினு கீரிங்களே?/
அது எப்படிங்கன்னா உங்கள்ள்ள மட்டும் முடியுது ???
ரொம்ப ரொம்ப பாஸ்ட் தான் ..
//உருப்புடாதது_அணிமா said...
ஏனுங்கன்னா..
இப்படி போஸ்ட் மேல போஸ்ட் போட்டுகினு கீரிங்களே?/
அது எப்படிங்கன்னா உங்கள்ள்ள மட்டும் முடியுது ???
ரொம்ப ரொம்ப பாஸ்ட் தான் ..
//
தம்பி, கொஞ்சம் அடுத்த பதிவுக்கு போறீங்களா.... எத்துனை பேர் கிளம்பி இருக்கீங்க இப்படி? போயி பாருங்கன்னா...........
நீங்க பாட்டுக்கு இப்படி பதிவு எழுதி குமிச்சா நாங்க எத தான் படிக்குறது ??
நீங்களே ஒரு நல்ல நியாயம் சொல்லுங்க..
சொல்லிப்புட்டேன்.
//உருப்புடாதது_அணிமா said...
நீங்க பாட்டுக்கு இப்படி பதிவு எழுதி குமிச்சா நாங்க எத தான் படிக்குறது ??
நீங்களே ஒரு நல்ல நியாயம் சொல்லுங்க..
சொல்லிப்புட்டேன்.
//எப்பா.... நான் வரலை இந்த ஆட்டத்துக்கு..... பழம் தின்னு கொட்டை போட்ட ஆளுக போல இருக்கே?!
என்னங்க இப்படி பொசுக்குனு சொல்லிப்புட்டீங்க..
//உருப்புடாதது_அணிமா said...
என்னங்க இப்படி பொசுக்குனு சொல்லிப்புட்டீங்க..
//ஒண்ணு நீங்க கோயமுத்தூர் ஆளா இருக்கணும். இல்லாட்டி, அந்த ஊரில இருந்து இருக்கணும். சரியா?
நான் திருச்சிகார பயபுள்ளைங்க..
சும்மா நாலு வார்த்தை பேசுனத்துக்கு போய் இப்படி சொல்றீங்களே..
மதுவை யாருங்க இப்ப அருந்துறாங்க...
எல்லாருமே மாந்துறானுகள்..உதாரணத்துக்கு
மது மது மாந்தினான். (நான்தாங்க)
அது சரி, நொங்கு எனப் பேச்சுவழக்கில் சொல்லப்படும் நுங்கைச் சாப்பிடுவதை எவ்வாறு விளிக்கலாம்..
நுங்கு நுங்கினேன்...என்பது பொருந்துமா?
நுங்கின் கண்ணை அப்படியே பொழுக்கென்று தோண்டி முழுங்குவதில் உள்ள சுவை இருக்கே...இப்போது நகரத்துக்கு வந்து எல்லாம் மறந்து போய்விட்டது.
//உருப்புடாதது_அணிமா said...
நான் திருச்சிகார பயபுள்ளைங்க..
சும்மா நாலு வார்த்தை பேசுனத்துக்கு போய் இப்படி சொல்றீங்களே..
//
குசும்புத்தனத்தை பாத்தா உடனே, எங்க ஊரு தாக்கம் இருக்கேன்னு கேட்டேன் மலைக்கோட்டையாரே!
ஆமா, தொடர் ஓட்டத்துக்கு கொக்கி போட்டனே என்ன ஆச்சு?
//மதுவதனன் மௌ. said...
மதுவை யாருங்க இப்ப அருந்துறாங்க...
எல்லாருமே மாந்துறானுகள்..உதாரணத்துக்கு
மது மது மாந்தினான். (நான்தாங்க)
அது சரி, நொங்கு எனப் பேச்சுவழக்கில் சொல்லப்படும் நுங்கைச் சாப்பிடுவதை எவ்வாறு விளிக்கலாம்..
நுங்கு நுங்கினேன்...என்பது பொருந்துமா?
நுங்கின் கண்ணை அப்படியே பொழுக்கென்று தோண்டி முழுங்குவதில் உள்ள சுவை இருக்கே...இப்போது நகரத்துக்கு வந்து எல்லாம் மறந்து போய்விட்டது.
//
நுங்கு நுங்கினேன்ங்றது ரொம்பச் சரி மது! ஆமா, தொடர் ஓட்டத்துக்கு கொக்கி போட்டனே என்ன ஆச்சு?
//உருப்புடாதது_அணிமா said...
நான் திருச்சிகார பயபுள்ளைங்க..
சும்மா நாலு வார்த்தை பேசுனத்துக்கு போய் இப்படி சொல்றீங்களே..
//
மலைக்கோட்டை, மாட்டிகிச்சா? நல்ல கொக்கிதான்!!
மாட்டின் கொக்கியை உடன எடுத்து வேறயாரு மேலயாவது மாட்டணுமா...? :)) தயார்படுத்திக்கொண்டிருக்கிறேன்..எனது அடுத்த பதிவு அதுதாங்க
//மதுவதனன் மௌ. said...
மாட்டின் கொக்கியை உடன எடுத்து வேறயாரு மேலயாவது மாட்டணுமா...? :)) தயார்படுத்திக்கொண்டிருக்கிறேன்..எனது அடுத்த பதிவு அதுதாங்க
//
ஆமா! அதுவும் மூணு பேரு மேலயாம்...... நன்றிங்க மது!!
Post a Comment