11/21/2025
ஜெயசாரதி முனுசாமி
11/20/2025
சங்கர் தங்கவேலு
11/19/2025
இராஜேஷ் இராமசாமி
11/18/2025
ஆய்வறிஞர் சுவாமிநாதன் சுப்பிரமணியன்
- மாணவர்களின் தனிப்பட்ட ஆர்வம் (Interest), பாடத்திட்டத்திற்குள் இருக்கும் ஒரு ஆராய்ச்சி இடைவெளியை (Research Gap) கண்டறிய உதவ வேண்டும்.
- ஆராய்ச்சியின் நோக்கத்தை (Objective) வரையறுக்கும் ஒரு தெளிவான, சோதிக்கக்கூடிய ஆராய்ச்சிக் கேள்வியையோ (Research Question) அல்லது கருதுகோளையோ (Hypothesis) எப்படி உருவாக்குவது என்று கற்பிக்க வேண்டும்.
- பரிசோதனை (Experimental), கண்காணிப்பு (Observational), சர்வே (Survey) போன்ற பல்வேறு ஆராய்ச்சி முறைகள் (Research Methods) பற்றி விளக்க வேண்டும்.
- எந்த முறை தங்கள் ஆராய்ச்சி கேள்விக்குப் பொருத்தமானது என்பதைத் தீர்மானிக்க மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
- தரவுகளைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் சரியான கருவிகள் மற்றும் நுட்பங்களைப் (எ.கா., கேள்வித்தாள்கள், நேர்காணல்கள், ஆய்வகப் பரிசோதனைகள்) பற்றிப் பயிற்றுவிக்க வேண்டும்.
- ஆராய்ச்சி அறிக்கையை அறிவியல் பாணியில் (Scientific Style) எழுதுவது (அறிமுகம், முறைகள், முடிவுகள், விவாதம், முடிவுரை) எப்படி என்று கற்றுக்கொடுக்க வேண்டும்.
- மாநாடுகள் (Conferences) அல்லது வகுப்பறைகளில் தங்கள் ஆய்வை மற்றவர்களுக்கு சமர்ப்பிப்பது (Presenting) மற்றும் கேள்விகளுக்குப் பதிலளிப்பது எப்படி என்று பயிற்சி அளிக்க வேண்டும்.
வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.
கருப்பையா கணேசன்
வட அமெரிக்க வாகை சூடிப் போட்டிகளில் நேரடியாக வந்திருந்து கலந்து கொண்டோர் 655 பேர் எனில், பதிந்தோர் தோராயமாக 2000+ பேர் இருக்கும். 22 விதமான போட்டிகள், ஒவ்வொன்றிலும் 5 பிரிவுகள், ஆக மொத்தம் 110 தனிப்போட்டிகள். 85+ நடுவர்கள். இவை போக, தமிழ்த்தேனீ, குறள்தேனீக்கான தனிப்பதிவுகள்.
“build for change, nothing is harder" என்பதில் நமக்கு எப்போதும் தீராத காதல் உண்டு. எந்தவொன்றும் எளிதில் மாற்றம் செய்யக்கூடியதாக, புதுமையைப் புகுத்துவதாக இருத்தல் வேண்டும். கூடவே எளிமையாகவும் இருக்க வேண்டும். யாராவது, நான் மணிக்கணக்கில் உழைக்கிறேனெனும் பல்லவியையெடுத்தால், அங்கு கூர்திறன் வறட்சி என்று பொருள். கிடைக்கப் பெற்ற தரவுகளைச் சல்லி சல்லியாகப் பிரித்து, சீர்படுத்தி, முறைப்படுத்தி வரிசைப்படுத்திக் கொடுத்தவர்தாம் திரு. கருப்பையா கணேசன்(KG) அவர்கள்.
முதற்கட்டமாக, மின்னஞ்சல் அறுவடை செய்யப்பட்டது. கிடைக்கப்பெற்ற மின்னஞ்சல்களைக் கொண்டு, vavs@fetna.org துவக்கப்பட்டது. காரணம், எளிய தகவற்பரிமாற்றம் என்பதோடு, அடுத்த ஆண்டு போட்டிகளுக்கும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த 2000+ பேரிலிருந்து கூடுதலான மாணவர்களை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும். ஒவ்வோரு ஆண்டும், கணக்கினைச் சுழியத்திலிருந்து துவக்க வேண்டியதில்லைதானே? 2010ஆம் ஆண்டு, ஆண்டுதோறும் விழாவுக்கு வரக்கூடியவர்கள் 400 பேர் எனில், அது இன்று 1500 பேராக உயர்ந்திருக்க வேண்டும் அறுவடைகள் செவ்வனே நிகழ்ந்திருந்தால். இன்று அவரேவும், இணை ஒருங்கிணைப்பாளர் என்பதால் அந்த 2000+ பேரிலிருந்து கணக்கினைத் துவக்கி 4000 பேராக்கிக் காட்டுவாரென நம்பலாம். இஃகிஃகி.
போட்டிகளுக்கான கூட்டங்கள் நிகழும். சூம் லைசென்சுகள், கூட்ட ஏற்பாடுகளென எதற்கும் அழைத்த நேரத்துக்கு வருவார். திருவள்ளுவர் சிலை 25ஆவது ஆண்டுவிழா நிகழ்வு என நினைக்கின்றேன். நாங்களாகவே ஒரு விளம்பரக் காணொலியை உருவாக்கினோம். அது, பல மறுவேலைகளை(revisions) வாங்கியபடி இருந்தது. ஒரு கட்டத்தில், இது நல்லா இருக்குங்க கேஜி, நாம வெளியிட்டுவிடலாமெனச் சொல்ல, ’இல்லங்க, தரப்பரிசோதகர், ஊட்டு அம்மா இன்னும் எடிட் செய்யணும்னு சொல்லிட்டாங்க’. ‘அடங்கொன்னியா, இப்படித்தா எல்லாமும் நடந்துட்டு இருக்குதா இவ்ளோ நாளுமு?’ [கவுண்டமணி ஒயிலில் வாசிக்கவும்].
விழாவில் இன்னின்னவற்றைக் கவனிக்க வேண்டுமென அலைபேசியில் குறிப்புகள் கோக்கப்பட்டிருந்தது. அதன்படிக்கு இதுவுமொன்று. விழாவுக்காகக் களமாடியவர்களில் சிலர் விழாவுக்கு வரமுடியவில்லை. நம் கவனத்துக்கெட்டியதில் சில பேரைக் குறித்து வைத்திருந்தோம். திருமிகு அல்லி தாஸ் அவர்களும் திரு இராஜா வேணுகோபால் அவர்களும்தான் 2011ஆம் ஆண்டு போட்டிகளைச் சிறப்பாக நடத்திக் கொடுத்தனர். அப்படியாக நல்ல அறிமுகம் உண்டு. திருமிகு அல்லி அவர்களிடம் சென்று, இப்படியாகச் சிலருக்குப் பரிசில்பொதி வேண்டுமென்றேன். ஒருங்கிணைப்பாளர்களுக்குக் கணக்குத் தர வேண்டும், ஆகவே, பெயர், அவர்களின் பொறுப்பு முதலானவற்றைக் கொடுத்து பெற்றுச் செல்லுங்களெனச் சொன்னார். அவருக்குப் பெரிதும் நன்றியுடையவனாகின்றேன்.
கேள்விப்பட்ட தம்பி ஒருவர், அண்ணா நீங்க எனக்குத் தரலையென வருத்தப்பட்டார். “தம்பி, நீங்க விழாவுக்கு வந்திருந்தீங்க, குழுக்களின் சங்கமம், தன்னார்வலர் சிறப்பு நேரம்னு ஃப்ளையர் அடிச்சி, கூகுள் ஃபார்ம் போட்டு, அறை ஒதுக்கி, விளம்பரமெல்லாம் கூட நடந்திச்சி. கூட்டம் நடந்ததா, இல்லையா, கூட்டம் நடந்து நீங்க அதில கலந்துக்காம வுட்டடிச்சிட்டீங்ளான்னு தெரியலை” என அவர் மீதே திருப்பிவிட்டோம். ஆள், கப்சிப். எப்பூடி? அதைவிடுங்க, அப்படியான பரிசில்பொதி அனுப்பி வைக்கப்பட்டவர்களுள் KGயும் ஒருவர். ஏன்னா, Quality Controller, Content Approver Mrs.KG முக்கியம்லா பேரவைக்கூ?! 😍
𝐖𝐨𝐫𝐤𝐢𝐧𝐠 𝐬𝐦𝐚𝐫𝐭 𝐦𝐞𝐚𝐧𝐬 𝐮𝐬𝐢𝐧𝐠 𝐬𝐭𝐫𝐚𝐭𝐞𝐠𝐲, 𝐧𝐨𝐭 𝐣𝐮𝐬𝐭 𝐬𝐭𝐫𝐞𝐧𝐠𝐭𝐡, 𝐭𝐨 𝐦𝐨𝐯𝐞 𝐟𝐨𝐫𝐰𝐚𝐫𝐝.
வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.
-பழமைபேசி.
11/17/2025
வள்ளிக்கண்ணன் மருதப்பன்
வள்ளிக்கண்ணன் மருதப்பன்
அறியாத பல பற்றியங்களைத் தொடர்ந்து உள்வாங்க நேரிடும் போது ஒரு கட்டத்தில் அயர்ச்சிதான் தோன்றும். அப்படித்தான் எனக்கும் தோன்றியது. நான், நேரிடையாகவே சொல்லியும் விட்டேன், ஆக்கப்பூர்வமாக, இது வரையிலும் இல்லாத அளவுக்குப் பொருளாளர் பணிகளில் செயலாற்றுகின்றீர்கள். கூடவே, மென்திறன்களையும் பார்த்துக் கொள்ளுங்களென. அவர் செய்த பணிகளின் விழுமியங்களைக் காணும் போதுதான், சொல்லியது கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் துவங்கியது.
2018 துவக்கம் பேரவைப் பரிவர்த்தனைகளின் வீச்சு பெருமளவுக்குப் பெருகிவிட்டது. நடப்புச் செயற்குழு பொறுப்பேற்றுக் கொண்டபின் இடம் பெற்றிருக்கும் ஆவணமயமாக்கத்தின் (Bookkeeping) வீச்சு மெச்சத்தக்கது.
வெளியிலிருந்து பார்க்கும் பொதுப்பார்வையாளன் என்ற முறையில் நமக்குக் காணக்கிடைப்பவை கொஞ்சமே கொஞ்சம். அதன் அடிப்படையிலேயேகூட நாம் சொல்லிவிட முடியும், Generally Accepted Accounting Principles( GAAP ) தழுவிய செயற்பாடுகளில் மேம்பாட்டினை.
அமைப்பின் நிதிநிலை அறிக்கை (Statement of Financial Position), செயல்பாட்டு அறிக்கை (Statement of Activities), பணப்புழக்க (Cash Flow Statement) அறிக்கையெனப் பிரித்தாளுதல்; மின்னஞ்சல்/வாட்சாப் முதலானவற்றினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிராமல், மென்பொருளைப் பாவித்து உள்கட்டுப்பாடுகளை நிறுவி, அதற்காய்க் குரல் கொடுப்பது போன்றவற்றையெல்லாம் நாம் காண நேர்ந்தது.
பொறுப்பேற்றுக் கொண்ட சில மாதங்களிலேயே, பொதுவெளியிலேயே சொன்னார், “குறைவான விலையில், மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம். மிச்சமாகிவிட்டால், தொடர்ந்து அடுத்த வருசத்துக்கு யூஸ் செய்துக்கலாம், ப்ளா, பளா...”. பொறுப்புக்கிடைத்த குதூகலத்தில் சொல்கின்றார் போல இருக்கின்றதெனக் கடந்து போய்விட்டாயிற்று.
பேரவையின் மதுரை மாநாடு முடிந்த ஓரிருநாள்களில், பல வடிவமைப்புகளையும் பலருக்கும் அனுப்பிக் கருத்துக் கோரி, இன்னின்னதுக்கு இவ்வளவு விலையெனச் சொன்னாரே பார்க்கலாம். திகைப்பாக இருந்தது. “நீங்க இறக்குங்க நண்பரே மொத்தமா” என மறுமொழியிட்டோம் மற்றவர்களுடன் சேர்ந்து நாமும். இஃகிஃகி. அப்படியாக, எல்லாரது ஒப்புதலையும் பெற்றுச் சேர்ந்ததுதான் பதக்கங்கள், கோப்பைகள், உறைகள், மற்ற மற்றவை.
பல பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வந்துவிட்டார் பொருளாளர். வட அமெரிக்க வாகை சூடி போட்டிகளில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கென சிறப்புப்பதிவு முன்வரைவு.
- கட்டணம் கூடுதல் என்பதால் மாணவர்கள் பாதிப்படையக் கூடாது.
- சலுகைகள் அளிப்பதால் விழாவுக்குப் பொருளாதாரப் பின்னடைவு வந்து விடக் கூடாது.
- கூடுதல் கூட்டம் கூட்டிவிடுவதால், வளாகத்தின் கூடுதல் கட்டணச்சிக்கல் (buy-out) நேர்ந்து விடக் கூடாது.
- திருவிழாவின் பணப்புழக்கத்துக்கொப்ப சரியான நேரத்தில் செயற்படுத்த வேண்டும்.
இப்படியான கொக்கிகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிலைமையை வீழ்த்தக் கூடியவை. அப்படியான நிலை நேராதபடிக்கு, ஒரு விழுமிய நிலையிலான(sweet spot) முன்வரைவினை எல்லாருக்கும் முன்வைத்து விவரித்தவிதம் ஏற்புடையதாக இருந்தது.
செயற்குழு, வழிகாட்டுதல்க்குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு, பதிவுக்குழுத் தலைவர் முரளி , வட அமெரிக்க வாகை சூடி ஒருங்கிணைப்பாளர் பரணி ஆகியோருடன் சேர்ந்து பணியாற்றி, போட்டிகளில் இடம் பெற்றிருக்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கு, தனிப்பட்ட மின்னஞ்சல்(personal package delivery mail), இரவோடு இரவாக அனுப்பி வைத்தார். இப்படியாக, பொருளாளர் வள்ளிக்கண்ணன் அவர்களது உதவிகளும் வட அமெரிக்க வாகை சூடியின் வெற்றியில் தனியிடம் பிடிக்கின்றன.
𝐒𝐭𝐫𝐨𝐧𝐠 𝐟𝐢𝐧𝐚𝐧𝐜𝐢𝐚𝐥 𝐜𝐨𝐧𝐭𝐫𝐨𝐥𝐬 𝐭𝐮𝐫𝐧 𝐬𝐭𝐫𝐚𝐭𝐞𝐠𝐲 𝐢𝐧𝐭𝐨 𝐬𝐮𝐬𝐭𝐚𝐢𝐧𝐚𝐛𝐥𝐞 𝐩𝐞𝐫𝐟𝐨𝐫𝐦𝐚𝐧𝐜𝐞.
வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.
-பழமைபேசி.







