5/23/2013

சாகும் வரை. . .பணம் கொண்டு வாங்கிவிடுவேன் படுக்கை
எதைக் கொண்டு வாங்குவேன் உறக்கம்?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் புல்லாங்குழல்
எதைக் கொண்டு வாங்குவேன் இசை?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் நூலகம்
எதைக் கொண்டு வாங்குவேன் அறிவு?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் எட்டுத்தொகை பத்துப்பாட்டு
எதைக் கொண்டு வாங்குவேன் தமிழ்?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் திரவியம்
எதைக் கொண்டு வாங்குவேன் நறுமணம்?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் என்சைக்ளோபீடியா
எதைக் கொண்டு வாங்குவேன் நினைவாற்றல்?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் பேரழகி
எதைக் கொண்டு வாங்குவேன் பேரன்பு?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் பட்டம்
எதைக் கொண்டு வாங்குவேன் படிப்பினை?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் கூத்துப்பட்டறை
எதைக் கொண்டு வாங்குவேன் களிப்பு?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் களிமாடம்
எதைக் கொண்டு வாங்குவேன் சிற்றின்பம்?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் கடிகாரம்
எதைக் கொண்டு வாங்குவேன் நேரம்?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் மனிதர்கள்
எதைக் கொண்டு வாங்குவேன் நட்பு?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் ஆசிரமம்
எதைக் கொண்டு வாங்குவேன் மனநலம்?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் குடிசை
எதைக் கொண்டு வாங்குவேன் எளிமை?
மனம், மனம், மனம்!
மனம் பண்பட வாசிப்போம்!!
சாகும் வரை வாசித்திருப்போம்  நூல்கள் பல!!!

2 comments:

கவியாழி said...

மனம் பண்பட வாசிப்போம்!!
சாகும் வரை வாசித்திருப்போம் நூல்கள் பல!!!//இறுதி காலத்தில் இதைவிட சிறந்த வழியேது.சரியாகச் சொன்னீர்கள்.வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_28.html) சென்று பார்க்கவும்... நன்றி...