10/10/2008

தமிங்கில அகராதியிலிருந்து..... பாகம் -2

நாம கோயம்பத்தூர்ல, இலக்குமி இயந்திர ஆலை(Lakshmi Machine Works, LMW)ல ஒரு ஐந்தரை ஆண்டு காலம் குப்பை கொட்டின அனுபவம் இருக்கு. அப்ப பாருங்க, தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்(ISO 9000) வாங்க, ஆலைல நடக்குற எல்லாப் பணிகளுக்கும் செயல்முறை எழுதி, அதைக் கோப்புத் தொகுப்புல சேர்க்க வேண்டிய ஒரு அலுவல் வந்தது. அதுவும் தமிழ்ல எழுதணும். நாமதான் மொதல் ஆள்! உரிய கௌரவமும் கிடைச்சது நமக்கு. அந்த நினைவுகள்ல இருந்து கொஞ்சம் இப்ப:

ஸ்பேனர் - வில்லை கழட்டி
நட்டு - மரை வில்லை
போல்ட் - மரை ஆணி
ஸ்க்ரூ - திருகு ஆணி
லிவர் - நெம்புகோல்
ரின்ச் - வில்லை திருப்பி
ச்சிசில் - உளி
ஹேமர் - சுத்தி
ப்ளேடு - அருதகடு
லேத் மெசின் - கடைசல் இயந்திரம்
மில்லிங் மெசின் - செதுக்கு இயந்திரம்
ட்ரில்லிங் மெசின் - துருவு இயந்திரம்
க்ரைன்டிங் மெசின் - உரைசல் இயந்திரம்
சாயிங் மெசின் - அறுத்தல் இயந்திரம்
போரிங் மெசின் - துளை இயந்திரம்

ஷேப்பிங் மெசின் - குடைவு இயந்திரம்
ஹீட் ட்ரீட்மென்ட் - வெப்பப் பதனிடுத்ல்
குவன்ச்சிங் - குளிர் பதனிடுத்ல்
கேஸ் ஹார்டனிங் - மேற்ப்பரப்பு திடமாக்கல்
டீப் ஹார்டனிங் - ஆழ்பரப்பு திடமாக்கல்
ப்ளேட்டிங் - முலாம் பூசுதல்
ஸ்பின்டில் - கதிர்
ஃப்ளூட்டட் ரோலர் - இழை உருளி
யார்ன் - நூலிழை
ஸ்பின்னிங் மெசின் - இழைமுறுக்கி இயந்திரம்
வீவிங் - மிந்நெசவு
கார்டிங் மெசின் - பஞ்சுதட்டி இயந்திரம்
ப்ளோரூம் மெசின் - பஞ்சு மாசுபிரிப்பு இயந்திரம்
ரிங் ப்ரேம் - வளைவச்சு இயந்திரம்
கியர்ஸ் டிபார்ட்மென்ட் - பற்ச்சக்கரப் பிரிவு
கியர் - வேக மாற்று
ஆக்சுலரேட்டர் - வேக முடுக்கிபழைய ஆட்களுக்கு, புது தலைமுறைக்காரங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு பெரும்பாலும் புரியறது இல்ல பாருங்க! அதான், அவங்க வசதிக்காக தமிங்கில தமிழ் அகராதி!! வேணுமின்னா, தமிழ் தமிங்கில அகராதியும் எழுதலாம். அதாவது பழைய ஆட்கள் சொல்லுறது புது தலைமுறைக்கு புரிய வைக்க.

தமிங்கில அகராதியிலிருந்து..... பாகம் -1


ஊதற சங்கை ஊதணும்!
அடிக்கிற மணியை அடிக்கணும்!!

10 comments:

குடுகுடுப்பை said...

அண்ணே நீங்க யந்திரவியல் பொறியாளரா?.

பழமைபேசி said...

ஆமாங்க... அதுல ஆரம்பிச்சு, அங்க தொட்டு, இங்க தொட்டு... எங்கயோ வந்து நிக்கறேன் அண்ணே....

ஆனா, அது சுமையான சொகம் அண்ணே!!

கூடுதுறை said...

பா.ம.க கட்சிக்கு உபயோகப்படும்... இதைப்போலவே pkp யும் ஒருபதிவு இட்டுள்ளார்

Mahesh said...

குடுகுடுப்பை... பழமைபேசியும் நானும் ஒரே கட்சி.... இயந்திரவியலிலிருந்து மென்பொருளுக்கு

அப்பறம் பழமைபேசி :

ட்ரில்லிங் மெசின் - சிறுதுளை இயந்திரம்
போரிங் மெசின் - பெருந்துளை இயந்திரம்
ஷேப்பிங் மெசின் - துருவு இயந்திரம்

இது என்னோட கருத்து

பழமைபேசி said...

//
Mahesh said...

ஷேப்பிங் மெசின் - துருவு இயந்திரம்

இது என்னோட கருத்து!

//

இன்னும் நிறைய, சொன்னா நினைவுக்கு வரும்ங்கிற நம்பிக்கை இருக்கு.நம்ம கருத்துன்னு சொல்லுங்க...

ஆனாலும் ஷேப்பிங் மெசின் - குடைவு இயந்திரம்னு பொதுவா, நாங்க எல்லாருமா சேந்து எழுதினதா நினைவு.

பழமைபேசி said...

//கூடுதுறை said...
பா.ம.க கட்சிக்கு உபயோகப்படும்... இதைப்போலவே pkp யும் ஒருபதிவு இட்டுள்ளார்
//

வாங்க கூடுதுறையார்..... தமிழர்களுக்குன்னு சொல்லுங்க.... நாம எல்லாரும் தமிழ்ல எழுதணும். என்ன சொல்றீங்க?

நையாண்டி நைனா said...

Me too a software engineer from Mechanical Engineering. For information all my classmates (except 1 or 2) are software engineers and they are excelling the field than the Computer Engineering graduates.

பழமைபேசி said...

வாங்க நையாண்டி நைனா!நொம்ப மகிழ்ச்சி!!

நசரேயன் said...

அருமையான தகவல் பழமைபேசி ஐயா

பழமைபேசி said...

//நசரேயன் said...
அருமையான தகவல் பழமைபேசி ஐயா
//

நன்றிங்க அண்ணாச்சி