இன்றைக்கு சற்று மாறுதலாக ஒன்றைப் பதிவிடலாம் என்று எண்ணிய போது, சட்டென்று நினைவுக்கு வந்தது நான் சமீபத்தில் தெரிந்து கொண்ட ஐக்கிய அமெரிக்க மாகாணங்க(U.S.A)ளின் மைய அரசு, சட்டப் பிரிவு-508. எதிர்வரும் காலங்களில் இந்தப் பிரிவுக்கு படியும்(compliance )படியாக மென்பொருள் மற்றும் பாவிப்பான்(application)களை மாற்றும் பணி என்பது மேலோங்கி இருக்கும் என எதிர்பார்க்கிறேன். மென்பொருள் கட்டமைப்பாளன் என்கிற முறையில் யானும் நேரடியாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.
சரி, பிரிவு-508 என்ன சொல்கிறது? எந்தவொரு கணினிக் கையாள்கையையும் பார்வையற்றவர் மற்றும் கண் கோளாறு உடையவர்களும் செய்யக் கூடிய வகையில் இருக்க வேண்டுமென்பதே அது. இந்த இடத்தில் உங்களுக்கு கேள்வி எழலாம், எப்படி கண் பார்வை அற்றவர் கணினித் திரையை முதலில் பார்க்க இயலும் என்று. உங்கள் கேள்வி நியாயமானதே!
ஆனால் கண்பார்வை அற்றவருக்கும் கணினிக்கும் இடைமுகப்பாக(interface) இயங்கும் உபகரணங்கள், கண்பார்வை அற்றவருக்கும் கணினிக்கும் ஒலி வடிவத்தில் தொடர்பை உண்டாக்கி, எல்லா வேலைகளையும் செய்ய வல்லது. இதனூடாக இன்றைக்கு, ஏராளமான கண்பார்வை அற்றோர் பயன் அடைந்து வருகிறார்கள். ஆகவே, கணினியும் கணினியில் உள்ள மென்பொருள் பாவிப்பான்களும் இந்த உபகரணங்களுக்கும், ஏன் பார்வை உடையவர்களுக்கே கூட திரையில் இருக்கும் அத்துனை ஒளி வடிவங்களையும் துல்லியமாகவும், ஒரே மாதிரியாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் காண்பிக்க வேண்டும். அது தான் பிரிவு-508.
இதன்படி வில்லைகள்(buttons), படங்கள்(images), தொடுப்பு(links)கள் முதலானவை, எழுத்தால் ஆன விளக்கங்களை உடன்கொண்டு இருக்க வேண்டும். அப்படி இருக்கிற பட்சத்தில், இதை இடைமுகப்பு(interfaces)கள், திரை(screen)யில் இருப்பவற்றை ஒலி வடிவத்தில் மாற்றி, பார்வை அற்றவருக்கு தகவலைப் பரிமாற முடியும். இதன் பொருட்டு வலை(web)யகம், உலாவி(browser), மின்வெளி(cyber) தொடர்பான அமைப்புகள் ஒன்று கூடி பிரிவு-508'க்குப் படிய(comply)ச் செய்யும் வகையிலான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும், மென்பொருள் தயாரிப்பாளர்களும் இந்தப் பிரிவுக்கு கட்டுப்படும் வகையில் மேலும் சில மாறுதல்கள் வரக்கூடும்.
பெரிய நிறுவனம் ஒன்றின் வலையக சாளரங்களை, பார்வை அற்றோரால் பாவிக்க இயலமுடியாத காரணத்தால் நிறுவனம் இழப்பீடு தரவேண்டும் எனக் கோரி வழக்கு தொடர்ந்து உள்ளமை, இந்த பிரிவு தொடர்பான மாறுதல்களைத் துரிதப்படுத்தி உள்ளது. மேலும் மின்வெளி தொடர்பான வேலைக்கு விண்ணப்பிப்போரிடம் இது தொடர்பான கேள்விகள் கேட்கப்படலாம். ஆகவே, ஒரு விழிப்புணர்வை உண்டு பண்ணவும், தகவலை தமிழ் வலையக வாசகர்களுக்குத் தரவுமே இந்தப் பதிப்பு.
மேலதிகத் தகவல்களுக்கு கீழ்க்கண்ட தொடுப்புகளைப் பாவிக்கவும்.
நிறுவன வழக்கு பற்றிய செய்தி
பிரிவு 508ம் அதற்குப் படிதலும்
எமது பதிவு
(...............எழுத்து நடைலயும் நாங்க எழுதுவம்ல?!...................)
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
(...............எழுத்து நடைலயும் நாங்க எழுதுவம்ல?!...................)
:-))) நன்று..
தொடுப்பான் என்பதை விடுத்து தொடுப்பு அல்லது சுட்டி எனவும் இடைமுகப்பான் என்பதை விடுத்து இடைமுகம் எனப்பாவிப்பது நலம்.
அஃறினைப் பொருட்களுக்கு அன், ஆன் விகுதிகளைச் சேர்ப்பதை விடுத்து முதலில் இ, உ விகுதிகளை சேர்க்க நினைக்கவேண்டும். மேலதிக விபரத்துக்கு இங்கே செல்லுங்கள்
மதுவதனன் மௌ.
//மதுவதனன் மௌ. said...

//
அருமை, அருமை! ஆக்கப்பிழை திருத்தம் செய்தாகி விட்டது.பூர்வமான கருத்து!! மிகவும் நன்றி!!!
பிழை திருத்தம் செய்தாகி விட்டது.
//மதுவதனன் மௌ. said...
தொடுப்பான் என்பதை விடுத்து தொடுப்பு அல்லது சுட்டி எனவும் இடைமுகப்பான் என்பதை விடுத்து இடைமுகம் எனப்பாவிப்பது நலம்.
அஃறினைப் பொருட்களுக்கு அன், ஆன் விகுதிகளைச் சேர்ப்பதை விடுத்து முதலில் இ, உ விகுதிகளை சேர்க்க நினைக்கவேண்டும். மேலதிக விபரத்துக்கு இங்கே செல்லுங்கள்
மதுவதனன் மௌ.
//
மதி, நீங்கள் குறிப்பிட்ட தொடுப்பில் ஒரு விவாதமே நடந்து முடிந்து இருக்கிறது போலும். விவாதத்தின் முடிவில் தொடுப்பான் என்றும் அழைக்கலாம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால், தொடுப்பு எனப் பாவிப்பதையே நான் விரும்புகிறேன்.
நல்லதொரு தகவல் அளித்து பிழை திருத்தியதற்கு மிக்க நன்றி!
நல்ல பதிவு.... இந்த மாதிரி ஒரு விஷயம் நடக்குதுன்னு இப்பொதான் தெரியுது... நல்லது நடக்கட்டும்...
//Mahesh said...
நல்ல பதிவு.... இந்த மாதிரி ஒரு விஷயம் நடக்குதுன்னு இப்பொதான் தெரியுது... நல்லது நடக்கட்டும்...
//
ஆமாங்க மகேசு! விலாவாரியா, நாம இப்ப இருக்குற நிறுவனத்துல இது சம்பந்தமா செய்யுற வேலைகளைப் பதிய நினைச்சோம்..... தட்டச்சு நொம்ப கடினமா இருக்கு.
சரி, ஆர்வம் இருக்குறவங்க இந்தப் புள்ளியில இருந்து தாங்களா கோலத்தை போட்டுக்க மாட்டாங்களா, என்ன?
வணிக ரீதியான தளங்களுக்கு (E-Commerce siteச்) இச்சட்டம் கட்டாயமானது. ADA-American Disability Act என்று இதை சொல்லுவார்கள். தனிப் பட்ட தளங்களுக்கும் இதை கட்டாயப் படுத்த முயலுவது கொஞ்சம் நெருடலாக உள்ளது. தகவலுக்கு நன்றி!!
ஜெய்
Post a Comment