8/26/2008

கனவில் கவி காளமேகம் - 1

கவி காளமேகம் எழுதி வச்ச பாட்டுகள், செஞ்ச குசும்புகளைப் படிச்ச நாம, அவரோட தாக்கத்துல பாட்டு எழுதும் முயற்சி, "கவி காளமேகத்தின் தாக்கம்"ன்ற தலைப்புல போய்ட்டு இருக்கு. அந்த தாக்கத்துலயே தினமும் நித்திரை கொள்ளப் போறோம் பாருங்க. அவரு கனவுலயும் வந்து எதாவது சொல்லிட்டுப் போறாரு. அதான், அவரு சொல்லிட்டுப் போறதை பதிவாப் போட ஆரம்பிச்சிட்டோம்.

மொதல்ல கருத்துரை, பதவுரை, பொழிப்புரை, அகலவுரை, விரிவுரை, பொருளுரைன்னு சொல்லுறாங்குளே பழமைபேசி, உமக்கு அதுகளுக்கு அர்த்தம் தெரியுமானு கேட்டாரு. நாம அப்படியே கனவுலயும் கூட விட்டத்தைப் பாத்தோம். அப்புறம் அவரே சொல்ல ஆரம்பிச்சுட்டாரு. அவரு சொன்னதுல இருந்து:

பதவுரை: செய்யுள்ல வர்ற எல்லா சொல்லுகளுக்கும் அதுக்கு உண்டான அர்த்தத்தை தர வேணும். எழுதறதுக்கு வாகா, எப்படி வேணுன்னாலும் எழுதிக்கலாம்.
பொழிப்புரை: செய்யுள்ல வர்ற எல்லா சொல்லுகளுக்கும் அர்த்தம் தர வேணும். அதே சமயத்துல வரிசையும் மாறக் கூடாதாம்.
கருத்துரை: எல்லா சொல்லுகளுக்கும் அர்த்தம், ஒண்ணுக்கு ஒண்ணுங்ற அடிப்படைல தரத் தேவை இல்லை. வரிசையும் முக்கியம் இல்ல. ஆனா, செய்யுள்ல சொல்ல வந்ததை இரத்தினச் சுருக்கமா சொல்ல வேணும்.
அகலவுரை: இதை விரிவுரைன்னும் சொல்லுவாங்க. பொழிப்புரை, பொருளுரை கூடவே, விரிவா தகுந்த கதை, உதாரணம், இப்படி கூடுதலா விசயங்களை சேத்து பல தகவல்களோட விளக்கமா சொல்லுறது.

பொருளுரை: இது எங்க காலத்துல இல்லடா! உங்க காலத்துல வந்ததுடா பேராண்டி!! நீங்களா எதையோ சொல்லிட்டுத் திரியறீங்க. உன்னை மாதிரி ஒரு அரை வேக்காடு சொன்னதுன்னு சொன்னாரு, "இது வந்து கிட்டத்தட்ட கருத்துரையேதான். ஆனா, கொஞ்சம் கூடுதலா சொல்லுகளை சொல்லி அதுக்கு உண்டான அர்த்தத்தையும் சேத்துக்கலாம். நாம பெரும்பாலும் பாக்குறது, செய்யுள், பொழிப்புரை, அப்புறம் கடைசியா பொருளுரை"ன்னு.

கவி காளமேகம் இன்னைக்கு கனவுல வந்து இதைத்தாங்க "பட்"டுனு வந்து "பட்"டுனு சொல்லிட்டுப் போய்ட்டாரு. நாளைக்கும் வருவாருன்னு நம்புவோம்.


(......கனவுல இன்னும் வருவார்......)

5 comments:

Mahesh said...

அட... நாம சொன்னதை தலைப்பா வெச்சு பதிவு தொடரே ஆரம்பிச்சுட்டீங்களே.... மகிழ்ச்சி...

சொல்லியிருக்கற செய்தி ரொம்ப நல்லாயிருக்கு..... இதைத்தான் "விழிப்புரை" ம்பாங்களோ? நாங்க பண்றதெல்லாம் வெறும் "பழிப்புரை" .....

பழமைபேசி said...

//Mahesh said...
அட... நாம சொன்னதை தலைப்பா வெச்சு பதிவு தொடரே ஆரம்பிச்சுட்டீங்களே.... மகிழ்ச்சி...

சொல்லியிருக்கற செய்தி ரொம்ப நல்லாயிருக்கு..... இதைத்தான் "விழிப்புரை" ம்பாங்களோ? நாங்க பண்றதெல்லாம் வெறும் "பழிப்புரை" .....

//
தீண்ட தீண்டத்தான் விளக்கு! தீட்டத் தீட்டத்தான் வைரம்!! காய்ச்ச காய்ச்சத்தான் பொன்னு!!! நீங்க திரியை தீண்டி விடுறீங்க.... நாம எரியறோம்.அவ்வளவுதான்!நன்றி!!

ஆனா, "விளக்கவுரை", "பழிப்புரை" ன்னு பேசி காளமேகத்தோட தாக்கம் உங்களுக்கும் இருக்குன்றதை தெரியப் படுத்துறீங்க. சால நன்று!

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

நல்ல தகவல்கள். அப்போ முன்னுரை பின்னுரை எல்லாம் வராதா?

பாத்தா, செய்யுட்புத்தகம் 100 பக்கத்தில் இருந்தால் அகலவுரை 500 பக்கத்துக்குத் தேறும் என்று சொல்றார் கவி காளமேகம்...:-))

காளமேகம் உங்களுக்கு கனவில வந்து (அன்புத்)தொல்லை குடுத்தாலும் எங்களுக்கு நல்ல தகவல்கள்தான்..

பழமைபேசி said...

//மதுவதனன் மௌ. said...
நல்ல தகவல்கள். அப்போ முன்னுரை பின்னுரை எல்லாம் வராதா?

பாத்தா, செய்யுட்புத்தகம் 100 பக்கத்தில் இருந்தால் அகலவுரை 500 பக்கத்துக்குத் தேறும் என்று சொல்றார் கவி காளமேகம்...:-))

காளமேகம் உங்களுக்கு கனவில வந்து (அன்புத்)தொல்லை குடுத்தாலும் எங்களுக்கு நல்ல தகவல்கள்தான்..
//ஆமாங்க மதிவதனன்! நீங்களும் தொடர் முழுக்க தொடர்ந்து படிச்சு கவி காளமேகம் கனவுல வர்றதை தொடரச் செய்யுங்க.....

thenkongu sathasivam said...

நல்ல பதிவுகள்