7/03/2010

FeTNA: நண்பகல் நேரத்தில்......

சங்கே முழங்கு, தமிழ்ச் சங்கே முழங்கு.... செயல்பட்டே இனம் காப்போம் சங்கே முழங்கு... செந்தமிழால் சேர்ந்திணைவோம் சங்கே முழங்கு.. என சங்கை முழங்கி ஆர்pபரித்தனர் இளஞ்சிறார்கள்.... அதற்கு முன்னதாக மங்கலவாழ்த்தும் இசைக்கப்பட்டு, முதல் நாள் நிகழ்ச்சிகள் இனிதே துவங்கியது.

செந்தமிழ் நாட்டில் இருந்திருக்கும் சிறந்த கலைஞர்கள் மற்றும் சாதனையாளர்கள் குத்து விளக்கு ஏற்றுப்வார்கள் என அறிவிக்கப்பட,மேடையில் அழகாய், மிடுக்காய், கம்பீரமாய் இருந்த இரு கோடிக் குத்து விளக்குகளும் ஏற்றப்பட்டன். அறிவிப்பாளரின் கணீர்க் குரலில்
அரங்கம் மெய்சிலிர்த்துப் போனது.

அடுத்து முனைவர் பழனி சுந்தரம் அவர்கள், பணிவார்ந்த மற்றும் உற்சாக வரவேற்புரை ஆற்றினார். மற்றும் கடும் உழைப்பை நல்கிய கனெக்டிக்கெட் தமிழ்க் குடும்பத்தினருக்கு உணர்ச்சி பொங்க நன்றியும் நவில்ந்தார்.

நல்ல நல்ல பிளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி...நல்ல தலைவன் அமைந்துவிட்டால் இனமே செழிக்கும்...எனச் சொல்லி நிறுத்திய அறிவிப்பாளர், தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா அவர்களை அழைத்தார்.

பின்னர் வந்த அற்வாழி இராமசாமி அவர்கள் வெகு எளிமையாக மேடை ஏறினார். ஆனால், ஏறியதுதான் தாமதம், மடை திறந்த வெள்ளம் போல தமிழாறு பெருக்கெடுத்து ஓடியது. தெளிதமிழும், நற்றமிழும் தேனாய் இனித்தது. அரங்கம் கட்டுண்டு நிசப்த நிலையில் ஆட்கொண்டது.

அதற்கு பின்னர், பேரூர் அடிகள் பேசினார். இனம் மேன்மை காண வேண்டும் எடுத்துரைத்துப் பேசினார். அடிகள் உரைக்குப் பின்னர், தமிழகத்தில் இருந்து வந்திருந்த கலைஞர்கள் அனைவரும் மேடையேறி அறிமுகம் செய்து கொண்டனர். ஆனால், விக்ரம் பேசும் போது மட்டும் அரங்கம் கூடுதலாக வெறித்தனமாகக் கை கொட்டித் தீர்த்தது.

அறிமுகத்துக்குப் பின்னர், முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் மண் பயனுற வேண்டும் எனும் பேசினார். பேசினார் என்பதைவிட தீப்பொறியாய்ச் சீறினார் என்றுதான் சொல்ல் வேண்டும். இலக்கியச் சுவையும், தமிழுணர்வும் கலந்து கனலாய்க் கக்கினார். அருமை!!

தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம் என்கிற நடனம் வெகு சிறப்பாக இருந்தது. அடுத்து வந்த அவ்வை 2010 எனும் நாடகத்தில் தமிழ், தமிழனின் சிறப்பு எப்படித் திரிபு அடைகிறது என்பதை இயல்பாகவும், சிந்தனையை ஊட்டுவதாயும் இருந்தது.

திருக்குறள் நடன நிகழ்ச்சிதான் எவ்வளவு நேர்த்தி? ஆகா... ஆகா... ஒவ்வொரு திருக்குறளையும் இசையாகவும், நடனமாகவும் காண்பித்தமைதான் எவ்வளவு அழகு??
அனைவரும் வெகுவாகச் சிலாகித்தனர்.

தற்போது, பனைநிலம் தமிழ்ச் சங்கம் வழங்கும் தமிழ்க் கூத்து நடைபெற்று வருகிறது. இன்னும் பல சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற இருக்கிறது. வலைப்பதிவர்கள்
ஏராளமானோர் வந்திருப்பதில், மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!!

3 comments:

vasu balaji said...

அருமையாக சென்று கொண்டிருக்கிறது. அறவாழியாரின் பேச்சு அற்புதம். நன்றி.

vasu balaji said...

கவியரங்கம் அருமையா போகுது. தாமரை கலக்கறாங்க. அப்துல்லா அருமை.

Mahi_Granny said...

தொடர்ந்து தரும் தகவல்களுக்கு பாராட்டுக்கள்