7/02/2010

FeTNA: உற்சாகத்தில் விழா அரங்கம்


அக்கரை சோலை போலத் தோன்றிடும்! அந்தச் சோலை திக்கெலாம் தெரியக் காட்டும்; இளங்கதிர்ச் செம்பழத்தைக் கைக்கொள்ள அம்முகில்கள் போராடும்! கருவானத்தை மொய்த்துமே செவ்வானாக்கி முடித்திடும். அங்கணமே பகற்பொழுது கழிந்து செவ்வானம் வருகின்ற நேரமிது... பாலொளி மங்கி பொன்னொளி பெருகப் பெருக அரங்கத்திலோ தமிழொலி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட நானூறு தமிழ்க் குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் காட்சியை இத்தருணத்தில் கண்டு கொண்டிருக்கிறேன். வெளியூரில் இருந்த் வருபவர்களெல்லாம் தத்தம் விடுதிகளை வந்தடைந்து கொண்டிருப்பதாகப் பட்சிகள் சொல்லி விட்டுச் சென்றன.

உள்ளூர்த் தமிழர்கள் ஓடியோடி காரியமாற்றும் காட்சி.... ஆங்காங்கே எள்ளல்களும் நையாண்டிகளுமென சிரிப்பொலிகளும் எழுந்து மோதும் பரவ்சக் காட்சிகள். அதிலும் கொங்கு நாட்டைச் சார்ந்தவர்கள் எண்ணிக்கையில் நிறைய இருப்பதாக உணர்கிறேன். அவர்களின் குசும்புடன் மற்றவர் போட்டியிடத் தோற்பதைக் கண்டு எத்தனிக்கிறது எம்முள் நகை....

இடையூடாக நாம் கண்ட குறுஞ்செவ்விகள் உங்களுக்காக....


=================

வணக்கங்க உங்க பேரு??

திருமாறன், திருவாரூரைச் சார்ந்தவன். இங்க கனெக்கெட்ல இருக்கேன்.

நீங்க தன்னார்வத் தொண்டரா??

பாக்குற வேலையப் பார்த்தாத் தெரியலை?!

எத்தனை நாட்களாக இந்த் வேலை??

நான்கு மாதங்களா!

மனநிலை எப்படி இருக்கு??

மகிழ்வா இருக்கு. எங்கக்காவோட கல்யாணத்துக்கு அப்புறம் இப்பதாங்க எனக்குள்ள அந்த மேலான ஒரு குதூகல உணர்வு எனக்கு வந்திருக்கு.

மகிழ்ச்சிங்க... இது எல்லாம் எதுக்கு??

தமிழர்களுக்காகத்தான்!

==================

உங்க பேருங்க??

ஜனனி.

உங்க வேலை??

நான் முழு நேர மாணவி.

எப்படி உணர்கிறீங்க இப்ப??

ரொம்ப மகிழ்வா இருக்கு. நான் ஊர்ல இருந்து வந்து 9 மாதம் ஆகுது. இப்பத்தாங்க எனக்கு ஊர்ல இருக்குற மாதிரி இருக்கு.

======================================

அம்மா, வணக்கம்! உங்க பேரு??

ருக்மணி.

நீங்க??

நான் எங்க மக வீட்டுக்கு வந்திருக்கேன். ஊர், கோபி செட்டி பாளையம். அடேயப்பா.... தமிழ்நாட்டுல கூட இந்தளவுக்குத் தமிழுக்கு முக்கியத்துவம் இல்லங்க... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. உங்களுக்கும் எல்லாருக்கும் என் வாழ்த்துகள்!

வேர்கள் தமிழில்; விழுதுகள் உலகெங்கும்!!

5 comments:

ILA (a) இளா said...

பொட்டி கட்டியாச்சு.. இன்னும் 4 மணிநேரத்துல அங்கே இருப்பேன்.

நசரேயன் said...

நாளைக்கு காலையிலே நான் அங்கே இருப்பேன்

vasu balaji said...

தளபதிய நாளைக்கு பூனை நடை நடக்கவிட்டு பித்தள கம்பி மாட்டி விடுங்க. ரவுசு தாங்கலை. அப்புடியே ஃபோட்டோ:))

பழமைபேசி said...

பாலாண்ணே...நன்றி....உங்கள் உதவி மேலும் தேவை சில நாட்களுக்கு...இஃகிஃகி...

vasu balaji said...
This comment has been removed by the author.