7/02/2010

களை கட்டியது அமெரிக்க தமிழ்த் திருவிழா கோலாகலம்!!!
காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்! வாட்டர்பரி ஆற்றுப்பரப்பின் ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச் சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்! ஆம், வாட்டர்பரி நகரில் வீதிகளிலே தமிழ் நங்கை எங்கும் வலம் வந்து கொண்டிருக்கிறாள்.

காலையில் எழுந்ததும், குளித்ததும், பேரவை முன்னோடிகளிடம் சிறிது நேரம் அளவளாவிவிட்டு விழா அரங்கத்தை நடக்க ஆரம்பித்தேன். செல்லும் வழியிலேயே, தமிழர்கள்.... தமிழர்கள்.... அப்பப்பா, எத்துனை எத்துனை மகிழ்ச்சி? அதிலே ஒருவர் வாஞ்சையோடு, ‘அடடே...நம்ம பழமைபேசி.... என்னது முந்தின நாளே வந்தாச்சா? நல்லது. ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ் போங்க... போயி காலைச் சாப்பாடு சாப்பிட்டு வாங்க’ எனச் சொல்லி அனுப்பி வைத்தார்.

ஆகா... ஆகா... என்ன பிரமாதாம்? நாட்டியம் சிற்றுண்டி சாலையின் இட்லி, வடை, சாம்பார், கிச்சடி என பலகாரங்கள் அனைத்தும் அருமையோ அருமை.... தமிழ் மணத்தோடு, தமிழ்ச் சிற்றுண்டி வாசம் நியூயார்க் நகரை முட்டு மட்டும் துளைத்துக் கொண்டு இருக்கிறது.

நல்லதொரு சிற்றுண்டியை முடித்துவிட்டு அரங்கம் வந்தோம் நாம். எங்கெங்கு காணினும் நற்றமிழடா... செந்தமிழ்ப் பூவையரடா.... தமிழ்ப் பாடல்களுக்கான நடன ஒத்திகைகள் தொடர்ந்து இடம் பெற்று வருவதைக் காண்கிறோம்....

அரங்கம்.... அரண்மனையேதான்... கனெக்டிக்கெட் தமிழ்ச் ச்ங்கமே... நீ அதிர வைக்கப் போகிறாய்... அண்டப் பெருவெளியில் உன் அதிர்வுகள் அடங்க வெகு நேரமெடுக்கும் என்பதில் ஐயமில்லை....

விழா அரங்கிலிருந்து.... உங்கள் பழமைபேசி!7 comments:

rk guru said...

சாந்தனம் என் நண்பரின் நண்பர்....

ரவிச்சந்திரன் said...

விழா மிகச் சிறப்பாக நடக்க வாழ்த்துகள்!
விழா செய்திகளை உடனுக்குடன் தரும் பழமைபேசி வாழ்க!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

வானம்பாடிகள் said...

ஆகா! களைகட்டியாச்சா. காத்திருக்கிறோம்.

பழமைபேசி said...

//பத்மா has left a new comment on your post "களை கட்டியது அமெரிக்க தமிழ்த் திருவிழா கோலாகலம்!!!...":

santhoshama irukku kekkavum parkkavum
//

மகிழ்ச்சிங்க!!!

Anonymous said...

ஞாநி சிரப்புவுருந்தினராமே பார்தீங்காளா பேசினீங்களா

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

அண்ணே : officela கொஞ்சம் அவசர வேலை.... முடிச்சிட்டு ஞாயிறு அன்று வந்து விடுகிறேன்....

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே . விழா சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் !