7/05/2010

வட அமெரிக்கத் தமிழ விழா இனிதே நிறைவு!

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுள் தமிழ் வாழும்? வாழாது?? பொட்டில் அறைந்தாற் போல அடித்துச் சொல்லியது வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை; அல்ல, அறைந்து கூறினர் திருவிழாவில் கூடிய மக்கள்! சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்குமின், அது புலம் பெயர்ந்த நாட்டிலே, வெகு சிறப்பாக நடந்தேறும் எனச் சூளுரைத்தனர் வந்த தமிழர் கூட்டம்.

அரங்க,ம் நிறைந்த நிகழ்ச்சியாக தெருக்கூத்து நடைபெற்று வருகிறது.... இரவு ஏழு மணி... எம் இருக்கைக்க்குப் பின்னாலே இருந்தவர் உணவுக்காக எழ, தமிழரின் தமிழறியா மகள் கூறினாள்.... இருந்தே ஆக வேண்டும்... நான் அம்மாவிடம் ஒவ்வொரு காட்சியையும் கேட்டுத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்கிறாள்...

தாய் தமிழில் உரைக்க, அவள் ஆங்கிலத்தில் தொடர்ந்து வினவிக் கொண்டே இருந்தாள்... இதிலிருந்து என்ன தெரிகிறது? கதைகளின் மூலமாக, கலைகளின் மூலமாகப் பண்பாட்டைக் கற்றுக் கொடுங்கள். பண்பாடு மேலோங்குகிற போது, மொழி தன்னாலே மேலெழும்.... பிள்ளைகளுக்கு ஆவல் மேலிடும் போது, வரலாறு, மரபு முதலானவற்றின் பின்னணியைக் கடைய முற்படும் போது... மொழி தேவைப்படுகிறது... நிச்சயம், எண்ணற்ற தமிழ்ச் சொற்கள் அவளுக்குள் உள்ளிறங்கி இருக்கும்.... பேரவையே... நீ தமிழை விதைக்கிறாய்!

மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக, இலக்கியக் கூட்டம் வெகு சிறப்பாக நடந்தேறியது. சென்ற வருடம், இருநூறு பேர் கலந்து கொண்டதாக எம் நினைவு.... இவ்வாண்டோ, அரங்கம் நிறைந்து காணப்பட்டது. கலந்து கொண்டவர் எண்ணிக்கை மேலும் பல நூறுகளை கூட்டிக் காட்டியது.

முனைவர் பர்வீன் சுல்தானா, கவிஞர் தாமரை, முனைவர் இர.பிரபாகரன், முனைவர் ஆறுமுகம், தோழர் தியாகு, முனைவர் முத்துவேல் செல்லையா ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியின் போது, வட அமெரிக்காவில் தமிழருக்கென்று ஒரு தமிழ் மையம் கட்டுவது என அறிவிக்கப்பட்டு, அதற்கு நிதியும் குவிந்தது. தமிழ் நூலகம், தமிழாராய்ச்சிக்கான ஒரு துறை, மண்டபம், அறைகள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக கட்டப்பட இருக்கிறது என்பது மகிழ்ச்சியான ஒன்று.

தமிழர் திருவிழாவில் கலந்து கொண்ட பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும், பிரத்யேகமாக நன்றி கூறக் கடமைப்பட்டு இருக்கிறேன். சமூகப் பங்களிப்புகளில், தமிழ் வலைப்பதிவர்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு என்பதைப் பறை சாற்றியவர்கள் இவர்கள் என்பதே எம் தாழ்மையான கருத்து.

சரியாக, நண்பகல் பனிரெண்டு மணிக்கு நிகழ்ச்சிகள் முடிவுற்று அருஞ்சுவை உணவு பரிமாறப்பட்டது. கூடியவர்கள் தத்தம் ஊர்களுக்குத் திரும்பிச் செல்கையில் மனம்தான் என்னமாய் கனத்திருக்கும்? ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக விடைபெறுவதைப் போலப் பாசாங்கு செய்வதை உற்றுக் கவனித்தேன்.

தமிழர்களே, விழாக்களும் நிகழ்ச்சிகளுமே நம்மை ஒன்று கூட்டிச் சேர்க்கும். உள்ளூர் விழாக்களுக்கும் சென்றிடுவோம். கலந்து,இசைந்து, தமிழராய் வாழ்ந்திடுவோம்.... தொல்லைதரு வினையகன்று உவகை ஓங்கி வாழ்வு செழிக்கட்டும்... தமிழ்க் கட்டமைப்பு வலுவாகிட பேரவையின் வளர்ச்சி விண்ணை முட்டட்டும்!! இதோ, புதிதாய்த் தெரிவு செய்யப்பட்டுள்ள தலைவர் முனைவர் பழனிசுந்தரம் மற்றும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை உரித்தாக்கிடுவோம்!!


காணொலியின் 3 மணி 01 மணித்துளியில் எமது பட்டிமண்டப விவாதம் இடம் பெறுகிறது!
fetnaorg on livestream.com. Broadcast Live Free

10 comments:

ILA (a) இளா said...

முனைவர் பழனிசுந்தரம் மற்றும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!

a said...

பதிவுலக நண்பர்களை கனிவுடன் கவனித்து, தேவையான வசதிகளை செய்து கொடுத்தமைக்கு மிகவும் நன்றி....

(வீடு வந்து சேர்ந்து 1 மணி நேரம் ஆச்சு..... தங்கள் அலைப்பேசி தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை என்று அமெரிக்க அம்மணி [பதிவு செய்யப்பட்ட குரலின் வழியே] தெரிவித்தார்கள்...)

vasu balaji said...

பாராட்டுகள். இனி காணொளிக்கு காத்திருக்கிறோம்.

Anonymous said...

//ஊர்களுக்குத் திரும்பிச் செல்கையில் மனம்தான் என்னமாய் கனத்திருக்கும்? ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக விடைபெறுவதைப் போலப் பாசாங்கு செய்வதை உற்றுக் கவனித்தேன்.//

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்


குறள்

பழமைபேசி said...

மேலதிகக் காணொலிகள்

ஈரோடு கதிர் said...

|| சமூகப் பங்களிப்புகளில், தமிழ் வலைப்பதிவர்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு ||

ஆமாம்...

விழா சிறப்பாக நடைபெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி

Mahi_Granny said...

பாராட்டுக்கள் . காணொளி கண்ட பின் வருகிறேன்.

Arasu said...

அன்பு நிறை பழைமைபேசி:

பதிவுலக தமிழ் அன்பர்களிடம் பேரவை பற்றி்ய செய்திகளையும், பேரவை நிகழ்ச்சிகளையும் கொண்டுசெல்வதில் உங்களின் பங்களிப்பின் பரிமாணம் அளப்பரியது. உங்களின் தமிழ்ப்பற்றையும், தமிழ்ப்பணிகளையும் பாராட்ட என்னிடம் போதிய இலக்கியவளம் இல்லை.

உங்களைப்போன்றவர்களின் தன்னலமற்ற தொண்டைக் கண்ணுறும்போது தமிழ் அடுத்த தலைமுறைக்குப் போகுமா என்ற கவலை நீங்கிவிட்டது.

தமிழ் மணம் திரட்டி மூலம் பேரவை பற்றி அறிந்து கனெக்டிகட் விழாவிற்கு வந்த அனைத்து அன்ப்ரகளுக்கும் நன்றியும் பாராட்டுக்களும்.

ஒரு காசு said...

மிக சிறப்பான தொகுப்பு. வழங்கியதற்க்கு நன்றி, பழமைபேசி.

Sabarinathan Arthanari said...

பகிர்ந்தமைக்கு நன்றி