7/02/2010

FeTNA: கூட்டம் அலையாய் மோதும் தமிழ்த் திருவிழா அரங்கம்

திசைகண்டேன், வான்கண்டேன், உட்புறத்துச் செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன். யாண்டும் அசைவனவும் நின்றனவும் கண்டேன். மற்றும் அழகுதனைக் கண்டேன் நல்லின்பங் கண்டேன் எனச் சொல்லும்படியான ஒரு மனநிலையில் எழுத விழையும் இந்நேரமானது நண்பகல் 12.16 கிழக்கு அளவீட்டில்.

முக்கியச் சிறப்பு விருந்தினர்கள் அரங்கத்திற்கு வந்திருந்து, கடமையாற்றும் தன்னார்வத் தொண்டர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இராமராஜ் வேட்டி சட்டைகள் நிறுவனர் KPK நாகராஜ் அவர்கள், ஒவ்வொருவராகச் சென்று வணக்கமும் வாழ்த்தும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

தோழர் தியாகு, கவிஞர் தாமரை, முனைவர் பர்வீன் சுல்தானா, திரை நட்சத்திரங்கள் ப்ரியாமணி, விக்ரம், சந்தானம் அனைவரும் வந்திருந்து உற்சாகப்படுத்தியபடி உள்ளனர். தனிப்பட்ட முறையிலே என்னிடம் வந்திருந்து அளவளாவிச் சென்ற திரு.நாகராஜ் மற்றும் தோழர் தியாகு அவர்களுக்கு நன்றி.

அப்பப்பா... எத்துனை எத்துனை இளம் சிட்டுகளும் சிறார்களும்... உற்சாக ஒத்திகை விறுவிறுப்பாய் நடந்து வருகிறது. தன்னார்வத் தொண்டர்களோ தேனீக்களாய். இதனூடே, கொங்கு நாட்டு வழக்கிலே சொன்னான், பம்பலோ பம்பலு... கூத்தும்.... கும்மாளமும்... தமிழர்களே, இதனைக் காணத்தானே இத்துனையும்?! ஒன்று கூடுங்கள்... உறவுப் பிணைப்பில் கட்டுண்டு இன மேன்மை காணுங்கள்...

தலைக்கோள் தெருக்கூத்து வரவில்லை என்றதும் வாடிப் போன முகங்கள்... இப்போது பேரொளியில்.... ஆம், தடங்கலை முறியடித்து கானக மார்க்கத்தில் பறந்தபடி குழுவினர் வரும் செய்தி கேட்டு ஆரவாரம் அரங்கை ஆக்கிரமித்தது.

பசையுள்ள பொருளிலெல்லாம் பசையவள் காண்; பழமையினால் சாகாத இளையவள் காண்; நகையோடு நோக்கடா எங்கும் உள்ளாள். நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை; எம்மக்கள் ஒன்று பட்டால் மேன்மைக்கு இடர் இல்லை.... கூடிடுவீர்... மேன்மை கொண்டிடுவீர்....

அரங்கத்தில் இருந்து உங்கள் பதிவர் பழமைபேசி!

9 comments:

பத்மா said...

தூள் கிளப்புங்க

ILA (a) இளா said...

படங்கள் வேண்டும்!

ராஜ நடராஜன் said...

மனசுக்கு மகிழ்ச்சியா இருக்குதுங்ண்ணா!!வாழ்த்துக்கள்.

Ganesan said...

மிகவும் மனது சந்தோசமாக இருக்கிறது.
வெட்னாவுக்கு வாழ்த்துக்கள்.

க ரா said...

சூப்பரான லைவ் அப்டேட்டா இருக்குங்க. நன்றி.

நசரேயன் said...

அண்ணே கொஞ்சம் விட்டு வையுங்க எனக்கும்

மின்னுது மின்னல் said...

தானே தலைவன் அண்ணன் அப்துல்லா பெயரை இருட்டடிப்பு செய்வதை கண்டித்து அவையில் இருந்து வேட்டியுடன் வெளியேருகிறேன்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல்.. உண்மையான நேர்முக வர்ணனை தான்.. :)

செ.சரவணக்குமார் said...

ரொம்ப சந்தோஷமா இருக்கு.

விழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துகள்.

அண்ணன் அப்துல்லாவை கேட்டதாக சொல்லவும்.