மூன்று மணிக்கெல்லாம் வெளியூர் வண்டிகள் வந்து சேர்ந்துவிடுமென்கிறது அரங்கப் பட்சிகள். வந்து சேர்ந்ததும், ஆனந்தப் பள்ளுவின் தாக்கம் வெகுநிச்சயமாகக் கூடுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை.
மேடையில் நடக்கும் ஒத்திகைகளைப் படம் பிடித்து வெளியிட வேண்டாம் எனப் பணிக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே அது குறித்த படங்களுக்குத் தடா. முக்கிய விருந்தினர்களைப் படம் பிடித்தவர், அடுத்து இருக்கும் விடுதியில் தொழில்நுட்பக் கடமைகளில் மூழ்கி இருப்பதால், அவை விரைவில் வெளியிடப்படும்
இதோ, எனது அலைபேசியில் பிடிக்கப்பட்டவை இப்போது. நாளைமுதல், பிரத்தியேகப் படப்பிடிப்பாளர் களம் இறங்குவதால், படங்கள் உடனுக்குடன் வெளியிடப்படும்.
தன்னார்வத் தொண்டர்கள் களத்தில் இருக்கும் காட்சி!
நிகழ்ச்சிக்கு வருவதா வேண்டாமா என இருமனதோடு இருப்பவர்களே, தமிழர் எழுச்சியைக் காணத்தவறாதீர்!!
செந்தமிழால் சேர்ந்திணைவோம்!
செயல்பட்டே இனம் காப்போம்!!
5 comments:
அண்ணே : Office la நிமிசத்துக்கு ஒரு முறை உங்க நேரடி வர்ணனையை படித்துக்கொண்டு இருப்பதால் , வெள்ளக்கார மொதலாளி வெறி கொண்டு என்ன பார்த்துட்டு போறார்....
(இப்படி பண்ணுறத்துக்கு இவன் office க்கு வராமலேயே இருந்திருக்கலாம்னு மனசுக்குள்ள புலம்பிக்கிட்டே இருப்பார்ன்னு நினைக்கிறேன்.....)
ஞாயிறு அன்று நானும் ஜோதியில் ஐக்கியமாகிறேன்...
போட்டு தாக்குங்க அண்ணே
பழமைபேசி அய்யா! வழிப்போக்கன் எங்க ஊரு பையன். அதனால குச்சிமிட்டாய், குருவி ரொட்டி எல்லாம் கொஞ்சம் தாராளமா வாங்கி குடுங்க:-))
//
அபி அப்பா said...
பழமைபேசி அய்யா! வழிப்போக்கன் எங்க ஊரு பையன். அதனால குச்சிமிட்டாய், குருவி ரொட்டி எல்லாம் கொஞ்சம் தாராளமா வாங்கி குடுங்க:-))
//
உங்களுக்கு தெரியுது .... அவருக்கு தெரியமாட்டேங்குதே...
இரு மனந்தான் இன்னமும் அண்ணா.. நாளை பொழுதுக்குத் தான் முடிவு பண்ண முடியும்..
Post a Comment