மங்கல இசையுடன் துவங்கிய விழா, நேரம் செல்லச் செல்ல தமிழர் கடலென மாறியது. அரங்கம் நிறைந்து, சுற்றியுள்ள வீதிகளில் எல்லாம் தமிழ் மக்கள் வலம் வர, தமிழர் பூமியாய்க் காட்சியளித்த்து வாட்டர்பெரி நகரம்.
பிரதான அரங்கில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த அதே வேளையில், மற்றுமுள்ள எட்டு அரங்குகளில் மற்ற நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டிருந்த்து. நான் இங்குமங்கும் சென்று எல்லா நிகழ்ச்சிகளையும் கண்டு வந்தேன்.
பிரதான நிகழ்ச்சியைப் பொறுத்த மட்டில் இயக்குனர் பாரதிராஜா, தோழர் தியாகு, கவிஞர் தாமரை, நடிகர் விகரம், முனைவர் பர்வீன் சுல்தானா ஆகியோர் கூட்ட்த்தினரைக் கவர்ந்தனர்.
பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்குப் பிரதான அரங்கம் நிறைந்தே காணப்பட்ட்து. என்றுமில்லாத அளவுக்கு இவ்வாண்டு விழாவில் தமிழ்ப் பதிவர்களின் பங்கு அளப்பரியதாக இருந்தமை, பேரவை முன்னோடிகளின் புருவத்தை உயர்த்த வைத்த்து.
கவியரங்கம் வெகு சிறப்பாக நடந்தேறியது. பங்கேற்ற அனைத்துக் கவிஞர்களும் தெள்ளு தமிழில் அசத்தினர். முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் மண் பயனுற வேண்டும் என்கிற தலைப்பில் பேச்சாளுமையோடு பல தகவல்களை அடுக்கினார்.
நண்பகலுக்குப் பின்னர் இடம் பெற்ற வட அமெரிக்கப் பதிவர் சந்திப்பு, நேர்த்தியாக நடந்தேறியது. மொத்தம் 40 பேர் கலந்து கொண்டனர். எனக்குத் தெரிந்த வகையில், அமெரிக்காவில் நடந்த மிகப் பெரிய சந்திப்பு இதுவாகத்தான் இருக்கும்.
தனிப்பட்ட முறையில், நண்பகலுக்குப் பின்னர் பல பணிகளில் ஈடுபட வேண்டி இருந்த்தால் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் தொகுத்தளிக்க முடியாமற்ப் போய் விட்ட்து. இன்றும் அவ்விதமே இருக்கும் என எண்ணுகிறேன். எனினும், நேரிடையாக வலையில் விழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப்ப்படுவதைக் கண்டு மகிழ்வீராக. கிடைக்கும் அவகாசத்தில், அவ்வப்போது இடுகை இட முயற்சிக்கிறேன்.
அரங்கத்தில் இருந்து பழமைபேசி.
7/04/2010
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
முதல் நாள் நிகழ்ச்சி கட்டிப்போட்டது. பகிர்வுக்கு நன்றி:)
விரைவில் தொடருங்கள்....ஆவலோடு காத்திருக்கின்றோம்
ஆவலோடு நானும்தானுங்க..
தரமான தொகுப்புகள்
கலக்குங்க மாப்பு
எதிர்பார்ப்புகள் நிறைத்து காத்திருக்கிறேன் .
Post a Comment