12/01/2008

தங்களின் மேலான கவனத்திற்கு!

சமுதாயம் என்பது என்ன? அதன் அங்கத்தினர் யாவர்? நானும் நீங்களுமா? நம்மைச் சுற்றியுள்ள நாலு பேரா? உயிருள்ளவர்கள் மட்டும்தானா அல்லது உயிரற்றவைகளுமா? கண்ணுக்குத் தெரிபவைதானா? இன்னும் என்ன வெல்லாம் இருக்கின்றன? இது போல் ஒரு பட்டியலில் சமுதாயத்தின் அங்கங்களை அடக்கிவிட முடியுமா? இந்த எல்லாக் கேள்விகளுக்கும், ஒரே விடைதான் இருக்கிறது. நம்மீது பாதிப்பை ஏற்படுத்தும் எல்லாக் காரணிகளுமே சமுதாயத்தின் அங்கங்கள்தான். இதற்கு மொழியும் இலக்கண இலக்கியங்களும் கூட விதிவிலக்கல்ல.

மொழி வேறுபடும் போது, சமுதாயங்களும் பிளவுபட ஆரம்பிக்கின்றன. மொழிக் கலப்புக்கு ஆளான ஒரு பேரினம், எப்படி அல்லலுறும் என்பதை அயலார்கள் தமிழர்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழர்களாகிய நாம் அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டோமா? நமக்குத்தான் பழமை, வரலாறெல்லாம் வயிற்றுப் பிழைப்புக்கு உதவாத பொருளாயிற்றே?!

ஒரு மொழியை அழித்தால், அந்த இனம் தானாக அழியும் என்பது வரலாறு நமக்குக் கற்றுத்தந்த பாடம். இலங்கையில் சிங்களப்படைகள் செய்வது மட்டுமல்ல. தமிழகத்தில் ஊடகங்கள் செய்வதும் இனப் படுகொலைதான். தொலைக் காட்சிகள் மானையும் மயிலையும் ஆட விட்டுக் கொண்டிருக்கும் போது, தமிழ்ப் பேசுவதற்குத் தங்கக் காசு தர வேண்டிய அவலத்தை உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் குட்டு நமக்கு யாருக்காவது வலித்திருக்கிறதா?

அதையும் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியாகத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறோம்? அதில் அறிமுகப் படுத்தப்படும் இனிய தமிழ்ச் சொற்களை யாராவது அன்றாட வாழ்க்கையில் பயன் படுத்திப் பார்க்கிறோமா? தமிழ் நாட்டில், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழார்வம் மிக்க இரண்டு நண்பர்கள் தனித் தமிழில் உரையாட விரும்பினால் கூட, அதையும் கள்ளக் காதல் போலத் தானே செய்ய வேண்டி இருக்கிறது? அவர்களைப் புரிந்து கொள்கிறதா இச் சமுதாயம்?? கிண்டல் செய்வோர் ஏராளம்! ஏராளம்!!

தமிழில் சொன்னாலே புரியக் கூடிய சொற்களுக்கு பதிலாக, பிறமொழிச் சொற்களைப் பயன் படுத்துவதைத் தவிர்த்து விட்டு, மொழியைத் தூய்மைப் படுத்தி வளமாக்கும் பணியை நாம்தான் செய்ய வேண்டும். எழுத்து நடையில் எழுதச் சிரமமா?! பேச்சுத் தமிழில் எழுதத் துவங்குங்கள், நாளடைவில் செந்தமிழில் எழுதுவதும் சாத்தியமே! நாம் செய்யா விட்டால், வேறு யாரும் செய்ய மாட்டார்கள்! இன்று செய்யா விட்டால், என்றுமே செய்ய முடியாது!!

நன்றியும், மேலதிகத் தகவலும்: இயன்றவரை இனிய தமிழில்!

பொறுப்பு அறிவித்தல்(Disclaimer): அன்பர்களே, இந்தக் கட்டுரை இன்னைக்குக் காலைல மின்னஞ்சல் மூலமாக் கிடைச்சது. அதான் உங்க பார்வைக்கு கொண்டு வரலாம்னு, அதுல இருந்த ஒரு பகுதிய மட்டும் இங்க குடுத்து இருக்கேன். அறிவுரை சொல்ல வந்துட்டான்னு மட்டும் நினைச்சுடாதீங்க, படிச்சதைக் குடுத்து இருக்கேன்! அவ்வளவுதான்!!

ஆமுங்க! நானும் எளிய தமிழ்ல இதையும் சேர்த்து ஒரு, நூற்று தொன்னூத்தி நாலு(194) பதிவு பதிஞ்சு இருக்கேன். மொதலாளி வேலைல சுளுக்கு எடுக்கலைன்னா, இந்த வாரம் பூரா, பதிவாப் போட்டு இர‌நூறு ஆக்கிட வேண்டியதுதான். அய்ய, மொகம் மாறுதே? இல்லங்க, உபயோகமாவும் சுவராசியமாவும் தர முயற்சி செய்யுறேன்!

கொசுறு: "விலாவாரியாக் கேட்டுட்டு வா!" ன்னு வீட்ல சொல்லி அனுப்புவாங்க. அவிங்க அப்பிடிச் சொல்லி அனுப்புறப்பத்தான், நாம ஒன்னு ரெண்டை மறந்துட்டு வருவோம். அப்புறம் என்ன, தெள்ளவாரி நாய் உருப்பட்ட மாதரதான்னு பூசை கிடைக்கும். கிட்டடியில இந்த விலாவாரின்னா என்னன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டதுல‌ தெரிஞ்சது, அது விலாவாரி இல்லீங்ளாம். விலேவாரின்னு சொல்லுறதாமுங்க. விலேவாரின்னா கணக்கியல்ள‌, பிசிரு விடமா ஒன்னு ஒன்னையும் கணக்குல கொண்டு வர்றதாமுங்க!

கொடிக்கு காய் கனமா?

28 comments:

Natty said...

விலேவாரி புது தகவல்... நன்றி பாஸ்

பழமைபேசி said...

//Natty said...
விலேவாரி புது தகவல்... நன்றி பாஸ்
//

எதோ மொக்கைப் பதிவுன்னாலும், ஒரு தகவல் சொல்லியாகனும் இல்லீங்ளா?
மொக்கைங்றதும் தமிழ் வார்த்தைதான். அருவா மொக்கைப் பட்டுடுச்சுன்னு சொல்லுவோம்.... இது மொக்கைக் கத்தின்னு சொல்லுவோம்.... அதாவது கூர்மை மழுங்கின விசயமில்லாத ஒன்னு....

நசரேயன் said...

/*
கள்ளக் காதல் போலத் தானே செய்ய வேண்டி இருக்கிறது?
*/
தமிழ் தாயே நல்ல தெய்வீக காதலா மாத்து.

நசரேயன் said...

நீங்க ஒரு தமிழ் விலேவாரி

பழமைபேசி said...

//நசரேயன் said...
நீங்க ஒரு தமிழ் விலேவாரி
//

வாங்க தளபதி! அப்படியெல்லாம் இல்லீங்க....எதொ அடுத்தவிங்க சொல்லுறதக் கேட்டு.... :-o)

துளசி கோபால் said...

தமிழ் சரியாத் தெரிஞ்சா......கலப்பில்லாமப் பேச, எழுத மாட்டோமா?

எல்லாம் இப்பத்தான் பழகிக்கிட்டு இருக்கோம். மெதுவா சமாளிச்சுக்கிட்டு முன்னேறி விலேவாரியா அதைப் பத்தியே எழுதிட்டால் ஆச்சு.

பழமைபேசி said...

//துளசி கோபால் said...
தமிழ் சரியாத் தெரிஞ்சா......கலப்பில்லாமப் பேச, எழுத மாட்டோமா?
//

வாங்க ஆசிரியை!! வணக்கம்!! ஐயோ நான் யாரையும் தப்பு சொல்லலை, அதுக்குத்தான் பொறுப்பு அறிவிக்கை வெச்சு இருக்கேனே?! :-o)

தமிழ் said...

அருமையான பதிவு

கபீஷ் said...

//பேச்சுத் தமிழில் எழுதத் துவங்குங்கள், நாளடைவில் செந்தமிழில் எழுதுவதும் சாத்தியமே!//

நான் அந்த நம்பிக்கையில் தான் எழுதத்
தொடங்கியிருக்கிறேன்

கபீஷ் said...

//பேச்சுத் தமிழில் எழுதத் துவங்குங்கள், நாளடைவில் செந்தமிழில் எழுதுவதும் சாத்தியமே!//

நான் அந்த நம்பிக்கையில் தான் எழுதத்
தொடங்கியிருக்கிறேன்

கபீஷ் said...

//ஒரு மொழியை அழித்தால், அந்த இனம் தானாக அழியும் என்பது வரலாறு நமக்குக் கற்றுத்தந்த பாடம். இலங்கையில் சிங்களப்படைகள் செய்வது மட்டுமல்ல. தமிழகத்தில் ஊடகங்கள் செய்வதும் இனப் படுகொலைதான்.//

நச் கருத்து (நச் தமிழ் தானுங்களே, உங்களுக்கு பின்னூட்டம் போடும்போதாவது சுத்த தமிழ்ல் போடறேன். சுத்தம் சரியான் தமிழ் இல்லேன்னா, தூய தமிழ்ல)

கபீஷ் said...

நான் என்னோட வேலை பாத்த இங்க்லீஷ்காரங்க கூடவெல்லாம் தமிழ் ல பேசியிருக்கிறேன், :-)

வெண்பூ said...

டிஸ்க்ளெய்மரை "டிஸ்கி"ன்னு சொல்றோமே! அப்ப "பொறுப்பு அறிவித்தல்" அப்படின்றத "பொறுக்கி"ன்னு சொல்லலாமா? ஹி..ஹி.. ஒரு சந்தேகம்தான்.. :)))

வல்லிசிம்ஹன் said...

கலப்பில்லாமத் தமிழ் எழுதிதான் பழகணும்.

பழமைபேசி said...

//திகழ்மிளிர் said...
அருமையான பதிவு
//

நன்றிங்க!

Anonymous said...

மணி நான் வேர்ட் பிரஸ் சேவைக்கு மாறி விட்டேன். என்னை http://englishkaran.wordpress.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

பழமைபேசி said...

//கபீஷ் said...
நான் அந்த நம்பிக்கையில் தான் எழுதத் தொடங்கியிருக்கிறேன்
//

பெரிய எழுத்தாளரா வருவீங்க..... வாழ்த்துக்கள்!

பழமைபேசி said...

//கபீஷ் said...
நச் கருத்து (நச் தமிழ் தானுங்களே, உங்களுக்கு பின்னூட்டம் போடும்போதாவது சுத்த தமிழ்ல் போடறேன். சுத்தம் சரியான் தமிழ் இல்லேன்னா, தூய தமிழ்ல)
//

அப்படிப் போடுங்க.... :-o)

பழமைபேசி said...

//கபீஷ் said...
நான் என்னோட வேலை பாத்த இங்க்லீஷ்காரங்க கூடவெல்லாம் தமிழ் ல பேசியிருக்கிறேன், :-)
//

நானும் ஆரம்பத்துல அப்பிடித்தான்.... பேசும்போது ஆங்கில வார்த்தை வரலேன்னா, அப்பப்ப சன்னமா தமிழ் வார்த்தைய எடுத்து விட்டுடுவேன்.... :-o)

பழமைபேசி said...

//வெண்பூ said...
டிஸ்க்ளெய்மரை "டிஸ்கி"ன்னு சொல்றோமே! அப்ப "பொறுப்பு அறிவித்தல்" அப்படின்றத "பொறுக்கி"ன்னு சொல்லலாமா? ஹி..ஹி.. ஒரு சந்தேகம்தான்.. :)))
//

அந்த கணக்குல பொறுப்பின்னு வரும்....

பழமைபேசி said...

//வல்லிசிம்ஹன் said...
கலப்பில்லாமத் தமிழ் எழுதிதான் பழகணும்.
//

முயற்சி செய்தா வரும்ங்றது ஒரு நம்பிக்கைதானுங்ளே...

பழமைபேசி said...

//Sriram said...
மணி நான் வேர்ட் பிரஸ் சேவைக்கு மாறி விட்டேன். என்னை http://englishkaran.wordpress.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
//

அப்பிடீங்ளா? இதோ வர்றேன்!!

ராஜ நடராஜன் said...

//மொதலாளி வேலைல சுளுக்கு எடுக்கலைன்னா, இந்த வாரம் பூரா, பதிவாப் போட்டு இர‌நூறு ஆக்கிட வேண்டியதுதான். அய்ய, மொகம் மாறுதே?//

நகைச்சுவை உங்களுக்கு இயல்பாய் வருகிறது:)

நானும் தமிழில் கலப்படம் செய்யாமல் எழுதவேண்டுமென்றுதான் நினைக்கிறேன்.ஆனால் எழுதும்போதுதான் தெரிகிறது மொழியில் எவ்வளவு கலப்படம் நம்மையறியாமலே வருகிறதென்று.

Anonymous said...

//கிட்டடியில இந்த விலாவாரின்னா என்னன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டதுல‌ தெரிஞ்சது, அது விலாவாரி இல்லீங்ளாம். விலேவாரின்னு சொல்லுறதாமுங்க. விலேவாரின்னா கணக்கியல்ள‌, பிசிரு விடமா ஒன்னு ஒன்னையும் கணக்குல கொண்டு வர்றதாமுங்க!//

விலேவாரி என்பதுதான் சரி; ஆனால் அது தமிழ்ச்சொல் அன்று; உருதுச்சொல்.

பழமைபேசி said...

//அ. நம்பி said...
//கிட்டடியில இந்த விலாவாரின்னா என்னன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டதுல‌ தெரிஞ்சது, அது விலாவாரி இல்லீங்ளாம். விலேவாரின்னு சொல்லுறதாமுங்க. விலேவாரின்னா கணக்கியல்ள‌, பிசிரு விடமா ஒன்னு ஒன்னையும் கணக்குல கொண்டு வர்றதாமுங்க!//

விலேவாரி என்பதுதான் சரி; ஆனால் அது தமிழ்ச்சொல் அன்று; உருதுச்சொல்
//

ஐயா, வாங்க! வணக்கம்!! மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க!!

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
நகைச்சுவை உங்களுக்கு இயல்பாய் வருகிறது:)

நானும் தமிழில் கலப்படம் செய்யாமல் எழுதவேண்டுமென்றுதான் நினைக்கிறேன்.//

அண்ணா வாங்க! எதோ முடிஞ்ச அளவுக்கு முயற்சி செய்வோம், அவ்வளவுதான்! :-o)

அமிர்தவர்ஷினி அம்மா said...

விலேவாரின்னு சொல்லுறதாமுங்க. விலேவாரின்னா கணக்கியல்ள‌, பிசிரு விடமா ஒன்னு ஒன்னையும் கணக்குல கொண்டு வர்றதாமுங்க!

ஓ இதுதானா அது, நன்றி தகவலுக்கு

ஆனா நான் இதுன்னுல்ல நெனச்சுகிட்டிருந்தேன் இத்தன நாளா
//விலா எலும்புகள் போல வரி வரியாய்//

பழமைபேசி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
ஆனா நான் இதுன்னுல்ல நெனச்சுகிட்டிருந்தேன் இத்தன நாளா
//விலா எலும்புகள் போல வரி வரியாய்//
//

ஆமுங்க, நானும் அப்பிடித்தான் நினைச்சிட்டு இருந்தேன்! வருகைக்கு நன்றிங்க!!