வணக்கம் வாசகர்களே! நான் என்னோட பால்ய நண்பனோட நேற்றைக்கு பேசிட்டு இருந்தேன். அப்ப, பேச்சு வலைப்பூ எழுதறது பத்தியும் வந்திச்சு. நண்பன் சொன்னான், இப்பிடி அருகிவர்ற கிராமப்புற பழக்க வழக்கங்களையும், அந்தக்கால நினைவுகளையும் நினைச்சு எழுதிட்டு வந்தா, நீ அந்நியப்பட்டு போயிட மாட்டயான்னு கேட்டான். நான் அப்பிடியே ஆடிப் போய்ட்டேன். காரணம், அவன் சொல்வது நியாயமாகப் பட்டது எனக்கு.
கடந்த முறை ஊருக்கு வந்தப்ப, கோயம்பத்தூர்ல இருக்குற என்னோட வீட்ல இருக்குறவிங்க கூடவே நான் ஒரு அந்நியனாத்தான் இருந்தேன். கிராமத்துப் பக்கம், எங்க அத்தையவிங்க ஊருக்குப் போனப்புறந்தான் கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு. தெரியும், குசும்புப் பதிவர்கள், அத்தை வீட்ல பொண்ணு இருந்திருப்பான்னு நினைச்சு, வம்பு வளர்க்கத் தயார் ஆவீங்களே இந்த இடத்துல. அப்பிடி எல்லாம் ஒன்னும் இல்லைங்க இராசா, ரெண்டு அத்தைங்க வீட்ல அவிங்க பையங்கதான் இருக்காங்க. இஃகிஃகி!! அவிங்க விவசாயம் செய்யுறவிங்க, அதனால எனக்கு அங்க இருக்க பிடிச்சு இருந்துச்சு.
சரி, விசயத்துக்கு வருவோம். என்னோட தாழ்மையான எண்ணம் என்னன்னா, கிராமக் கட்டமைப்பு, பண்பாடு, கலாசாரத்திலிருந்து விலகிப் போற சமுதாயந்தான் அந்நியப்பட்டுகிட்டு இருக்கு. விவசாயங்கூட, இனி பெரிய நிறுவனங்களால மட்டுந்தான் செய்ய முடியும்ங்ற நிலை வரப் போகுதுன்னும் சொல்லுறாங்க.
உடனே, ஒரு சாரார் கிளம்பிடுவாங்க, இவனுக்கு எதிர்காலம், மாற்றங்களைக் கண்டு ஒரு அச்சம், அதான் பினாத்த ஆரம்பிச்சுட்டான்னு. ஐயா, வாதத்துக்கு எதிர்வாதந்தான் சரி. அதை விட்டுப்பிட்டு, இப்பிடிப் பழியைப் போட்டு, விவாதத்தை திசை திருப்பக் கூடாது பாருங்க. ஆமா, எங்களுக்கு பயம்தான். அதுல, என்ன தப்பு? மேல்நாட்டுல, இடைப்பட்ட, கீழ்த்தட்டு மக்கள் அவதிக்கு ஆளாயிட்டு வர்றாங்களே, தெரியலை உங்களுக்கு? அந்த அவதியும், அல்லலும் இங்கயும் வந்திடக் கூடாதுங்ற பயந்தான் கண்ணுகளா! சரி, கால அவகாசம் இருந்தா, இந்தக் கட்டுரையப் படிச்சுப் பாருங்க.
புலம்பலை நிறுத்திட்டு, நாம நம்ப விசயத்துக்கு வரலாம். ஒரு ஆண்மகன், வில்வித்தை, மல்யுத்தம், குத்துச் சண்டை இப்பிடி வீர விளையாட்டுகள ஆரம்பிக்குறதுக்கு முன்னாடிச் செய்யுற செய்கை ஒன்னு இருக்குங்க. வீர விளையாட்டுகள் மாத்திரம் அல்லங்க, இது பாட்டாளிகளுக்கும் பொருந்தும். முதல்ல ஒரு பாட்டாளியின் செயலைப் பாப்போம்.
ஒரு பெரிய கல் நிலத்துல இருக்கு, இவன் அதைத் தூக்கி அந்தப் பக்கம் வைக்கணும். அதைத் தூக்கறதுக்குத் தேவையான வலு இருக்கு அவங்கிட்ட, ஆனாலும் அதைத் தூக்குறதுங்றது ஒரு சவாலான காரியம். அந்த அளவுக் கல்லுங்க அது. இவன் அந்தக் கல்லுகிட்ட போறான், ஒரு சில வினாடி அந்தக் கல்லைப் பாக்குறான். பாத்துட்டு, தோள்ப் பட்டையக் கிளப்பு(ஒசத்து)றான், அதாவது ரெண்டு கையாலயும், தன்னோட தோள்ப் பட்டையக் கிளப்பிட்டு, ஒரு வினாடி நிக்குறான். அதே சமயத்துல, பார்வை அந்த கல் மேலயே இருக்கு. என்ன நடக்குது அங்க? அவனுக்கே தெரியாம, அவனுக்குள்ள துணிச்சல் வருது. அதே வேகத்துல, பார்வை மாறாமப் போயி அந்தக் கல்லையும் அலாக்காத் தூக்குறான், இது இயல்பா நடக்குற ஒன்னு!
இப்ப மல்யுத்த வீரனை நினைச்சுப் பாருங்க. போட்டி ஆரம்பம்ன்ன ஒடனே, தோள் பட்டையக் கிளப்பி, ரெண்டை கையயும் உள்ளங்கைகள முன்பக்கமா மூடிமுறுக்கின மாதரயே தூக்குறான். அப்பத்தான் அவனுக்குள்ள, நம்பிக்கையும் துணிவும் பொறக்குது. இதுவே, அவன் தோள் பட்டையக் கிளப்பாம ரெண்டு கையையும் முன்பக்கமா ஒசத்துறான்னு வெச்சுகுங்க, துணிவு அவ்வளவா வராது. இது அங்கத்தின் இயல்பு. இதனாலதான் இராணுவப் பயிற்சியில எல்லாம், தோள்பட்டையக் கிளப்புறத ஒரு பயிற்சியாவே வெச்சு இருக்காங்க.
இதைதாங்க சரித்திர நாவல்கள்ல, நம்ப பெரியவிங்களும் வர்ணனை செய்யுறது உண்டு. தோட்பட்டை கிளப்பி, நெஞ்சம் நிமிர்ந்து, கூரிய பார்வையுடன் வெளிப் பட்டான்ன்னு எல்லாம், அங்க அசைவுகளை வர்ணிச்சு எழுதி இருப்பாங்க. சாண்டில்யன் புத்தகங்கள் படிக்கும் போது கவனிச்சுப் பாருங்க, அவ்வளவு துல்லியமா வர்ணிச்சி இருப்பாரு. ஆக, துணிவுக் கிளர்ச்சிக்கு தோள்பட்டையக் கிளப்புறதச் சொல்லி பேச ஆரம்பிச்சாங்க. அதாங்க, அவனுக்குள்ள இருக்குற துணிவை ஊக்குவிக்கறதுக்கு சொல்லுறது, பட்டையக் கிளப்புங்றது ஆயிப் போச்சு. இப்ப நீங்களும், இதை படிக்கப் படிக்க உங்க தோள்பட்டையக் கிளப்பி இருப்பீங்ளே?! கண்டிப்பா, உங்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி வந்திருக்குமே! இஃகி!ஃகி!!
போன பதிவுல சொன்ன, மத்த ஊர் மொழிகளை அடுத்த பதிவுல பாக்கலாங்க! ஆமா, எல்லாத்தையும் ஒரே பதிவுல சொல்லிட்டா எப்பிடி? எனக்கும் வேற வேலை இருக்கு, உங்களுக்கும் அதே மாதிரி இருக்கும். போங்க, போயி உங்க வேலை என்னவோ அதுல, பட்டையக் கிளப்புங்க!
ஊக்கமது கைவிடல்!
20 comments:
நீங்க பட்டைய கிளப்பீடீங்க
ஆமா, அந்த காலத்திலே நிலக்கல்லை தூக்கி போட்டவங்களுக்கு எல்லாம் ரெண்டு பொண்டாடியாமே ?
இதனாலதான் இராணுவப் பயிற்சியில எல்லாம், தோள்பட்டையக் கிளப்புறத ஒரு பயிற்சியாவே வெச்சு இருக்காங்க//
ஆஹா....எல்லாம் அனுபவம் போல
//அந்த அவதியும், அல்லலும் இங்கயும் வந்திடக் கூடாதுங்ற பயந்தான் கண்ணுகளா! //
நியாயமான பயம், இப்பவே அந்த நிலைமை வந்துடுச்சுன்னு நினைக்கறேன் :-(:-(
ஓ இப்படி போகுதா கதை
நான் இந்த பட்டையோன்னு நெனச்சேன்
குடுகுடுப்பை: இன்று முதல் பட்டை சாராயம்.
//நசரேயன் said...
ஆமா, அந்த காலத்திலே நிலக்கல்லை தூக்கி போட்டவங்களுக்கு எல்லாம் ரெண்டு பொண்டாடியாமே ?
//
குடுகுடுப்பையார் நிறையக் கல்லு தூக்கின அனுவம் இருக்குன்னு சொன்ன ஞாபகம்.
//மெல்போர்ன் கமல் said...
ஆஹா....எல்லாம் அனுபவம் போல
//
வாங்க கமல்! வணக்கம்!!
//கபீஷ் said...
நியாயமான பயம், இப்பவே அந்த நிலைமை வந்துடுச்சுன்னு நினைக்கறேன் :-(:-(
//
ஆமுங்க, வருத்தமாத்தான் இருக்கு!
//குடுகுடுப்பை said...
ஓ இப்படி போகுதா கதை
நான் இந்த பட்டையோன்னு நெனச்சேன்
//
பட்டையக் கழட்டுறது வேற....அதப் பத்தி, நாளைக்கு!!
நீங்க குடுத்த சுட்டியிலருந்த பதிவு நல்லாருந்துச்சு! நன்றி!!!
//மேல்நாட்டுல, இடைப்பட்ட, கீழ்த்தட்டு மக்கள் அவதிக்கு ஆளாயிட்டு வர்றாங்களே, தெரியலை உங்களுக்கு?//
:(:(:(
//கபீஷ் said...
நீங்க குடுத்த சுட்டியிலருந்த பதிவு நல்லாருந்துச்சு! நன்றி!!!
//
ஆமுங்க, நல்லா எழுதி இருக்கார்.
//rapp said...
//மேல்நாட்டுல, இடைப்பட்ட, கீழ்த்தட்டு மக்கள் அவதிக்கு ஆளாயிட்டு வர்றாங்களே, தெரியலை உங்களுக்கு?//
:(:(:(
//
ச்சும்மா, ஆசுவாசப்படுத்திகுங்க....
http://media-2.web.britannica.com/eb-media/06/99106-004-5BF40C77.jpg
//அ நம்பி said...
http://media-2.web.britannica.com/eb-media/06/99106-004-5BF40C77.jpg
//
வாங்க, வணக்கம்! தோள்பட்டை(shoulder blade) படம் போட்டு இருக்கீங்க...ரெண்டொரு வார்த்தையுஞ் சொல்லிட்டுப் போங்க.
இதுதான் மேட்டரா.... :)
நான் எதோ மரப்பட்டை அல்லது சோமபானம் சம்பந்தப்பட்டதா இருக்கும்னு நினைச்சேன்...
அப்பறம் அந்த கார்பொரேட் அக்ரிகல்சர் மேட்டர்.... அது ஒரு காத்திருக்கும் அபாயம்.... சிறு விவசாயிகளுக்கு ஒரு பெரிய சவால்...
//Mahesh said...
அப்பறம் அந்த கார்பொரேட் அக்ரிகல்சர் மேட்டர்.... அது ஒரு காத்திருக்கும் அபாயம்.... சிறு விவசாயிகளுக்கு ஒரு பெரிய சவால்...
//
ஆமாங்க மகேசு, எப்பிடி நம்ம ஊர் அந்த சவாலைச் சந்திக்கப் போகுதுன்னு தெரியலை.
//ஆக, துணிவுக் கிளர்ச்சிக்கு தோள்பட்டையக் கிளப்புறதச் சொல்லி பேச ஆரம்பிச்சாங்க.//
இப்படித்தான் கெளப்புனாங்களா பட்டைய !!!! சூப்பர் விளக்கம்.
//தோள்பட்டை(shoulder blade) படம் போட்டு இருக்கீங்க...ரெண்டொரு வார்த்தையுஞ் சொல்லிட்டுப் போங்க.//
பட்டையைக்' கிளப்பும்போது சிறிது கவனமாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் அந்தப் படம்.
Post a Comment