ஊர்ல மழையா கண்ணு? இந்த கேள்விங்றது நம்ம ஊர்கள்ல வணக்கஞ் சொல்லுற அளவுக்குப் புழக்கத்துல இருக்கும். ஆமுங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துகிட்டா இதான் கேக்குறது. இன்னைக்கு அதெல்லாம் போயி, உங்க வீட்ல அந்தத் தொலைக்காட்சி காணக் கிடைக்குதா, இது கிடைக்குதான்னு கேட்கிற அளவுல வந்து நிக்குது. இங்க அமெரிக்காவுல கேக்குறது, "இன்னும் வேலைலதான இருக்கே? பிரச்சினை ஒன்னும் இல்லியே??"ங்ற அளவுல இருக்குங்க பொழப்பு.
நாம இப்ப விடுப்புலதான இருக்கோம். சரி, நத்தார் விழாவ முன்னிட்டு, நம்ம அமெரிக்க நண்பன் திமோதி (Tim)க்கு ஒரு வாழ்த்துச் சொல்வோமேன்னு, தொலைபேசில அழைச்சு, வாழ்த்து சொல்லிப் பேசிட்டு இருந்தேன். அப்ப, அவனோட அண்ணன் புது வீடு கட்டி இன்னைக்கு குடி போறானாமுங்க. அதைப்பத்தி சொல்ல, நாம இந்த சூழ்நிலையில எதுக்கு புது வீடுன்னு கேட்க, அவன் சொன்னான், "மணி, இது அவனும் எங்கப்பாவுமா சேந்து கட்டின வீடு. வெளியாளுக யாரும் கட்டலை, அத்னால வெறும் $90000தான் செலவு ஆச்சு!". எனக்கா ஒரே ஆச்சரியம், "என்னது, அவிங்களே கட்டிட்டாங்களா? கட்டிட வேலை செய்யத் தெரியுமா??"ன்னு மறுபடியும் கேட்டு உறுதிப் படுத்திகிட்டேன்.
போன வாரம் என்னடான்னா, நம்ம தமிழ் நண்பர் ஒருத்தரு, அவரே ஒரு விசைப் படகை, வீட்டுப் புறக்கொல்லைலயே கட்டிகிட்டேங்றாரு. இப்ப இது எல்லாம் எதுக்கு சொல்ல வர்றேன்னா, இங்க அமெரிக்கால, இது ஒன்னைப் பாராட்டியே ஆகனும்ங்க. என்னதான் அறிவியல் வளர்ச்சின்னாலும், பழமையக் காப்பாத்துறதுல இவிங்கள மிஞ்ச ஆளே கிடையாது. முழுநேரத் தொழில் ஒன்னா இருக்கும், ஆனாலும் கிடைக்குற உபரி நேரத்துல விவசாயம், மீன்பிடித் தொழில், வீடு கட்டுறது, தேனீ வளக்குறதுன்னு எதாவது ஒன்னு செய்துட்டு இருப்பாங்க. ஆச்சரியமா இருக்கு. திமோதியோட அண்ணன் இங்க இருக்குற வங்கியில, மென்பொருள் கட்டுமான நுட்ப இயக்குனர் (technical director). ஆனாலும், கொத்தனார்/தட்டான் வேலைல அத்துபடியா இருக்காரே?! நான் போயி, ஏர் பிடிச்சன்னு வெச்சிகோங்க, ஊர்சனம் சிரிப்பாச் சிரிச்சிப் போடும். எனக்கு ஏர் பிடிக்கத் தெரியும்னு சொன்னா, நீங்கதான் நம்புவீங்களா என்ன?!
இப்படி அமெரிக்காவுல, பழமை பற்றின ஆராய்ச்சியும், பேணுவதும் சத்தமில்லாம நடந்துட்டுதான் இருக்கு. எனக்குகூட, வீரப்பனைக் கொன்னு போட்டாங்கன்னு சொன்ன உடனே வருத்தமா இருந்துச்சு. அவர் மேல இருந்த அனுதாபமோ, அவ்ர் நிரபராதின்னோ நான் சொல்ல வரலை. காட்டாட்சி நடத்தின ஒருத்தர்கிட்ட, அவரோட அனுபவங்கள், இயற்கை பற்றின நுணுக்கங்கள் எல்லாம் தெரிஞ்சி, அதுகளை ஆய்வுக்குட்படுத்துற ஒரு வாய்ப்பு சாகடிக்கப்பட்டு விட்டதேங்ற ஒரு ஆதங்கம்தான். அவருக்கு இயற்கையப் பற்றின விபரங்கள் எல்லாம் அத்துபடியாமுங்க. அதுவும் அவரோட அனுபவத்துல வந்ததாமுங்க. மழை வர்றதுக்கான அறிகுறிகள அவர் சொன்னதாப் படிச்சதுல இருந்து, எனக்கு நினைவுல இருக்குறது.
தாழ்வான பகுதியில இருக்குற எறும்புகள், மேடான இடத்துக்கு சாரை சாரையா உணவுப் பொருளைக் கடத்தினா, அது மழை வர்றதுக்கான அறிகுறி.
பறவைகள் முன்கூட்டியே கூட்டுக்கு வந்து அடைஞ்சாலோ, அல்லது வழக்கமா கிளம்பிப் போகுற திசையில ஏதாவது மாற்றம் இருந்தாலோ, அது மழை வர்றதுக்கான அறிகுறி.
புழுக்கமா இருந்து, தும்பிக் கூட்டம் தாழ்வா ஒரு தொகுதியாப் பறந்து ஆலவட்டம் போட்டாலும், அன்னைக்கு மழை வருமாமுங்க.
தெளிஞ்சு இருக்குற வானத்துல, நிலாவைச்சுத்தி வட்டமா வெண்மேகம் சூழ்ந்து இருந்தாலும் அது மழைக்கான அறிகுறியாமுங்க.
காற்றோட்டம் திசைமாறி, மண்வாசனை அடிக்கிறப்பவும் மழை வருமாம். கொங்கமழை, கோடை மழைன்னெல்லாம் சொல்லுவாங்க. அதுகளுக்கான விபரம் மறந்து போச்சுங்க. ஊருக்குப் பேசும்போது கேட்கணும்.
அடிவானங் கறுத்தாலும், சீக்கிரத்துல மழை வரும். இப்படி, பெரியவிங்க இயற்கைய நல்லாப் புரிஞ்சு வெச்சிருந்தாங்க. சரிங்க, கொஞ்ச நாளைக்கு முன்னாடி மழை அடிக்கும் போது, எனக்கு ஏற்பட்ட பழைய நினைவுகளயும் இங்க பதியுறேன்.

சூழல்: மழை பெய்த இரவுக்கு ஒட்டிய காலை நேரம்
முற்பகலிலே கட்டியம் கூறிய,
தும்பிக்கூட்டம்!
பெய்த மழையில் பெருத்துப்போன
வெடிக்காத பருத்திக்காய்கள் !!
சுற்றி வளைத்தடித்த சாரலில்
சுத்தமாகிப் போன கோபுரக்கலசங்கள்!
பொங்கிய கண்மாயைச்சுற்றி வேடிக்கை
பார்த்த ஊர்க்கூட்டம்!!
திடீர் எனப்பிறந்த சிறுகுளங்கள் ஊர்த்தெருவில்,
நீர் கிழிய அதில் ஏர்க்குச்சி ஓட்டிய சிறுவர்கள்!
ஊர்க்கண்மாயில் சில்லடித்துப் போட்டி
நடத்திய உற்சாக விடலைகள்!!
ஏர்க்கலப்பை தேடி அங்குமிங்குமாய்
அலையும் நேற்று வரை சோம்பிய உழவன்!
கைக் களை எடுக்க நெட்டி முறித்து,
ஆயத்தமாகிக் காடு நோக்கும் காரிகைகள்!!
மட்டம் உயரக்கண்டு கேணியில் சாலோட்ட
காளைகளை நோக்கும் உழைப்பாளி!
அடித்த மழையில் புடைத்த காளான்களைப்
பறிக்கப்போன முதியவர் கூட்டம்!!
அன்று தெரியவில்லை;பெய்த மழையில்
தமிழடையாளங்களும் அழிகிறதென்று!
அன்று தெரியவில்லை;பெய்த மழையில்
தமிழ்ப் பண்பாடும் பட்டுப் போகிறதென்று!!
ஆனாலும் விட்டு வைத்தாய் என்னை; ஆதலினால்,
அலைகின்றேன் நினைவுகளின் எச்சமாய்!
ஆனாலும் விட்டு வைத்தாய் என்னை; ஆதலினால்,
கண்கள் பனிக்கப் படைக்கின்றேன் இதனை!!

52 comments:
படிச்சுட்டேன், நல்ல பதிவு!:-)
//நான் போயி, ஏர் பிடிச்சன்னு வெச்சிகோங்க, ஊர்சனம் சிரிப்பாச் சிரிச்சிப் போடும்.//
நம்ம ஊர்ல அடுத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு நினைச்சே, செய்ய நினைக்கறத செய்ய மாட்டாங்க. அப்புறம் தொழில்ல சிலது உயர்ந்தது, சிலது தாழ்ந்தது ஒரு மதிப்பீடு வச்சிருக்காங்க
//கபீஷ் said...
நம்ம ஊர்ல அடுத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு நினைச்சே, செய்ய நினைக்கறத செய்ய மாட்டாங்க. அப்புறம் தொழில்ல சிலது உயர்ந்தது, சிலது தாழ்ந்தது ஒரு மதிப்பீடு வச்சிருக்காங்க
//
வாங்க, வணக்கம்! சரியாச் சொன்னீங்க!!
//கபீஷ் said...
படிச்சுட்டேன், நல்ல பதிவு!:-)
//
நன்றிங்கோ!
//எனக்கு ஏர் பிடிக்கத் தெரியும்னு சொன்னா, நீங்கதான் நம்புவீங்களா என்ன?!//
நான் நம்பறேன்:-) எனக்கும் ஏர் பிடிக்க, ட்ராக்டர் ஓட்ட தெரியும்
//முழுநேரத் தொழில் ஒன்னா இருக்கும், ஆனாலும் கிடைக்குற உபரி நேரத்துல விவசாயம், மீன்பிடித் தொழில், வீடு கட்டுறது, தேனீ வளக்குறதுன்னு எதாவது ஒன்னு செய்துட்டு இருப்பாங்க//
நாம எல்லாரும், மனசுக்கு பிடிச்ச தொழிலை முழுநேர வேலையா செய்றதில்ல (சிலரைத் தவிர) அதனால மனசுக்கு பிடிச்ச வேலைய பகுதி நேர தொழிலா செய்யறாங்க
ஏர் பிடிக்கறதும் விவசாயம் பண்ணறதும் உசந்த தொழில் இல்லன்னு நினைக்கறதும் பெய்த மழையில் காணமல் போனதுக்கு காரணம்.
கொடி மின்னல் அடிச்சா மழை வரும்...ஆனா, இடி அதிகமா இருந்தா மழையக்கொண்டு போய்டும்..மழை குறைவாத்தான் பெய்யும்....முகில்-ல கூட 'குத்தாரி' முகில சம்பந்தப்படுத்தி ஏதோ சொல்வாங்க..
நாம எப்பவுமே பின்னத்தேரு(பின்னேர்) தான்:-)
/*எனக்கு ஏர் பிடிக்கத் தெரியும்னு சொன்னா*/
நான் நம்புவேன்
/*அன்று தெரியவில்லை;பெய்த மழையில்
தமிழடையாளங்களும் அழிகிறதென்று!
அன்று தெரியவில்லை;பெய்த மழையில்
தமிழ்ப் பண்பாடும் பட்டுப் போகிறதென்று!!
*/
நல்ல யோசனை செய்ய வேண்டிய கவிதை, ஹும் என்னத்த சொல்ல
நல்ல பதிவு, நாங்கூட ஏர் ஓட்டுவேன்
///அன்று தெரியவில்லை;பெய்த மழையில்
தமிழடையாளங்களும் அழிகிறதென்று!
அன்று தெரியவில்லை;பெய்த மழையில்
தமிழ்ப் பண்பாடும் பட்டுப் போகிறதென்று!!///
இன்னும் 20 வருடத்தில் 50 சதவீததிற்கு மேல் வேலை செய்யும் திறன் உள்ள இளைஞர்கள், இந்தியர்கள்தான். அவர்கள் பண்பாட்டை விட்டுவிடவா போகிறார்கள்??
தேவா...
ஊர் என்ன சொல்றாங்கன்னு கவலைப்படறது இல்லீங்க. இன்னமும் ஊருக்குப்போனா நாமதான் விவசாயம். நம்ம பரம்பரைத் தொழிலை நாம் செய்யாம வேற யாரு செய்வாங்க. அப்படி தப்பா தோணிச்சுன்னா நம்ம முன்னோரைக் கேவலப்படுத்துற மாதிரி இல்லிங்களா?
//நான் போயி, ஏர் பிடிச்சன்னு வெச்சிகோங்க, ஊர்சனம் சிரிப்பாச் சிரிச்சிப் போடும்//
இந்த வரிகளுக்கு என் கண்டனங்கள்..
//சின்ன அம்மிணி said...
ஏர் பிடிக்கறதும் விவசாயம் பண்ணறதும் உசந்த தொழில் இல்லன்னு நினைக்கறதும் பெய்த மழையில் காணமல் போனதுக்கு காரணம்.
//
வாங்க சின்ன அம்மிணி , வணக்கம்! கருத்துக்கு நன்றிங்க!!
//தங்ஸ் said...
கொடி மின்னல் அடிச்சா மழை வரும்...ஆனா, இடி அதிகமா இருந்தா மழையக்கொண்டு போய்டும்..மழை குறைவாத்தான் பெய்யும்....முகில்-ல கூட 'குத்தாரி' முகில சம்பந்தப்படுத்தி ஏதோ சொல்வாங்க..
நாம எப்பவுமே பின்னத்தேரு(பின்னேர்) தான்:-)
//
வாங்க தங்சு...ஆமா, நீங்க சொல்லுறதும் ஞாவகத்துக்கு வருது... பின்னத்தேர் ஓட்டித்தான முன்னத்த ஏர் ஓட்டுறதுக்கு முன்னேற முடியும்...இஃகிஃகி!
//நசரேயன் said...
/*அன்று தெரியவில்லை;பெய்த மழையில்
தமிழடையாளங்களும் அழிகிறதென்று!
அன்று தெரியவில்லை;பெய்த மழையில்
தமிழ்ப் பண்பாடும் பட்டுப் போகிறதென்று!!
*/
நல்ல யோசனை செய்ய வேண்டிய கவிதை, ஹும் என்னத்த சொல்ல
//
வாங்க தளபதி, வணக்கம்!!
//குடுகுடுப்பை said...
நல்ல பதிவு, நாங்கூட ஏர் ஓட்டுவேன்
//
அப்படீங்களா அண்ணே, நொம்ப சந்தோசம்.
//thevanmayam said...
இன்னும் 20 வருடத்தில் 50 சதவீததிற்கு மேல் வேலை செய்யும் திறன் உள்ள இளைஞர்கள், இந்தியர்கள்தான். அவர்கள் பண்பாட்டை விட்டுவிடவா போகிறார்கள்??
தேவா...
//
காரைக்குடி அண்ணே வாங்க. வெளியூர்ல இருக்குற எனக்கு அப்படி ஒரு உணர்வு வருதுங்க....அதான் என்னோட ஆதங்கம் வெளிப்பட்டு இருக்கு. மத்தபடி, ஊர்ல இருக்குறவிங்கதான் இது சரியா, இல்லையானு சொல்லணும்.
//ILA said...
ஊர் என்ன சொல்றாங்கன்னு கவலைப்படறது இல்லீங்க. இன்னமும் ஊருக்குப்போனா நாமதான் விவசாயம். நம்ம பரம்பரைத் தொழிலை நாம் செய்யாம வேற யாரு செய்வாங்க. அப்படி தப்பா தோணிச்சுன்னா நம்ம முன்னோரைக் கேவலப்படுத்துற மாதிரி இல்லிங்களா?
//
கண்டிப்பா, அதனோட ஆதங்கம்தான் இதுல வெளிப்பட்டு இருக்கு.
//ILA said...
//நான் போயி, ஏர் பிடிச்சன்னு வெச்சிகோங்க, ஊர்சனம் சிரிப்பாச் சிரிச்சிப் போடும்//
இந்த வரிகளுக்கு என் கண்டனங்கள்..
//
இஃகிஃகி!! மூத்தவிங்க நம்ம ஊட்டுப் பக்கம் வந்து கருத்து சொல்லுறதுதான் பெரிய விசயம், கூடவே மகிழ்ச்சியும் எனக்கு.
//எனக்கு ஏர் பிடிக்கத் தெரியும்னு சொன்னா, நீங்கதான் நம்புவீங்களா என்ன?!
//
எனக்கும் தெரியுமே!!!!
//கண்கள் பனிக்கப் படைக்கின்றேன் இதனை!!
//
அப்படியே இதயம் இனிக்க கூட படைச்சிருக்கலாமே :))
கனகாலத்துக்குப் பிறகு பாட்டைக் கேட்டன்... திருப்தியா இருந்திச்சு..
கண்கள் பனிக்கிறது... இதயம் இனிக்கிறது... இது நிஜம்ங்க... நாடகமெல்லாம் இல்லை !!!
எனக்கு ஏர் புடிக்கத் தெரியாது... ஆனா 90 சதமான வீட்டு வேலைகளை நானேதான் கத்துக்கிட்டு பண்ணிடறது. DIY ல நான் ஒரு ரெகுலர் கஸ்டமர்.
ஆஹா.. அருமைய்யா.. அருமை..
மயில் தோகை விரித்து ஆடினாலும் மழை வரும் என்றும், திடீரென்று புழுக்கமாக இருந்தாலும் மழை வரும் என்றும் சொல்வார்கள்.
(வலைப்பதிவுக்கு புதியவன்)anbuvanam.blogspot.com
ஏர் புடிக்கிற கூட்டம் நிறைய இருக்கும் போல தெரியுதுதே!எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க.தாராபுரத்துல படிக்கிற போது யாராவது கம்பு மாதிரி ஏதாவது வெள்ளாம போட்டா கூட்டாளிக கூடப் போய்க் களவாண்டு கையில ரெண்டு தேச்சு ஊதி தேச்சு வாயுக்குள்ள போடற வித்தைல சித்தனுங்க.
நல்ல பதிவு
25
எங்கயோ ஆரம்பிச்சு எதிலியோ முடிச்சிட்டீங்க.
நான் போயி, ஏர் பிடிச்சன்னு வெச்சிகோங்க, ஊர்சனம் சிரிப்பாச் சிரிச்சிப் போடும். எனக்கு ஏர் பிடிக்கத் தெரியும்னு சொன்னா, நீங்கதான் நம்புவீங்களா என்ன?!//
சரியா சொன்னீங்க, வெளியூர்ல என்ன வேலை செஞ்சாலும், நம்மூர்ல காலாட்டினாதன் இங்கன மதிக்கிறாங்க. இல்லனா ஒரு மாதிரி பாக்குறாங்க. மனிதர்கள் தங்கள் மனநிலையை மாற்றாதவரை நாம் நம்மைமாதிரியே கூட நடந்துக்கொள்ளமுடியாது சில பல கணங்களில்.
எல்லாம் தெரிஞ்சி, அதுகளை ஆய்வுக்குட்படுத்துற ஒரு வாய்ப்பு சாகடிக்கப்பட்டு விட்டதேங்ற ஒரு ஆதங்கம்தான். அவருக்கு இயற்கையப் பற்றின விபரங்கள் எல்லாம் அத்துபடியாமுங்க//
கொஞ்சம் வித்யாசமான விவரம் அவரைப் பற்றி.
//புதுகை.அப்துல்லா said...
//எனக்கு ஏர் பிடிக்கத் தெரியும்னு சொன்னா, நீங்கதான் நம்புவீங்களா என்ன?!
//
எனக்கும் தெரியுமே!!!!
அப்படியே இதயம் இனிக்க கூட படைச்சிருக்கலாமே :))
//
அண்ணே வாங்க, வணக்கம்! நொம்ப மகிழ்ச்சியும் நன்றியும்!!
arumai! arumai!! arumai!!!
//மதுவதனன் மௌ. said...
கனகாலத்துக்குப் பிறகு பாட்டைக் கேட்டன்... திருப்தியா இருந்திச்சு..
//
வாங்க மது! நன்றிங்க!!
//Mahesh said...
கண்கள் பனிக்கிறது... இதயம் இனிக்கிறது... இது நிஜம்ங்க... நாடகமெல்லாம் இல்லை !!!//
மகேசு அண்ணே வாங்க. உங்களுக்கெல்லாம் சொல்லத் தேவை இல்ல. எல்லாம் உங்களை மாதிரி ஆளுங்க பாடுற எசப் பாட்டுதான் காரணம்.
//எனக்கு ஏர் புடிக்கத் தெரியாது... ஆனா 90 சதமான வீட்டு வேலைகளை நானேதான் கத்துக்கிட்டு பண்ணிடறது. DIY ல நான் ஒரு ரெகுலர் கஸ்டமர்.
//
நொம்ப மகிழ்ச்சிங்க!
//இராகவன் நைஜிரியா said...
ஆஹா.. அருமைய்யா.. அருமை..
//
நன்றிங்க! நன்றிங்க!!
//ANBUMANI said...
மயில் தோகை விரித்து ஆடினாலும் மழை வரும் என்றும், திடீரென்று புழுக்கமாக இருந்தாலும் மழை வரும் என்றும் சொல்வார்கள்.
(வலைப்பதிவுக்கு புதியவன்)anbuvanam.blogspot.com
//
நாமெல்லாமே புதுசுதான், வாங்க அன்பு! கருமுகில் கூடி, மழை வர்ற சூழ்நிலையில ஆண் மயில் தோகை விரிச்சு ஆடும். சரியாச் சொன்னீங்க, நன்றி!
//ராஜ நடராஜன் said...
ஏர் புடிக்கிற கூட்டம் நிறைய இருக்கும் போல தெரியுதுதே!எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க.தாராபுரத்துல படிக்கிற போது யாராவது கம்பு மாதிரி ஏதாவது வெள்ளாம போட்டா கூட்டாளிக கூடப் போய்க் களவாண்டு கையில ரெண்டு தேச்சு ஊதி தேச்சு வாயுக்குள்ள போடற வித்தைல சித்தனுங்க.
//
அஃகஃகா! அதுகளையெல்லாம் பதிவாப் போடுங்க.... சுவராசியமா இருக்குமே?
உங்களுக்கு இல்லைன்னு தெரிஞ்சு கிட்டே மறைக்க கொடுக்காங்க மகுடம்
உண்மையிலேயே எனக்கும் கொத்தனார் வேலை தெரியும்...அப்படியே கொஞ்சம் தச்சு வேலையும் தெரியும்..தேவைன்னா லேத் மெஷின்ல வேலை பார்க்கவும் தெரியும்...
இப்பக்கூட கத்தரிக்காய், வெண்டைக்காய்ன்னு விவசாயம் பண்ணத் தெரியும்..அப்புறம் கோழி வெட்றது, ஆடு வெட்றது...ஒரு முழு மாட்டையும், ஒரு கங்கருவையும் தோலுரிச்ச அனுபவம் கூட இருக்கு....
அப்படியே கோயில்ல பூஜை பண்ண அனுபவமும் இருக்கு...கூட ஷேர் ட்ரேடிங் பண்ற அனுபவமும் இருக்கு....
இதெல்லாம் எதுக்குன்னா....ஒரு வேளை மார்க்கெட் மொத்தமா குத்திக்கிட்டா ஆஸ்திரேலியாவுல போயி கங்காரு வெட்டி....இல்ல ஆண்டிப்பட்டில போயி கோழி வளத்து பொழ்ச்சிக்கிடலாம்னு ஒரு எண்ணம் தான் :))
அதுனால எல்லாருக்கும் கண்டிப்பா ஒண்ணுக்கு மேற்பட்ட தொழில்கள் தெரிஞ்சிருக்கணும்! இல்லாட்டி கத்துக்கணும்!
லேட்டா வந்திட்டேனோ ???
//முழுநேரத் தொழில் ஒன்னா இருக்கும், ஆனாலும் கிடைக்குற உபரி நேரத்துல விவசாயம், மீன்பிடித் தொழில், வீடு கட்டுறது, தேனீ வளக்குறதுன்னு எதாவது ஒன்னு செய்துட்டு இருப்பாங்க. ஆச்சரியமா இருக்கு //
கேள்வி பட்டிருக்கேன்!!!!!!!!!!!!!!
//திமோதியோட//
அவசரமா படிக்கும் பொழுது திருமதியோட அண்ணன்னு படிச்சிட்டேன்
ஹி ஹி ஹி
//நான் போயி, ஏர் பிடிச்சன்னு வெச்சிகோங்க, ஊர்சனம் சிரிப்பாச் சிரிச்சிப் போடும்//
ஆஹா ஆஹா இந்த பாசைய கேட்கறதுக்கு எவ்ளோ இனிமையா இருக்குது !!!
//எனக்கு ஏர் பிடிக்கத் தெரியும்னு சொன்னா, நீங்கதான் நம்புவீங்களா என்ன?!
//
உங்களுக்கு தெரியாதுங்கறது தான் எனக்கு தெரியுமே :))
//வீரப்பனைக் கொன்னு போட்டாங்கன்னு சொன்ன உடனே வருத்தமா இருந்துச்சு//
எனக்கும்..
மழை வர்றதுக்கான அறிகுறியை எல்லாம் நியாபகம் வச்சு சொல்லறிங்க நெறைய விஷயம் மண்டைக்குள்ள இருக்குதோ !!
//மழை பெய்த இரவுக்கு ஒட்டிய காலை நேரம்//
கலக்கல்:))
//உருப்புடாதது_அணிமா said...
நல்ல பதிவு
//
நன்றிங்க மலைக்கோட்டையார்!
//அமிர்தவர்ஷினி அம்மா said... //
வாங்க ! நன்றிங்க!!
//எங்கயோ ஆரம்பிச்சு எதிலியோ முடிச்சிட்டீங்க.
//
நெனப்பு போன பக்கம் போக வேண்டியதுதானுங்களே?!
//அது சரி said...
அதுனால எல்லாருக்கும் கண்டிப்பா ஒண்ணுக்கு மேற்பட்ட தொழில்கள் தெரிஞ்சிருக்கணும்! இல்லாட்டி கத்துக்கணும்!
//
அது சரி அண்ணாச்சி,
பல் தொழில் வித்தகரா இருக்கீங்க.... வாழ்த்துகள்!
//PoornimaSaran said...
//மழை பெய்த இரவுக்கு ஒட்டிய காலை நேரம்//
கலக்கல்:))
//
வாங்க நம்மூர் அம்மினி, வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிங்கோய்!
Post a Comment