12/23/2008
நண்பரோட பதில்
சொலவடைகள் பத்தின நம்ம பதிவுக்கு, நண்பர் வெற்றிச் செல்வன்(ஜெயக்குமார்) அனுப்பின பதிலுரை தான் இந்த பதிவு:
அசத்தல் மன்னர்கள் பாத்திட்ருக்கும்போது சில 'அறுப்புகள்' தாங்கமாட்டாம, கொஞ்சம் கணிணிய தட்டி, மணி என்னா சொல்றாருன்னு பாத்தா(மணி தப்பா எடுத்துக்காதீங்க... ச்சும்மா, ஒரு மொக்கைக்குத் தான்), தன்னோட பழைய நினைவுகள தட்டி, நம்மளையும் ஏக்க பெருமூச்சு விட வச்சிட்டாரு...
மணி, சொலவடைகள ஞாபகப்படுத்தியதற்கு நன்றிகள்... இவற்றில் பல சொலவடைகளை எனது அம்மா, அப்பா மற்றும் அறிந்த சிலரிடம் இவ்வாறு கேட்டிருக்கிறேன்...
நாம: ஏம்மா...ஏன் உன்னை எல்லாரும் இப்படி எளக்காரமா நெனைக்கிறாங்க...
அம்மா: (சலித்துக் கொண்டே)ம்ம்ம்...கொண்டவன் சரியிருந்தா, கூரையேறி சண்டை போடலாம்...
நாம: ஏம்ப்பா...சில சமயங்கல்ல, உங்கள மாதிரியே என்னாலேயும் கோபத்த அடக்க முடியல...
அப்பா: வெத ஒன்னு போட சொர ஒன்னாடா மொளைக்கும்... அப்படித்தான்டா இருக்கும்..
ஒரு நீண்ட பயணத்தின் போது, நண்பன் ஒருவன் நம்ம சிற்றூர்தி(car)ய, பின் தொடர்ந்து ஓட்டிக்கிட்டிருந்தார். நாமதான் வேகக் கட்டுப்பாட்டை சில சமயங்கல்ல மதிக்கறதில்லையே...அப்பாவி நண்பனும் நம்மள விடாம, நம்ம வேகத்தில, பின் தொடர்ந்து ஓட்டிக்கிட்டு தான் வந்தாரு... அதாவது மாமா வந்து வேகத்துக்கான அபராதச்சீட்டு குடுக்கற வரைக்கும்... நாம என்னடா நண்பனை ரொம்ப நேரமா பின்னாடி காணோமேன்னு, அவரோட கைபேசிக்கு கூப்பிட்டு,
நான்: மாமா...என்னடா, வழி தவறிட்டியா? ரொம்ப நேரமா பின்னாடி ஆளையே காணோம்??
நண்பன்: (நொந்த படியே) டேய்...நொங்க தின்னவன் ஓடிட்டே...அத நோண்டித் தின்னவன் மாட்டி கிட்டேன்...
சத்தியபாமா கல்லூரில படித்துக் கொண்டிருந்த காலம். கால் கடுக்க, பல்லவனில் பழைய மகாபலிபுரம் சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது, கந்தன்சாவடி அருகே கடைசி சீட்டுக்காக இரு பெண்கள் (ஐயே..பொம்பளைங்களா அதுங்க..பஜாரிங்க..)சண்டை போட்டுக் கொண்டது,
முதலாமவள்: (சீட்டுக்கு போட்டி போட்ட இன்னொருத்தியைப் பார்த்து) ஐயே...கொஞ்சனாச்சுக்கும் வெக்கமே இல்லாம, ஆம்பளைங்க கூட இடிச்சிகினு ஒக்கார இப்படி அலையிறியே...
இன்னொருத்தி: முடி இருக்கறவ அள்ளி முடிச்சு முடிஞ்சிக்கிறேன்... மொட்டையா இருக்கறவ இந்த சிலுப்பு சிலுத்துக்கிறியே...
தூக்கம் கண்களை சுழற்றுவதால்..நாளை தொலைபேசியில், கதை பேசிக்கலாம்..
இவன்,
'புண்'ணிய கேடி
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
புதுப்படம் சூப்பரு..
புண்ணிய கோடி எழுத்துக்களும் சூப்பரு..
இனிமே நானும் எதாவது ஞாபகப்படுத்தி உங்களுக்கு எழுதிப்போடணும் போலிருக்கு..
//இராகவன், நைஜிரியா said...
புதுப்படம் சூப்பரு..
புண்ணிய கோடி எழுத்துக்களும் சூப்பரு..
இனிமே நானும் எதாவது ஞாபகப்படுத்தி உங்களுக்கு எழுதிப்போடணும் போலிருக்கு..
//
நன்றிங்க!
//கொஞ்சம் கணிணிய தட்டி, மணி என்னா சொல்றாருன்னு பாத்தா//
நானெல்லாம் பொட்டிய மூடலாமுன்னு நினைக்கிறப்பத்தான் மணியப் பாக்குறது:)
//நாம: ஏம்மா...ஏன் உன்னை எல்லாரும் இப்படி எளக்காரமா நெனைக்கிறாங்க...
அம்மா: (சலித்துக் கொண்டே)ம்ம்ம்...கொண்டவன் சரியிருந்தா, கூரையேறி சண்டை போடலாம்...
நாம: ஏம்ப்பா...சில சமயங்கல்ல, உங்கள மாதிரியே என்னாலேயும் கோபத்த அடக்க முடியல...
அப்பா: வெத ஒன்னு போட சொர ஒன்னாடா மொளைக்கும்... அப்படித்தான்டா இருக்கும்..//
இப்பத்தானே புரியுது!எதுகை மோனை ஏன் இவ்வளவு சரளமா உங்களுக்கு வருதுன்னு!
//நான்: மாமா...என்னடா, வழி தவறிட்டியா? ரொம்ப நேரமா பின்னாடி ஆளையே காணோம்??
நண்பன்: (நொந்த படியே) டேய்...நொங்க தின்னவன் ஓடிட்டே...அத நோண்டித் தின்னவன் மாட்டி கிட்டேன்...//
இஃகி!இஃகி சொல்ல வைக்குது.
//முதலாமவள்: (சீட்டுக்கு போட்டி போட்ட இன்னொருத்தியைப் பார்த்து) ஐயே...கொஞ்சனாச்சுக்கும் வெக்கமே இல்லாம, ஆம்பளைங்க கூட இடிச்சிகினு ஒக்கார இப்படி அலையிறியே...//
சண்டைக்கு இப்படியெல்லாம் கூட காரணமிருக்குதா?
//ராஜ நடராஜன் said...
நானெல்லாம் பொட்டிய மூடலாமுன்னு நினைக்கிறப்பத்தான் மணியப் பாக்குறது:)
//
அஃகஃ! அஃக்ஃகா!!
//ராஜ நடராஜன் said...
இப்பத்தானே புரியுது!எதுகை மோனை ஏன் இவ்வளவு சரளமா உங்களுக்கு வருதுன்னு!
//
ஆமுங்க, அல்லாம் ஒட்டுவார் ஒட்டு...இஃகி!
//ராஜ நடராஜன் said...
//நான்: மாமா...என்னடா, வழி தவறிட்டியா? ரொம்ப நேரமா பின்னாடி ஆளையே காணோம்??
நண்பன்: (நொந்த படியே) டேய்...நொங்க தின்னவன் ஓடிட்டே...அத நோண்டித் தின்னவன் மாட்டி கிட்டேன்...//
இஃகி!இஃகி சொல்ல வைக்குது.
//
இஃகி!இஃகி!!
//ராஜ நடராஜன் said...
//முதலாமவள்: (சீட்டுக்கு போட்டி போட்ட இன்னொருத்தியைப் பார்த்து) ஐயே...கொஞ்சனாச்சுக்கும் வெக்கமே இல்லாம, ஆம்பளைங்க கூட இடிச்சிகினு ஒக்கார இப்படி அலையிறியே...//
சண்டைக்கு இப்படியெல்லாம் கூட காரணமிருக்குதா?
//
அவிங்களுக்கு சிறுசா எதானாக் கிடைச்சிடக் கூடாதே? பொம்பளைங்க சண்டை நொம்ப வேடிக்கையா இருக்கும்... இஃகி!இஃகி!!
இப்படியும் கடன் கொடுக்கலாமா?
//நசரேயன் said...
இப்படியும் கடன் கொடுக்கலாமா?
//
கடனா? ஒன்னும் புரியலையே தளபதி?!
Post a Comment