வணக்கம்! பாருங்க, நாம ஊர் வழியில, நம்ம பாட்டன், பூட்டன், முப்பாட்டன், நாப்பாட்டன், பூம்பாட்டன்ன்னு பெரியவிங்க சொல்லி வெச்சதுல எதோ நமக்குத் தெரிஞ்சதைப் பாத்தோம், அதுல ஒரு திருப்தி. ஆனாப் பாருங்க, தங்கமணிக்கு ஒரே கோவம். ஏன்னு கேளுங்க சித்த?
அது ஒன்னுமில்லீங், அல்லாரும் பழமைபேசி ஒரு வயசு போன பெருசுன்னு நினைக்குறீங்ளாம். ஏன்னா, கெராமத்துல பேசுற மாதர சுத்தத் தமிழ்ல பேசுறதாலயும், அமெரிக்காவுல இருக்குற மாதரயும் நடந்துக்குலயாம். போதாக் குறைக்கு என்னோட புனைபேரும் அதுக்குத் தொணை போகுது. பழமைபேசின்னா அளவளாவின்னு அர்த்தமுங்கோ! வேற நான் என்ன சொல்ல? துண்டு போட்டு வேணாலும் தாண்டுறேன், நான் நீங்க நினைக்குற மாதிரி பெருசு இல்ல! இல்ல!! இஃகி!ஃகி!!
துண்டுன்ன ஒடனே ஞாவகத்துக்கு வருது, சமீபத்துல முத்தமிழ் குழுமத்துல நடந்த ஒரு சம்பாசனை! செல்வன் ஐயா எதுக்கோ சொன்னாரு, "நான் துண்டு போட்டுத் தாண்டிச் சொல்லுறேன்"ன்னு. நமக்குத்தான் திருமூர்த்தி மலைத் தண்ணியும், சிறுவாணித் தண்ணியும் ஒடம்புல ஓடுதே?! "ஏன், கைக் குட்டையப் போட்டுத் தாண்ட மாட்டீகளோ?"ன்னு திரியக் கொழுத்துனன். அப்புறம் அவரும், வேந்தன் ஐயாவும் போட்டாங்க பட்டியலு.
அதுக்கு முன்னாடி, துண்டு போட்டுத் தாண்டுறதோட அர்த்தம் பாப்போம். அது ஒன்னுமில்லீங், துண்டுங்றது ஒரு மானம், மரியாதை, கெளரவத்தைப் பிரதிபலிக்குற ஒன்னு. ஆகவே, அந்த மானம், மரியாதை மேல ஆணையிட்டுச் சொல்லுறது தானுங்க, அதனோட அடையாளம். இதுவும் அவிங்க குடுத்த விளக்கந்தேன். அப்புறஞ் சொன்னாங்க, கைக்குட்டைனால துண்டு அளவுக்கு பெருசா ஒன்னுஞ் சாதிக்க முடியாதுன்னு சொல்லிட்டு, துண்டோட அருமை பெருமைகளச் சொன்னாங்க. அது போக, வடக்கு கரோலைனா, சார்லட்ல இருக்குற நவசக்தி தமிழ் பண்பாட்டுக் குழுவிலயும் இது பத்திப் பேசினோம். அதுல வந்த வரிசைய மேல படிங்க:
தலைப் பாகையாக் கட்டலாம்.
பெருமைக்குரிய பரிவட்டம் கட்டலாம்.
எங்கயும் கோவணங் கட்டலாம்.
முண்டாசு கட்டலாம்.
மழைக்கு முக்காடு போடலாம்.
முகத்தை மூடி மறைக்கலாம்.
சோத்துல கஞ்சி வடிக்கலாம்.
மொளகா, அது இது காயப் போடலாம்.
வண்டியில இடம் போடலாம்.
இடுப்புக்கு கட்டி பணிவைக் காமிக்கலாம்.
தலைக்கு சும்மாடு கட்டலாம்.
தலைக்கு சுருட்டி வெச்சி படுக்கலாம்.
ஆத்துல ரெண்டு கங்குலயும் புடிச்சு மீன் பிடிக்கலாம்.
கண்ணக் கட்டி கண்ணா மூச்சி வெளையாடலாம்.
தொழில்ல நலிஞ்சு போனா, தலையில துண்டு போடலாம்.
தலையக் கொத்த வர்ற காக்கா, குருவிய துண்டைச் சுத்தி வெரட்டலாம்.
எலுமிச்சம் பழங்களை ஆட்டையப் போட்டு, துண்டுல முடிஞ்சு எடுத்துட்டு வரலாம்.
அசையாச் சொத்துகளை ஒப்படைக்குறதுக்கு அடையாளமா, துண்டை ஒப்படைக்கலாம்.
கல்யாண நிச்சயம் நிறைவு செய்யுறதைக் குறிக்க, துண்டை மாத்திகிடலாம்.
கதாநாயகன் துண்டுல கூழாங்கல்லுகளப் போட்டு வில்லனைப் பின்னலாம்.
விரிச்சுப் போட்டு பிச்சை எடுக்கலாம் (தளபதி நசரேயன் கவனிக்கவும்).
பண்டங் கன்னு யாவரத்துல வெரல் புடிச்சு விலை பேசலாம்.
மாட்டு வண்டிப் பந்தயத்துல வீசி வீசி வெரட்டலாம்.
சல்லிக் கட்டுல பணமுடிப்புக் கட்டலாம்.
இப்பிடித் துண்டோட பெருமைகள அடுக்கிட்டே போலாமுங்க. இவ்வளவு பேசிப் போட்டு, ஒரு பாட்டு பாடாமப் போக முடியுமா? காளைகளோட அலங்காரத்தைக் கேளுங்க!
என்ன என்ன அடையாளம்?
நெத்திக்குச் சிட்டிகளாம்,
நெலம் பாக்கும் கண்ணாடி!
வாலுக்குச் சல்லடமாம்,
வாகுக்கை பொன்னாலே!
கொம்புக்குக் குப்பிகளாம்,
கொணவாலு சல்லடமாம்!
தூக்கி வைக்கும் கால்களுக்கு,
துத்திப்பூ சல்லடமாம்!
எடுத்து வைக்கும் கால்களுக்கு,
எருக்கம்பூ சல்லடமாம்! (சல்லடம் = துணியால் உறை)
மண்டியிடும் கால்களுக்கு,
மாதுளம்பூ சல்லடமாம்!
கட்டக் காட்டு கொல்லையில,
நிக்குமெங்க காரிக்காளைக!
செங்காட்டுக் கொல்லையில,
மேயுதுங்க எங்க செவலைக!
மாமாங்கம் மூணு சோடி,
வருமுங்க மயிலக் காளைக!!!
(சல்லடம் = உறை)
36 comments:
நான்தான் முதல்ல
ஒரு துண்டுல இவ்வளோ விஷயம் இருக்கா!!!
நசரேயன், படிக்காம போடற பின்னூட்டம் செல்லுபடியாகாது.
/*
செங்காட்டுக் கொல்லையில,
மேயுதுங்க எங்க செவலைக!
மாமாங்கம் மூணு சோடி,
வருமுங்க மயிலக் காளைக!!!
*/
குடுகுடுப்பை பாட்டு மாதிரி இருக்கு
/*
பழமைபேசி ஒரு வயசு போன பெருசுன்னு நினைக்குறீங்ளாம்
*/
நினைக்க என்ன உண்மை அதுதானே
/*
நசரேயன், படிக்காம போடற பின்னூட்டம் செல்லுபடியாகாது.
*/
அடுத்த பின்னூட்டம் அம்மணி
/*விரிச்சுப் போட்டு பிச்சை எடுக்கலாம் (தளபதி நசரேயன் கவனிக்கவும்)*/
பழசை எல்லாம் இப்படி சபையிலே போட்டு உடைக்கணுமா?
படிச்ச எங்க தலையிலே துண்டை போடமா இருந்தா சரிதான்
எருதுப்பாட்டு அருமை....ரெண்டு மூணு சோடிக இருந்ததெல்லாம் ஒருகாலம்...
துண்டுவேட்டி மைனர்:-)
//சின்ன அம்மிணி said...
ஒரு துண்டுல இவ்வளோ விஷயம் இருக்கா!!!
நசரேயன், படிக்காம போடற பின்னூட்டம் செல்லுபடியாகாது.
//
செல்லாது செல்லாது....சரியாச் சொன்னீங்க
//நசரேயன் said...
படிச்ச எங்க தலையிலே துண்டை போடமா இருந்தா சரிதான்
//
இஃகி!ஃகி!!
//தங்ஸ் said...
எருதுப்பாட்டு அருமை....ரெண்டு மூணு சோடிக இருந்ததெல்லாம் ஒருகாலம்...
தங்ஸ் said...
துண்டுவேட்டி மைனர்:-)
//
ஆகா, இப்ப ஞாவகத்துக்கு வந்திருச்சு...
//நான் நீங்க நினைக்குற மாதிரி பெருசு இல்ல! இல்ல!! இஃகி!ஃகி!!//
நானும் அவனில்லை,
துண்டு போட்டு வேணாலும் தாண்டுறேன், நான் நீங்க நினைக்குற மாதிரி பெருசு இல்ல! இல்ல!!
அஃகா!அஃக்ஃகா!!!!!!!!
போன இடுகையில நான் போட்டிருந்த பின்னூட்டத்தைப் பாத்துட்டு உங்க தங்கமணி இப்படி சொல்லலையே?! பேரு தான் குழப்பிச்சே ஒழிய உங்க படத்தைத் தான் தொடக்கத்திலேயே போட்டுட்டீங்களே. அதனால் சிறுசுன்னு தெரிஞ்சு தான் இருந்துச்சு. :-)
//குமரன் (Kumaran) said...
போன இடுகையில நான் போட்டிருந்த பின்னூட்டத்தைப் பாத்துட்டு உங்க தங்கமணி இப்படி சொல்லலையே?! பேரு தான் குழப்பிச்சே ஒழிய உங்க படத்தைத் தான் தொடக்கத்திலேயே போட்டுட்டீங்களே. அதனால் சிறுசுன்னு தெரிஞ்சு தான் இருந்துச்சு. :-)
//
வாங்க குமரன்! வணக்கம்!! நீங்க இல்லங்க ஐயா!! நீங்க இங்க இருக்குறவிக... ஊர்ல இருக்குறவிங்கனால நம்ப முடியலைன்னு நினைக்குறேன். அவிங்களுக்கு வெளி நாட்டுல இருக்குறவிங்க தமிழ்ல எழுதினா, வயசான ஆட்கள்ன்னு நினைக்குறாங்க.... எங்க அம்மாவே கேக்குறாங்களே?
அப்போ உங்களுக்கு வயசு ஆகலியா ப பேசி:)
நம்புறோம்.
அதென்னது சல்லாடம்??
துண்டுக்கு இத்தனை மகிமையா!!!
அதான் சின்னக் கவுண்டர் அத்தனை ஆட்டம் காட்டினாரா துண்டை வச்சு:)
நல்ல பதிவுங்கோ.
ஒன்னுஞ்சொல்றதிக்கில்ல்ணா
பின்னி பெடலெடுக்கறீங்க.
(வெளக்கஞ் சொல்லுவீயளா)
அருமையா இருக்கு
துண்டுக்கு வெளக்கம்
பின்னே வந்த பாட்டு
கடேசியா இருந்த பழமொழி
பழமொழியெல்லாம் தொகுத்து ஒரு பழமொழிப்பதிவா போட்டா நல்லாருக்கும்
இது ஒரு நேயர் விருப்பமா வெச்சுக்கோங்க
அப்படி போட்டிருந்தீங்கனா, லின்க்கு கொடுங்க.
துண்டை சாதரண விசியமா நெனச்சுட்டாங்க... கோயிலுகள்ல பரிவட்டம் கட்றதுக்குந் துண்டுதேன்... துண்டு மட்டும் இல்லாட்டி வாழ்க்கை துண்டு துண்டாப் போயிருமல்லோ...
//பெருசு said...
நானும் அவனில்லை,
துண்டு போட்டு வேணாலும் தாண்டுறேன், நான் நீங்க நினைக்குற மாதிரி பெருசு இல்ல! இல்ல!!
அஃகா!அஃக்ஃகா!!!!!!!!
//
அஃகா!அஃக்ஃகா!!!!!!!!
சிரிப்பென்ன சிரிப்பு? விபரப் பட்டைல வயுசு 52ன்னு சொல்லுது சாமி??
// வல்லிசிம்ஹன் said...
அப்போ உங்களுக்கு வயசு ஆகலியா ப பேசி:)
நம்புறோம்.
அதென்னது சல்லாடம்??
துண்டுக்கு இத்தனை மகிமையா!!!
அதான் சின்னக் கவுண்டர் அத்தனை ஆட்டம் காட்டினாரா துண்டை வச்சு:)
நல்ல பதிவுங்கோ.
//
வாங்க! வணக்கம்!! பொருளை பதிவுல சேத்துடறேனுங்க!!
//அமிர்தவர்ஷினி அம்மா said...
ஒன்னுஞ்சொல்றதிக்கில்ல்ணா
பின்னி பெடலெடுக்கறீங்க.
(வெளக்கஞ் சொல்லுவீயளா)
அருமையா இருக்கு
துண்டுக்கு வெளக்கம்
பின்னே வந்த பாட்டு
கடேசியா இருந்த பழமொழி
பழமொழியெல்லாம் தொகுத்து ஒரு பழமொழிப்பதிவா போட்டா நல்லாருக்கும்
இது ஒரு நேயர் விருப்பமா வெச்சுக்கோங்க
அப்படி போட்டிருந்தீங்கனா, லின்க்கு கொடுங்க.
//
வாங்க அ.அம்மா! வணக்கம்!! நீங்களும் கொங்கு நாடுங்ளா? நம்மூருல பேசற மாதர பேசறீங்கோ?? அப்பொறம் நாட்டுப் பழமொழிகளுக்கு ஒரு பதிவு போடோனுமுங்....
//Mahesh said...
துண்டை சாதரண விசியமா நெனச்சுட்டாங்க... கோயிலுகள்ல பரிவட்டம் கட்றதுக்குந் துண்டுதேன்... துண்டு மட்டும் இல்லாட்டி வாழ்க்கை துண்டு துண்டாப் போயிருமல்லோ...
//
வாங்ண்ணா! செரியாச் சொன்னீங்கோ!!
அசத்துறீங்கண்ணே... :)
அது ஒன்னுமில்லீங், அல்லாரும் பழமைபேசி ஒரு வயசு போன பெருசுன்னு நினைக்குறீங்ளாம். ஏன்னா, கெராமத்துல பேசுற மாதர சுத்தத் தமிழ்ல பேசுறதாலயும், அமெரிக்காவுல இருக்குற மாதரயும் நடந்துக்குலயாம். //
ஏனுங்ணா , நமக்கென்னமோ இத வடிவேலாட்டாம் நானும் ரெளடி , நானும் ரெளடி ஸ்டைல்லயே படிக்கத்தோணுங்ணா.
நம்மூருபக்கஞ் சொல்வாங்கள்ளோ எங்கப்பங் குதிருக்குல்லில்லீன்னு அத மாதிரி....
நல்லா எழுதறீங்க பழமைகளை.
ஒரு துண்டுக்கு பின்னாடி இவ்ளோ விசயங்களா?
இங்கே நானும் ஒரு துண்டு போட்டுக்குறேன்
அப்போ நீங்க பெருசு இல்லியா??
பழம் பெருசுன்னு சொல்லுங்க
துண்டுன்னதும் நம்ம விசயகாந்து நடிச்ச சின்ன கவுண்டர் படம் தான் நியாபகத்துக்கு வருது
கடைசி பாட்டு நல்லா இருக்குதுன்னே
துண்டு (சின்ன) விசயத்த கூட அருமையா சொல்றதுல்ல நீங்க கில்லாடின்னே
எதோ துண்டுச் செய்தி என்று நினைத்து படித்த எனக்கு பெருத்த ஏமாற்றம் கொடுத்து விட்டது உங்களின் இந்த பதிவு...
துண்டின் பயன்கள் அட அட அட ...
கலக்கிட்டீங்க போங்க....
//உருப்புடாதது_அணிமா said...
துண்டு (சின்ன) விசயத்த கூட அருமையா சொல்றதுல்ல நீங்க கில்லாடின்னே
//
இஃகி!இஃகி!!
//Sriram said...
எதோ துண்டுச் செய்தி என்று நினைத்து படித்த எனக்கு பெருத்த ஏமாற்றம் கொடுத்து விட்டது உங்களின் இந்த பதிவு...
துண்டின் பயன்கள் அட அட அட ...
கலக்கிட்டீங்க போங்க....
//
வாங்க, வாங்க! நொம்ப நன்றிங்க!!
//இராம்/Raam said...
அசத்துறீங்கண்ணே... :)
//
நொம்ப நன்றிங்க இராம்/Raam!!
//மதிபாலா said...
நம்மூருபக்கஞ் சொல்வாங்கள்ளோ எங்கப்பங் குதிருக்குல்லில்லீன்னு அத மாதிரி....//
அஃக!ஃகா!
//நல்லா எழுதறீங்க பழமைகளை.
//
நொம்ப நன்றிங்ண்ணா!
//
வாங்க அ.அம்மா! வணக்கம்!! நீங்களும் கொங்கு நாடுங்ளா? நம்மூருல பேசற மாதர பேசறீங்கோ?? அப்பொறம் நாட்டுப் பழமொழிகளுக்கு ஒரு பதிவு போடோனுமுங்....
நன்றி அண்ணே,
நான் கொங்கு நாடெல்லாம் இல்ல, இங்கன சிங்கார சென்னைதான், அதுல பாத்துக்கோங்கன்னா, நீங்க பேசற மாதரயே மனசுக்குள்ள பேசி பதிவ படிக்கிறேனா, அது அப்படியே உள்ளருந்து வந்து போடுதுங்ணா.
உண்மையில உங்களுக்கு தாங்ணா நான் நன்னி சொல்லோனும்.
பொறவா, அந்த நாட்டுப் பழமொழிப் பதிவ போட்ருங்க்ணா.
Post a Comment