12/26/2008

புதிதாய்ப் பிறந்தேன்!

புதிதாய்ப் பிறந்தேன்!

காலதேவனின் சுழற்சியில்
தினம் தினமும் புதிது
புதிதாய்ப் பிறக்கிறேன்!

இதயத்தில் உறையும் இருள்
அதில் அமிழ்ந்து சாவதும்,
பின் வீறுகொண்டு
எழுவதுமாய்ப் பிறக்கிறேன்!

கனவு மேகம் கலைகிறது, அது
கண்டு மனம் வாடுவதும்,
பின் துளிர்த்து
எழுவதுமாய்ப் பிறக்கிறேன்!

ஏமாற்ற இருள் சூழ்வதும், அது
கண்டு மனக் கண்கள் தவிப்பதும்
பின் நம்பிக்கையொளி கண்டு
எழுவதுமாய்ப் பிறக்கிறேன்!

காலதேவனின் சுழற்சியில்
தினம் தினமும் புதிது
புதிதாய்ப் பிறக்கிறேன்!

44 comments:

muru said...

நான் தான் முதல்ல...

அண்ணே, நான் உங்க பயணக்(கட்டு)ரை தேடித்தான் வந்தேன், எதாச்சும் அடி, கிடி பட்டிருந்தா ஆறுதல் சொல்லிட்டு (மனசுக்குள்ள சந்தோசப்பட்டுடு) போலாம்முனு வந்தா, அழகழகா போட்டோ...

கலக்குற சந்த்ரு...

பழமைபேசி said...

// muru said...
நான் தான் முதல்ல...

அண்ணே, நான் உங்க பயணக்(கட்டு)ரை தேடித்தான் வந்தேன்,
//

வாங்க தம்பி! அதுவும் எழுதிட்டே இருக்கேன். நாளைக்குத் தயார் ஆயிடும்னு நினைக்கிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

Nice Photo

காலச்சுழற்சியின் மாற்றம் - நன்றாகவே இருக்கிறது.

PoornimaSaran said...

புது வாழ்க்கை( புதுசா பிறந்ததைக் கேட்டேன்) எப்படி இருக்கு??

PoornimaSaran said...

//கனவு மேகம் கலைகிறது, அது
கண்டு மனம் வாடுவதும்,
பின் துளிர்த்து
எழுவதுமாய்ப் பிறக்கிறேன்!
//

கனவிலேயே மூழ்காமல் வெளில வந்திட்டா வாழ்கை ரொம்ப சுவாரசியமா இருக்கும்:)

PoornimaSaran said...

நன்னாயிட்டு இருக்கு :)

Anonymous said...

அண்ணே அரசியல்ல குதிக்கிற ஆசை ஏதாச்சும் இருக்கா ?
போஸ் எல்லாம் பலமா இருக்கு போங்க...
தொடர்ந்து கலக்குங்க ...
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

பழமைபேசி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
Nice Photo

காலச்சுழற்சியின் மாற்றம் - நன்றாகவே இருக்கிறது.
//

வாங்க அமிர்தவர்ஷினி அம்மா! நல்லா இருக்கீங்ளா? நன்றிங்க!!!

பழமைபேசி said...

//PoornimaSaran said...
புது வாழ்க்கை( புதுசா பிறந்ததைக் கேட்டேன்) எப்படி இருக்கு??
//

வாங்க பூர்ணிமா, வணக்கம்! ரொம்ப புத்துணர்ச்சியோட, மகிழ்ச்சியாவும் இருக்கு!!

பழமைபேசி said...

// PoornimaSaran said...
நன்னாயிட்டு இருக்கு :)
//

சேச்சி, யான் சேர நாடாயிட்டு! பட்சே, இங்கிள் தமிழ் மட்டுமே சம்சாரிக்குன்னு.. ஞானும் தமிழ் பறயும் அனியனாயிட்டு.

பழமைபேசி said...

//PoornimaSaran said...
//கனவு மேகம் கலைகிறது, அது
கண்டு மனம் வாடுவதும்,
பின் துளிர்த்து
எழுவதுமாய்ப் பிறக்கிறேன்!
//

கனவிலேயே மூழ்காமல் வெளில வந்திட்டா வாழ்கை ரொம்ப சுவாரசியமா இருக்கும்:)
//

இஃகிஃகி!

பழமைபேசி said...

//Sriram said...
அண்ணே அரசியல்ல குதிக்கிற ஆசை ஏதாச்சும் இருக்கா ?
போஸ் எல்லாம் பலமா இருக்கு போங்க...
தொடர்ந்து கலக்குங்க ...
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
//

வாங்க ராம்! உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!!

Mahesh said...

பாத்துக்கோங்க... பாத்துக்கோங்க... அண்ணனும் ரௌடிதான்... ஆம்மா... எட்றா வண்டிய......

இஃகி! இஃகி!! இஃகி!!!

பழமைபேசி said...

//Mahesh said...
பாத்துக்கோங்க... பாத்துக்கோங்க... அண்ணனும் ரௌடிதான்... ஆம்மா... எட்றா வண்டிய......

இஃகி! இஃகி!! இஃகி!!!
//

மகேசு! மகேசு!! செரியாச் சொன்னீங்க போங்க...

thevanmayam said...

///ஏமாற்ற இருள் சூழும், அது
கண்டு மனக் கண்கள் தவிப்பதும்
பின் நம்பிக்கையொளி கண்டு
எழுவதுமாய்ப் பிறக்கிறேன்///

மீண்டும் மீண்டும் நம்பிக்கையுடன் பிறக்க வாழ்த்துக்கள்!!!

தேவா...

SUREஷ் said...

அடடே...........

muru said...

அண்ணே, நான் உங்க பயணக்(கட்டு)ரை தேடித்தான் வந்தேன்,
//

வாங்க தம்பி! அதுவும் எழுதிட்டே இருக்கேன். நாளைக்குத் தயார் ஆயிடும்னு நினைக்கிறேன்

நான் எதிர்பார்க்கும் கட்டு கடந்தகாலம்! அதை எப்படி நீங்கள் எதிர் காலத்தில் தரமுடியும்?

நசரேயன் said...

பேசுறதுதான் பழசு ஆள் ரெம்ப புதுசா இருக்கார், நான் படம் எடுத்தா நீங்க தான் ஹீரோ

குடுகுடுப்பை said...

தொப்பிய கழட்டுங்க அண்ணே.

பழமைபேசி said...

//muru said...
அண்ணே, நான் உங்க பயணக்(கட்டு)ரை தேடித்தான் வந்தேன்,
//

வாங்க தம்பி! அதுவும் எழுதிட்டே இருக்கேன். நாளைக்குத் தயார் ஆயிடும்னு நினைக்கிறேன்

நான் எதிர்பார்க்கும் கட்டு கடந்தகாலம்! அதை எப்படி நீங்கள் எதிர் காலத்தில் தரமுடியும்?
//

அஃகஃகா! கட்டுப் போடுற அளவுக்கு நிலைமை போகலை கண்ணு. மிச்சத்தை பதிவுல எழுதுறேன்.... இஃகிஃகி!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நசரேயன் எடுக்கும் படத்துல (கனவுல தானே ) நீங்க தான் ஹீரோவாம்ல.. ஒரு பெட்டி வச்சிக்கிட்டு மலை முகட்டுல நின்னுக்கிட்டு.. புதிதாய் பிறந்தேன்னு(எம்ஜி ஆர் மாதிரி) ஒரு பாட்டு வச்சிக்கலாம்.. :)

உருப்புடாதது_அணிமா said...

ஆஹா கிளம்பிட்டாங்கப்பா

உருப்புடாதது_அணிமா said...

தொப்பிய கழட்டுங்க, அப்போ தான் உங்க உண்மையான முகத்த தரிசிக்க முடியும் ( ஹி ஹி ஹி)

பழமைபேசி said...

// thevanmayam said...

மீண்டும் மீண்டும் நம்பிக்கையுடன் பிறக்க வாழ்த்துக்கள்!!!

தேவா...
//

நன்றிங்க ஐயா!

பழமைபேசி said...

//நசரேயன் said...
பேசுறதுதான் பழசு ஆள் ரெம்ப புதுசா இருக்கார், நான் படம் எடுத்தா நீங்க தான் ஹீரோ
//

படப்பிடிப்பு எப்பன்னு சொல்லுங்க மொதலாளி...

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
தொப்பிய கழட்டுங்க அண்ணே.
//

பயங்கர குளிரா இருக்கே?

நசரேயன் said...

/*
நசரேயன் எடுக்கும் படத்துல (கனவுல தானே ) நீங்க தான் ஹீரோவாம்ல.. ஒரு பெட்டி வச்சிக்கிட்டு மலை முகட்டுல நின்னுக்கிட்டு.. புதிதாய் பிறந்தேன்னு(எம்ஜி ஆர் மாதிரி) ஒரு பாட்டு வச்சிக்கலாம்.. :)
*/
நல்ல யோசனை சொன்னீங்க அறிமுக பாட்டுக்கு

பழமைபேசி said...

//SUREஷ் said...
அடடே...........
//
இஃகி! இஃகி!!

பழமைபேசி said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
நசரேயன் எடுக்கும் படத்துல (கனவுல தானே ) நீங்க தான் ஹீரோவாம்ல.. ஒரு பெட்டி வச்சிக்கிட்டு மலை முகட்டுல நின்னுக்கிட்டு.. புதிதாய் பிறந்தேன்னு(எம்ஜி ஆர் மாதிரி) ஒரு பாட்டு வச்சிக்கலாம்.. :)
//

வாங்க, வணக்கம்!!

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
தொப்பிய கழட்டுங்க, அப்போ தான் உங்க உண்மையான முகத்த தரிசிக்க முடியும்
//

தொப்பி முகத்துக்கா போட்டிருக்கு?

ஓட்டு பொறுக்கி said...

பொண்ணு வீட்ல காமிக்க எடுத்த போட்டோவா இது ?

பழமைபேசி said...

//ஓட்டு பொறுக்கி said...
பொண்ணு வீட்ல காமிக்க எடுத்த போட்டோவா இது ?
//

அதுலயே எடுத்த தேதியும் இருக்கு...அதைப் பார்த்துட்டுதான் இதைக் கேக்குறீங்களா? இல்லை, அதைக் கவனிக்கலையா??

கபீஷ் said...

ஹி ஹி தாமதத்திற்கு வருந்துகிறேன் :-(

கபீஷ் said...

எங்க அண்ணன் மாதிரி கொஞ்சம் இருக்கீங்க :-) கவிதை படிக்கலை :-:-)

பழமைபேசி said...

//கபீஷ் said...
ஹி ஹி தாமதத்திற்கு வருந்துகிறேன் :-(
//

நானே, கேட்கணுமின்னு நினைச்சிட்டு இருந்தேன்...ரொம்ப நாளா ஆளைக் காணோம்?! நல்லா இருக்கீங்களா?

Wish you happy holidays!!!

கபீஷ் said...

நீங்க சின்னபையன் (ச்சின்ன பையன் இல்ல) நம்பிட்டோம்

பழமைபேசி said...

//கபீஷ் said...
நீங்க சின்னபையன் (ச்சின்ன பையன் இல்ல) நம்பிட்டோம்
//

அப்பாட, இப்பத்தான் நிம்மதி! பாக்குற நாலு பேர்கிட்டவும் சொல்லி வையுங்க....இஃகிஃகி!!

கபீஷ் said...

இல்லீங்க புது வேலைல சேர்ந்துருக்கேன். அதனால வீட்டுக்கு வந்தப்புறம் தான் பதிவு படிக்கறேன்.

பழமைபேசி said...

//கபீஷ் said...
எங்க அண்ணன் மாதிரி கொஞ்சம் இருக்கீங்க :-) கவிதை படிக்கலை :-:-)
//

மிக்க மகிழ்ச்சிங்க...

பழமைபேசி said...

////கபீஷ் said... //

ஓ, அதுவா விசயம்! வாழ்த்துகள்!!

கபீஷ் said...

//நல்லா இருக்கீங்களா?
Wish you happy holidays!!!//

நான் நல்லா இருக்கேன். நம்மளால கூட இருக்கறவங்க தான் நல்லா இல்ல :-):-)

டாங்கீஸ். நான் கிறிஸ்துமஸ் முதல் தடவையா கொண்டாடப்போறேன். அதனால ரொம்ப ஜாக்ரதயா சொன்ன ஹேப்பி ஹாலிடேஸ் ஐ ஹேப்பி கிறிஸ்துமஸ் ஆ எடுத்துக்கறேன்

கபீஷ் said...

//பழமைபேசி said...
//கபீஷ் said...
எங்க அண்ணன் மாதிரி கொஞ்சம் இருக்கீங்க :-) கவிதை படிக்கலை :-:-)
//

மிக்க மகிழ்ச்சிங்க...
//

மிக்க மகிழ்ச்சி எதுக்கு சொன்னீங்க , இரண்டாவதா சொன்னதுக்கா?

PoornimaSaran said...

// கபீஷ் said...
இல்லீங்க புது வேலைல சேர்ந்துருக்கேன். அதனால வீட்டுக்கு வந்தப்புறம் தான் பதிவு படிக்கறேன்.
//

என் கிட்ட நீங்க சொல்லவே இல்லை.. அப்புறம் எங்க வீட்டு பக்கமும் வராத காணோம்

பழமைபேசி said...

//கபீஷ் said...

மிக்க மகிழ்ச்சி எதுக்கு சொன்னீங்க , இரண்டாவதா சொன்னதுக்கா?
//

:-o)