12/17/2008

கிராமத்துல....

நாங்கள்ளாம் ஊர்வழி, தெரு, குளம், குட்டை, காடு, மேடுனு ஓடித் திரிவோம். ஹ்ம்...அதெல்லாம் இனிமையான வசந்தகாலம். அப்பெல்லாம் தெருக்கள்ள பார்த்தீனியா கெடயாது.குளங்கள்ள ஆகாயத்தாமரை கெடயாது. மாசம் மும்மாரிதான். கிராமங்களே அழியிற இந்த சூழ்நிலயில, நாம பாத்த கிராமத்தை நெனச்சி பாக்கறோம்.

ஆமாங்க, நாம பாத்தது எருக்களாஞ்செடி, ஊமத்தை செடி, சாணிப்பூட்டான் தழை, மப்பூட்டான் தழை, நெரிஞ்சி முள், காந்தி முள், வேலி முள் இதுகதான். இன்னைக்கி, என்னென்னமோ சொல்லுறாங்க. எல்லாம், நிலத்தையும் குளங்களயும் அழிக்க வந்ததுக. மேல சொன்ன, செடிகளப் பத்தி எனக்கு நினைவுல இருக்குறத எழுதறேன். படீங்க....

எருக்கஞ்செடி

இத நெனச்சாலே, இப்பக்கூட மனசு லேசாகி எங்க ஊர் இட்டேரி ஞாபகந்தான் வருது. ஒடக்காயப்(ஓணான்)புடிச்சி எருக்கஞ்ச்செடி பால் ஊத்தி, கூட எங்க உச்சாவயும் அதுக வாயில தீர்த்தமாக் குடுப்போம்.அத செய்யக்கூடாத சித்திரவதை பண்ணுவோம். அடடா, அதுக்கு எப்ப எங்களுக்கு தண்டனை கிடைக்கும்னு தெரியல? ஒரு வேளை நம்ம பாவக்கணக்க வெச்சி, அதுக்கு தகுந்த மாதிரி தான் மனுசியக் கோத்து உட்டு இருக்கானோ கடவுள்?! உங்களுக்கு, மனுசி அமஞ்சதுல எவ்வளவு அதிருப்தியோ அந்த அளவுக்கு தீர்த்தம் குடுத்து கொடுமை படுத்தி இருக்கீங்கன்னு அர்த்தம். இது எப்படி இருக்கு?

இதை ஆள்மிரட்டின்னும் சொல்வாங்க. காரணம், இரவுல இதைப் பார்த்தா, புதர்ல யாரோ ஒரு ஆள் நிக்குற மாதிரியே இருக்கும். அப்புறம் எருக்கஞ்செடி பூவை விநாயகர்க்கு மாலை செஞ்சு போடுவாங்க. இந்தச் செடியோட தடி நல்ல வலுவா இருக்கும். எங்க வாத்தி, இந்தச்செடியோட தடியோடதான், திருத்தின பரீட்சைத்தாள பூசையோட குடுப்பாரு. இந்த செடியோட பால் மருத்துவத்துக்கும் பாவிப்பாங்க.

ஊமத்தை

இத நிறய மருந்து செய்ய பாவிப்பாங்க. இதுல விசத்தன்மை நெறய இருக்குனும் சொல்லுவாங்க. கள்ளச்சாராயம் காச்சுறவங்க தேடித்தேடி புடுங்கிட்டு போவாங்க.

சாணிப்பூட்டான்

சாணிப்பூட்டான் தழை எங்கும் இருக்கும்.எங்க வீட்டு கால்நடைங்க விரும்பி தின்னும் ஒரு தாவரம் இது.பசங்க மிதிவண்டி ஓட்டும் போது கீழ விழுந்துட்டா, ஓடிப்போய் பறிச்சிட்டு வந்து காயத்துல புழிஞ்சு விடுவாங்க. பிழியும் போது எரியும், ஆனா காயம் உடனே காஞ்சிடும். கல்லடி விழும்போதும் இதே மருந்துவந்தான். ஆமா! நமக்கும் விழுந்து இருக்குல்ல?!

அப்புறம் அது பூத்து, பூ நெடு நெடுனு அரை அடி, ஒரு அடிக்கு தண்டு ஒசந்து நிக்கும். நாங்க தண்டோட அதப் பிடுங்கி,

தாத்தா தாத்தா காசு தருவியா? மாட்டியா??
குடுக்கலைனா, தலைய வெட்டிருவேன்.
குடுக்க மாட்டியா, இந்தா உன் தலைய வெட்டுறேன்னு

சொல்லிப் பாடி, கடைசில, பெருவிரலால நுனீல இருக்குற சிறு பூவை சதக்னு லாவகமா வெட்டி சந்தோசப்படுவோம். என்ன சந்தோசம்டா சாமி, சொல்லி மாளாது போங்க.

மப்பூட்டான்

இதனோட தழை, பூ, காய் எது பட்டாலும் பட்ட இடத்துல, சரியான பிப்பு எடுக்கும். பொண்ணுங்கள சிணுங்க வெக்க, நாங்க இத அடிக்கடி பாவிப்போம். அவங்க புத்தகப்பையில தெரியாம போட்டு விட்டுருவோம். புதூருக்கும் வேலூர்க்கும் மூணு மைல். நடந்துதான் பள்ளிக்கூடம் போவோம். போற வழில, என்னா கூத்து, கும்மாளம்?! அதுக எல்லாம் எங்க, யாரோட குடித்தனம் நடத்துதுகளோ என்னவோ, போங்க!! எல்லாரும் நல்லா இருந்தா சரி.

நெரிஞ்சி

ஆடுக, நெரிஞ்சிமுள் கொடியோட இலைகள, விருப்பமா திங்கும். நெரிஞ்சியோட பூ, சின்னதா வெகு அழகா சுத்தமான மஞ்சள் நெறத்துல இருக்கும். பூ, காயாகி அந்த காய்ல முள் வரும் பாருங்க, அது அப்படி ஒரு எடஞ்சலா மாறும். மாடு மேய்க்கும் போதும் மொசப்பந்து விளையாடுறப்பவும் அப்படி ஒரு குத்து குத்தும். இது கூட மருத்துவத்துக்கு ஒதவுதுங்க.

காந்தி முள்
இப்ப எப்படி பார்த்தீனியாவோ, அப்படி இந்த காந்தி முள் எங்கயும் இருக்கும். பத்தைல பூ நெறய இருக்கும்.அந்தப் பூவோட இதழ்கள் தான் சிறு முள்ளா மாறி குத்துங்க. அதுபோக, இது காஞ்சதுக்கப்புறம் காத்துல இங்கயும் அங்கயும் ஓடி, ஒரே எடஞ்சல். பட்டாம்பூச்சி புடிக்கறப்ப, தும்பி புடிக்கறப்பனு, மொத்தத்துல விளையாடுறப்ப படு எடஞ்சல்.

கள்ளி முள்

இத சப்பாத்திக்கள்ளினும் சொல்லுவாங்க. ஒடக்கா புடிக்கப்போனா, இது குறுக்க இருக்கும். பல தடைகள் தாண்டிதான் போய் புடிக்கனும். இதனோட முள் குத்தினா ரொம்ப வலிக்கும். எடுக்கறதும் கொஞ்சம் கடினம். இதனோட பழம் சாப்டுவோம்.நல்லா இருக்கும்.

(உங்ககிட்ட, மேல சொன்ன செடிகளோட படம் இருந்தா, அனுப்பி வையுங்க.....)

38 comments:

துளசி கோபால் said...

அட! அந்தத் தலைவெட்டிப்பூவுக்கு சாணிப்புட்டான்னு பெயரா?

புல்தரையிலே தரையோடு தரையா ஒரு முள் செடி இருக்குமே. அதுக்குப் பெயர் என்னவா இருக்கும்? ரொம்பச் சின்னச்சின்ன முள்ளா இருந்து காலுலே அப்பிரும்(-:

அப்பெல்லாம் நாட்டுலே கூட்டம் கம்மி. குற்றமும் கம்மி. இப்போ.....

ஒரு ஆளு பத்து ஆளால்லே ஆகிக்கிடக்கு(-:

அ நம்பி said...

தொட்டால்வாடி, தொட்டாற்சுருங்கி, தொட்டாற்சிணுங்கி என வெவ்வேறு பெயரில் குறிக்கப்படும் செடிக்கும் சிறுபிள்ளை விளையாட்டுகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. (Mimosa pudica)

முள்ளிருக்கும்; பூக்கும். தொட்டவுடன் இலைகள் ...அனுபவம் இருக்குமே?

படம்: http://thestar.com.my/archives/2007/4/1/health/sf_14mimosa.jpg

Mahesh said...

அருமைங்க.... ஊமத்தங்காய புடுங்கிட்டு வந்து ஸ்கூல் போர்டுக்கு கரி பூசுனது ஞாபகம் வருது...

வெளாடும்போது அடிபட்டு சிராய்ப்பு ஆனா சாணிபுத்தனதழைய புழிஞ்சு தேச்சுட்டு மேல வெளயாட ஆரம்பிச்சுருவோம்....

Sriram said...

தொட்டாச் சிணுங்கியை விட்டுட்டீங்களே அண்ணே...
அது நம் ஸ்பரிசம் பட்டவுடன் சுருங்கும் அழகில் நாம் எத்தனை நாள் மயங்கி இருக்கிறோம்.

இராகவன், நைஜிரியா said...

// துளசி கோபால் said
புல்தரையிலே தரையோடு தரையா ஒரு முள் செடி இருக்குமே. அதுக்குப் பெயர் என்னவா இருக்கும்? ரொம்பச் சின்னச்சின்ன முள்ளா இருந்து காலுலே அப்பிரும் //

நெருஞ்சி முள் அப்படின்னு சொல்லுவாங்க..

நெருஞ்சி முள்ளுக்கு மருத்தவ குணமும் உண்டு என்று சொல்வார்கள்.

வெள்ளை வெள்ளையாகப்பூர்த்திருக்கும் தும்பை பூ பார்த்துள்ளீர்களா... சிறிய செடி .. பூக்கும் போது எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா...

இராகவன், நைஜிரியா said...

தமிலிழில் இணைக்கும் போது மயில் படத்தை மாற்றக்கூடாது... அதுதான் உங்களின் face Value...

மயில் படத்தை பார்த்தாலே உங்களோடதுன்னு உடனே படிக்க வந்துவிடுவேன்...

இராகவன், நைஜிரியா said...

// Mahesh said...
அருமைங்க.... ஊமத்தங்காய புடுங்கிட்டு வந்து ஸ்கூல் போர்டுக்கு கரி பூசுனது ஞாபகம் வருது... //

ஏங்க அது கோவைக்காய் மற்றும் கோவை இலை.. இல்லயா...

SUREஷ் said...

//அப்பெல்லாம் தெருக்கள்ள பார்த்தீனியா கெடயாது.//

ரொம்ப வயசானவரா நீங்க ...

இப்பெல்லாம் முத்லிடம் இதுக்குத்தான்

SUREஷ் said...

எருக்கம்பூ கூட அழகான தோற்றத்துடன்...........

பாஸ் கலக்கறீங்க

பழமைபேசி said...

// துளசி கோபால் said...
புல்தரையிலே தரையோடு தரையா ஒரு முள் செடி இருக்குமே. அதுக்குப் பெயர் என்னவா இருக்கும்? ரொம்பச் சின்னச்சின்ன முள்ளா இருந்து காலுலே அப்பிரும்(-:
//

வாங்க ஆசிரியை, வணக்கம்! நாந்தான் காந்தி முள்ன்னு சொல்லி விவரங் குடுத்து இருக்கனே?

பழமைபேசி said...

//அ நம்பி said...
தொட்டால்வாடி, தொட்டாற்சுருங்கி, தொட்டாற்சிணுங்கி என வெவ்வேறு பெயரில் குறிக்கப்படும் செடிக்கும் சிறுபிள்ளை விளையாட்டுகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. (Mimosa pudica)

முள்ளிருக்கும்; பூக்கும். தொட்டவுடன் இலைகள் ...அனுபவம் இருக்குமே?

படம்: http://thestar.com.my/archives/2007/4/1/health/sf_14mimosa
//

நல்லா சொன்னீங்க.... தொட்டாச் சிணுங்கி! பாத்துட்டே அல்ல இருப்போம்?

பழமைபேசி said...

//Mahesh said...
அருமைங்க.... ஊமத்தங்காய புடுங்கிட்டு வந்து ஸ்கூல் போர்டுக்கு கரி பூசுனது ஞாபகம் வருது...

வெளாடும்போது அடிபட்டு சிராய்ப்பு ஆனா சாணிபுத்தனதழைய புழிஞ்சு தேச்சுட்டு மேல வெளயாட ஆரம்பிச்சுருவோம்....
//

மலருது நினைவுகள்! அஃகஃகா!!

பழமைபேசி said...

//Sriram said...
தொட்டாச் சிணுங்கியை விட்டுட்டீங்களே அண்ணே...
அது நம் ஸ்பரிசம் பட்டவுடன் சுருங்கும் அழகில் நாம் எத்தனை நாள் மயங்கி இருக்கிறோம்.
//

வாங்க ஐயா, வாங்க! அடுத்த பதிவுல சேத்திடுவோம்!! இஃகிஃகி!!

பழமைபேசி said...

//இராகவன், நைஜிரியா said...
// Mahesh said...
அருமைங்க.... ஊமத்தங்காய புடுங்கிட்டு வந்து ஸ்கூல் போர்டுக்கு கரி பூசுனது ஞாபகம் வருது... //

ஏங்க அது கோவைக்காய் மற்றும் கோவை இலை.. இல்லயா...
//

மகேசு சொல்லுறதும் சரி, நீங்க சொல்லுறதும் சரி!! கரித்தனமை ரொம்ப நாளைக்கி இருகணுமின்னு ஊமத்தை. எழுதினதை அழிக்க, தண்ணீராய்ப் பிழியும் கோவை!!

பழமைபேசி said...

//SUREஷ் said...
//அப்பெல்லாம் தெருக்கள்ள பார்த்தீனியா கெடயாது.//

ரொம்ப வயசானவரா நீங்க ...
//

அஃகஃகா! பழசை எழுதாதடான்னு சோட்டாளி சொன்னானே?!

பழமைபேசி said...

//SUREஷ் said...
எருக்கம்பூ கூட அழகான தோற்றத்துடன்...........

பாஸ் கலக்கறீங்க
//

நன்றிங்க!

பழமைபேசி said...

//இராகவன், நைஜிரியா said...
தமிலிழில் இணைக்கும் போது மயில் படத்தை மாற்றக்கூடாது... அதுதான் உங்களின் face Value...
//

அதே படத்தைப் போட்டாச்சுங்கோய்!

கபீஷ் said...

I have read this post :-):-)

It's good to read again :-):-)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

இந்தப்பூவா பாருங்க சாணிபுட்டான்?

பழமைபேசி said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
இந்தப்பூவா பாருங்க சாணிபுட்டான்?
//

ரொம்ப நன்றிங்க, அதேதானுங்க!!

Anonymous said...

எருக்கஞ்செடி

Nammoorule 'Aalmeretti' nu solluvanga. எருக்கஞ்செடி potharu nightle oru aal irukiramathiri therium.

Periathambi Vaikkalpalayam Kovai

பழமைபேசி said...

//Anonymous said...
எருக்கஞ்செடி

Nammoorule 'Aalmeretti' nu solluvanga. எருக்கஞ்செடி potharu nightle oru aal irukiramathiri therium.

Periathambi Vaikkalpalayam Kovai
//

வாங்க அண்ணா, நல்ல தகவல் சொன்னீங்க! நொம்ப சந்தோசமுங்க!!

நசரேயன் said...

/*அருமைங்க.... ஊமத்தங்காய புடுங்கிட்டு வந்து ஸ்கூல் போர்டுக்கு கரி பூசுனது ஞாபகம் வருது...*/
எனக்கும் எனக்கும்

வருங்கால முதல்வர் said...

அய்யா எங்கய்யா புடிச்சீங்க படத்தை.
அப்படியே கண்டங்கத்தரி பத்தி ஒரு பதிவ போடுங்க

சூர்யா said...
This comment has been removed by the author.
இராம்/Raam said...

கிராமத்து விஞ்ஞானி பாஸ் நீங்க.... :)

பழமைபேசி said...

//நசரேயன் said...
/*அருமைங்க.... ஊமத்தங்காய புடுங்கிட்டு வந்து ஸ்கூல் போர்டுக்கு கரி பூசுனது ஞாபகம் வருது...*/
எனக்கும் எனக்கும்
//

இஃகிஃகி!

பழமைபேசி said...

// வருங்கால முதல்வர் said...
அய்யா எங்கய்யா புடிச்சீங்க படத்தை.
அப்படியே கண்டங்கத்தரி பத்தி ஒரு பதிவ போடுங்க
//

ஆமாங்கண்ணே, அதுவும் பட்டியல்ல இருக்கு....சீக்கிரமே, எடுத்து விடுறேன்!

S.R.ராஜசேகரன் said...

இந்த மாற்றான் தோட்டத்து மல்லிகை அப்படின்னு சொல்றாங்களே அந்த மல்லிகை உங்க ஊர்ல உண்டா அண்ணாச்சி

பழமைபேசி said...

//S.R.ராஜசேகரன் said...
இந்த மாற்றான் தோட்டத்து மல்லிகை அப்படின்னு சொல்றாங்களே அந்த மல்லிகை உங்க ஊர்ல உண்டா அண்ணாச்சி
//

S.R.ராஜசேகரன் has left a new comment on your post "முதல் இரவு - என் அனுபவம்":

இந்த குசும்பு தானே வேண்டாங்கிறது

அஃகஃகஃகா!! அஃகஃகஃகா!!!

பழமைபேசி said...

// சூர்யா said...

அப்புறம் இந்த வேலியோர கள்ளிச்செடியப் பத்தியும் சொல்லுங்க.. அதுல எத்தன தடவ நம்மாளு பேர எழுதியிருப்போம்...?
//

யாரு? நம்ம சூரியாவா?? நானுந்தாங்கண்ணு அந்த வெவரத்தையெல்லாம் எழுதித் தொலைச்சிட்டேன். அது தெரிஞ்சி, ஊட்டுல ஒரே ஓரியாட்டமாயிப் போச்சல்லோ? அதாங்கண்ணு, அந்த வெவரத்தை மட்டும் எடுத்துப் போட்டு மிச்சத்தைப் போட்ருக்குறேன்.

ஆமாமா, கொஞ்ச நஞ்சத்த வெளயாட்டா, நாம வெளையாடுனது? அல்லாம், இன்னொரு நாளக்கி வெவரமாப் போட்டு உடுலாமென்ன? அப்பத்தான நாளைக்கி நம்ம குழந்தகளுக்கெல்லாம் ஆகும்? என்ன நாஞ்சொல்றது??

தங்ஸ் said...

சாணிப்பூட்டான் - வப்படாப்பூடு ரெண்டும் ஒண்னுதானே?

பழமைபேசி said...

சூர்யா has left a new comment on your post "கிராமத்துல....":

எருகெஞ்செடினுதும் எனக்கு நியாபகத்துக்கு வர்ரது, அந்தப் பூவையெல்லாம் பறிச்சு ஒரு விளையாட்டு விளயாடுவோமே.. தூக்கிப்போட்டு எதெல்லாம் சாயாம நிக்குமொ அதெல்லாம் சேத்துவெச்சு? அப்புறம் அதில ஊர்ற நத்தயெல்லாம் புடிச்சு விளயாண்டிருக்கோம்..

என்ற அய்யன் வெள்ளெருக்கஞ்செடிய ரொம்ப புனிதமானது.. புள்ளயாருக்கு உகந்ததுன்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்..

அப்புறம் இந்த வேலியோர கள்ளிச்செடியப் பத்தியும் சொல்லுங்க.. அதுல எத்தன தடவ நம்மாளு பேர எழுதியிருப்போம்...?

தும்பச் செடி.. இப்பெல்லாம் காணோம்ங்க.. அந்தப் பூவக் கோத்து முறுக்கு செய்வோமே..?

இன்னும் பேர் தெரியாத நிறய செடிகள்..

ம்ஹும்.. பழமபேசின்னு நல்லாத்தான் பேர் வெச்சிருகறீங்க.. பழய நெனப்பயெல்லாம் நல்லாக் கெளர்றீங்க....

சின்ன அம்மிணி said...

இந்த ஊமத்தையை பறிச்சு அரைச்சு Black board-க்கு பூசுவாங்க. நல்லா கறுப்பா ஆயிடுமாம். இப்படி பூசுற பொண்ணுங்களுக்கு டீச்சர் கிட்ட நல்ல பேர் கிடைக்கும்.

வருங்கால முதல்வர் said...

சின்ன அம்மிணி said...

இந்த ஊமத்தையை பறிச்சு அரைச்சு Black board-க்கு பூசுவாங்க. நல்லா கறுப்பா ஆயிடுமாம். இப்படி பூசுற பொண்ணுங்களுக்கு டீச்சர் கிட்ட நல்ல பேர் கிடைக்கும்.
//

நீங்க அப்பயே டீச்சரா சின்ன அம்மிணி:)

பழமைபேசி said...

//தங்ஸ் said...
சாணிப்பூட்டான் - வப்படாப்பூடு ரெண்டும் ஒண்னுதானே?
//

தெரியலைங்க தங்சு.

பழமைபேசி said...

//இராம்/Raam said...
கிராமத்து விஞ்ஞானி பாஸ் நீங்க.... :)
//

வருகைக்கு நன்றிங்க இராம், எதோ தெரிஞ்சதைச் சொல்லி நம்ம கடை ஓடுது அவ்வளவுதேன்.

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
இந்த ஊமத்தையை பறிச்சு அரைச்சு Black board-க்கு பூசுவாங்க. நல்லா கறுப்பா ஆயிடுமாம். இப்படி பூசுற பொண்ணுங்களுக்கு டீச்சர் கிட்ட நல்ல பேர் கிடைக்கும்.
//

வாங்க, வணக்கம்! ஆமுங்க நீங்க சொல்லுறது எனக்கும் நினைவு இருக்கு!!