12/18/2008

முதல் இரவு - என் அனுபவம்

நாம சிங்கப்பூர்ல இருந்ததுக்கு அப்புறம் மேல படிக்கணும்னு
ஆசப்பட்டு கனடா வந்தோம், யார்க் பல்கலைக்கழகத்துல
படிச்சோம்,பட்டம் வாங்கினோம்,பின்னாடி சார்லட் வந்து
குப்பை கொட்டிட்டு இருக்கோம்ங்றது உங்க எல்லாருக்கும்
தெரிஞ்ச விசயம். அந்த பின்னணியில கனடால நடந்த
உண்மைச் சம்பவம். கோபு குடும்பத்தோட நாம கனடா
போறதுக்கு முன்னாடியே அங்க குடியேறி இருந்தான்.
அவனுக்கு ஒரு தங்கை, ஒரு தம்பி. அவங்க அப்பா அம்மா
ரெண்டு பேருமே கொறஞ்ச சம்பளத்துக்குதான் வேலைக்கு
போய்க்கிட்டு இருந்தாங்க. ஆனா வீடு வாங்கி இருந்தாங்க.

அந்த நாளும் (முதல் இரவு) வந்துச்சு. நேரம் இரவு ஒரு ஒன்பதரை இருக்கும். நாமளும் அவங்க வீட்டுல அந்த நேரத்துல இருந்தோம். (நாம தான்,சாப்பாடு கிடைக்கிற இடம், நம்ம இடம்னு இருக்குறது ஆச்சே?)கோபு அங்க போறான். இங்க போறான். தண்ணி எடுத்து குடிக்கறான். உடம்ப நெட்டி முறிக்கிறான். தம்பி தங்கயப் பாத்து குறுஞ்ச்சிரிப்பு சிரிக்கிறான். அறைக்குள்ள போறான். என்னவோ செஞ்சிட்டு கொஞ்ச நேரத்துல வீட்டு முற்றத்துக்கு போறான். மறுபடியும் வர்றான். ஒரே வெட்கம்,கூட ஒரு மகிழ்ச்சினு நினைக்கிறேன். கூடவே, நல்லா படிச்சு பட்டம் வாங்கின அவனுக்கு இத எதிர்கொள்ள கொஞ்சம் நெருடல்.

அறைக்கு முன்னாடி சுழன்டது போதும்னு நெனச்சானோ என்னவோ, எல்லார்த்தையும் பாத்து சிரிச்சான்,வெக்கத்த விட்டுட்டு அறைய மூடினான், கை மின்விளக்க(torch) எடுத்தான், வீட்டு வாசக்கதவ மூடிட்டு விறு விறுனு நடந்து போனான். ஆமாங்க, கோபு ராததிரிநேர காவலாளி வேலைக்கு போறான். இன்னைக்கு அவனுக்கு முதல் இரவு.

(நடந்தத நடந்த மாதிரி சொன்னா, இப்படி கோவிச்சிட்டு அடிக்க வர்றீங்களே?!)

42 comments:

'வெவகாரமான' வெள்ளந்தி said...

ச்சே....இன்டெரிஸ்டிங் மேட்டரா இருக்கும்னு பாத்தா இப்படி குமுதம், ஆனந்த விகடன்ல வர்ற சிறுகதைகள் மாதிரி வித்தியாசமான க்ளைமாக்சாக்கிட்டீங்களே....

'வெவகாரமான' வெள்ளந்தி

ஊர்க்குருவி said...

சூப்பர் தலைவா..........

ஆட்காட்டி said...

இரண்டு பேரும் நிறைய நெருக்கத்தில தான் இருந்திருக்கிறோம். ஊரை சொன்னேன். அந்தியூரில இருந்து கொண்டு ,கோபி பிடிக்கலையா?

பழமைபேசி said...

ஊர்க்குருவி said...
சூப்பர் தலைவா..........
//

வணக்கம்! நன்றி!!

பழமைபேசி said...

ஆட்காட்டி said...
இரண்டு பேரும் நிறைய நெருக்கத்தில தான் இருந்திருக்கிறோம். ஊரை சொன்னேன். அந்தியூரில இருந்து கொண்டு ,கோபி பிடிக்கலையா?


//
வாங்க! நொம்ப மகிழ்ச்சி!!

ச்சின்னப் பையன் said...

:-))))))))

ராஜ நடராஜன் said...

//(நாம தான்,சாப்பாடு கிடைக்கிற இடம், நம்ம இடம்னு இருக்குறது ஆச்சே?)//

நாமலும் இப்படித்தான் விருந்துக்கு யாராவது கூப்பிட்டா நம்ம இடம்னு நினைச்சுகிட்டு என்னென்ன சாப்பிட கொடுக்கிறாங்களோ அத்தனையும் முழுங்க வேண்டியது.கடைசில வண்டிக்குள்ளார உட்காரும் போது தங்ஸ்கிட்ட வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியது"போற எடத்துல பேருக்குன்னு சாப்பிடத் தெரியாதா?"ன்னு.

சாப்பிடக் கூப்பிட்டா சாப்பாட்டை ரசிக்கனும்:)

பழமைபேசி said...

// ராஜ நடராஜன் said...
//(நாம தான்,சாப்பாடு கிடைக்கிற இடம், நம்ம இடம்னு இருக்குறது ஆச்சே?)//

சாப்பிடக் கூப்பிட்டா சாப்பாட்டை ரசிக்கனும்:)
//

பின்ன? சரியாச் சொன்னீங்க ஐயா!!

செந்தழல் ரவி said...

நைட் அட் த மியூசியம் படம் நியாபகம் வந்திருந்ச்சு...

சரி அப்புறம் இந்த வெவகாரமான வெள்ளந்தி கமெண்டை போட்டது யாருன்னு தெரிஞ்சுக்கலாமா ?

:))))))

சேம் ப்ளட் ??

பழமைபேசி said...

// செந்தழல் ரவி said...
நைட் அட் த மியூசியம் படம் நியாபகம் வந்திருந்ச்சு...

சரி அப்புறம் இந்த வெவகாரமான வெள்ளந்தி கமெண்டை போட்டது யாருன்னு தெரிஞ்சுக்கலாமா ?

:))))))

சேம் ப்ளட் ??
//


வாங்க இரவி அண்ணே! அவரு நம்ம நண்பர்தான், ஜெயகுமார்ன்னு இங்க சார்லட்ல இருக்காரு. வெவகாரமான ஆளு! அவரைப் பத்தி தெரிஞ்சுக்க, இந்த பதிவுகளுக்குப் போங்க.

http://maniyinpakkam.blogspot.com/2008/08/blog-post_07.html

http://maniyinpakkam.blogspot.com/2008/07/blog-post_02.html

கபீஷ் said...

This is meezh pathivu?

பழமைபேசி said...

//கபீஷ் said...
This is meezh pathivu?
//

ஆமாங்கோ!

கபீஷ் said...

OK.OK. Senior pathivar

பழமைபேசி said...

//ச்சின்னப் பையன் said...
:-))))))))
//

எப்பவும், அதே சிரிப்புத்தான் ஒங்களுக்கு... இஃகிஃகி!!

பழமைபேசி said...

//கபீஷ் said...
OK.OK. Senior pathivar
//
ஏங்க இந்தக் கொலை வெறி? மூத்தவர்ன்னு சொல்லிக் கழட்டி விடுறீங்ளே?!

Anonymous said...

kalakkiteenga anne...

climax super...

கிரி said...

//நாம சிங்கப்பூர்ல இருந்ததுக்கு அப்புறம்//

அப்படியா!!!

பழமைபேசி said...

// கிரி said...
//நாம சிங்கப்பூர்ல இருந்ததுக்கு அப்புறம்//

அப்படியா!!!
//

ஆமாங்கோ!

பழமைபேசி said...

//Sriram said...
kalakkiteenga anne...

climax super...
//

இஃகிஃகி!!

உருப்புடாதது_அணிமா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

உருப்புடாதது_அணிமா said...

///நாம சிங்கப்பூர்ல இருந்ததுக்கு அப்புறம் மேல படிக்கணும்னு
ஆசப்பட்டு கனடா வந்தோம், யார்க் பல்கலைக்கழகத்துல
படிச்சோம்,பட்டம் வாங்கினோம்,பின்னாடி சார்லட் வந்து
குப்பை கொட்டிட்டு இருக்கோம்ங்றது உங்க எல்லாருக்கும்
தெரிஞ்ச விசயம். அந்த பின்னணியில கனடால நடந்த
உண்மைச் சம்பவம். ////


உங்கள பத்தி சொன்ன மாதிரி ஆச்சு....சுய புராணம்
அத சொல்லுங்க அண்ணே..
( நாங்க எல்லாம் ரொம்ப ஷார்ப் )

உருப்புடாதது_அணிமா said...

.//(நாம தான்,சாப்பாடு கிடைக்கிற இடம், நம்ம இடம்னு இருக்குறது ஆச்சே?)///

இது எல்லாம் சொல்லியா தெரியனும் ??

உருப்புடாதது_அணிமா said...

இப்படி பொசுக்குனு வேற மாதிரி முடிச்சிட்டீங்களே??
நாங்க எதிர் பார்த்து வந்தது வேறு.
A

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
உங்கள பத்தி சொன்ன மாதிரி ஆச்சு....சுய புராணம்
அத சொல்லுங்க அண்ணே..
( நாங்க எல்லாம் ரொம்ப ஷார்ப் )
//

அஃகஃகா! போயி மத்த ரெண்டு பதிவுகளையும் படிச்சுப் பாருங்க!!

உருப்புடாதது_அணிமா said...

ஏமாத்திபுட்டீங்கலே அண்ணே..
இப்படி
ஏமாத்திபுட்டீங்கலே அண்ணே..

உருப்புடாதது_அணிமா said...

மீள்பதிவு போட்டு தன்னை பலபேரும் பழம் பெரும் சீனியர் பதிவர் என்பதை அண்ணன் உலகுக்கு எடுத்துரைத்து உள்ளார்

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
மீள்பதிவு போட்டு தன்னை பலபேரும் பழம் பெரும் சீனியர் பதிவர் என்பதை அண்ணன் உலகுக்கு எடுத்துரைத்து உள்ளார்
//
அய்யா, சாமீ, இன்னும் ரெண்டு பதிவு இன்னைக்கு வெளியாகி இருக்கு...அத்களப் படிச்சு பாருங்கோ!

மதுவதனன் மௌ. said...

You Too, Brutus ? :-)

பழமைபேசி said...

//மதுவதனன் மௌ. said...
You Too, Brutus ? :-)
//

வாங்க மது! நல்லா இருக்கீங்ளா??

பழமைபேசி said...

//மதுவதனன் மௌ. said...
You Too, Brutus ? :-)
//

வாங்க மது! நல்லா இருக்கீங்ளா??

நசரேயன் said...

என்னமோ எதோன்னு நினைச்சு வந்தேன்

பழமைபேசி said...

//மதுவதனன் மௌ. said...
You Too, Brutus ? :-)
//

ஆசுவாசப்படுத்திகிங்க மது! பாருங்க, நான் சொக்குப்பொடின்னா என்னன்னு பதிய, வாசகர்கள் சூடான இடுக்கைக்கான சொக்குப் பொடி என்னன்னு கேட்க, அவிங்களுக்கு தலைப்புங்ற சொக்குப் பொடியக் காண்பிக்கறதுக்குத்தான் இந்தப் பதிவு. இஃகிஃகி!!

பழமைபேசி said...

//நசரேயன் said...
என்னமோ எதோன்னு நினைச்சு வந்தேன்
//

அதென்ன, என்னமோ, ஏதோ? நீங்களா ஒன்னை நினைச்சுகிட்டா, அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்?? இஃகிஃகி!!

S.R.ராஜசேகரன் said...

இந்த குசும்பு தானே வேண்டாங்கிறது

பழமைபேசி said...

//S.R.ராஜசேகரன் said...
இந்த குசும்பு தானே வேண்டாங்கிறது
//

மொட்டையா இந்த குசும்புன்னா? எந்த குசும்பு?? எந்த குசும்பு??? எந்த குசும்பு???

என்னா பேச்சு?

Anonymous said...

நல்லாதானுங்க தலைப்பு வைக்கறீங்க, சூடான இடுகைக்கு போயிடுச்சா

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
நல்லாதானுங்க தலைப்பு வைக்கறீங்க, சூடான இடுகைக்கு போயிடுச்சா
//

இது ஒரு மீள் பதிவுங்க.... யாரோ சூடான இடுகைக்கு என்ன சொக்குப் பொடின்னு கேட்டாங்க பாருங்க, அவிங்களுக்கு இதை மீள்பதிவு செய்து, இந்த சொக்குப் பொடிய காமிக்கலாம்ன்னு.

பழமைபேசி said...

// பழமைபேசி said...
//சின்ன அம்மிணி said...
நல்லாதானுங்க தலைப்பு வைக்கறீங்க, சூடான இடுகைக்கு போயிடுச்சா
//

சரியா 40 நிமிசத்துல சூடான இடுகை ஆயிடுச்சுங்க...

கதிர் said...

சரியான மண்டை காய்ச்சல்.... சூப்பர் கிளைமாக்ஸ்

அமிர்தவர்ஷினி அம்மா said...

:))))))))

பழமைபேசி said...

//கதிர் said...
சரியான மண்டை காய்ச்சல்.... சூப்பர் கிளைமாக்ஸ்
//

நன்றிங்கோ!

Yesuraj said...

super machi