12/01/2008

சிரிப்பில், எத்தனை வகைச் சிரிப்பு?

அன்பர்களே, வணக்கம்! நாம மொல்லமாறின்னு சொல்லி ஒரு பதிவு போட்டாலும் போட்டோம், வாசகர்கள், நிறைய வழக்கத்துல இருக்குற சொல்லுகளை நம்ம பக்கம் தள்ளி விட்டுட்டாங்க. அவைகளுக்கு வர்ற காலங்கள்ல பதில் பதிவு போடணும். இடையில ஒருத்தர், timely jokeக்கு தமிழ்ல என்னன்னு கேட்டு வந்தாரு.

நாம காலத்துக்கு ஏற்ற சொல்நகைன்னு ஆரம்பிச்சு, அப்புறம் வலையில மேயப் போய் பல விசயங்களைத் தெரிஞ்சுக்க முடிஞ்சது. காலத்துக்கேற்ற சொன்னகை, காலத்தே சொல் நகை, நேரம் தழுவிய நகை, சமயம் பார்த்து பகடின்னு வேந்தன் அரசு ஐயாவும் எடுத்துக் குடுத்தாங்க. கடைசில, நேரந் தழுவிய நகைங்றது எழுத, பேச வாட்டமா இருக்குங்றதுல முடிஞ்சது நம்ம அலசல்.

இந்த சிரிப்புல பாருங்க, எத்தனை வகை சிரிப்பு இருக்குன்னு. நமக்கு அதை நெனச்சாலெ சிரிப்பு வருது. :-o)

புன்சிரிப்பு

நமட்டுச் சிரிப்பு
வெடிச் சிரிப்பு
கால்வாரிச் சிரிப்பு
ஓகோன்னு சிரிக்கிறது
'களுக்'ன்னு சிரிக்கிறது
பயங்கரமா சிரிக்கிறது

குபீர்ன்னு சிரிக்கிறது
வாய்விட்டு சிரிக்கிறது
வாய் மூடிட்டு சிரிக்கிறது
வயிறு வலிக்கச் சிரிக்கிறது
விழுந்து விழுந்து சிரிக்கிறது

குலுங்க குலுங்கக் சிரிக்குறது
மனசுக்குள்ளேயே சிரிக்கிறது
உதட்டளவில சிரிக்கிறது
வெறியாச் சிரிக்கிறது
கலகலன்னு சிரிக்கிறது
'பக்'ன்னு சிரிக்கிறது
சங்கீதமாச் சிரிக்குறது
வஞ்சகச் சிரிப்பு
கபட சிரிப்பு.

சரி, அப்பிடியே நம்ம கலைவாணர் ஐயா பாடின பாட்டையும் கேட்டுப் பாருங்க. அந்தப் பாட்டுல மேல சொன்னது போல, நிறைய வகைச் சிரிப்பு இருக்குங்க.







வாய் விட்டு சிரிச்சா, நோய் விட்டுப் போகும்!

19 comments:

கபீஷ் said...

நீங்க எப்படி சிரிப்பீங்க பழமைபேசி!?
(நாட்டுக்கு ரொம்ப தேவை அப்டின்னு கேட்க படாது)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எனக்கு பிடிச்சது கள்ளமில்லா சிரிப்பு குழந்தை சிரிப்பு..

ராஜ நடராஜன் said...

சிரிப்போட மெனு பார்த்து சிரிப்பு வந்தது.

பழமைபேசி said...

//கபீஷ் said...
நீங்க எப்படி சிரிப்பீங்க பழமைபேசி!?
//

சூழ்நிலையப் பொறுத்து! இப்ப மனசுக்குள்ள சிரிச்சுட்டு இருக்கேன்!! :-o)

பழமைபேசி said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
எனக்கு பிடிச்சது கள்ளமில்லா சிரிப்பு குழந்தை சிரிப்பு..
//

ஆமுங்க... பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கும் அது!

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
சிரிப்போட மெனு பார்த்து சிரிப்பு வந்தது.
//

அஃ!ஃகா!! :-o))

Mahesh said...

நமக்கு ரொம்பப் புடிச்ச பாட்டு அது !!!

நன்றி...

பழமைபேசி said...

// Mahesh said...
நமக்கு ரொம்பப் புடிச்ச பாட்டு அது !!!

நன்றி...
//
வாங்க மகேசு, சிரிச்சீங்ளா? :-o)

நசரேயன் said...

கொலை வெறி சிரிப்பு
பின்னூட்ட சிரிப்பு
ஏதும் இருக்கா?

ILA (a) இளா said...

me the firstனு சிரிப்பேதாவது இருக்குமா??

:)
இப்படி ஸ்மைலி போட்டா மூத்தப் பதிவராமே, அதுக்குன்னு ஒரு சிரிப்பு இருக்கா?

பழமைபேசி said...

//ILA said...
me the firstனு சிரிப்பேதாவது இருக்குமா??//

இதுக்கு ஆனந்தச் சிரிப்பு! :-))

//
:)
இப்படி ஸ்மைலி போட்டா மூத்தப் பதிவராமே, அதுக்குன்னு ஒரு சிரிப்பு இருக்கா?
//


வாங்க இளா, அதுக்குப் பேரு தோரணைச் சிரிப்புங்ளாம்!

துளசி கோபால் said...

நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

சிரிச்சுச்சிரிச்சுக் கண்ணுலே தண்ணி வந்துரும் பாருங்க அதுதான் எனக்குப் பிடிச்சச் சிரிப்பு:-)

பழமைபேசி said...

//துளசி கோபால் said...
நட்சத்திர வாழ்த்து(க்)கள்.
//

:-o)
ரொம்ப நன்றிங்க!!

கோவி.கண்ணன் said...

நல்ல தொகுப்பு

பழமைபேசி said...

//கோவி.கண்ணன் said...
நல்ல தொகுப்பு
//

கண்ணன் ஐயா, வாங்க, வணக்கம், நன்றி!!!

நிலாமதி said...

வணக்கம் பழமை பேசி ......நான் மதிநிலா ,இரு வரி பேசலாமா ? சிரிக்காதீங்க ,நான் புதியவள். உங்க சிரிப்பு ஆராச்சி நல்லாக இருக்குதுங்க ரொம்பவே நால்லாக இருக்குதுங்க.

பழமைபேசி said...

//mathynilaa said...
வணக்கம் பழமை பேசி ......நான் மதிநிலா ,இரு வரி பேசலாமா ? சிரிக்காதீங்க ,நான் புதியவள். உங்க சிரிப்பு ஆராச்சி நல்லாக இருக்குதுங்க ரொம்பவே நால்லாக இருக்குதுங்க.
//

நல்லா சிரிங்க... அதுக்குத்தான இந்த பதிவே! உங்க அம்மா கவிதை ரொம்ப நல்லா இருக்கு!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அப்பு,
கேனச்சிரிப்பை விட்டுடிங்க....

sakthi said...

ஓ சிரிப்பில் இத்தனை வகையா ???